முக்கல், முனகல் கசமுசா வீடியோக்களுக்கு சொந்தக்காரி டிக் டாக் சுகந்தி உள்ளே ..

இன்றைய ஒட்டு மொத்த இளசுகளின் தூக்கத்தை கெடுத்து கன்னாபின்னாவென்று கசமுசா வீடியோக்களை வெளியிட்டு டிக்-டாக்கில் புகழ் பெற்றவர்களில் ஒருவர் டிக்டாக் மோகத்தால் அவரது கணவர் பிரிந்து வாழும் சுகந்தி. டிக்டாக் சுகந்தி என்றால் போதும்… வெறும் முக்கல், முனகல் பாடல்களுக்கு லிப் மூவ்மென்ட், டான்ஸ் என டிக்டாக் வீடியோவை போட்டும், திடீரென ஆபாசமாகவும் அடிக்கடி தோன்றி ரசிகர்களுக்கு உடனடியாக ஞாபகம் வரும் அளவிற்கு சுகந்தி வீடியோக்கள் சூடாக இருக்கும்.

அந்த சுகந்தி இன்று கம்பி எண்ணிக் கொண்டு இருக்கிறார். மதுரை மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலையத்திற்கு கடந்த 13-ந்தேதி சிவகாசியை அடுத்த ஆலங்குளத்தை ஒத்தக்கடையை சேர்ந்த பெண் ஒருவர் புகார் கொடுத்தார். அதில், தமது டைவர்ஸ் வழக்கு குறித்து ஒருவருடன் பேசிய பேச்சுகளை தன்னுடைய கணவர் புகைப்படத்தை பயன்படுத்தி சமூக வலைதளங்களில் ஆபாசமான வார்த்தைகளால் சித்தரித்து பேசி வீடியோ ஒன்று வெளியிட்டதாக தெரிவித்திருந்தார்.

இந்த புகாரின் பேரில் மதுரை மாவட்ட சைபர் கிரைமிற்கு தகவல் தொழில் நுட்ப சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டது. மேலும் இந்த வழக்கு சம்பந்தமாக மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் உத்தரவின் பேரில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

இந்த வழக்கில் தேனி மாவட்டம் நாகலாபுரம் பகுதியை சேர்ந்த டிக்-டாக் பிரபலம் சுகந்திக்கு தொடர்பிருப்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து காவல்துறையினர் அவரை தேடி வந்த நிலையில், சுகந்தி சென்னையில் மேக்கப் கலைஞராக பணிபுரிந்து தெரியவந்தது. அதன்பேரில் காவல்துறை டிக்-டாக் சுகந்தியை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி உள்ளே வைத்திருக்கின்றனர்.

குடிநீர் கேட்டு பேரூராட்சி அலுவலகத்தை பெண்கள் முற்றுகை

திண்டுக்கல் மாவட்டம், அம்மையநாயக்கனூர் பேரூராட்சி ராஜதானிகோட்டை பிள்ளையார் கோவில் தெருவிலுள்ள எம்.ஜி.ஆர். நகர் பகுதியில் கடந்த 3 நாட்களாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என தெரிய வருகிறது.

இதனால் மிகவும் சிரமபட்டதால் அப்பகுதியை சேர்ந்த பெண்கள் நேற்று காலிக்குடங்களுடன் வந்து அம்மையநாயக்கனூர் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

டிடிவி தினகரன் பரபரப்பு பேட்டி: அ.தி.மு.கவை மீட்பதே இலக்கு

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அமமுக தலைமையகத்தில் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய டிடிவி தினகரன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, உள்ளாட்சி தேர்தலில் 9 மாவட்டங்களில் தி.மு.க. முறைகேடு செய்துள்ளது மடடுமின்றி ஜெயலலிதா மரணம் குறித்து பொய் பிரச்சாரத்தை கிளப்பிவிட்டதும் தி.மு.க. தான்.

