அதிகாரிகள் மெத்தனத்தால் தொடரும் சோகம்: புதை மணல் குறித்து அபாய எச்சரிக்கை பலகைகள் எங்கே..!? இனியாவது அபாய எச்சரிக்கை பலகைகள் பளிச்சிடுமா..!?

நீலகிரி மாவட்டம் கூடலூரை சேர்ந்த வங்கி ஊழியர் மணிகண்டன் என்பவர் மகன் சஞ்சய் கூடலூர் அரசுப் பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகின்றார். தற்போது பள்ளிக்கு விடுமுறை என்பதால் சஞ்சய் திருப்பூர் மாவட்டம் அவினாசி வேலாயுதம்பாளையம் ராயர் கோவில் வீதியில் வசித்து வரும் உறவினரான ஞானசேகர் வீட்டில் நிலையில், ஞானசேகரின் மகன்கள் தினேஷ், பிரவின் ஆகியோர் பழனி முருகன் கோவிலுக்கு பாதயாத்திரையாக செல்ல முடிவு செய்து இருந்தனர்.

அவர்களுடன் சஞ்சய்யும் கோவிலுக்கு வருவதாக கூறியதை தொடர்ந்து சஞ்சய், தினேஷ், பிரவீன் உள்பட 8 பேர் கொண்ட முருக பக்தர்கள் அவினாசியில் இருந்து பழனிக்கு நேற்று முன்தினம் இரவு பாதயாத்திரையாக புறப்பட்டனர். இவர்களில் 5 பேர் தாராபுரத்தில் உள்ள அமராவதி புதிய ஆற்றுப்பாலத்தை கடந்து சற்று தொலைவு முன்னால் சென்று விட்டனர். சஞ்சய், தினேஷ் மற்றும் பிரவீன் ஆகிய 3 பேரும் அவர்களை தொடர்ந்து சென்றனர். அவர்கள் அமராவதி ஆற்றுப்பாலத்தில் செல்லும் போது ஆற்றில் தண்ணீர் செல்வதை பார்த்ததும் அதில் குளிக்க ஆசை ஏற்பட்டது.

இதையடுத்து அவர்கள் 3 பேரும் அமராவதி ஆற்றில் இறங்கி குளித்தனர். அப்போது ஆழமான பகுதிக்கு சென்றதாக கூறப்படுகிறது. அப்போது எதிர்பாராத விதமாக புதை மணலில் சஞ்சய் சிக்கிக்கொண்டார். இதனால் சஞ்சய் காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள் என்று அபாய குரல் எழுப்ப உடனே தினேஷ் மற்றும் பிரவீன் ஆகிய 2 பேரும் சஞ்சயை காப்பாற்ற முயன்றனர். ஆனால் அவர்களால் சஞ்சயை காப்பாற்ற முடியவில்லை.

இதனையடுத்து தாராபுரம் தீயணைப்பு நிலைய அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்க தீயணைப்பு துறை வீரர்களும், காவல்துறையினரும் சம்பவ இடத்திற்கு வந்து ஆற்று நீரில் மூழ்கிய சஞ்சயை தேடிய நிலையில் இரவு 7 மணியளவில் சஞ்சய் உடல் மீட்கப்பட்டது். பழனி முருகன் கோவிலுக்கு சென்ற பக்தர் அமராவதி ஆற்றில் மூழ்கி பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கழிவுநீர் கால்வாய் மீது ஆக்கிரமித்து கட்டிய ஜெயலலிதா கோயில் இடிப்பு

ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகளின் ஒரு பகுதியாக தஞ்சாவூர் மாநகராட்சியில் சாலை மேம்பாட்டுப் பணி மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதன்வரிசையில், தஞ்சாவூரில் உள்ள தேரோடும் வீதிகளில் சாலைகளை சீரமைத்து, மழைநீர் வடிகால்கள் அமைத்து, அவற்றின் மீது நடைபாதைகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஆகையால், தஞ்சாவூர் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை மாநகராட்சி அதிகாரிகள் அகற்றி வருகின்றனர்.

