கிண்டி ராஜ்பவன்: தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி பதவிப்பிரமாணம் செய்து வைக்க தமிழக கவர்னராக ஆர்.என்.ரவி பதவி ஏற்பு

கடந்த 2017-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 6-ந்தேதி தமிழக கவர்னராக பன்வாரிலால் புரோகித் பதவி ஏற்றார். ஏறக்குறைய 4 ஆண்டுகள் பணியாற்றிய பன்வாரிலால் புரோகித், திடீரென பஞ்சாப் மாநில கவர்னராக மாற்றப்பட்டார். அவருக்கு பதிலாக நாகலாந்து கவர்னராக இருந்த ஆர்.என்.ரவியை தமிழகத்தின் புதிய கவர்னராக நியமித்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டார்.

இந்நிலையில் நேற்று சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி பதவிப்பிரமாணம் செய்து வைக்க தமிழக கவர்னராக ஆர்.என்.ரவி பதவி ஏற்றார்.

91 ஏக்கர் ரூ.2000 கோடி மதிப்புள்ள ஆக்கிரமிப்பு நிலத்தை ஜேப்பியார் கல்வி குழுமத்திடம் இருந்து மீட்பு

சென்னை சோழிங்கநல்லூர் அடுத்த செம்மஞ்சேரி ராஜீவ்காந்தி சாலையில் ஜேப்பியார் கல்லூரி ஒன்று இயங்கி வருகிறது. இந்த கல்லூரி அங்குள்ள 91 ஏக்கர் மதிப்பு ரூ.2,000 கோடியிலான அரசு நிலத்தை பல ஆண்டுகளாக ஆக்கிரத்து கட்டிடங்கள் கட்டப்பட்டு உள்ளன.

அதிமுகவை சேர்ந்த ஜே. பங்குராஜ் என்ற ஜேப்பியார் முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர். மறைவுக்குப் பின்னர் தீவிர அரசியலைவிட்டு ஒதுங்கி கல்வி நிறுவனங்களில் கவனம் செலுத்த 1988ம் ஆண்டு சத்தியபாமா பொறியியல் கல்லூரியை நிறுவினார். அதன்பின்னர் செயின்ட் ஜோசப் பொறியியல் கல்லூரி, ஜேப்பியார் பொறியியல் கல்லூரி, பனிமலர் பொறியியல் கல்லூரி ஆகியவற்றை தொடர்ச்சியாக உருவாக்கினார்.

இதனைத் தொடர்ந்து சத்யபாமா பல் மருத்துவ கல்லூரி, செயின்ட் மேரீஸ் இன்ஸ்டியூட் ஆப் மேனேஜ்மெண்ட், பனிமலர் ஸ்கூல் ஆப் மேனேஜ்மெண்ட், எஸ்.ஆர்.ஆர். பொறியியல் கல்லூரி, மாமல்லன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, பனிமலர் பாலிடெக்னிக் என ஏராளமான கல்வி நிறுவனங்களை உருவாக்கியவர் ஜேப்பியார். கடந்த 2016ம் ஆண்டு ஜூன் மாதம், ஜேப்பியார் மரணமடைந்தார்.

இந்நிலையில் ஜேப்பியார் கல்வி நிறுவனம் ஆக்கிரமிப்பில் இருந்த 91 ஏக்கர் மதிப்பு ரூ.2,000 கோடியிலான அரசு நிலம் இதுதொடர்பான வழக்கை விசாரித்த செங்கல்பட்டு நீதி மன்றம் நிலத்தை மீட்க அரசுக்கு உத்தரவிட்டது. இதனையடுத்து அந்த நிலம் நீதி மன்ற உத்தரவுப்படி அதிரடியாக மீட்கப்பட்டது. மீட்கப்பட்ட நிலத்தை வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், அமைச்சர் மா.சுப்பிரமணியன், தென்சென்னை எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன், சோழிங்கநல்லூர் எம்.எல்.ஏ. அரவிந்த் ரமேஷ், சென்னை மாவட்ட கலெக்டர் விஜயராணி மற்றும் அதிகாரிகள் நேரில் பார்வையிட்டனர்.