கோடநாடு வழக்கு பற்றிய கேள்விக்கு – மடியில் கனம் இல்லை என்றால் பயப்பட வேண்டாம். எடப்பாடி பழனிசாமி அரசியல் ரீதியாக பலவீனமாக இருக்கிறார். மேலும் வி.கே. சசிகலா சட்ட ரீதியாக அ.தி.மு.க.வை மீட்கப் போராடுகிறார்; நான் ஜனநாயக முறைப்படி தேர்தலில் வென்று மீட்டெடுக்க போராடுகிறேன். வி.கே. சசிகலாவும் நானும் வெவ்வேறு வழியில் பயணித்தாலும் அதிமுக-வை மீட்பதே இருவரின் இலக்கு வி.கே. சசிகலாவுக்கு ஆதரவாக இருந்த எழுச்சி அப்படியேதான் இருக்கிறது என தெரிவித்தார்.

போதையில் அடுத்தவர் வீட்டுக்குள் நிர்வாணமாக நுழைந்த அ.தி.மு.க. எம்.பி. க்கு தர்மஅடி

அ.தி.மு.க.முன்னாள் நீலகிரி நாடாளுமன்ற தொகுதி உறுப்பினரான குன்னூரை சேர்ந்த கோபாலகிருஷ்ணன்.தற்போது குன்னூர் நகர்மன்ற தலைவராக பதவி வகித்து உள்ளார். நேற்று முன்தினம் தீபாவளி நாளில் அ.தி.மு.க. முன்னாள் எம்.பி. கோபாலகிருஷ்ணன் குடிபோதையில் இரவு 10 மணியளவில் ஓட்டுப்பட்டறை அருகே முத்தாளம்மன் பேட்டை குடியிருப்பு பகுதியில் உள்ள கோபி என்பவரது வீட்டுக்குள் ஆடையின்றி நிர்வாண கோலத்தில் திடீரென புகுந்தார்.

அப்போது வீட்டில் பெண்கள் இருந்ததால்,அவரிடம், கோபாலகிருஷ்ணன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும் கோபி மற்றும் அ.தி.மு.க. முன்னாள் எம்.பி. கோபாலகிருஷ்ணன் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது அ.தி.மு.க. முன்னாள் எம்.பி. கோபாலகிருஷ்ணனை கோபி தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் காயமடைந்ததாக கூறி அ.தி.மு.க. முன்னாள் எம்.பி. கோபாலகிருஷ்ணன் குன்னூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்துள்ளார்.

இதையடுத்து முன்னாள் எம்.பி. கோபாலகிருஷ்ணன் தனது வீட்டிற்குள் நிர்வாணமாக நுழைந்தது குறித்து குன்னூர் நகர காவல் நிலையத்தில் கோபி புகார் அளித்தார். மற்றொரு புறம் தன்னை தாக்கியதாக கோபி மீது அ.தி.மு.க. முன்னாள் எம்.பி. கோபாலகிருஷ்ணன் புகார் கொடுத்தார். இதனால் அவர்கள் 2 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் அ.தி.மு.க. முன்னாள் எம்.பி. கோபாலகிருஷ்ணன் நிர்வாணமாக அடுத்தவர் வீட்டுக்குள் புகுந்த காட்சி செல்போனில் வீடியோவாக பதிவு செய்யப்பட்டு உள்ளது. இதனால் குன்னூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

‘பஞ்சாப் நேஷனல் வங்கி’ ஊழியர் போலி பணி நியமன ஆணை வழங்கி மோசடி

சென்னை பழைய வண்ணாரப்பேட்டை, சிமெண்ட் சாலை, மாடர்ன் லைன் பகுதியில் வசித்து வரும் ஜெயசீலன் என்பவர் தன் மகளுக்கு வேலை தேடி வந்தார். கடந்தாண்டு பிப்ரவரி மாதம் பெரம்பூர் பேப்பர் மில் சாலையிலுள்ள ‘பஞ்சாப் நேஷனல் வங்கி’யில் அலுவலக உதவியாளர் வேலைக்கு ஆட்கள் தேவை என்ற விளம்பரத்தை கண்டு அந்த வேலையை தன் மகளுக்கு பெற்றுத்தர முயன்றார். தனக்கு அறிமுகமான திரு.வி.க., நகரைச பஞ்சாப் நேஷனல் வங்கி கிளை ஊழியர் ராஜேஷ் என்பவரை அணுகினார்.

