வி.கே. சசிகலா: அண்ணாமலை அரசியல் அனுபவம் இல்லாத குழந்தை…!

அதிமுக விழும்போதெல்லாம்  ‘வீழ்வதைவிட விரைந்து எழுவதே மேல்’ என்று ஜெயலலிதா வேத வாக்கிற்கு ஏற்ப அதிமுகவை அதிக தேர்தலில், அதிக தொகுதிகளில் வெற்றி பெற வைத்து, அதிமுகவை அதிக தொண்டர்களைக் கொண்ட கட்சியாக மாற்றி,  தமிழக முதல்வராக ஆறு முறை பதவி வகித்த ஜெயலலிதா.  எம்.ஜி. ஆருக்குப் பின் அதிமுக துண்டு துண்டாக உடைந்துவிடும் என்ற கணக்கை உடைத்து, தனது தலைமையின் கீழ் சுமார் 28 ஆண்டுகள் கட்சியைக் கட்டுக்கோப்பாக ஜெயலலிதா வழிநடத்தி, புரட்சித்தலைவி, இரும்புப் பெண்மணி, அம்மா என்றெல்லாம் அதிமுக தொண்டர்களால் அழைக்கப்பட்ட, ‘மக்களுக்காக நான்… மக்களால் நான்’ எனும்  ஜெயலலிதா வாழ்ந்தவர்.

மத்தியில் ஆள்வோர் மக்களுக்கு சேவை செய்யாமல் உள்நாட்டு, வெளிநாட்டு கர்ப்பிரேட் முதலாளிகளுக்கு சேவை செய்து அவர்களின் கஜானாவை நிரப்புகின்றன. கடந்த 50 ஆண்டுகளாக மத்தியில் ஆள்வோருக்கு மாநில கட்சிகளின் ஆதரவு தேவை என்பதால், மாநிலத்தில் மக்கள் செல்வாக்கு மிக்க கட்சியுடன் தேர்தலில் கூட்டணி வைக்க மத்தியில் ஆள்வோர் ஆசைப்படுகின்றனர்.

ஆனால், மாநில கட்சிகள் கூட்டணிக்கு சம்மதிக்காமல் போனால் மத்தியில் ஆளும் கட்சிகள் ஆட்சியை எப்படியாவது தக்கவைக்க வேண்டும் என்ற ஆசையில், மாநில கட்சிக்கு மிகுந்த அழுத்தம் கொடுத்து அவர்களுக்குள்ளே வார்தைப்போர் முற்றுகிறது. இன்று மத்தியில் ஆட்சி செய்யும் பாஜக அரசு தொடர்ந்து மூன்றாவது முறை ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என்ற பேராசையில், மாநில கட்சிகளின் கூட்டணி அமைக்க மும்முரம் காட்டி வருகிறது. அதனால் பாஜக கட்சியின் தலைவர்கள் கூட்டணி கட்சிகள், எதிர் கட்சிகள்  என்று பாராமல் யாருடன் கூட்டணி அமைத்தால் வெற்றி கிடைக்குமோ அவர்களுடன்  கூட்டணி பேரம் நடத்துகின்றனர்.  அவர்களின் கூட்டணி பேரத்திற்கு மசியாத கட்சிகளுடன் வார்த்தை போர் நடத்துகின்றனர்.

அதே நிலையில் இன்று ஜெயலலிதா பற்றி தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, அவதூறாக பேசியது குறித்து, அண்ணாமலை அரசியல் அனுபவம் இல்லாத குழந்தை என விமர்சனம் செய்துள்ளார். “மக்களால் நான் மக்களுக்காகவே நான்” என்று தன் வாழ்நாள் முழுவதும் வாழ்ந்துக் காட்டிய ஜெயலலிதா பற்றி தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, அவதூறாக பேசியிருப்பது மிகவும் துரதிருஷ்டவசமானது.

அண்ணாமலைக்கு ஜெயலலிதாவின் அரசியல் பயணம், அவர் மக்களுக்கு ஆற்றிய அரும்பணிகள் எதுவும் தெரியவில்லை. இன்றைக்கும் தமிழக மக்கள் குறிப்பாக பெண்கள் ஜெயலலிதாவை தங்களது முன் மாதிரியாக வைத்துக்கொண்டு தங்கள் வாழ்வில் ஒவ்வொரு படிகளையும் கடந்து பல்வேறு வெற்றிகளை ஈட்டி வருகிறார்கள்.

ஜெயலலிதா தமிழக மக்கள் ஒவ்வொருவரின் இதய சிம்மாசனத்தில் அமர்ந்து இருக்கிறார்கள். ஜெயலலிதாவை ஆறு முறை முதல்வராக்கி அழகு பார்த்தவர்கள் தமிழக மக்கள். ஜெயலலிதாவுக்கு தமிழக மக்கள் அளித்த இந்த நற்சான்றிதழே போதும். வேறு யாருடைய சான்றிதழும் தேவை இல்லை. ஒரு தாய் தன் பிள்ளைகளுக்கு என்னென்ன செய்வார்களோ அதேபோன்று இந்த தமிழக மக்களுக்கு ஜெயலலிதா தாய்க்கு தாயாக இருந்து பார்த்து, பார்த்து செய்து விட்டார்கள்.

தமிழக மக்களிடமிருந்து நம் ஜெயலலிதாவை யாராலும் பிரிக்க முடியாது. நம் ஜெயலலிதாவுக்கு என்றைக்கும் அழிவே இல்லை. அவர் உடலால் நம்மை விட்டு மறைந்து இருந்தாலும் தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு வீட்டிலும் ஒரு தாயாக, சகோதரியாக, மகளாக என்று ஏதாவது ஒரு ரூபத்தில் இன்றைக்கும் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார்.

இனி யார் எத்தனை ஜென்மம் எடுத்தாலும் ஜெயலலிதா செய்த சாதனைகளை முறியடிக்க முடியாது என்பதனை தெரிவித்துக் கொள்கிறேன். இதைப்பற்றியெல்லாம் எதுவும் அறியாத, அரசியல் அனுபவம் இல்லாத ஒரு குழந்தையான அண்ணாமலையின் பேச்சுக்களுக்கெல்லாம் பதில் அளிக்கவேண்டிய தேவை இல்லை என்றே நான் கருதுகிறேன்.

ஆனால் அதே சமயம் அம்மா உணவகம் தந்து ஏழை எளிய சாமானிய மக்களின் பசியை போக்கி அன்னலட்சுமியாக விளங்கிய ஜெயலலிதாவின் பெயருக்கு களங்கம் ஏற்படுவதை பார்த்துக்கொண்டு இருக்க முடியாது. இதுபோன்ற சிறுபிள்ளைத்தனமான செயல்களால், அவர் சார்ந்த இயக்கத்திற்கே தமிழகத்தில் கெடுதலை ஏற்படுத்தும் என்பது தெளிவாகிறது. தமிழக மக்கள் யாரும் அண்ணாமலையின் பேச்சை ரசிக்கவில்லை.

ஜெயலலிதாவை அரசியல் ரீதியாக எதிர்கொள்ளமுடியாதவர்கள் தனிப்பட்ட முறையில் பொய்யாக புனைந்த வழக்குகளையெல்லாம் முறியடித்து மக்களின் நன்மதிப்பை ஜெயலலிதா பெற்றார் எனபதுதான் வரலாறு. எனவே, பொறுப்பற்றவர்கள் பேசும் இது போன்ற பயனற்ற பேச்சுக்களையெல்லாம் புறந்தள்ளிவிட்டு, “மக்கள் அளித்த தீர்ப்பே, மகேசன் தீர்ப்பு” எனபதை மனதில் வைத்து, மக்கள் பணிகளில் கவனம் செலுத்துவோம். ஒருங்கிணைந்த அதிமுகவை உருவாக்கி தமிழக மக்களை காத்திடுவோம் என்பதை மட்டும் இந்நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இரண்டு ரூபாய் கமர்கட் கொடுத்தால் என்ன ஆகி விடுவாய்..?

