செங்கல்பட்டு மாவட்டம் பையனூரில் உள்ள சசிகலாவுக்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்புள்ள பங்களா உட்பட 50 ஏக்கர் நிலம் முடக்கம்

2017-ஆம் ஆண்டு சசிகலா, ஜெயலலிதாவுக்கு சொந்தமான 157 இடங்களில் வருமான வரித்துறை அதிரடி சோதனை நடத்திய போது பினாமி சொத்துக்கள் என வகைப்படுத்தப்பட்ட சொத்துக்களை கைப்பற்ற வருமான வரித்துறை முடிவு செய்தது. கடந்த 2019-ல் பினாமி சட்டத்தின்கீழ் சசிகலா தொடர்புடைய ரூ.1,600 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் முடக்கியது.

மேலும் நிலையில் 2020-ஆம் ஆண்டு, கோடநாடு தேயிலை எஸ்டேட், சிறுதாவூர் உட்பட 65 சொத்துக்கள் முடக்கியது. இதன் தொடர்ச்சியாக தற்போது செங்கல்பட்டு மாவட்டம் பையனூரிலுள்ள சசிகலாவுக்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்புள்ள  பங்களா உட்பட 50 ஏக்கர் நிலம்  முடக்கி அதிகாரிகள் நோட்டீஸ் ஒட்டினர்.

தமிழக சட்டப்பேரவையில் பத்திரிகையாளர் நலவாரியம் அமைக்க நடவடிக்கை எடுக்கும் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு அனைத்து பத்திரிகையாளர் சார்பாக நன்றி

தமிழக சட்டப்பேரவையில் கடந்த 23 ஆம் தேதி முதல் மானியக்கோரிக்கை மீதான விவாதங்கள் நடைபெற்று வருகிறது. இதில் ஒவ்வொரு நாளும் பல்வேறு புதிய அறிவிப்புகளை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் இன்று செய்தித்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய அமைச்சர் சாமிநாதன் தமிழகத்தில் பத்திரிகையாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கும் வகையில் பத்திரிகையாளர் நலவாரியம் அமைக்கப்படும். பத்திரிகையாளர்கள் மொழித்திறன், தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்க பயிற்சிகள் வழங்கப்படும்.

பணிக்காலத்தில் இறக்கும் பத்திரிகையாளர்களுக்கான குடும்ப நிதி உதவி ரூ.3 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தப்படும். இளம் பத்திரிகையாளர்கள் உயர்கல்வி படிக்க அரசு நிதியுதவி வழங்கப்படும். அரசின் நலதிட்டங்கள், அரசின் செயல்பாடுகளை உடனுக்குடன் மக்களுக்கு கொண்டு செல்ல சமூக ஊடக்கப்பிரிவு தொடங்கப்படும். சமூகம் மற்றும் விளிம்பு நிலை மக்களின் மேம்பாட்டிற்காக பங்காற்றி வரும் சிறந்த இதழியலாளருக்கு ரூ.5 லட்சம் பரிசுதொகை கொண்ட கலைஞர் எழுதுகோல் விருது வழங்கப்படும் என தெரிவித்தனர். இதற்கு தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு அனைத்து பத்திரிகையாளர் சார்பாக தெரிவித்து நன்றியை கொள்கின்றோம்

சிறந்த இதழியலாளருக்கு கலைஞர் எழுதுகோல் விருது வழங்கப்படும் // பத்திரிகையாளர்களுக்கு நல வாரியம் அமைக்கப்படும் 

தமிழக சட்டப்பேரவையில் கடந்த 23 ஆம் தேதி முதல் மானியக்கோரிக்கை மீதான விவாதங்கள் நடைபெற்று வருகிறது. இதில் ஒவ்வொரு நாளும் பல்வேறு புதிய அறிவிப்புகளை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் இன்று செய்தித்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய அமைச்சர் சாமிநாதன் தமிழகத்தில் பத்திரிகையாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கும் வகையில் பத்திரிகையாளர் நலவாரியம் அமைக்கப்படும். பத்திரிகையாளர்கள் மொழித்திறன், தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்க பயிற்சிகள் வழங்கப்படும்.

பணிக்காலத்தில் இறக்கும் பத்திரிகையாளர்களுக்கான குடும்ப நிதி உதவி ரூ.3 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தப்படும். இளம் பத்திரிகையாளர்கள் உயர்கல்வி படிக்க அரசு நிதியுதவி வழங்கப்படும். அரசின் நலதிட்டங்கள், அரசின் செயல்பாடுகளை உடனுக்குடன் மக்களுக்கு கொண்டு செல்ல சமூக ஊடக்கப்பிரிவு தொடங்கப்படும். சமூகம் மற்றும் விளிம்பு நிலை மக்களின் மேம்பாட்டிற்காக பங்காற்றி வரும் சிறந்த இதழியலாளருக்கு ரூ.5 லட்சம் பரிசுதொகை கொண்ட கலைஞர் எழுதுகோல் விருது வழங்கப்படும் என கூறினார்.

தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் 150-வது பிறந்தநாளையொட்டி  மலர் தூவி அஞ்சலி

சுதந்திர போராட்டத்தில் ஆங்கிலேயர்களை எதிர்த்து முதன் முதலாக வ.உ.சிதம்பரனார் கப்பல் விட்டார் அதனால் வ.உ.சிதம்பரனார் கப்பலோட்டிய தமிழன் என்று அழைக்கப்பட்டார்.

கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் 150-வது பிறந்தநாளையொட்டி இன்று தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாருக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் 150-வது பிறந்தநாளையொட்டி சீமான் மலர் தூவி அஞ்சலி

சுதந்திர போராட்டத்தில் ஆங்கிலேயர்களை எதிர்த்து முதன் முதலாக வ.உ.சிதம்பரனார் கப்பல் விட்டார் அதனால் வ.உ.சிதம்பரனார் கப்பலோட்டிய தமிழன் என்று அழைக்கப்பட்டார்.

கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் 150-வது பிறந்தநாளையொட்டி இன்று நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் தலைமையில் சென்னை போரூரில் அமைந்துள்ள நாம் தமிழர் தலைமை அலுவலகத்தில் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாருக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

சட்ட நூலகத்தை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி ரிப்பன் வெட்டி திறப்பு

சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி நேற்று பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக சேலம் மாவட்டத்திற்கு வந்தார். இதைத்தொடர்ந்து சங்ககிரி நீதிமன்ற வளாகத்தில் புதிதாக தொடங்கப்பட்ட சட்ட நூலகத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

கோடநாடு எஸ்டேட்டில் காவல் பொது ஆய்வாளர் சுதாகர் நேரில் ஆய்வு

நாளுக்குநாள் திடீர், திடீர் திருப்பங்கள் ஏற்பட்டு வரும் நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள கோடநாடு எஸ்டேட்டில் காவலாளி ஓம்பகதூர் கொலை செய்யப்பட்டதோடு, பங்களாவில் இருந்த பொருட்கள் கொள்ளையடித்தது தொடர்பாக சயான் உள்பட 10 பேரை கோத்தகிரி காவல்துறை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை ஊட்டி நீதி மன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இதற்கிடையில் கோடநாடு வழக்கில் சம்பந்தப்பட்டதாக கருதப்படுபவர்களிடம் விசாரணை நடத்தி ரகசிய வாக்குமூலம் பெறப்படுகிறது. இந்நிலையில் ஊட்டியில் நேற்று முன்தினம் காலையில் கோடநாடு எஸ்டேட் மேலாளர் நடராஜனிடம், மேற்கு மண்டல காவல் பொது ஆய்வாளர் சுதாகர் தலைமையில் சுமார் 2½ மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டு, ரகசிய வாக்குமூலம் பெறப்பட்டது.மேலும் தற்கொலை செய்து கொண்ட சி.சி.டி.வி. கேமரா ஆபரேட்டர் தினேஷ் குறித்து, அவருடன் பணியாற்றி வந்த ஊழியர்களிடம் விசாரணை நடத்தினர். இதன் காரணமாக கோடநாடு வழக்கு விசாரணை சூடுபிடித்துள்ளது.

கழுகுகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி

உலக கழுகுகள் பாதுகாப்பு தினத்தையொட்டி நீலகிரி மாவட்டத்தில் நேற்று முதுமலை புலிகள் காப்பகத்தின் வெளிமண்டல பகுதியான மசினகுடியில் உள்ள வாழைத்தோட்டம் பள்ளிக்கூட மாணவ-மாணவிகளுக்கு கழுகுகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

இதற்கு புலிகள் காப்பக துணை இயக்குனர் அருண்குமார் கழுகுகளால் நன்மைகள், அவற்றை பாதுகாக்கும் வழிமுறைகள் குறித்து மாணவர்களுக்கு விளக்கி கூறினார்.

ராசிபுரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய ஆன்லைன் வகுப்பில் ஆபாச படம் வெளியான சம்பவம்

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே வடுகம் அரசு மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் 10 ஆண்டுகளாக எடின்பரோ கோமான் என்பவர் இயற்பியல் ஆசிரியராகவும், உதவி தலைமை ஆசிரியராகவும் வேலைப் பார்த்து வருகிறார். எடின்பரோ கோமான் கடந்த வியாழக்கிழமை மாலை 3 மணிக்கு பள்ளி மாணவிகளுக்கு தமிழருவி இணையதளத்தில் இருந்து புரஜெக்டர் உதவியுடன் எடின்பரோ கோமான் பாடம் நடத்தினார். இதில் கணித அறிவியல், கணித உயிரியல் பாடப்பிரிவை சேர்ந்த பிளஸ்-1 மாணவிகள் பங்கேற்றனர். அப்போது திடீரென அரைகுறை ஆடையுடன் ஆபாச படம் வெளியானதாக கூறப்படுகிறது.

இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவிகள் தங்களது பெற்றோரிடம் தெரிவித்தனர். இதுகுறித்து நாமகிரிப்பேட்டை காவல் நிலையத்துக்கு ஆன்லைன் மூலம் புகார் அனுப்பப்பட்டது. மேலும் கல்வித்துறை அதிகாரிகளுக்கும் புகார் சென்றது. பின்னர் ஆபாச படம் வெளியானது குறித்து அவர்கள் உதவி தலைமை ஆசிரியர் எடின்பரோ மற்றும் மாணவிகளிடம் காவல்துறை விசாரணை நடத்தினர். விசாரணை முடிவில் தான் ஆன்லைன் வகுப்பில் ஆபாச படம் வெளியானது எப்படி? என்பது தெரியவரும் என்றும், விசாரணை அறிக்கை மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பப்படும் என்றும் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

தடையை மீறி விநாயகர் சிலை ஊர்வலம் நடத்தினால் சட்டப்படி நடவடிக்கை காவல் ஆணையர் எச்சரிக்கை.!

சென்னை வேப்பேரி காவல் ஆணையர் அலுவலகத்தில் சென்னை பெண்ணிடம் நெதலார்ந்து டாக்டர் என்று போலி விளம்பரம் செய்து திருமண இணையதளத்தில் திருமணம் செய்துக் கொள்வதாக கூறி ரூ.3.45 லட்சம் பணம் பறித்த வழக்கு மற்றும் நடிகர் ஆர்யா பெயரை பயன்படுத்தி ஜெர்மனிவாழ் இலங்கை பெண்ணிடம் ரூ.70 லட்சம் மோசடி செய்த வழக்கு உள்பட ‘சைபர் கிரைம்’ தொடர்பான முக்கிய வழக்குகளில் சிறப்பாக புலன் விசாரணை மேற்கொண்டு குற்றவாளிகளை கைது செய்த மத்திய குற்றப்பிரிவு காவல்துறை அதிகாரிகள், காவல்துறையினர்களுக்கு காவல் ஆணையர் சங்கர் ஜிவால் நேற்று சான்றிதழ் மற்றும் வெகுமதி வழங்கி பாராட்டினார்.


அப்போது கொரோனா பரவல் காரணமாக பொது இடங்களில் விநாயகர் சதுர்த்தி பண்டிகையை கொண்டாடுவதற்கு தமிழக அரசு தடை விதித்து அரசாணை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து இந்து அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகளை அந்தந்த காவல் நிலையங்களுக்கு அழைத்து பேச்சுவார்த்தை மூலம் அறிவுறுத்தப்பட்டு வருகிறது. விநாயகர் சதுர்த்தி அன்று காவல் பாதுகாப்பு, கண்காணிப்பு தீவிரப்படுத்தப்படும். எனவே தடையை மீறி விநாயகர் சிலைகள் ஊர்வலம் நடத்தினால் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்