அதற்கு ராஜேஷ், தன் மேலதிகாரி மூலம் அங்குள்ள அதிகாரிகளின் உதவியை பெற்று, வேலை வாங்கி விடலாம் ஆனால், அதற்கு பணம் செலவாகும் எனக் கூறியிருக்கிறார். ராஜேஷின் பேச்சை நம்பிய ஜெயசீலன், கடந்தாண்டு பிப்ரவரி மாதம் 13-ம் தேதி, 2.70 லட்சம் ரூபாய் பணத்தை, ராஜேஷிடம் கொடுத்தார். இதையடுத்து, அவர், போலி பணி நியமன ஆணையை ஜெயசீலனிடம் வழங்கியிருக்கிறார்.

அதை வங்கிக்கு எடுத்து சென்ற பின் தான், அது போலி என்பது தெரிய வந்தது.இதையடுத்து, ஜெயசீலன் தன் பணத்தை திரும்ப கேட்டு, பலமுறை ராஜேஷிடம் அலைந்திருக்கிறார். அவர் பணத்தை கொடுக்காமல் :ஏமாற்றினார். இந்நிலையில், நேற்று முன்தினம், ஜெயசீலன், திரு.வி.க. நகர் காவல் நிலையத்தில் புகார் கொண்டுள்ளார். இது குறித்து விசாரித்த போலீசார், பணமோசடியில் ஈடுபட்ட ராஜேஷை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

தூய்மை பணியாளர் மேரிக்கு எஸ்.வி.சேகர் பாராட்டு

சென்னை திருவொற்றியூர், அண்ணாமலை நகரை சேர்ந்த கணேஷ் ராமன் கூரியர் ஊழியரான இவர் கடந்த மார்ச் மாதம் 100 கிராம் தங்க நாணயத்தை வாங்கி ஒரு கவரில் போட்டு கட்டிலின் அடியில் வைத்துள்ளார். இதனை அறியாத அவரது மனைவி வீட்டை சுத்தம் செய்தபோது அந்த கவரை குப்பையில் போட்டுள்ளார். பின்னர் இது குறித்து அறிந்தது அதிர்ச்சியடைந்த கணேஷ் ராமன், சாத்தாங்காடு காவல் நிலையத்தில் புகாரளித்தார்.

இது தொடர்பாக தூய்மை பணியாளர்களுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையே குப்பைகளை தரம் பிரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தூய்மைப் பணியாளர் மேரி என்பவர், தங்க நாணயம் இருந்த கவரை கண்டு, உடனடியாக தனது மேற்பார்வையாளரிடம் தகவல் தெரிவித்துவிட்டு சாத்தாங்காடு காவல் நிலையத்தில் அதனை ஒப்படைத்தார்.

நடிகர் எஸ்.வி.சேகர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், பணமே முக்கியம், நேர்மையாக வாழ்வது மிகக்கடினம் என நினைக்கும் இக்காலத்திலும், வறுமையிலும், ஏழ்மையிலும் அடுத்தவர் பொருள் நமக்கு வேண்டாம் என நினைத்த மேரியின் மிகப்பெரிய நேர்மையான இச்செயலை பாராட்டி என் தொண்டு நிறுவனத்தின் மூலம் ரூ.5 ஆயிரம் வழங்குவதில் பெருமை அடைகிறேன் என தெரிவித்துள்ளார்.

தந்தையை இழந்த பார்வை குறைபாடு உள்ள தாயின் பராமரிப்பில் வளர்ந்த பழங்குடி மாணவி நீட் தேர்வில் தேர்ச்சி

இந்தியா முழுவதும் கடந்த செப்டம்பர் 12-ஆம் தேதி மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு நடைபெற்றது. இதில் தமிழகத்தில் 1.10 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதினர். இந்த தேர்வுக்கான முடிவுகள் நேற்று முன்தினம் வெளியானது. இந்த நீட் தேர்வில், கோயம்புத்தூர் மாவட்டம் மதுக்கரை அருகே உள்ள எம். நஞ்சப்பனூர் என்ற மலைக்கிராமத்தைச் சேர்ந்த முனியப்பன் மகள் சங்கவி. முனியப்பன் இறந்து விட்ட நிலையில் தாயார் வசந்தாமணி கண் பார்வை குறைபாடுள்ளவர்.

இந்த நீட் தேர்வில், தந்தையை இழந்த பார்வை குறைபாடு உள்ள தாயாருடன் இருந்து வரும் கோயம்புத்தூர் மாணவி மலசர் பழங்குடியை சேர்த்தவர். பழங்குடியின மாணவ, மாணவிகள் 108 மதிப்பெண்கள் பெற்றிருந்தாலே அரசு மருத்துவக்கல்லூரியில் எம்.பி.பி.எஸ். படிப்புக்கு தகுதி பெற்ற நிலையில் மாணவி சங்கவி, நீட் தேர்வில் 720 மதிப்பெண்களுக்கு 202 மதிப்பெண்கள் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆதரவற்ற மூதாட்டியின் நிலத்தை அபகரிக்க முயற்சி போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம்

நீலகிரி மாவட்டம் ஊட்டி போக்குவரத்து காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வரும் பஷீர் அகமது என்பவர் ஊட்டி பிங்கர்போஸ்ட் பகுதியில் வீட்டு வசதி வாரிய குடியிருப்பை ஒட்டி வசித்து வருகிறார். இந்நிலையில் பஷீர் அகமது புதிய கட்டிடம் அருகே இருந்த நிலத்தையும் ஆக்கிரமிக்க முயன்றதாக மூதாட்டி ஒருவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இதற்கிடையே கடந்த 22-ந் தேதி கொரோனா பாதிப்புக்கு உள்ளான போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் பஷீர் அகமது ஊட்டி அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அதேசமயம் அவர்மீது மூதாட்டி புகார் அளித்தது பஷீர் அகமதுவிற்கு தெரிய வந்தது. ஆத்திரம் அடைந்து பூரண குணமடைந்து வீடு திரும்பிய பஷீர் அகமது மூதாட்டியை மீண்டும் நிலத்தை கொடுக்கும்படி தொந்தரவு செய்து உள்ளார்.

மேலும் யாருமின்றி ஆதரவற்ற நிலையில் இருந்த மூதாட்டி நிலத்தை அபகரிக்க முயன்றது குறித்து மீண்டும் புகார் எழுந்துள்ளது. அதன் பேரில் நீலகிரி காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ் ராவத் விசாரணை நடத்த அறிவுறுத்தினார். இதனைத்தொடர்ந்து விசாரணை நடத்தியதில் போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் பஷீர் அகமது நிலத்தை அபகரிக்கும் எண்ணத்தில் மூதாட்டியை மிரட்டியது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து நீலகிரி காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ் ராவத் போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் பஷீர் அகமதுவை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.

ஊட்டி காந்தல் பகுதி கல்லறை தோட்டத்தில் இறந்தவர்களுக்கு பிடித்த உணவுகளை கல்லறை மேல் வைத்து பிரார்த்தனை

உலகம் முழுவதுமுள்ள கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் ஆண்டுதோறும் நவம்பர் 2-ந் தேதி இறந்த ஆன்மாக்களை நினைவு கூர்ந்து, அவர்களுக்காக பிரார்த்தனை செய்யும் விதமாக கல்லறை திருநாளாக அனுசரித்து வருவது வழக்கம்.

இந்நிலையில் உலகம் முழுவதும் கல்லறை திருநாளாக அனுசரித்து வரும் நிலையில், ஊட்டி காந்தல் பகுதியில் உள்ள கல்லறை தோட்டத்தில் கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் தங்களது இறந்த உறவினர்கள் மற்றும் முன்னோர்களது கல்லறைகளுக்கு சென்று, அங்கு இறந்தவர்களை நினைவு கூறும் வகையில் கல்லறையில் மலர்கள், மெழுகுவர்த்திகள் வைத்து அலங்கரித்து, இறந்தவர்களுக்கு பிடித்த உணவுகளை கல்லறை மேல் வைத்து பிரார்த்தனை செய்தனர்.