இந்நிலையில், தஞ்சாவூர் மேல வீதியில் கொங்கனேஸ்வரர் கோயில் அருகில், 2017-ம் ஆண்டு முன்னாள் கவுன்சிலர் கோட்டை பகுதி ஜெயலலிதா பேரவை செயலாளருமான சுவாமிநாதன் என்பவர் மறைந்த முதல்வர் ஜெயலலிதா உருவப்படம் வைத்து கோயில் கட்டி உள்ளார். இந்தக் கோயில் கழிவுநீர் கால்வாய் மீது ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்தது தெரியவந்ததால், அந்தக் கோயிலை மாநகராட்சி அதிகாரிகள் பொக்லைன் மூலம் நேற்று முன்தினம் இடித்து அகற்றினர்.

தாராபுரத்தில் பயங்கரம்: நடத்துனரை தாக்கிய வாலிபர் தப்பி ஓட்டம்

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் திருப்பூர் முதல் தேனி வழித்தடத்தில் செல்லும் தாராபுரம் கிளை பேருந்து நேற்று M.ரத்தினசாமி ஓட்டுநர் மற்றும் K. கோபாலகிருஷ்ணன் நடத்துனராகவும் பணிபுரிந்தனர். அப்போது தாராபுரம் பைபாஸ் சாலையில் இருசக்கர வாகனத்தில் முன்னால் சென்ற தாராபுரம் ரிலையன்ஸ் பங்க் உரிமையாளர் சக்திவேல் அவர்களுடைய மகன் நிர்மல்குமார் நமது பேருந்திற்கு முன்னாள் இருசக்கர வாகனத்தில் வழி கொடுக்காமல் சென்ற போது ரத்தினசாமி ஹாரன் அடித்து விலகிச் செல்ல முற்பட்டபோது வழி கொடுக்காமல் சென்றுள்ளார்.

மேலும் அந்த வாலிபர் வேகத்தடை அருகே பேருந்துவிற்கு முன்னாள் இருசக்கர வாகனத்தை நிறுத்தி பேருந்துவை மறித்து பேருந்தின் உள்ளே ஏறி ஓட்டுனரை அடிக்க சென்றபோது நடத்துனர் இருவரையும் சமாதானம் செய்ய முற்பட்டபோது நடத்துனரை கொலைவெறி தாக்குதல் நடத்திவிட்டு இருசக்கர வாகனத்தில் தப்பி விட்டார். படுகாயம் அடைந்த நடத்துனர் K. கோபாலகிருஷ்ணன் தாராபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார் என தெரிய வருகின்றது.

சாட்டையை கையில் எடுத்த நகராட்சி ஆணையர்: பொதுமக்கள் நடந்து செல்லும் நடைபாதை முழுவதும் ஆக்கிரமிப்பு: துப்புறவு தொழிலாளிகளும் மனிதர்கள் தானே..!?

இன்றைய நவீன மனிதன் ஆசை என்ற அரக்கனால் கவரப்பட்டு, அந்த அரக்கன் உள்மனதில் நுழைந்து நம்மை பந்த பாசங்களை துறக்க விட்டு பணம் ஒன்றே மூலப்பொருளாக எண்ணி குளம் குட்டைகள், பொதுமக்கள் நடந்து செல்லும் நடைபாதைகள் என ஏதாவது ஒன்றை ஆக்கிரமித்து பல தொழில்கள் செய்வது மட்டுமல்லாது அதன்விளைவாக உருவாகும் குப்பை கூளங்களை கல்வி கூடங்கள், நீர்நிலைகள் என்றும் பாராமல் கொட்டி இன்று நாட்டையே சீரழித்து தான் மட்டுமே நன்றாக வாழவேண்டும் நாடும் நாட்டு மக்களும் நாசமா போன நமக்கு என்ன என்ற கீழ்த்தரமான புத்தியில் நம்மில் பலர் வெளியில் செல்வ சீமான்களாக வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.