 

சென்னை வேளச்சேரியில் முத்தமிழறிஞர் கலைஞர் சிலையை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் திறந்து வைத்தார்

சென்னை வேளச்சேரி 179வது வார்டில் பகுதியில் பொ.த.மதிவாணன் ஏற்பாட்டில் அமைக்கப்பட்டிருந்த முத்தமிழறிஞர் கலைஞர் சிலையை அமைச்சர் மா. சுப்பிரமணியன் முன்னிலையில் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் திறந்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கப்பாண்டியன், வேளச்சேரி சட்டமன்ற உறுப்பினர் ஹஸ்ஸான் மவுலானா, சு. சேகர் மற்றும் திமுக தோழர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

ஊராட்சி செயலாளரை தாக்கிய நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டி காவல்நிலையத்தை முற்றுகையிட்ட ஊராட்சி செயலாளர்

கெங்கவல்லி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட நடுவலூர் ஊராட்சியில் ஊராட்சி செயலாளராக பணிபுரிந்து வருபவர் மலர்விழி வயது இருபத்தி எட்டு இவர் கடந்த மூன்று ஆண்டுகளாக ஊராட்சியில் செயலாளராக பணிபுரிந்து வருகிறார். இதனையடுத்து.

நேற்று மதியம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உட்கார்ந்து கொண்டிருக்கும் பொழுது நடுவலூர் இரண்டாவது வார்ட்டை சேர்ந்த சின்னதுரை வயது 35 என்பவர் தகாத வார்த்தையால் பேசியும் என் தெருவில் ஏன் பைப் போடவில்லை என்றும் எங்களுடைய கட்சிக்கு பணம் ஏன் தர மாட்டுகிறாய் என்றும் தகாத வார்த்தையால் பேசி என்னை அடித்து விட்டார் என்றும் அவர் கெங்கவல்லி காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். புகாரை பெற்றுக் கொண்ட துணை ஆய்வாளர் முருகேசன் புகாரைப் பெற்றுக்கொண்டு சின்னதுரை மீது வழக்கு பதிவு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு காணப்படுகிறது.

தந்தை பெரியாரின் 143-வது பிறந்த நாளை முன்னிட்டு தந்தை பெரியார் திரு உருவ படத்திற்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்

தந்தை பெரியாரின் 143-வது பிறந்த நாளை இனி வரும் காலங்களில் சமூகநீதி நாளாக கொண்டாட வேண்டுமென்கிற மாண்புமிகு முதல்வரின் ஆணைக்கினங்க இன்று காலை அண்ணா அறிவாலய வளாகத்தில் மாண்புமிகு முதல்வர் அவர்களின் தலைமையில் மாண்புமிகு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அண்ணன் DR.M.SUBRAMANIYAN.BA.LLB.அவர்களின் வழிகாட்டுதலின்படி ஏனைய மாண்புமிகு அமைச்சர்கள்,நாடாளுமன்ற உறுப்பினர்கள்,சட்டமன்ற உறுப்பினர்கள்,கழக நிர்வாகிகள்,கழக மகளிரணி சகோதரிகள்,கழக உடன்பிறப்புகள் கலந்துகொண்ட வரலாற்று சிறப்புமிகு உறுதிமொழியேற்ப்பு நிகழ்வில் வேளச்சேரி மேற்கு 178-வது வட்டக்கழக செயலாளர் சேவைமாமணி K.N.தாமோதரன் அவர்கள் கழக உடன்பிறப்புகளுடன் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

 

கடலூர் மாவட்ட பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் நெய்வேலி தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது

கடலூர் மாவட்ட பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் தந்தை பெரியாரின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு நெய்வேலி வட்டம் 2 ஸ்டோர் ரோடு அருகே அமைந்துள்ள தந்தை பெரியாரின் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது, இந்நிகழ்வில் பகுஜன் சமாஜ் கட்சியின் கடலூர் கிழக்கு மாவட்ட தலைவர் தணிகைச்செல்வன் தலைமை வகித்தார், தெற்கு மாவட்ட தலைவர் குமரவேல் மேற்கு மாவட்ட தலைவர் ஐயா சாமி மாவட்ட பொதுச் செயலாளர்கள் ஜெயப்பிரகாஷ், சண்முகராஜன், அன்ன பிரகாஷ் துணைத் தலைவர் சந்திரபாபு மற்றும் மாவட்ட பொருளாளர் விஜயகாந்த் பாக்கியராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளராக வழக்கறிஞர் இரா. வைத்தீஸ்வரன் அவர்களும் ஒருங்கிணைந்த மாவட்ட ஒருங்கிணைப்பாளர் செந்தில் முருகன், மற்றும் ஊடகப் பிரிவை சேர்ந்த T. பழனிவேல் ஆகியோர் கலந்துகொண்டு பெரியாரின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர் மேலும் மாவட்ட சட்டமன்ற தொகுதி ஒன்றிய மற்றும் நகர நிர்வாகிகள் நூற்றுக்கு மேற்பட்டோர் திரளாக கலந்துகொண்டு சிறப்பித்தனர் நிகழ்ச்சியின் இறுதியில் நெய்வேலி சட்டமன்ற தொகுதி மாவட்ட செயலாளர் ஜோதி முருகன் அவர்கள் நன்றி தெரிவித்தார்

உளுந்தூர்பேட்டை அருகே கந்துவட்டி கொடூரம்: குடிபோதையில் இருந்த  கூலி தொழிலாளியிடம் 20 லட்சம் மதிப்புள்ள வீட்டை 2 லட்சத்திற்கு எழுது வாங்கல் மன உளைச்சலில் கூலி தொழிலாளி மாரடைப்பால் மரணம்

கந்து வட்டி,  மீட்டர் வட்டி, ஜெட் வட்டி என பல பெயர்களில் பல வடிவங்களில் வட்டி கொடுமை தமிழகத்தில்  தலைவிரித்தாடுகிறது. தமிழகத்தில்  பெரும்பாலும் நலிவடைந்த கூலி தொழிலாளர்களின் ஏழ்மை நிலையை சாதகமாக்கிக் கந்து வட்டியை முழுநேரத் தொழிலாகக் கொண்டு செயல்படுபவர்கள் தமிழகத்தில் ஏராளம். கந்துவட்டி கொடுமையால் பொருள்கள் அபகரிக்கப் படுவதும், தற்கொலை செய்வதும், கடத்தப்படுவதும் சில நேரங்களில் கொலை செய்யப்படும் சம்பவங்கள் அரங்கேறுதைக்கூட தமிழகத்தில் பார்த்திருக்கிறது. சில நேரங்களில் வட்டித் தொகை அதிகரித்து சம்பந்தப்பட்டவரின் சொத்துக்கள் பறிக்கப்படுவதும் நேர்வதுண்டு.

அதன்வரிசையில் கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை வட்டாரத்தில் அமைந்துள்ள ம. குன்னத்தூர் ஊராட்சி கூலி தொழிலாளி முருகன் என்பவர் அதே பகுதியில் மளிகை கடை நடத்திவரும் முருகன் என்பவரரிடம் பத்து ஆண்டுகளுக்கு முன்பு பெற்ற மளிகை பொருட்கள் மற்றும் கொஞ்சம் பணம் வாங்கிய  நிலையில் அது வட்டியும் முதலுமாக 20,000 ஆகிறதுள்ளது. அதை திரும்பி செலுத்தாத நிலையில் வீடு பேப்பரை வாங்கி கொண்டு மீண்டும் கொஞ்சம் பணம் கொடுத்துள்ளார்.

வட்டியும் முதலும் வராததால் கூலி தொழிலாளி முருகன் குடி போதையில் இருந்தபோது அவரின் குடும்பத்திற்கு தெரியாமல் மளிகை கடை நடத்திவரும் முருகன் 20 லட்சம் மதிப்புள்ள வீட்டை 2 லட்சத்து  25 ஆயிரம் பேசி 2 லட்சம் அட்வான்சு கொடுத்துள்ளதக்க 2018 செப்டம்பர் 27 ம் தேதி பத்திரப்பதிவு செய்துள்ளளார்.  இந்நிலையில் முருகன் ஏதோ மளிகை கடை முருகனிடம் கடன் வாங்கி இருப்பதாகவும் அதனால் வீட்டை எழுதி வாங்கி விட்டதாகவும் ஊருல பேசிக்கிறாங்க அதை அறிந்து,  பதறியடித்து ஓடி சென்று விசாரித்துள்ளார்.

அப்போது மளிகை கடை முருகன் என்னுடைய கொழுந்தன் முருகனுக்கு  அங்க கொஞ்சம்,  இங்க கொஞ்சம் அதுக்கு வட்டி, இதுக்கு வட்டி  என ஆகமொத்தம் 2 லட்சம் ஆகுது. பணம் வருவதாக தெரியவில்லை அதனால் ரிஜிஸ்டர் செய்து கொண்டேன் என தெரிவித்துள்ளார். மேலும் வாங்கி மூன்று வருடம் ஆக இன்னமும் 20 நாள் இருக்கு. இப்ப வட்டியும் முதலுமாக சேர்ந்தது 4 லட்சத்து 75 ஆயிரம்  ஆகிறது இதை கொடுங்கள் நான் உங்களுக்கு இடத்தை மாற்றி எழுதி தருகிறேன். இல்லை என்றால் நான் கோர்ட்டுக்கு போய் இடத்தை என்னுடைய பெயருக்கு மாற்றிவிடுவேன் என மிரட்டியுள்ளார் மளிகை கடை முருகன்.

கூலி தொழிலாளி முருகன் என்ன செய்வது என்று தெரியாத நிலையில் தன வயதான தாய்  மற்றும் கணவனை இழந்த அண்ணி குழந்தைகளின் எதிர்கால கேள்விக்குறியாகி விட்டதே குடி போதையில் நடந்த சம்பவத்தை எண்ணி  வருத்தப்பட்டு கொண்டுள்ளதாக தெரிகிறது. இந்நிலையில் நேற்று திடீர் மாரடைப்பால் கூலி தொழிலாளி முருகன்  மரணம் அடைந்தார்.  எதையும் சமாளிக்க முடியும் என்கிற மனோபாவதில் மளிகை கடை முருகன் செய்த செயலில் இன்று ஒரு உயிர் பலியாகியுள்ளது.

நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா குன்னூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் இயந்திரத்தை துவங்கி வைத்தார்

நீலகிரி மாவட்டம் குன்னூர் வட்டாரத்திற்கு உட்பட அனைத்து கர்ப்பிணி பெண்களும் இலவச ஸ்கேன் வசதி செய்து கொள்ளும் வகையில் குன்னூர் ஓட்டுப்பட்டரை அமைந்துள்ள அரசு நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் மெட் மீம்ஸ் இன்ஃபர்மேட்டிக்ஸ் நிறுவனம் சார்பாக மகேஷ் நைத்தானி வழங்கிய அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் இயந்திரத்தை நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா அவர்கள் துவங்கி வைத்தார்.

‘வலிமை’ படப்பிடிப்பிற்கு ரஷ்யா சென்ற அஜித் ரஷ்ய குடும்பத்துடன் சின்னதா ஒரு கிளிக்..!

பாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூர் தயாரிப்பில் இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்த, ‘நேர்கொண்ட பார்வை’ படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்ததால், இந்த படத்தை தொடர்ந்து போனி கபூர் தயாரிப்பில் மற்றும் எச்.வினோத் அஜித்துடன் இணைந்துள்ள இரண்டாவது படமான ‘வலிமை’ குறித்து, ரசிகர்கள் மத்தியில் ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள் நிலவி வருகிறது.

இந்த படத்தின் அஜித்துக்கு ஜோடியாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘காலா’ படத்தில், ரஜினிகாந்தின் முன்னாள் காதலியாக நடித்த பாலிவுட் நடிகை ஹூமா குரேஷி நடித்துள்ளார்.மேலும் இந்த படத்தில் யோகிபாபு நகைச்சுவை கதாபாத்திரத்திலும், தெலுங்கு நடிகர் கார்த்திகேயா வில்லனாகவும் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்திற்கு நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார்.

‘வலிமை’ படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பான கடைசி சண்டை காட்சி ஒன்றை மட்டும் படக்குழு, வெளிநாட்டில் படமாக்க முடிவு செய்த நிலையில், கொரோனா பிரச்சனை காரணமாக, அந்த குறிப்பிட்ட சண்டை கட்சியை எடுப்பது தாமதமாகிக்கொண்டே சென்றது. இந்நிலையில் படக்குழுவினர் கடந்த சில நாட்களுக்கு முன் ரஷ்யா சென்றனர். அங்கு ரஷ்யாவில் அஜித் ரசிகர்கள் குடும்பத்துடம் புகைப்படம் எடுத்துக்கொண்டனர் அஜித்தின் ரசிகர்கள் மத்தியில் ஏகப்பட்ட பரபரப்பு நிலவி வருகிறது.

தமிழகத்தின் புதிய கவர்னர் ஆர்.என்.ரவிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

தமிழக கவர்னராக புரோகித் பதவி வகித்து வந்த பன்வாரிலால் புரோகித் சமீபத்தில் பஞ்சாப் மாநில கவர்னர் பதவி கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டது. இந்நிலையில் பன்வாரிலால் புரோகித் பஞ்சாப் கவர்னராக நியமிக்கப்பட்டு, தமிழகத்திற்கு புதிய கவர்னராக ஆர்.என்.ரவியை நியமனம் செய்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நேற்று உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில், தமிழகத்தின் புதிய கவர்னராக நியமிக்கப்பட்ட ஆர்.என்.ரவிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவரது டுவிட்டர் பக்கத்தில், தமிழ்நாட்டின் கவர்னராக நியமிக்கப்பட்டிருக்கும் மாண்புமிகு ஆர்.என்.ரவி அவர்களுக்கு எனது வணக்கமும் வாழ்த்தும்! தங்களது வருகை தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும் வளத்துக்கும் ஊக்கமளிப்பதாக இருக்கட்டும்!. தங்களை தமிழ்நாடு வரவேற்கிறது!. என  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்தெரிவித்துள்ளார்.