காவல்துறையினர் என்னதான் நண்பர்களாக பழகினாலும் அவ்வப்போது அவர்களின் வேலையை காட்டிக்கொண்டே தான் இருக்கின்றார்கள் என மக்கள் வேதனைப்படுவதுண்டு. அதுவும் நைட் ரவுண்ட்ஸ் காவல்துறையினரை என்றால் சொல்வே தேவையில்லை இரவில் இயங்கும் கடைகளில் அவர்கள் செய்யும் அக்கப்போரு தாங்க முடியாது. தாம்பரம் கட்டுப்பாட்டிலிருக்கும் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பணிபுரிந்த நான்கு பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டு இருப்பது வேடிக்கையான விஷயமாகும்.சென்னை, தாம்பரம் படப்பை பகுதியில் கடை நடத்தி வருபவர் பாஷா, ``இவருடைய கடைக்கு நைட் ரவுண்ட்ஸ் காவல்துறையினர் சிலர் இவருடைய கடைக்கு செல்வார்கள். நைட் ரவுண்ட்ஸீல் டீ, பிஸ்கட், கூல்ட்ரீங்ஸ், தண்ணீர்பாட்டில், கொசுவத்தி, பிரெட் ஆம்லெட் உள்ளிட்டவைகளை வாங்கிக்கொண்டுப் பணம் கொடுக்க மாட்டார்கள். இதனை தட்டிக்கேட்க முடியாமல் பாஷா தவித்து வந்தார். காவல்துறையினரின் செயல்களால் பாஷாவிற்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது. ஆகையால் இனி இப்படி நடந்தால் ஏதாவது செய்ய வேண்டும் என முடிவு செய்தார். அதே போல கடந்த 4-ம் தேதி கூடுவாஞ்சேரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஆய்வாளர் விஜயலட்சுமி, ஏட்டு ஜெயமாலா, ஆயுதப்படையைச் சேர்ந்த இரண்டு பெண் காவலர்களுடன் இரவுப் பணிக்காக படப்பை பகுதிக்குச் சென்றிருந்தார். அப்போது, பாஷாவின் கடைக்குச் சென்ற காவல் துறையினர் டீ, பிஸ்கட், கூல்டிரிங்ஸ், பிரெட் ஆம்லெட் உள்ளிட்டவைகளை வாங்கி பணம் கொடுக்காமல் சென்றிருக்கிறார்கள். அதனால் காவல்துறையினரிடம் பாஷா கெஞ்சிக்கூட பார்த்துள்ளார், `மேடம், நீங்கள் 100 ரூபாய்க்கு சாப்பிட்டுக்கொள்ளுங்கள், 500 ரூபாய்க்கு சாப்பிட்டால் எப்படி?’ எனக் கேள்வி கேட்டுள்ளார். அதற்கு அந்த விஜயலட்சுமி மற்றும் உடனிருந்த காவல்துறையினர், `உன்னுடைய கடையின் லைசென்ஸை ரத்து செய்துவிடுவேன்’ என மிரட்ட,அமைதியாக இருந்த பாஷா இது குறித்த சிசிடிவி காட்சிகள் வலைதளங்களில் வெளியிட்டார். இந்த சிசிடிவி காட்சிகள் இரண்டு ரூபாய் கமர்கட் கொடுத்தால் என்ன ஆகி விடுவாய்? என கேள்வி எழுப்பிய பெண் காவலரின் சிசிடிவி காட்சிகள் வலைதளங்களில் வைரலாக " சிசிடிவி கேமரா பதிவுகள் அடிப்படையில் காவல் ஆய்வாளர் விஜயலட்சுமி மற்றும் ஏட்டு ஜெயமாலா, ஆயுதப்படையைச் சேர்ந்த இரண்டு பெண் காவலர்கள் உப்பட 4 பேரை பணியிடை நீக்கம் செய்து தாம்பரம் காவல் கண்காணிப்பாளர் அமல்ராஜ் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார்.

மோசடி வழக்கில் விருதுநகர் பாஜக தலைவர் கைது…! சொந்த கட்சி நிர்வாகியிம் கைவரிசை …

விருதுநகர் மாவட்டம், சிவகாசி மாநகர பாஜக துணைத்தலைவர் பாண்டியன். இவரின் மூத்த மகன் கார்த்திக்கிற்கு தூத்துக்குடி கப்பல் துறைமுகத்திலும், 2-வது மகன் முருகதாஸூக்கு ரயில்வேயிலும் வேலை வாங்கி தருவதாக, திருத்தங்கல்லை சேர்ந்த விருதுநகர் மேற்கு மாவட்ட பாஜக தலைவர் சுரேஷ்குமார், மாவட்ட செயலாளர் கலையரசன் ஆகியோர் கடந்த 2017ல் ரூ.11 லட்சம் வாங்கியுள்ளனர். கடந்த 5 ஆண்டுகளாக வேலை வாங்கி தராமலும், கொடுத்த பணத்த திருப்பி தராமலும் இழுத்தடித்தனர்.இதை தொடர்ந்து பாண்டியன், பாஜக மாநில தலைவர் அண்ணாமலையிடம் புகார் தெரிவித்தார். அதன்பின் தலா ரூ.2 லட்சத்திற்கு 5 காசோலை மற்றும் ரூ.1 லட்சத்திற்கு ஒரு காசோலை கொடுத்தனர். சில மாதங்கள் கழித்து ரூ.2 லட்சம் ரொக்கப்பணம் கொடுத்து ஒரு காசோலையை மட்டும் பாண்டியனிடம் இருந்து திரும்ப பெற்றனர். பாண்டியன் தன்னிடம் இருந்த 5 காசோலைகளை வங்கியில் செலுத்தியபோது பணம் இல்லை என திரும்பி வந்தன. இதனால் பாண்டியன், ரூ.9 லட்சத்தை திரும்ப கேட்டபோது இருவரும் பணம் தராமல் இழுத்தடித்தனர். இதைத்தொடர்ந்து விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவில் புகார் அளித்தார்.மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிந்து கலையரசனை கடந்த டிச.15ம் தேதி கைது செய்தனர். சுரேஷ்குமார் முன்ஜாமீன் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இதை விசாரித்த நீதிமன்றம், ரூ.5.50 லட்சம் ரொக்க ஜாமீன் வழங்கியது. ஜாமீன் தொகையை செலுத்துவதற்கு மே 12 வரை காலக்கெடு விதித்திருந்தது. ஆனால் காலக்கெடு முடிந்தும் ஜாமீன் தொகையை செலுத்தவில்லை.இதையடுத்து விருதுநகர் குற்றப்பிரிவு போலீசார், பாஜக மாவட்ட தலைவர் சுரேஷ்குமாரை அதிரடியாக கைது செய்தனர். சொந்த கட்சி நிர்வாகியிடம் வேலை வாங்கி தருவதாக ரூ.9 லட்சம் மோசடி செய்த வழக்கில் கைது செய்ய இருப்பது விருதுநகர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உயர் நீதிமன்றம் உத்தரவு: மூத்தோர் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு சட்டத்தில் மருமகளை வீட்டை விட்டு வெளியேற்ற முடியாது

மதுரை சூர்யா நகரை சேர்ந்த காயத்ரி என்பவர், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்து இருந்தார். அந்த மனுவில்; ‘எனக்கும் சுப்பிரமணியன் என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது. திருமணத்துக்கு பிறகு கணவரும், அவரது தந்தை அம்பிகாபதியும் எனக்கு பல்வேறு தொந்தரவுகளை அளித்து வந்தனர். அதை மறைத்து எனக்கு எதிராக மாமானாரும், மாமியாரும் சேர்ந்து முதியோர் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு சட்டத்தின் கீழ் மாவட்ட முதியோர் பாதுகாப்பு அலுவலரிடம் அதாவது மாவட்ட வருவாய் அலுவலரிடம் மனு அளித்தனர்.

அந்த மனுவை விசாரித்த மாவட்ட வருவாய் அலுவலர், என்னை வீட்டை விட்டு காவல் துறை உதவியுடன் வெளியேற்றி, வீட்டை மாமனார். மாமியாரிடம் ஒப்படைக்க உத்தரவிட்டார். இந்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்’ என்று மனுவில் தெரிவித்து இருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன், “மூத்த குடிமக்கள் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு சட்டம் 2007-ன் படி மூத்த குடிமக்களான மாமனார் மற்றும் மாமியாருக்கு மருமகள் நேரடியான உறவோ, வாரிசோ கிடையாது. எனவே, இந்தச் சட்டம் மருமகளுக்கு பொருந்தாது. ஆகையால், மருமகளை வீட்டை விட்டு வெளியேற மாவட்ட வருவாய் அலுவலர் பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது” என உத்தரவு பிறப்பித்தார்.

போலி கையெழுத்து மூலம் மோசடி: ரூ.11 லட்சம் சுருட்டிய பெண் உதவி கணக்காளர் கைது!

புதுக்கோட்டை, மேல மூன்றாம் வீதியைச் சேர்ந்த கண்ணன் என்பவரின் மனைவி சுகன்யா என்பவர் நச்சாந்துபட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் உதவி கணக்காளராக பணிபுரிந்து வருகிறார். சுகன்யா, கடந்த ஒன்றரை மாதங்களாக ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு வராமல் அடிக்கடி விடுப்பு எடுத்திருக்கிறார். இதற்கிடையே, தேசிய கிராமப்புற சுகாதாரத் திட்டத்தில் பணியாற்றக்கூடிய பணியாளர்களுக்கு கடந்த இரண்டு மாதங்களாக ஊதியம் வரவில்லை ஆகையால், இது குறித்து பணியாளர்கள் வட்டார மருத்துவ அலுவலர் மனோஜிடம் புகாரளித்துள்ளனர். இது குறித்து மனோஜ், சுகன்யாவிடம் கேட்டபோது, அதற்கு மழுப்பலாக பதில் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து சந்தேகமடைந்த மருத்துவ அலுவலர் மனோஜ், சுகன்யாவின் வங்கிக் கணக்கை ஆய்வு செய்து பார்த்தபோது, ஆரம்ப சுகாதார நிலைய வங்கிக் கணக்கிலிருந்து உதவி கணக்காளர் சுகன்யாவின் வங்கிக் கணக்குக்குப் பணம் மாற்றப்பட்டிருந்தது கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். இதனைத்தொடர்ந்து, வட்டார மருத்துவ அலுவலர் மனோஜ், புதுக்கோட்டை மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினருக்கு புகார் கொடுத்துள்ளார். புகாரின் பேரில், மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினர் 409, 419, 420 உள்ளிட்ட மூன்று பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவுசெய்து, சுகன்யாவைக் கைதுசெய்து விசாரணை நடத்தினர்.‌

மேலும் விசாரணையில், சுகன்யா கடந்த ஆறு மாதங்களாக சுகாதார நிலையத்துக்கு பல்வேறு திட்டங்கள் மூலம் வந்த பணம் மற்றும் கிராமப்புற சுகாதார திட்டத்தின் கீழ் பணியாற்றக்கூடிய பணியாளர்களுக்கு வழங்க வேண்டிய சம்பளத் தொகை என மொத்தம் 11,31,909 ரூபாயை நச்சாந்துபட்டி வட்டார மருத்துவ அலுவலராக இருக்கும் மருத்துவர் மனோஜின் கையொப்பத்தை போலியாகப் பதிவிட்டு மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது. இதையடுத்து, புதுக்கோட்டை மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினர் சுகன்யாவை தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ராசிபுரம் நகராட்சியில் பரபரப்பு: திமுக நகர்மன்ற தலைவருக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானமா..!?

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் நகராட்சியில் 24 -திமுகவும் 2- அதிமுக மற்றும் 1 சுயேட்சை வேட்பாளர் என 27 வார்டுகள் உள்ளன. ராசிபுரம் நகராட்சி நகர்மன்ற தலைவராக திமுக நகர செயலாளர் என்.ஆர்.சங்கரின் மனைவி கவிதா பதவி வகித்து வருகிறார். இந்நிலையில், தேர்தல் நடந்து முடிந்து 5 மாதங்களில் பார் வசூல், காய்கறி கடை வசூல், தரைகடை, தள்ளு வண்டி கடை வசூல், மற்றும் அரசு பணிகளில் டெண்டர் விடுவது என நகராட்சியில் வரும் வருமானம் அனைத்துமே நகர்மன்ற தலைவர் எடுத்து கொள்வதாகவும், மற்ற கவுன்சிலர்கள் புலம்பி வந்ததாகவும் தெரிகிறது.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் நகராட்சி 1948-ல் மிகப்பழமையான நகராட்சி ஆகும். ராசிபுரம் நகராட்சியில்நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் மொத்தம் 27 வார்டுகளில் 24 -திமுகவும் 2- அதிமுக மற்றும் 1 சுயேட்சை வேட்பாளர் என வென்று திமுகவின் அசத்தலான வெற்றி பெற்றது. இந்த சூழலில், திமுகவில் முன்னாள் நகர இளைஞரணி அமைப்பாளர் டிரோன் எனப்படும் ஆளில்லா குட்டி விமானங்கள் தயாரிக்கும் நிறுவனத்தை நடத்தி வரும் சதீஷ், முன்னாள் திமுக நாமக்கல் மா.செ.வும், முன்னாள் மத்திய அமைச்சருமான காந்திசெல்வனின் தீவிர ஆதரவாளர். என உடன்பிறப்புகள் சொல்கிறார்கள்.

இந்நிலையில், 12- வது வார்டில் தன் மனைவி சசிரேகாவுக்கு சீட் கேட்டு கிழக்கு மா.செ. கே.ஆர்.என். ராஜேஷ்குமார் எம்.பி.யிடம் சதீஸ் பேச அவரோ, ‘பார்த்துக்கலாம்’ என்று சொல்லிவிட்டு பின்னர் சீட் தர மறுத்திருக்கிறார் என ஒரு செய்தியும் அரசால் புரசலாக பேசப்படுகிறது. அதிருப்தி அடைந்த சதீஷ், 12-வது வார்டில் தன் மனைவி சசிரேகாவை சுயேச்சையாக களமிறக்கி வெற்றி பெற சுயேச்சை வேட்பாளரிடம் திமுக மரண அடி வாங்கியதும் என்பதும் மறுக்கமுடியாத ஒன்றாகும். மேலும் ராசிபுரம் நகராட்சியில் வெற்றி பெற்ற ஒரே ஒரு சுயேச்சை வேட்பாளர் சதீஸின் மனைவி சசிரேகா என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் 12 வது வார்டு சுயேட்சை வேட்பாளரான சசிரேகா சதீஷ் என்பவர் நகர்மன்ற தலைவர் பதவிக்கு தனக்கு ஆதரவளிக்குமாறு கேட்டுகொள்ள 14 கவுன்சிலர்களும் தற்போது சேலம் மாவட்டம் ஏற்காட்டில் உள்ள தனியார் ரிசார்ட்டில் சகல வசதிகளுடன் தங்க வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதனையறிந்த நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும் எம்பியுமான ராஜேஷ்குமார் மற்றும் சுற்றுலா துறை அமைச்சர் மதிவேந்தன் ஆகியோர் சம்பந்தப்பட்ட கவுன்சிலர்களிடம் கடந்த 2 நாட்களாக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், இதுவரை பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாததால் எந்த நேரத்திலும் தற்போதைய நகர்மன்ற தலைவர் கவிதா சங்கருக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரப்பட வாய்ப்பு உள்ளது என கூறப்படுகிறது.

கண்டு கொள்ளாத ஆட்சியர்: குறைத்தீர் கூட்டத்தில் வீடியோ பார்த்துக் கொண்டிருந்த அதிகாரிகள் …!

நாமக்கல் மாவட்டம் ஆட்சியர் ஸ்ரேயா பி சிங் தலைமையில் பல்வேறு துறை சார்ந்த அரசு அதிகாரிகளுடன் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு தங்களது பிரச்சினைகள் தெரிவித்தனர்.

இந்நிலையில் கடந்த மாத கூட்டத்தில் அதிகாரிகள் செல்போன் பார்ப்பதை அறிந்த ஆட்சியர் அதிகாரிகள் கூட்டங்களில் பங்கேற்கும் போது செல்போன் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என உத்தரவிட்டிருந்த நிலையில் மீண்டும் கூட்டத்தில் பங்கேற்ற சில அதிகாரிகள் கூட்டத்தில் முறையாக விவசாயிகளின் பிரச்சினையை கவனிக்காமல் தங்களது செல்போன்களில் வீடியோ காட்சிகளை பார்த்துக் கொண்டும், சமூக வலைத்தளங்களில் மூழ்கி இருப்பதை அதிகாரிகள் வாடிக்கையாகவே கொண்டுள்ளனர்.

ஆட்சியர் நடத்தும் குறைதீர் கூட்டதில் குறைகளை கேட்காமல் அலட்சியமாக செல்போன்களில் வீடியோ காட்சிகள் பார்த்துக் கொண்டு உள்ள அதிகாரிகளின் செயல் ஆட்சியர் ஸ்ரேயா பி சிங் மட்டுமல்லாது விவசாயிகளையும் அவமான படுத்தும் செயல் என சமூக ஆர்வலர்கள் வேதனை படுகின்றனர்

“நான் தலித்”: சுதந்திரம் கிடைத்து 75 ஆண்டுகள் ஆகியும் என்ன பயன்..!?

எனக்குத் தாயகம் உண்டு என்று நீங்கள் கூறுகிறீர்கள். ஆனால், நான் மீண்டும் கூற விரும்புகிறேன், எனக்கு அது இல்லை… நாய்கள், பூனைகளைவிட நாங்கள் மோசமாக நடத்தப்பட்டால், குடிதண்ணீர் பெறவும் உரிமை இல்லை என்றால் சுயமரியாதையுள்ள எந்த தீண்டப்படாதவன் இந்த நாட்டைத் தன் நாடாகக் கருதுவான்? இந்த நாடு எங்களுக்கு அளித்த உதவி, இன்னல்களையும் அநீதிகளையும் மலைபோல் எங்கள் மீது சுமத்தியதே ஆகும். யுகயுகமாகக் காலால் மிதித்து நசுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட என் மக்களுக்கு மனித உரிமைகளுக்காக நான் செய்யும் முயற்சிகளின் காரணமாக இந்த நாட்டுக்கு எவ்விதத் தீங்கும் நேர்ந்துவிடாது என்று அண்ணல் அம்பேத்கர் 1931-ம் ஆண்டு மகாத்மா காந்தியைச் சந்தித்தபொழுது முன் வைத்த கருத்துகள்.

அதாவது ஆங்கிலேயர்களிடம் விடுதலைபெற்ற இந்தியா சாதி, மத அடக்குமுறையிலிருந்து என்றுதான் விடுதலை பெறுமோ என்ற ஏக்கம் இன்னும் கோடானகோடி தலித் மக்களிடையே பரவி கிடக்கிறது. நாடு சுதந்திரம் அடையும் முன்பே அண்ணல் அம்பேத்கர் மகாத்மா காந்தியிடம் முன் வைத்த கருத்துகள் இன்று நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டு கொண்டாடும் தினத்தில், தேசியக் கொடிக்கான விதிகள் மாறினாலும், குடியரசுத் தலைவர்களாக பல பட்டியலின மக்கள் வந்தாலும், இங்கு நிலவும் தலித் மக்கள் மீதான சாதிய ஒடுக்குமுறைகள் மாறவில்லை என்பதற்கு கள்ளக்குறிச்சி ஊராட்சி மன்றத் தலைவி சுதா வரதராஜின் கடிதம் ஒரு உதாரணம்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள எடுத்தவாய்நத்தம் கிராமம். இங்கு ஊராட்சி மன்றத் தலைவராக சுதா வரதராஜி என்பவர் பதவி வகித்து வருகிறார். சுதா வரதராஜி அவர்கள் மாவட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளருக்கு எழுதி இருக்கும் கடிதத்தில், “நான் ஆதிதிராவிடர் வகுப்பைச் சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவர். எங்கள் கிராமத்தில் எனக்கு முன்னாள் 10 ஊராட்சி மன்ற தலைவர்கள் இருந்திருக்கிறார்கள். அவர்கள் அனைவரும் அரசு மேல்நிலைப் பள்ளியில் குடியரசு மற்றும் சுதந்திர தின விழாவின்போது தேசியக் கொடியேற்றி வைத்து உள்ளனர்.

என்னை பட்டியலினப் பெண் தலைவர் என்பதால் சென்ற குடியரசுத் தின விழாவின்போது கொடியேற்றக் கூடாது என்று அப்போது பெற்றோர் ஆசிரியர் கழக தலைவராக இருந்த அ.அருண்குமார் மற்றும் துணைத் தலைவர் த.கண்ணன் ஆகியோர் தடுத்துவிட்டனர். இந்த 75 -வது சுதந்திர தினத்தில் அரசு மேல்நிலைப் பள்ளியில் கொடியேற்ற வாய்ப்பளித்து தக்க பாதுகாப்பு வழங்கிய பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன் என்று எடுத்தவாய்நத்தம் ஊராட்சி மன்றத் தலைவர் சுதா வரதராஜி சுதந்திர தினத்தன்று கொடியேற்ற பாதுகாப்பு வழங்குமாறு மாவட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளருக்கு கடிதம் எழுதி இருப்பது அம்பேத்கர் 1931-ம் ஆண்டு மகாத்மா காந்தியைச் சந்தித்தபொழுது முன் வைத்த கருத்து 75 -வது சுதந்திர தினத்தை மத்திய அரசு அமுத பெருவிழாவாக கொண்டாட தயாராகி வரும் நிலையிலும் ஜாதிய கொடுமைகள் சாகவில்லை என்பதை உணர்த்திக் கொண்டுள்ளது.

அதாவது, சுதந்திர தின விழாவுக்காக தேசியக்கொடி விதிமுறைகளில் கைத்தறி பருத்தி துணியால் மட்டுமே தேசிய கொடிகளை பயன்படுத்த வேண்டும் என்ற விதி இருந்த நிலையில், எந்திரத்தால் தயாரிக்கப்பட்ட பாலிஸ்டர், காட்டன், கம்பளி, பட்டு போன்றவற்றால் தயாரிக்கப்பட்ட தேசியக் கொடிகளை பயன்படுத்தலாம் என்று மத்திய அரசு பல்வேறு மாற்றங்களை செய்து அனுமதி வழங்கியுள்ளது. ஆனால், நாட்டின் பல கிராமங்களில் வாழும் தலித் மக்கள் ஜாதிய கொடுமைகளில் மீளமுடியாமல் இன்றும் வாழ்ந்து கொண்டுள்ளார். அன்றே, அண்ணல் அம்பேத்கர் மகாத்மாக்கள் பலபேர் வருவார்கள் போவார்கள், ஆனால் நமது வாழ்க்கை நிலை அப்படியே தான் இருக்கிறது என்று கூறிய வார்த்தை இன்னமும் உறங்காமல் இருக்கின்றது என்பது நிதர்சனமான உண்மை.

பகுதி நேர நியாயவிலைக்கடை அமைக்க மடத்துக்குளம் MLA அடிக்கல்

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை ஒன்றியம், ஆண்டியகவுண்டனூர் ஊராட்சி, குட்டியகவுண்டனூர் கிராம பொதுமக்களின் கோரிக்கை யை ஏற்று சட்டமன்ற உறுப்பினரும், மாவட்ட கழக செயலாளருமான. மாண்புமிகு C. மகேந்திரன் M.A., MLA. அவர்கள் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து சுமார் ரூ. 6.20 லட்சம் மதிப்பில் பகுதி நேர நியாயவிலைக்கடை அமைப்பதற்கான பூமி பூஜை செய்து அடிக்கல் நாட்டினார்.

இந்நிகழ்வில் உடுமலை கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் திரு ஜெககநாதன், மாவட்ட பாசறை செயலாளர் திரு காமாட்சி சுந்தரம், ஆண்டியகவுண்டனூர் ஊராட்சி மன்ற தலைவர் திரு மோகனவள்ளி ராஜசேகரன், ஒன்றிய கழக துணை செயலாளர் திரு ராஜசேகரன், IT Wing மாவட்ட தலைவர் திரு சஞ்சய் செல்வராஜ், IT Wing ஒன்றிய செயலாளர் திரு மகேஷ்வரன் குருவையா, கிளைக்கழக செயலாளர் திரு சத்திய பிரகாஷ், IT Wing ஒன்றிய துணை செயலாளர் திரு அரவிந்த் மற்றும் சார்பு அணி நிர்வாகிகள் பொதுமக்கள் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

தரையில் உட்கார்ந்த ஆட்சியர்..! என்னாச்சு ஆட்சியருக்கு…!

தமிழத்தில் கடந்த சில ஆண்டுகளாகவே, பொதுமக்கள் மற்றும் விவசாயிகளின் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஒவ்வொரு திங்கட்கிழமை தோறும் நடைபெறுவது வழங்கமான ஒன்றாகும். இந்த குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் ஏராளமான பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் தங்களது கோரிக்கைகளை மனுவாக அந்தந்த மாவட்ட ஆட்சியரிடம் அளித்து வருகின்றனர்.

இந்த மனுக்களை பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியர்கள் , உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கைகளையும் எடுத்து வருகின்றனர். சில சமயங்களில் குறைதீர்வு கூட்டங்களில் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் அங்கிருக்கும் அதிகாரிகளுடன் தகராற்றில் ஈடுபட்டு வாக்குவாதம் செய்வதுண்டு.

ஒருசில சமயங்களில் சேலம் மாவட்ட குறைதீர்ப்பு கூட்டத்திற்கு வந்திருந்த ஒரு மாற்றுதிறனாளி சிறுவனுக்கு சக்கர நாற்காலியை, ஆட்சியர் கார்மேகம் வழங்கியது மட்டுமின்றி ஆட்சியரே, அந்த சிறுவனை தூக்கி சக்கர நாற்காலியில் உட்கார வைத்து, சக்கர நாற்காலியை தள்ளிக்கொண்டு ஆட்சியர் அலுவலக வாசல் வரை தள்ளிக் கொண்டே வந்து, வேறு ஒரு வாகனத்தில் ஏற்றி வழியனுப்பி வைத்து போன்ற சம்பவங்களும் நிகழ்கவதும் போன்ற சம்பவங்களால் அப்போது பெரும் பரபரப்பாகவும், நெகிழ்வாகவும் பேசப்பட்டும்.

அந்தவகையில், திருப்பத்தூர் மாவட்டத்திலும் ஒரு சம்பவம் இன்று நடந்துள்ளது. வழக்கம்போல், ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்வு கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் ஆட்சியர் குஷ்வாஹா பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்.

அந்த சமயத்தில், அங்கு மனுகொடுக்க ஒரு விவசாயி நீண்ட நேரம் வரிசையில் மனுவுடன் காத்திருந்த அவசாயி, ஆட்சியரை பார்த்ததுமே திடீரென அவரது காலில் விழுந்தார். இதை கொஞ்சமும் எதிர்பார்க்காத ஆட்சியர் , உடனே அவரை தூக்கிவிட்டு, தரையிலேயே அந்த விவசாயி முன்பு உட்கார்ந்து கொண்டார். அதற்கு பிறகுதான் அவரிடமிருந்த மனுவை வாங்கினார். ஆட்சியர் தரையில் கிட்டத்தட்ட 5 நிமிடங்கள் உட்கார்ந்து, விவசாயியிடம் பிரச்சனையை விசாரித்தார். இந்த நிகழ்வு ஆட்சியர் அலுவலகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.