இதுமட்டுமல்லாது தான் ஆக்கிரமித்து வணிகம் செய்யும் சுத்தம் சுகாதாரமாக இருக்க வேண்டும் ஆனால் மக்கள் நடமாடும் சாலைகள் எப்படி போனால் என்ற எண்ணத்தில் குப்பை கூளங்களை சாலையிலேயே வீசுவதும் வேடிக்கையானது மட்டுமல்லாது துப்புறவு தொழிலாளிகளை ஒரு மனிதர்களாகவே மதிக்காமல் எங்க கொட்டினாலும் கூட்டி அல்லாடும் என்ற கீழ்த்தரமான புத்தியில் செயல்பட்டு வருகின்றனர்.

இதன் ஒரு தொடர்ச்சியாக நாமக்கல் திருச்செங்கோடு வேலூர் ரோடு ஐசிஐசி பேங்க் எதிர்புறம் ரிலையன்ஸ் ட்ரெண்ட்ஸ் கட்டத்தில் அமைந்துள்ள பிளாக் பிகோ காபி கடையில் வரும் வாடிக்கையாளர்கள் விடிகாலைலேயே டீ, காப்பி கூடித்துவிட்டு சாலை போட்டு செல்லும் அவலம் தொடர்கதையாக நிலையில் இன்று காலை 7 மணி அளவில் நகராட்சி ஆணையர் அவர்கள் சாலையில் கிடந்த குப்பைகளை பார்த்து அதிர்ச்சி அடைந்து, கடைக்காரர்களுக்கு அப்போதாவது புத்தி வருமா? என்ற எண்ணத்தில் துப்புறவு தொழிலாளிகளை அள்ளி வரச்சொல்லி கடையின் வாசலில் கொட்ட சொன்னார். இதுபோன்று தமிழகம் முழுவதும் உள்ள அதிகாரிகள் செயல்பட்டால் தமிழகம் இனிவரும் காலங்களில் குப்பை மிதக்கது என்பதே சமூக ஆர்வலர்களின் விருப்பம்.

கராத்தே போட்டியில் மாநில அளவில் வெற்றி பெற்ற மாணவன் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றார்

டெல்லி நடந்த தேசிய அளவில் எஸ்.வி. பிரணவ் கபடி போட்டியில் 17 வயதிற்குட்பட்ட கபடி பிரிவில் காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற தொகுதி உட்பட்ட மலையம்பாக்ககத்தை சேர்ந்த கணேஷ் என்பவர் கராத்தே போட்டியில் மாநில அளவில் வெற்றி பெற்றுள்ளார்.

இதனை தொடர்ந்து தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி அவர்களை சந்தித்து பூங்கொத்து கொடுத்து போட்டி சான்றுகளுடன் வாழ்த்து பெற்றார். இந்த நிகழ்ச்சியின் போது கலைஞர் செம்மொழி பேரவையின் இளைஞரணி செயலாளர் வெங்கடேஷ் உடன் இருந்தார்.

பஞ்சமி நிலம் மீட்பு குறித்து போராட்ட அறிவிப்பு: வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் சமாதான கூட்டம்

திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு வட்டத்திற்கு உட்பட்ட வாணாபுரம் கிராமத்தில், தாழ்த்தப்பட்ட மக்களுக்கு சொந்தமான, பஞ்சமி நிலத்தை ஆதிக்க சாதியினர் ஆக்கிரமிப்பு செய்து விவசாயம் செய்து வருகிறார்கள் மதுபான கடை வாடகை விட்டுள்ளார்கள் அந்த நிலங்களை தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வழங்கக்கோரி தலித் விடுதலை இயக்கம் மற்றும், தோழமை அமைப்புகள் ஒன்றிணைந்து ஏர் உழும், போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது, அதன்டிப்படையில் இன்று  தேதியில் வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் சமாதான கூட்டம் நடைபெற்றது.