ரூ.15 லட்சம் பறிக்க முயற்சி காவல் உதவி ஆய்வாளர் உள்பட 6 பேர் கைது

திருவண்ணாமலை மாவட்டம் செய்யார் பெரும்பாலை விநாயகபுரம் பகுதியை சேர்ந்த பழனி நிதி நிறுவன நடத்தி வருக்கிறார். பழனி தீபாவளி பண்டிகைக்கு முன்பாக இனிப்பு, காரம், பட்டாசு மற்றும் ஒரு பவுன் தங்க நாணயம் தருவதாக கூறி ஒவ்வொரு மாதமும் பணம் வசூல் செய்து வந்தார். இதற்கிடையே பழனியை தொடர்பு கொண்ட சேலத்தை சேர்ந்த சிலர், ஒரு பவுனுக்கு ரூ.300 முதல் ரூ.500 வரை குறைத்து தங்க நாணயம் கொடுப்பதாக கூறியுள்ளனர்.

இதனை நம்பி பழனி, தன்னுடைய நண்பனை அழைத்துக்கொண்டு சேலத்துக்கு புறப்பட்டார். மேலும் தங்க நாணயங்கள் வாங்குவதற்காக ரூ.15 லட்சத்தையும் எடுத்துக்கொண்டு ஒரு காரில் சேலத்துக்கு வந்தார். பழனி சேலத்துக்கு வந்தபோது, பழனியை தொடர்பு கொண்ட அந்த கும்பல் ஓமலூர் அருகே ஆர்.சி. செட்டிப்பட்டி பிரிவு ரோட்டில் உள்ள தனியார் உணவு விடுதிக்கு அருகில் வரும்படி கூற பழனியும், அவருடைய நண்பரும் ஆர்.சி. செட்டிப்பட்டி அருகில் வந்தபோது அவர்களை 6 பேர் கும்பல் தங்களை ஆய்வாளர் என்றும், உதவி-ஆய்வாளர் என்றும் கூறி வழிமறித்தது விசாரணைக்கு காவல் நிலையம் வரும்படியும் அவர்களை அழைத்துள்ளது.

இதில் சந்தேகம் அடைந்த பழனியும், நண்பரும் அவர்களிடம் வாக்குவாதம் செய்யவே அங்கிருந்து அவர்கள் ரூ.15 லட்சத்துடன் தப்பி ஓட்டம் பிடித்தனர். அந்த அவர்களில் கும்பலில் ஒருவரை பிடித்து ஓமலூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அந்த நபரிடம் துணை காவல் கண்காணிப்பாளர் சங்கீதா விசாரணை நடத்தியதில், அவர் அங்கம்மாள் காலனியைச் சேர்ந்த உதயசங்கர் என்பது தெரியவந்தது. அவரிடம் நடத்திய மேல் விசாரணையில் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளியானது.

சேலம் அம்மாபேட்டை காமராஜர் நகரை சேர்ந்த பெரியசாமி என்பவர் முதலில் பழனியை தொடர்பு கொண்டு குறைந்த விலைக்கு தங்க காசுகள் தருவதாக கூறியுள்ளார். அதன்பிறகு பெரியசாமியின் மகன் ஜெகன், அவருடைய மருமகன் சங்ககிரியை சேர்ந்த பரணிதரன், மணக்காடு வக்கீல் விஜயகுமார், கொண்டலாம்பட்டி சிறப்பு உதவி ஆய்வாளர் சரவணன் ஆகியோர் கும்பலாக இந்த துணிகர செயலில் ஈடுபட்டது தெரிய வந்தது.

தற்போது கொண்டலாம்பட்டி காவல் நிலையத்தில் ஆய்வாளர் பணியிடம் காலியாக இருப்பதால் சரவணன் இந்த மோசடி கும்பலுடன் சேர்ந்து பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. வேலியே பயிரை மேய்ந்த கதையாக சிறப்பு உதவி ஆய்வாளரே இந்த செயலில் ஈடுபட்டு்ள்ளது பொதுமக்களை பெரும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது.