சென்னை அண்ணா சாலையில் இந்து மக்கள் கட்சியினர் கைது..!

சென்னை அண்ணா சாலையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற இந்து மக்கள் கட்சியினரை காவல்துறையினர் கைது செய்தனர். கனடா நாட்டில் கோயில் மீதும், இந்து பக்தர்கள் மீதும் காலிஸ்தான் தீவிரவாத குழுவினர் நடத்திய தாக்குதலைக் கண்டித்து இந்து மக்கள் கட்சி சார்பில் அதன் தலைவர் அர்ஜுன் சம்பத் தலைமையில் சென்னை அண்ணா சாலை தாராப்பூர் டவர் எதிரில் நேற்று காலை ஆர்ப்பாட்டம் நடைபெற இருந்தது.

இதற்காக அர்ஜுன் சம்பத் தலைமையில், நிர்வாகிகள் அங்கு வரத் தொடங்கினர். அப்போது, காவல்துறை அவர்களை தடுத்து நிறுத்தி, தடையை மீறி ஆர்ப்பாட்டம் செய்ய இருந்ததாக கைது செய்து அருகில் உள்ள சமுதாய நலக் கூடத்தில் அடைத்தனர்.

நிர்வாண வீடியோ வெளியிடுவதாக கூறி மிரட்டும் நாதக நிர்வாகி மீது சைபர் கிரைமில் புகார்..!

நிர்வாண புகைப்படம், வீடியோவை இணையத்தில் வெளியிடுவதாக பெண்ணை மிரட்டிய நாதக நிர்வாகி மீது திருச்சி மாவட்ட சைபர் கிரைமில் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.திருச்சி மாவட்டம், முசிறியை சேர்ந்த பெண் திருச்சி மாவட்ட சைபர் கிரைமில் அளித்துள்ள புகாரில் நான் பி.எஸ்சி பட்டதாரி. விவாகரத்துக்குபின் திருச்சி, வயலுார் பகுதியில் உள்ள ஒரு தனியார் ரிசார்ட்டில் வரவேற்பாளராக 2017 முதல் 2019 வரை வேலை செய்தேன்.

அப்போது மேலாளராக இருந்தவரின் உறவினரான நாதக நிர்வாகி இலங்கை தமிழர் இளங்கோ அங்கு வந்து என்னுடன் அறிமுகமானார். லண்டனில் சூப்பர் மார்க்கெட் துவங்கவுள்ளதாகவும், அதற்கு திருச்சியில் இருந்து மளிகை பொருட்களை கொள்முதல் செய்து அனுப்பி வைக்குமாறும் கூறி மாதம் ரூ.20 ஆயிரம் கொடுத்தார். பின்னர் துபாயில் என் பெயரில் ஒரு நிறுவனம் தொடங்குவதாகவும், அதற்கு உரிமம் பெற என்னை துபாய் அழைத்தார்.

அதற்காக 2 நாட்கள் நான் துபாய் சென்றபோது நான் ஆடை மாற்றுவதையும், குளிப்பதையும் எனக்கு தெரியாமல் இளங்கோ புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்துள்ளார். இந்நிலையில் எனக்கும் ஈரோட்டை சேர்ந்த வாலிபருக்கும் மறுமணம் நடந்தது. கணவரை விட்டு லண்டனுக்கு வந்து விடு, இல்லாவிட்டால் ஆபாச வீடியோக்களை வெளியிடுவதாக மிரட்டினார்.

இதனால் நான் கடந்த 21.7.2024 ல் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றேன். ஆனால், இரண்டாவது கணவர் காப்பாற்றி விட்டார். இளங்கோ தொடர்ந்து என் அந்தரங்க புகைப்படத்தை இணையதளத்தில் பதிவேற்றம் செய்து விடுவதாக மிரட்டி வருகிறார் என அந்த புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புகாரின்பேரில், திருச்சி மாவட்ட சைபர் கிரைம் நாதக நிர்வாகி இளங்கோ மீது வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மயிலம் சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை..! சார் சார்பதிவாளர் உள்ளிட்ட 6 பேர் மீது வழக்கு..!

திண்டிவனம் அருகே உள்ள மயிலம் சார் பதிவாளர் அலுவலகத்தின் அருகே இ.சேவை மையம் வைத்து நடத்தி வரும் நபர் ஒருவர் சார் பதிவாளர் அலுவலகத்தின் இடைத்தரகராக பணியாற்றி பொது மக்களிடம் லஞ்சப் பணத்தை அவ்வப்போது வாங்கி அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு கொடுத்து வருவதாகவும் லஞ்ச ஒழிப்புத்துறைக்கு புகார்கள் எழுந்த வண்ணம் இருந்தது.

இந்நிலையில் லஞ்ச ஒழிப்புத்துறை நேற்று மாலை மயிலம் சார் பதிவாளர் அலுவலகத்திற்கு சென்று பணியில் இருந்தவர்களை அலுவலகத்திற்குள் அமர வைத்து விட்டு அலுவலகத்தின் பல்வேறு பகுதிகளில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அந்த சோதனையில் கணக்கில் வராத ரூ.1.30, 340 பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பின்னர் சார் பதிவாளர் வெங்கடேஸ்வரி மற்றும் புரோக்கர் உள்ளிட்ட சார் பதிவு அலுவலக ஊழியர்களிடம் தொடர்ந்து லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினர்.

இந்த சோதனையில் பதிவாளர் அலுவலகத்தில் இருந்து முக்கிய கோப்புகளை கைப்பற்றினர். இந்நிலையில் இன்று மயிலம் சார் சார்பதிவாளர் வெங்கடேஸ்வரி உள்ளிட்ட 6 பேர்மீ து லஞ்ச ஒழிப்புதுறை வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மளிகை கடையில் தினமும் போனி செய்யும் மாடுகள்..! இந்த காலத்தில் இப்படியும் ஒரு ஆளா..!

சிவகங்கையில் கடையை எப்போ திறப்போம்னு காத்திருக்கும் என காத்திருந்த மாடுகள் கதவை திறந்ததுமே அதுக்கு தேவையானதை சாப்பிட்டு விட்டு, எந்த பொருளையும் சேதப்படுத்தாம அதுவே போயிடும். மளிகை கடையில் தினமும் முதல் ஆளாக போனி செய்யும் மாடுகள்.

தந்தை சிறையில் உள்ள நிலையில் தந்தையின் நெட்வொர்க்கை பயன்படுத்தி போதைபொருள் கடத்திய பெண் கைது..!

தமிழகத்தில் கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்களை குறி வைத்து நாளுக்கு நாள் போதை பழக்கம் அதிகரித்து காணப்படுகிறது. இதனால் காவல்துறை அதிரடி சோதனையில் போதைபொருள் கைப்பற்றப்பட்டு கைது நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னை பெருநகர காவல் எல்லையில் போதைப்பொருட்களை முற்றிலும் ஒழிக்கும் வகையில் காவல் ஆணையர் அருண் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அதன்படி போதை பொருட்களை விற்பனை மற்றும் கடத்தும் நபர்களை கைது செய்யும் வகையில் உதவி காவல் ஆணையர் ஒருவர் தலைமையில் போதைப்பொருள் நுண்ணறிவு தடுப்பு பிரிவு ஒன்று புதிதாக பெருநகர காவல்துறையில் தொடங்கப்பட்டுள்ளது. இந்த பிரிவினர் போதை பொருட்களை விற்பனை மற்றும் கடத்தும் நபர்கள் மீது மட்டுமே கண்டுபிடித்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

அந்தவகையில், நேற்று இரவு சென்னை உயர் நீதிமன்றம் அருகே பிரகாசம் சாலையில், இருசக்கர வாகனத்தில் வந்த ஆறு பேரை சுற்றி வளைத்தனர். அப்போது 2 மோட்டார் சைக்கிளில் 6 பேரில், 2 பேர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். மற்ற நான்கு பேரும் காவல்துறையினரிடம் சிக்கினார். வாகனத்தில் சோதனை செய்தபோது 2 கிராம் மெத்தப்பட்டமைன் என்னும் போதை பொருள் வைத்திருந்தது தெரிந்தது. இது தொடர்பாக எஸ்பிளனேடு காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்தனர்.

விசாரணையில் புழல் பகுதியை சேர்ந்த பிரவீன், உணவகத்தில் வேலை பார்த்து வந்த கொடுங்கையூர் பகுதியை சேர்ந்த தினேஷ், அலுவலகத்தில் உதவியாளரான பழைய வண்ணாரப்பேட்டை பகுதியை சேர்ந்த சிறுவன், 12-ம் வகுப்பு படித்து வரும் தண்டையார்பேட்டை பகுதியை சேர்ந்த சிறுவன் எனத் தெரிந்தது. அவர்களிடம் மெத்தம்பட்டமைன் எப்படி கிடைத்தது? எங்கு வாங்கினீர்கள்? என்று கேட்டபோது மணலி பகுதியைச் சேர்ந்த மௌஷியா என்ற பெண்ணிடம் வாங்கியதாக தெரிவித்தனர்.

இதையடுத்து காவல்துறை அந்த பெண்ணின் வீட்டை சோதனை செய்தபோது 5 கிராம் மெத்தப்பட்டமைன் சிக்கியது. அவர்களிடமிருந்து லட்சக்கணக்கில் மதிப்புள்ள மொத்தம் 7 கிராம் மெத்தப்பட்டமைன் பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில் கைது செய்யப்பட்ட பெண் மெத்தம்பெட்டமைன் போதை பொருளை மொத்தமாக வாங்கி இளைஞர்கள் சிறுவர்களை வைத்து கல்லூரி மாணவர்களுக்கும் மதுபான விடுதி, பப்புகளுக்கும் சப்ளை செய்து வந்தது தெரியவந்துள்ளது.

ஏற்கனவே மௌஷியாவின் தந்தை அக்பர் அலி போதைப் பொருள் கடத்தலில் சிக்கி 12 வருட சிறை தண்டனை பெற்று கடந்த மூன்று வருடங்களாக சிறை தண்டனை அனுபவித்து வரும் நிலையில், மௌஷியா தந்தையின் அதே நெட்வொர்க்கை பயன்படுத்தி பல போதை பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்த நிலையில் தற்போது காவல் துறை கைது செய்துள்ளது.

காவல் ஆணையர் அருன் அதிரடி: போதைபொருள் கடத்தல் கும்பல் தலைவி கைது..!

தமிழகத்தில் கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்களை குறி வைத்து நாளுக்கு நாள் போதை பழக்கம் அதிகரித்து காணப்படுகிறது. இதனால் காவல்துறை அதிரடி சோதனையில் போதைபொருள் கைப்பற்றப்பட்டு கைது நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னை பெருநகர காவல் எல்லையில் போதைப்பொருட்களை முற்றிலும் ஒழிக்கும் வகையில் காவல் ஆணையர் அருண் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அதன்படி போதை பொருட்களை விற்பனை மற்றும் கடத்தும் நபர்களை கைது செய்யும் வகையில் உதவி காவல் ஆணையர் ஒருவர் தலைமையில் போதைப்பொருள் நுண்ணறிவு தடுப்பு பிரிவு ஒன்று புதிதாக பெருநகர காவல்துறையில் தொடங்கப்பட்டுள்ளது. இந்த பிரிவினர் போதை பொருட்களை விற்பனை மற்றும் கடத்தும் நபர்கள் மீது மட்டுமே கண்டுபிடித்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

அந்தவகையில், நேற்று இரவு சென்னை உயர் நீதிமன்றம் அருகே பிரகாசம் சாலையில், இருசக்கர வாகனத்தில் வந்த ஆறு பேரை சுற்றி வளைத்தனர். அப்போது 2 மோட்டார் சைக்கிளில் 6 பேரில், 2 பேர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். மற்ற நான்கு பேரும் காவல்துறையினரிடம் சிக்கினார். வாகனத்தில் சோதனை செய்தபோது 2 கிராம் மெத்தப்பட்டமைன் என்னும் போதை பொருள் வைத்திருந்தது தெரிந்தது.

இது தொடர்பாக எஸ்பிளனேடு காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்தனர். விசாரணையில் புழல் பகுதியை சேர்ந்த பிரவீன், உணவகத்தில் வேலை பார்த்து வந்த கொடுங்கையூர் பகுதியை சேர்ந்த தினேஷ், அலுவலகத்தில் உதவியாளரான பழைய வண்ணாரப்பேட்டை பகுதியை சேர்ந்த சிறுவன், 12-ம் வகுப்பு படித்து வரும் தண்டையார்பேட்டை பகுதியை சேர்ந்த சிறுவன் எனத் தெரிந்தது. அவர்களிடம் மெத்தம்பட்டமைன் எப்படி கிடைத்தது? எங்கு வாங்கினீர்கள்? என்று கேட்டபோது மணலி பகுதியைச் சேர்ந்த மவுபியா என்ற பெண்ணிடம் வாங்கியதாக தெரிவித்தனர்.

இதையடுத்து காவல்துறை அந்த பெண்ணின் வீட்டை சோதனை செய்தபோது 5 கிராம் மெத்தப்பட்டமைன் சிக்கியது. அவர்களிடமிருந்து லட்சக்கணக்கில் மதிப்புள்ள மொத்தம் 7 கிராம் மெத்தப்பட்டமைன் பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில் கைது செய்யப்பட்ட பெண் மவுபியா மெத்தம்பெட்டமைன் போதை பொருளை மொத்தமாக வாங்கி இளைஞர்கள் சிறுவர்களை வைத்து கல்லூரி மாணவர்களுக்கும் மதுபான விடுதி, பப்புகளுக்கும் சப்ளை செய்து வந்தது தெரியவந்துள்ளது.

 

ஓடுற பஸ்ஸ ஒத்த கால்ல நிப்பாட்டுனவன் வரிசையில்..! டிவைடரில் ஏறி யோகாசனம் செய்த நபர்..!

மயிலாடுதுறையில் ’ஓடுற பஸ்ஸ ஒத்த கால்ல நிப்பாட்டுனவன் நானு…’ நடு ரோட்டில் அரசுப்பேருந்தை மறித்து மது போதையில் நடனமாடி நபர், மது போதையில் போலீசாரின் வாக்கி டாக்கியை பிடுங்கி தண்ணீரில் எறிந்த இளைஞர்,சென்னையில், போதையில் ஒருவர் சாலையில் செல்லும் அரசு பேருந்தை நிறுத்தியது, டாஸ்மாக் எதிரே மது போதையில் கொட்டும் மழையில் சோப்பு போட்டு ஆனந்த குளியல் போட்ட குடிமகன்கள் என ‘குடி’மகன்களின் அட்ராசிட்டிக்கு அளவே இல்லாமல் போய்விட்டது.

அதன் வரிசையில், திண்டுக்கல் மாவட்டம் காட்டாஸ்பத்திரி பகுதியில் ட்ரவுசர் மட்டும் அணிந்து அரை நிர்வாண கோலத்தில் போதை ஆசாமி சாலையின் நடுவே உள்ள டிவைடரில் ஏறி மதுபோதையில் யோகாசனம் செய்தது அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

தாராபுரம் அகரம் பப்ளிக் பள்ளி பதிமூன்றாம் ஆண்டு வருடாந்திர விளையாட்டு விழா..!

திருப்பூர் மாவட்டம், தாராபுரம் அகரம் பப்ளிக் பள்ளியில் 2024-25-ஆம் கல்வியாண்டின் 13-ஆம் ஆண்டு வருடாந்திர விளையாட்டு விழா நடைபெற்றது. இவ்விழாவிற்கு திருப்பூர் மாவட்ட ஆட்சியர் T.கிறி்ஸ்துராஜ் தலைமை தாங்கினார். வருவாய் கோட்டாட்சியர் பெலிக்ஸ் ராஜா, தாசில்தார் திருவியம், மாவட்ட கல்வி அலுவலர் அருள்ஜோதி, தாராபுரம் காவல் ஆய்வாளர் விஜய் சாரதி, மூலனூர் காவல் ஆய்வாளர் விஜயா, கொளத்துப்பாளையம் செயல் அலுவலர் நாகராஜ், கிராம நிர்வாக அலுவலர் சுரேஷ்  ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பித்தனர். பள்ளியின் நிர்வாக இயக்குனர் மற்றும் முதல்வர் .மு.ஞானபண்டிதன் அவர்கள் வரவேற்புரை வழங்கினார்.

நிகழ்வின் தொடக்கமாக இறைவாழ்த்துப் பாடி, மாவட்ட ஆட்சியர் தேசியக் கொடியை ஏற்றி, பள்ளி மாணவர்களின் அணிவகுப்பினை ஏற்றுக் கொண்டார். அதனைத் தொடர்ந்து பள்ளியின் விளையாட்டு மாணவத் தலைவர்களால் ஒலிம்பிக் விளக்கு ஏற்றி, உறுதிமொழி ஏற்கப்பட்டது. மாணவர்களின் செயற்பாடுகளை கண்டு மகிழ்ந்த முதன்மை விருந்தினர் திருப்பூர் மாவட்ட ஆட்சியர்  T. கிறி்ஸ்துராஜ் அவர்கள், விளையாட்டு ஒருவரை மென்மேலும் மெருகேற்றி அனைத்து திறன்களையும் வளர்த்து அளிக்கும், விளையாட்டு வீரர்கள் நல்ல கல்வியாளர்களாகவும் திகழ்வர் என்றார்.

விழாவின் கலைநிகழ்ச்சிகளாக நடனம், ரோப் யோகா, ஜூடோ மற்றும் தேசிய மாணவர் படையினர் நடத்திய அணி வகுப்பு நடைபெற்றன. மேலும் பள்ளி மாணவர்களின் பெற்றோர்களுக்கான போட்டிகளும் நடைபெற்றன. விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற அணிகளுக்கு வெற்றிக்கோப்பையையும் , கேடயமும் வழங்கி சிறப்பிக்கப்பட்டனர். ஒட்டுமொத்த தடகளப் போட்டிக்கான கோப்பையினை HORATIUS அணி பெற்றனர். பின்னர் பள்ளி மாணவத் தலைவி 12ம் வகுப்பு மாணவி செல்வி.ரோஜல் ஷிவ்ரா நிகழ்வின் நன்றியுரை வழங்கினார்.

பள்ளியின் தலைவர்  சிதம்பரம், பொருளாளர் சபாபதி, துணைத்தலைவர் ரங்கசாமி, செயலர். பாலசுப்பிரமணியம், இயக்குநர் செல்வராஜ் மற்றும் அறங்காவலர்கள் – ஆறுமுகம்,  சிவநேசன், சிவசாமி, திரு.மயில்சாமி மற்றும் நவீன் ஆகியோர் முன்னிலை வகித்து பெருமகிழ்வு கொண்டனர். மேலும் விளையாட்டு போட்டியை வெற்றிகரமாக நடத்திய பள்ளி முதல்வர் ஞானபண்டிதன் அவர்களுக்கும், நிகழ்வின் அமைப்பாளர் துணை முதல்வர் இராதிகா அவர்களுக்கும், நிகழ்வின் ஒருங்கிணைப்பாளர் உடற்கல்வி இயக்குநர்  தீபக் ராஜா அவ்ர்களுக்கும் ஆசிரியர்கள் மற்றும் பிறதுறைப் பணியாளர்களுக்கும் வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்து மகிழ்ந்தனர்.

நாம் தமிழர் கட்சியிலிருந்து மருத்துவ பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் விலகல்

சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சியில் இருந்து சில பொறுப்பாளர்கள் தொடர்ந்து விலகி வருகின்றனர். மருத்துவ பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் பதவியில் இருந்து இளவஞ்சி விலகியுள்ளார். கட்சி தலைமையின் செயல்பாடுகள் பிடிக்கவில்லை, பெண்களுக்கு முக்கியத்துவம் இல்லை, புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை என்பதே இளவஞ்சியின் குற்றச்சாட்டி யுள்ளார்.

கமல்ஹாசனுக்கு திரைக்களம் தொடங்கி அரசியல் களம் வரை முற்போக்கு என மு.க.ஸ்டாலின் வாழ்த்து

மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசனின் பிறந்தநாளையொட்டி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில், “பிறக்கின்ற புதுமைகளுக்கெல்லாம் இந்தியத் திரையுலகின் வாயிற்கதவுகளைத் திறக்கின்ற கலைஞானிக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள்!

திரைக்களம் தொடங்கி அரசியல் களம் வரை முற்போக்கு – பகுத்தறிவுக் கருத்துகளைப் பரப்புரை செய்யும் அருமை நண்பர் – மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் திரு.கமல்ஹாசன் அவர்களின் தொண்டு சிறக்க விழைகிறேன்!” மு.க.ஸ்டாலின் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.