இதில் தண்டராம்பட்டு வட்டாட்சியர், மாவட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர், தண்டராம்பட்டு காவல் ஆய்வாளர், கலந்து கொண்டனர், பஞ்சமி நிலத்தில் உள்ள, அரசு மதுபானக் கடையை உடனடியாக அப்புறப்படுத்தி விடுவதாகவும், மற்றும் முனுசாமிக்கு சொந்தமான நிலத்தை 15 நாட்களில் ஒப்படைத்ததாகவும் மற்றும் 200 ஏக்கர் பஞ்சமி நிலத்தை 1 மாதத்தில் மீட்டுக் கொடுப்பதாகவும் அரசு தரப்பில் எழுத்துப்பூர்வமாக உறுதி அளித்துள்ளார்கள்.

தாராபுரம் பெரிய காளியம்மன் கோவிலின் பூட்டை உடைத்து அம்மனின் தாலியும் மற்றும் வெள்ளி பொருட்கள் திருட்டு

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பெரிய காளியம்மன் கோவிலில் வருடாந்திர பொங்கல் விழா அடுத்த வாரம் நடைபெறும் நிலையில் இன்று அந்தக் கோவிலில் திருட்டு தாராபுரத்தில் அடுத்த வாரம் பொங்கல் விழா கொண்டாடும் நிலையில் அக்கோவிலில் இன்று திருடப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவிலில் அம்மனின் தாலி மற்றும் வெள்ளி பாதம் கொலுசு உள்ளிட்ட வெள்ளி பொருட்கள் தங்க காசுகள் திருடப்பட்டுள்ளதுபெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது தாராபுரம் ஆய்வாளர்கள் மற்றும் கிரைம் காவல்துறையினர் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறார்கள்.

இந்த கோவிலில் அலார மணி இருந்தும் அடிக்காமல் இருப்பது சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது இந்த கோவில் நிர்வாகத்தில் சரியான பராமரிப்பு இல்லாதது தான் காரணம் என்று பொதுமக்கள் கேள்வி எழுப்பினர். மேலும் நேற்று பக்கத்து கோவிலில் பொங்கல் விழா நடைபெற்ற நிலையில் அங்கு அதிக கூட்டம் இருந்த நிலையிலும் இன்று திருடப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

சீமான் கேள்வி: “தமிழர்களின் வாக்கும், வரியும் மட்டும் வேண்டும்; வாழ்வு மேம்பட வேண்டாமா?”

இந்தோனேஷியாவிலுள்ள சுமத்திரா தீவில் கடந்த 2004-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 26-ந் தேதி  கடலுக்கு அடியில் பூகம்பம் ஏற்பட்டதன் காரணமாக சுனாமி எனும் ஆழிப்பேரலை எழுந்து கடற்கரையோர பகுதிகளை சூறையாடியது. இதன்விளைவாக, தமிழகத்தில் 10 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.

சுனாமி ஆழிப்பேரலை 16 ஆண்டுகள் கடந்த பிறகும், இன்றும் அந்த ஆழிப்பேரலையின் ஆறாத நினைவுகள், சுனாமியில் தங்கள் குடும்ப உறுப்பினர்களை இழந்தவர்களின் நெஞ்சில் சோகத்துடன் நிழலாடுகிறது. அந்த வகையில் இன்று 17-வது சுனாமி நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது.

இதையடுத்து வேளாங்கண்ணியில் இன்று நாம் தமிழர் கட்சி சார்பில் நடைபெற்ற சுனாமி நினைவு தின கூட்டத்தில், சீமான் பங்கேற்று சுனாமியில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினார்.

அதன்பிறகு, செய்தியாளர்களிடம் பேசுகையில், 17 ஆண்டுகள் கடந்த போதும் சுனாமியால் பாதிக்கப்பட்ட கடலோர மக்களின் வாழ்வு மேம்படவில்லை என வேதனை தெரிவித்தார். தமிழர்களின் வாக்கும், வரியும் மட்டும் வேண்டும் ஆனால் அவர்களின் வாழ்வு மேம்பட வேண்டாமா? என சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

இ-சேவை மையத்தின் கைவரிசை: மூதாட்டியின் கைரேகை வைத்து ரூ.26 ஆயிரம் மோசடி

புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார் கோவிலை அடுத்த சித்தக்கூர் அருகே உள்ள மெய்யனூரை சேர்ந்த மலையாண்டியின் மனைவி ராக்கம்மாள். இவர் தனது வங்கி கணக்கில் இருந்து பணம் எடுப்பதற்காக ஒக்கூரில் உள்ள ரேகா என்பவர் நடத்தி வரும் சேவை மையத்திற்கு சென்றுள்ளார்.

அங்கு ராக்கம்மாள் வங்கியில் தனது கணக்கில் உள்ள இருப்புத்தொகையை அறிந்து கொள்வதற்காக தனது கைரேகையை வைத்து சரிபார்த்துள்ளார். அப்போது சேவை மையத்தில் பணிபுரிபவர்கள் ராக்கம்மாள் வங்கி கணக்கில் இருந்து ரூ.26 ஆயிரத்தை எடுத்துள்ளனர்.

இதனை அறியாத ராக்கம்மாள் வீட்டிற்கு சென்று விட்டார். பின்னர் அவரது வங்கி கணக்கில் இருந்து பணம் எடுக்கப்பட்டதை அறிந்து அதிர்ச்சி அடைந்து, இந்த சம்பவம் குறித்து கரூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் காவல் துணை ஆய்வாளர் முத்துமணி சேவை மைய உரிமையாளரான ரேகா, அவரது கணவர் சண்முகம் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

ராஜேந்திர பாலாஜியின் 6 வங்கிக்கணக்குகள் முடக்கம்

அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அவர்கள் அரசு துறைகளில் வேலை வாங்கித்தருவதாகவும், கட்சிப் பணிகளுக்காக செலவு செய்த தொகையை திருப்பித் தராமலும் ரூ.3 கோடியே 10 லட்சம் மோசடி செய்ததாக அவர் மீது புகார் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் காவல்துறையினர் பல்வேறு பிரிவுகளின் கீழ் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மற்றும் அவரது உதவியாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் ராஜேந்திர பாலாஜி மனு தாக்கல் செய்தார். இந்த முன்ஜாமீன் தள்ளுபடி செய்யப்பட்டதை தொடர்ந்து ராஜேந்திரபாலாஜியை கைது செய்ய காவல்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டனர். இந்நிலையில் ராஜேந்திர பாலாஜி தனது முன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்த உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது மட்டுமின்றி அதை அவசர மனுவாக விசாரிக்க வேண்டும் என்றும் முறையிட்டுள்ளார்.

மற்றொரு புறம் கோவை, மதுரை, தென்காசி, பெங்களூரூ மற்றும் கேரளா உள்ளிட்ட பல பகுதிகளுக்கு சென்று அவரை தேடும் பணியில் தனிப்படையினர் ஈடுபட்டு இருப்பதாக மாவட்ட காவல் நிர்வாகம் தெரிவித்தது. மேலும் சைபர் கிரைம் காவல் மூலம் ராஜேந்திர பாலாஜியுடன் நெருங்கிய தொடர்புடைய நபர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்களின் கைபேசி எண்கள் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த சூழலில் ராஜேந்திர பாலாஜி வெளிநாடுகளுக்கு சென்று விடக்கூடாது என்பதற்காக விமான நிலையங்களுக்கு ‘லுக்-அவுட்’ நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. இதனிடையே ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி மோசடி செய்த வழக்கில் மேலும் ஒருவர் புகார் அளித்தார். இதனை தொடர்ந்து அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் 6 வங்கிக்கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது.