நிவாரண பொருட்களை திருடியதாக சுவேந்து அதிகாரி மீது வழக்குப்பதிவு

சுவேந்து அதிகாரியின்  நெருங்கிய உதவியாளரை மோசடி வழக்கில் கொல்கத்தா காவல்துறை நேற்று கைது செய்த நிலையில் கொல்கத்தாவில் இருந்து 150 கி.மீட்டர் தொலைவில் உள்ள மெதினிபூர் மாவட்டத்தின்  உள்ள கந்தி நகராட்சி அலுவலகத்தில் இருந்து நிவாரண பொருட்களை திருடியதாக சுவேந்து அதிகாரி மற்றும் அவரது சகோதரர் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளார்.

டி.கே.சிவக்குமார்: கர்நாடகத்தில் பா.ஜனதா ஆட்சியின் இறுதி நாட்கள் நெருங்குகின்றன

கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் பெங்களூருவில் நிருபர்களிடம் பேசுகையில், கர்நாடகத்தில் கோவிட் -19 தடுப்பூசி போடும் பணி மந்தகதியில் நடந்து வருகிறது. நாங்கள் ரூ.100 கோடியில் தடுப்பூசி போட திட்டமிட்டுள்ளோம். இதற்கு அரசு அனுமதி வழங்கினால் அனைத்து தரப்பு மக்களுக்கும் இலவசமாக தடுப்பூசி போடுவோம். மக்களின் உயிர்களை காக்க எங்கள் கட்சி தலைவர்கள் சக்தி மீறி பணியாற்றி வருகிறார்கள்.

தடுப்பூசி வழங்குவதுடன் பல்வேறு பிரிவுகளை சேர்ந்த ஏழை மக்களுக்கு உணவு தானிய தொகுப்புகளையும் வழங்கி வருகிறோம். கோவிட் -19 வைரஸ் பரவலை தடுப்பதில் மத்திய-மாநில அரசுகள் முழுமையாக தோல்வி அடைந்துவிட்டன. இத்தகைய நெருக்கடியான நேரத்திலும் மக்களை ஏமாற்றும் பொருட்டு, தடுப்பூசிகளை தலா ரூ.900-க்கு விற்பனை செய்கிறார்கள்.

ஆனால் போஸ்டர்களில் பா.ஜனதாவினர் தங்களின் புகைப்படங்களை போட்டுக் கொண்டு மின்னுகிறார்கள். ஆனால் எங்கள் கட்சி தலைவர்கள் பொதுமக்களுக்கு இலவசமாக தடுப்பூசி கிடைக்க சிறப்பு முகாம்களை ஏற்பாடு செய்கிறார்கள். கர்நாடகத்தில் பா.ஜனதா ஆட்சியின் இறுதி நாட்கள் நெருங்குகின்றன என டி.கே.சிவக்குமார் தெரிவித்தார்.

மம்தா பானர்ஜியின் மருமகன் திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளராக நியமனம்


மம்தா பானர்ஜி தலைமையில் திரிணமூல் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் கூட்டம் கொல்கத்தாவில் நேற்று நடை பெற்றது. இந்தக் கூட்டத்துக்கு பிறகு மூத்த தலைவர் பார்த்தா சாட்டர்ஜி செய்தியாளர்களிடம் பேசுகையில், “ஒருவருக்கு ஒருபதவி கொள்கையை பின்பற்ற கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. எனவே கட்சியில் நிர்வாகிகள் பட்டியலில் மாற்றம் மேற்கொள்ளப்படும். கட்சியின் இளைஞரணி தலைவர் அபிஷேக் பானர்ஜியை, தேசிய பொதுச் செயலாளராக மம்தா பானர்ஜி நியமித்துள்ளார்.

அபிஷேக் பானர்ஜி, டைமண்ட் ஹார்பர் தொகுதியில் இருந்து 2-வது முறை எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவர் இது வரை வகித்த இளைஞரணி தலைவர் பதவிக்கு, நடிகராக இருந்து அரசியல்வாதியாக மாறிய சயோனி கோஷ் நியமிக்கப்பட் டுள்ளார். இதுபோல் பத்திரிகையாளர் குணால் கோஷ், மாநிலச்செயலாளராக நியமிக்கப்பட் டுள்ளார் என தெரிவித்தார்.

உத்தவ் தாக்கரே: கோவிட் -19 காலத்திலும் பாஜகவுக்கு அதிகார வெறி

மகாராஷ்டிர முதலமைச்சர் உத்தவ் தாக்கரே இணைய வழியாக பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்த்தார். அப்போது, கோவிட் -19 காலத்தில் உயிர்களை காப்பாற்றுவது தான் முக்கியம். மகாராஷ்டிர மாநிலம் கோவிட் -19 னால் கடுமையான பாதிப்பை சந்தித்து தற்போது மீண்டு வருகிறது. மக்களை கோவிட் -19 ல் இருந்து காப்பாற்ற நாங்கள் பாடுபட்டுக் கொண்டிருக்கிறோம்.

ஆனால் சில கட்சிகள் இந்த கோவிட் -19 காலத்திலும் அதிகாரத்திற்கு வர நினைக்கிறார்கள். இந்த அரசுக்கு நெருக்கடி கொடுத்து ஆட்சியை கவிழ்க்க வேண்டும் என செயலாற்றுகிறார்கள். ஆனால் அவர்கள் எண்ணம் ஈடேறப்போவதில்லை. மக்கள் அவர்களை ஒருபோதும் மன்னிக்கமாட்டார்கள். இந்த கோவிட் -19 காலத்திலும் கூட அதிகார வெறிப்பிடித்து அலைவது, சட்ட ஒழுங்கை பாதிக்க வழிவகுக்கும். முதலமைச்சராக வேண்டும் என்பது எப்போதும் எனது இலக்காக இருந்து இல்லை.
சிவசேனாவை சேர்ந்த தொண்டனை முதலமைச்சராக்குவேன் என எனது தந்தைக்கு செய்து கொடுத்த சத்தியத்தை நான் இன்னும் நிறைவேற்றவில்லை. நான் அரசியலில் ஈடுபாடு கொண்டு வரவில்லை. தந்தைக்கு உதவியாக இருக்கவே அரசியலுக்கு வந்தேன். எனது ஆட்சியின் போது நோய் தொற்று ஏற்பட்டுள்ளது. பொறுப்புகளை விட்டு நான் ஓடியது கிடையாது. முதலமைச்சராக என்னால் செய்ய முடிந்ததை செய்து கொண்டு இருக்கிறேன் என தெரிவித்தார்.

ராகேஷ் டிக்கைட் திட்டவட்டம்: டெல்லியை விட்டு வெளியேற மாட்டோம்

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் விவசாயிகள் கடந்த ஆண்டு நவம்பர் 26 முதல் போராடி வருகின்றனர். கடும் குளிர், வெயில், கொரோனா தொற்றுக்கு மத்தியிலும் 6 மாதங்களுக்கும் மேலாக அவர்களது போராட்டம் தொடர்ந்து வருகிறது.

இந்நிலையில் நேற்று விவசாயிகள் கூட்டத்தில் பேசிய பாரதிய கிசான் யூனியன் தலைவர் ராகேஷ் டிக்கைட், மத்திய அரசு இந்த போராட்டத்தை டெல்லியில் இருந்து அரியானாவுக்கு மாற்ற முயற்சிக்கிறது. ஆனால் இதனை நாங்கள் அனுமதிக்கமாட்டோம். அரசு அதனுடைய சூழ்ச்சியில் வெற்றிபெற விடமாட்டோம். புதிய வேளாண் சட்டங்கள் ரத்து செய்யப்படும் வரை நாங்கள் டெல்லியை விட்டு வெளியேற மாட்டோம் என்று கூறியுள்ளார்.

மத்திய பிரதேசத்தில் பயிற்சி மருத்துவர்கள் போராட்டம்


மத்திய பிரதேசத்தில் கோவிட் -19 சிகிச்சை அளிக்கும் பணியில் ஈடுபட்டு வரும் இளநிலை பயிற்சி மருத்துவர்களுடன் சேர்ந்து, மூத்த பயிற்சி மருத்துவர்களும் அரசுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பிரதமர் மோடி புகைப்படத்தை நீக்க மத்திய அரசுக்கு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தல்…

தமிழகம், கேரளா, புதுச்சேரி, மேற்குவங்காளம், அசாம் ஆகிய மாநிலங்களுக்கான தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம், கேரளா, புதுச்சேரியில் ஒரே கட்டமாக ஏப்ரல் 6-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. மேலும் மேற்வங்காளத்தில் மார்ச் 27 ஆம் தேதி தொடங்கி 8 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. இறுதிகட்ட தேர்தல் ஏப்ரல் 29 ஆம் தேதி நடைபெறுகிறது. இதுபோல, அசாமில் 3 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. மார்ச் 27 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 6 ஆம் தேதி தேர்தல் நிறைவடைகிறது.

தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டதையடுத்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. இதற்கிடையில், நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் நடைபெற்று வருகிறது. தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு அதற்கான தடுப்பூசி சான்றிதழ் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் சார்பில் வழங்கப்பட்டு வருகிறது.


இந்த சான்றிதழில் பிரதமர் நரேந்திர மோடியின் புகைப்படம் இடம் பெற்றுள்ளது. தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில் கொரோனா தடுப்பூசி சான்றிதழில் பிரதமர் மோடியின் புகைப்படம் இடம்பெற்றிருப்பது தேர்தல் விதிமீறல் என திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் மாநில தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

இது இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தின் பார்வைக்கு கொண்டு செல்லப்பட்டது. இந்த விவகாரம் குறித்து ஆய்வு செய்த தலைமை தேர்தல் ஆணையம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால் தமிழகம், கேரளா, மேற்குவங்காளம், அசாம், புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் வழங்கப்படும் கொரோனா தடுப்பூசி சான்றிதழில் பிரதமர் மோடியின் புகைப்படம் இடம் பெறக்கூடாது என மத்திய அரசின் சுகாதாரத்துறை அமைச்சகத்தை அறிவுறுத்திள்ளது.

பொதுமக்கள் நலன்கருதி பெட்ரோல், டீசல் மீதான உற்பத்தி வரியை குறைக்க வேண்டும்

நாடு முழுவதும் தொடர்ந்து 11-வது நாளாக பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது. இதனால் சாதாரண மக்கள் மிகுந்த பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர். இதற்கு காரணம் மத்திய அரசின் தவறான கொள்கைகள்தான் என்று ராஜஸ்தான் மாநில முதல்-மந்திரி அசோக் கெலாட் சாடி உள்ளார். இது தொடர்பாக அவர் நேற்று டுவிட்டரில் தொடர்ந்து பதிவுகளை வெளியிட்டார். அவற்றில் அவர் கூறி இருப்பதாவது:-


மத்தியில் ஆளும் மோடி அரசு ஒரு லிட்டர் பெட்ரோல் மீது ரூ.32.90-ம், ஒரு லிட்டர் டீசல் மீது ரூ.31.80-ம் உற்பத்தி வரியாக விதிக்கிறது. 2014-ம் ஆண்டு மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு இருந்தபோது, பெட்ரோல் மீது லிட்டருக்கு ரூ.9.20-ம், டீசல் மீது ரூ.3.46 மட்டுமே உற்பத்தி வரியாக விதிக்கப்பட்டது.


பொதுமக்களின் நலன்களையொட்டி மோடி அரசு உடனடியாக பெட்ரோல், டீசல் மீதான உற்பத்தி வரியை குறைக்க வேண்டும். பெட்ரோல், டீசல் விலை உயர்வால் பொதுமக்கள் பாதிப்புக்கு உள்ளாகிறார்கள். கடந்த 11 நாட்களாக இவற்றின் விலை தொடர்ந்து உயர்ந்து வந்திருக்கிறது. மோடி அரசின் தவறான கொள்கைகளின் விளைவுதான் இது.


ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் இருந்தபோது நிலவிய விலையில் பாதி விலைக்குத்தான் இப்போது கச்சா எண்ணெய் சர்வதேச சந்தையில் விற்பனை ஆகிறது. ஆனால் பெட்ரோல், டீசல் விலை இதுவரை இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது.


மாநிலங்களின் அடிப்படை உற்பத்தி வரியில் ஒரு பகுதியை மத்திய அரசு தொடர்ந்து குறைத்து வருகிறது. அதே நேரத்தில் தனது கஜானாவை நிரப்புவதற்கு மத்திய பங்கின் மீதான கூடுதல் உற்பத்தி வரி மற்றும் சிறப்பு உற்பத்தி வரியை அதிகரித்து வருகிறது. இதன் விளைவாக மாநில அரசுகள் தங்களது பொருளாதார வளங்களுக்காக மதிப்பு கூட்டு வரியை உயர்த்த வேண்டியது வருகிறது.


கொரோனா வைரசால் ராஜஸ்தானின் பொருளாதாரம் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. மாநிலத்தின் வருவாய் குறைந்து விட்டது. ஆனால் சாதாரண மக்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்பதற்காக மாநில அரசு கடந்த மாதம் மதிப்பு கூட்டு வரியை 2 சதவீதம் குறைத்தது. இப்படி நிவாரணம் வழங்குவதற்கு பதிலாக, மோடி அரசு பெட்ரோல், டீசல் மீதான விலைகளை தினமும் உயர்த்தி வருகிறது.


அதே நேரத்தில் ராஜஸ்தான் மாநில அரசு, பெட்ரோல் மீது மிக அதிகளவில் வரி போடுவதாகவும், இதனால் அதன் விலை அதிகமாக இருப்பதாகவும் சிலர் வதந்திகளை பரப்புகிறார்கள். ராஜஸ்தானை விட பா.ஜ.க. ஆளும் மத்திய பிரதேசத்தில் பெட்ரோல் மீது கூடுதல் வரி விதிக்கப்படுகிறது. எனவே போபாலை விட ஜெய்ப்பூரில் பெட்ரோல் விலை அதிகம் என கூறியுள்ளார்.

கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட 2 பேர் வேகமாக குணமடைந்து வருகின்றனர்

சீனாவில் கொரோனா என்ற மர்ம வைரஸ் காய்ச்சல் முதலில் வுகான் நகரில் உள்ள ஒரு கடல் உணவு மற்றும் வனவிலங்கு சந்தையில் பாதிக்கப்பட்ட விலங்குகளிடம் இருந்துதான் இந்த வைரஸ் தோன்றியதாக தகவல்கள் கூறுகின்றன. முதலில் வுகான் நகரில் கண்டறியப்பட்ட இந்த வைரஸ், நாட்டின் தலைநகர் பெய்ஜிங் மற்றும் ஷாங்காய் உள்ளிட்ட நகரங்களிலும் பரவி வருகிறது. குறிப்பாக சீனாவில் மிகப்பெரிய பாதிப்பை கொரோனா வைரஸ் ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், சீனாவிலிருந்து கடந்த 23-ந் தேதி இந்தியா திரும்பிய கேரள மாணவி ஒருவர் கொரோனா அறிகுறி இருப்பதாக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட நிலையில், இதனை புனே ஆய்வு மையம் உறுதி செய்தது. பின்னர் அந்த மாணவிக்கு திருச்சூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதற்கிடையே சீனாவில் இருந்து திரும்பிய ஆலப்புழா மற்றும் காசர்கோடு மாவட்டத்தை சேர்ந்த 2 மருத்துவ மாணவர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது.

அவர்களுக்கும் ஆலப்புழா மற்றும் காசர்கோடு ஆஸ்பத்திரிகளில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் திருச்சூர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த மாணவியும், ஆலப்புழாவில் சிகிச்சை பெற்ற மாணவரும் வேகமாக குணமடைந்து வந்தனர். அவர்களது ரத்த மாதிரிகளை பரிசோதனை செய்தபோது தற்போது வைரஸ் பாதிப்பு இல்லை என தெரிவிக்கப்பட்டது. இருப்பினும் 2 பேரின் ரத்த மாதிரிகளும் மீண்டும் புனேவில் உள்ள ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

சீனாவில் இருந்து டெல்லி வந்துள்ள 17 பேருக்கு கோவிட்-19 அறிகுறி…!?

சீனாவில் கோவிட்-19 காய்ச்சல் முதலில் வுகான் நகரில் உள்ள ஒரு கடல் உணவு மற்றும் வனவிலங்கு சந்தையில் பாதிக்கப்பட்ட விலங்குகளிடம் இருந்துதான் இந்த கோவிட்-19 தோன்றியதாக தகவல்கள் கூறுகின்றன. முதலில் வுகான் நகரில் கண்டறியப்பட்ட இந்த வைரஸ், நாட்டின் தலைநகர் பெய்ஜிங் மற்றும் ஷாங்காய் உள்ளிட்ட நகரங்களிலும் பரவி வருகிறது. குறிப்பாக சீனாவில் மிகப்பெரிய பாதிப்பை கோவிட்-19 ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், கொடிய கோவிட்-19 பாதிப்பால் சீனாவில் மட்டும் 1631 பேர் பலியாகியுள்ளனர். சீனாவின் தேசிய சுகாதார ஆணையத்தின் தகவல் படி,, சீனாவின் வுகானில் கோவிட்-19 பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 67000 ஆக இருந்தது. உறுதிப்படுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், சீனாவில் இருந்து இந்தியா வந்த 17 பேருக்கு கொரோனா வைரஸ் அறிகுறி இருப்பதாக கண்டறியப்பட்டு உள்ளது என தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த 17 பேரும் தனிமைபடுத்தப்பட்டு தீவிர கண்காணிப்புக்கு உட்படுத்தபட்டு இருப்பதாக சுகாதார துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.