பொதுமக்கள் நலன்கருதி பெட்ரோல், டீசல் மீதான உற்பத்தி வரியை குறைக்க வேண்டும்

நாடு முழுவதும் தொடர்ந்து 11-வது நாளாக பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது. இதனால் சாதாரண மக்கள் மிகுந்த பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர். இதற்கு காரணம் மத்திய அரசின் தவறான கொள்கைகள்தான் என்று ராஜஸ்தான் மாநில முதல்-மந்திரி அசோக் கெலாட் சாடி உள்ளார். இது தொடர்பாக அவர் நேற்று டுவிட்டரில் தொடர்ந்து பதிவுகளை வெளியிட்டார். அவற்றில் அவர் கூறி இருப்பதாவது:-


மத்தியில் ஆளும் மோடி அரசு ஒரு லிட்டர் பெட்ரோல் மீது ரூ.32.90-ம், ஒரு லிட்டர் டீசல் மீது ரூ.31.80-ம் உற்பத்தி வரியாக விதிக்கிறது. 2014-ம் ஆண்டு மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு இருந்தபோது, பெட்ரோல் மீது லிட்டருக்கு ரூ.9.20-ம், டீசல் மீது ரூ.3.46 மட்டுமே உற்பத்தி வரியாக விதிக்கப்பட்டது.


பொதுமக்களின் நலன்களையொட்டி மோடி அரசு உடனடியாக பெட்ரோல், டீசல் மீதான உற்பத்தி வரியை குறைக்க வேண்டும். பெட்ரோல், டீசல் விலை உயர்வால் பொதுமக்கள் பாதிப்புக்கு உள்ளாகிறார்கள். கடந்த 11 நாட்களாக இவற்றின் விலை தொடர்ந்து உயர்ந்து வந்திருக்கிறது. மோடி அரசின் தவறான கொள்கைகளின் விளைவுதான் இது.


ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் இருந்தபோது நிலவிய விலையில் பாதி விலைக்குத்தான் இப்போது கச்சா எண்ணெய் சர்வதேச சந்தையில் விற்பனை ஆகிறது. ஆனால் பெட்ரோல், டீசல் விலை இதுவரை இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது.


மாநிலங்களின் அடிப்படை உற்பத்தி வரியில் ஒரு பகுதியை மத்திய அரசு தொடர்ந்து குறைத்து வருகிறது. அதே நேரத்தில் தனது கஜானாவை நிரப்புவதற்கு மத்திய பங்கின் மீதான கூடுதல் உற்பத்தி வரி மற்றும் சிறப்பு உற்பத்தி வரியை அதிகரித்து வருகிறது. இதன் விளைவாக மாநில அரசுகள் தங்களது பொருளாதார வளங்களுக்காக மதிப்பு கூட்டு வரியை உயர்த்த வேண்டியது வருகிறது.


கொரோனா வைரசால் ராஜஸ்தானின் பொருளாதாரம் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. மாநிலத்தின் வருவாய் குறைந்து விட்டது. ஆனால் சாதாரண மக்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்பதற்காக மாநில அரசு கடந்த மாதம் மதிப்பு கூட்டு வரியை 2 சதவீதம் குறைத்தது. இப்படி நிவாரணம் வழங்குவதற்கு பதிலாக, மோடி அரசு பெட்ரோல், டீசல் மீதான விலைகளை தினமும் உயர்த்தி வருகிறது.


அதே நேரத்தில் ராஜஸ்தான் மாநில அரசு, பெட்ரோல் மீது மிக அதிகளவில் வரி போடுவதாகவும், இதனால் அதன் விலை அதிகமாக இருப்பதாகவும் சிலர் வதந்திகளை பரப்புகிறார்கள். ராஜஸ்தானை விட பா.ஜ.க. ஆளும் மத்திய பிரதேசத்தில் பெட்ரோல் மீது கூடுதல் வரி விதிக்கப்படுகிறது. எனவே போபாலை விட ஜெய்ப்பூரில் பெட்ரோல் விலை அதிகம் என கூறியுள்ளார்.

கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட 2 பேர் வேகமாக குணமடைந்து வருகின்றனர்

சீனாவில் கொரோனா என்ற மர்ம வைரஸ் காய்ச்சல் முதலில் வுகான் நகரில் உள்ள ஒரு கடல் உணவு மற்றும் வனவிலங்கு சந்தையில் பாதிக்கப்பட்ட விலங்குகளிடம் இருந்துதான் இந்த வைரஸ் தோன்றியதாக தகவல்கள் கூறுகின்றன. முதலில் வுகான் நகரில் கண்டறியப்பட்ட இந்த வைரஸ், நாட்டின் தலைநகர் பெய்ஜிங் மற்றும் ஷாங்காய் உள்ளிட்ட நகரங்களிலும் பரவி வருகிறது. குறிப்பாக சீனாவில் மிகப்பெரிய பாதிப்பை கொரோனா வைரஸ் ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், சீனாவிலிருந்து கடந்த 23-ந் தேதி இந்தியா திரும்பிய கேரள மாணவி ஒருவர் கொரோனா அறிகுறி இருப்பதாக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட நிலையில், இதனை புனே ஆய்வு மையம் உறுதி செய்தது. பின்னர் அந்த மாணவிக்கு திருச்சூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதற்கிடையே சீனாவில் இருந்து திரும்பிய ஆலப்புழா மற்றும் காசர்கோடு மாவட்டத்தை சேர்ந்த 2 மருத்துவ மாணவர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது.

அவர்களுக்கும் ஆலப்புழா மற்றும் காசர்கோடு ஆஸ்பத்திரிகளில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் திருச்சூர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த மாணவியும், ஆலப்புழாவில் சிகிச்சை பெற்ற மாணவரும் வேகமாக குணமடைந்து வந்தனர். அவர்களது ரத்த மாதிரிகளை பரிசோதனை செய்தபோது தற்போது வைரஸ் பாதிப்பு இல்லை என தெரிவிக்கப்பட்டது. இருப்பினும் 2 பேரின் ரத்த மாதிரிகளும் மீண்டும் புனேவில் உள்ள ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

சீனாவில் இருந்து டெல்லி வந்துள்ள 17 பேருக்கு கோவிட்-19 அறிகுறி…!?

சீனாவில் கோவிட்-19 காய்ச்சல் முதலில் வுகான் நகரில் உள்ள ஒரு கடல் உணவு மற்றும் வனவிலங்கு சந்தையில் பாதிக்கப்பட்ட விலங்குகளிடம் இருந்துதான் இந்த கோவிட்-19 தோன்றியதாக தகவல்கள் கூறுகின்றன. முதலில் வுகான் நகரில் கண்டறியப்பட்ட இந்த வைரஸ், நாட்டின் தலைநகர் பெய்ஜிங் மற்றும் ஷாங்காய் உள்ளிட்ட நகரங்களிலும் பரவி வருகிறது. குறிப்பாக சீனாவில் மிகப்பெரிய பாதிப்பை கோவிட்-19 ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், கொடிய கோவிட்-19 பாதிப்பால் சீனாவில் மட்டும் 1631 பேர் பலியாகியுள்ளனர். சீனாவின் தேசிய சுகாதார ஆணையத்தின் தகவல் படி,, சீனாவின் வுகானில் கோவிட்-19 பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 67000 ஆக இருந்தது. உறுதிப்படுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், சீனாவில் இருந்து இந்தியா வந்த 17 பேருக்கு கொரோனா வைரஸ் அறிகுறி இருப்பதாக கண்டறியப்பட்டு உள்ளது என தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த 17 பேரும் தனிமைபடுத்தப்பட்டு தீவிர கண்காணிப்புக்கு உட்படுத்தபட்டு இருப்பதாக சுகாதார துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

சிறப்பு விமானத்தில் 324 இந்தியர்கள் சீனாவிலிருந்து நாடு திரும்பினர்

சீனாவில் கொரோனா என்ற மர்ம வைரஸ் காய்ச்சல் முதலில் வுகான் நகரில் உள்ள ஒரு கடல் உணவு மற்றும் வனவிலங்கு சந்தையில் பாதிக்கப்பட்ட விலங்குகளிடம் இருந்துதான் இந்த வைரஸ் தோன்றியதாக தகவல்கள் கூறுகின்றன. முதலில் வுகான் நகரில் கண்டறியப்பட்ட இந்த வைரஸ், நாட்டின் தலைநகர் பெய்ஜிங் மற்றும் ஷாங்காய் உள்ளிட்ட நகரங்களிலும் பரவி வருகிறது.


கொடிய கொரோனா வைரஸ் பாதிப்பால் சீனாவில் மட்டும் 256 பேர் பலியாகியுள்ளனர். சீனாவின் தேசிய சுகாதார ஆணையத்தின் தகவல் படி திங்கள்கிழமை முடிவில், சீனாவின் வுகானில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 11,791ஆக இருந்தது. உறுதிப்படுத்தப்பட்ட பாதிப்புகள் பெரும்பாலானவை ஹூபே மாகாணத்தில் உள்ளன. அங்குதான் வைரஸ் முதலில் அடையாளம் காணப்பட்டது.


இதேபோன்று ஜப்பான், தென்கொரியா, தாய்லாந்து, அமெரிக்கா, தைவான், ஆஸ்திரேலியா மற்றும் பிரான்சு ஆகிய நாடுகளில் வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. சீனாவின் வுகான் நகர குடியிருப்புவாசிகள், வைரஸ் பரவாமல் இருக்க முகமூடிகளை அணிந்து கொள்ள அறிவுறுத்தப்பட்டு உள்ளது. தொடர்ந்து வைரஸ் தீவிரமுடன் பரவி பாதிப்பு ஏற்படுத்தி வருகிறது.


இந்நிலையில், சீனாவிலுள்ள சுகாதார ஆணையம் இன்று வெளியிட்டுள்ள செய்தியில், வுஹான் பகுதியில் சிக்கியுள்ள 400க்கும் மேற்பட்ட இந்தியர்களை மீட்க அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்காக சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஏர் இந்தியா விமான நிறுவனத்தின் போயிங் 747 ஜம்போ ஜெட் விமானம், டெல்லியில் இருந்து நேற்று சீனா புறப்பட்டது. மேலும் 2-வது விமானம் இன்று இந்தியாவில் இருந்து சீனா புறப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வுகானில் இருந்து 324 இந்தியர்களை ஏற்றி கொண்டு புறப்பட்ட சிறப்பு விமானம் இந்தியா வந்தடைந்தது. முதலில் அவர்களை டெல்லி விமான நிலையத்தில் வைத்து பரிசோதனை செய்கின்றனர். தேவைப்பட்டால் அவர்களை முகாமில் கண்காணிப்பில் வைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.

சீனாவிலிருந்து இந்தியா திரும்பிய கேரளாவைச் சேர்ந்த மாணவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு

சீனாவில் கொரோனா என்ற மர்ம வைரஸ் காய்ச்சல் முதலில் வுகான் நகரில் உள்ள ஒரு கடல் உணவு மற்றும் வனவிலங்கு சந்தையில் பாதிக்கப்பட்ட விலங்குகளிடம் இருந்துதான் இந்த வைரஸ் தோன்றியதாக தகவல்கள் கூறுகின்றன. முதலில் வுகான் நகரில் கண்டறியப்பட்ட இந்த வைரஸ், நாட்டின் தலைநகர் பெய்ஜிங் மற்றும் ஷாங்காய் உள்ளிட்ட நகரங்களிலும் பரவி வருகிறது.


கொடிய கொரோனா வைரஸ் பாதிப்பால் சீனாவில் மட்டும் 170 பேர் பலியாகியுள்ளனர். சீனாவின் தேசிய சுகாதார ஆணையத்தின் தகவல் படி திங்கள்கிழமை முடிவில், சீனாவின் வுகானில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,974 ஆக இருந்தது. உறுதிப்படுத்தப்பட்ட பாதிப்புகள் பெரும்பாலானவை ஹூபே மாகாணத்தில் உள்ளன. அங்குதான் வைரஸ் முதலில் அடையாளம் காணப்பட்டது. ஒரு நாளில் கிட்டத்தட்ட 65 சதவீதம் இந்த பாதிப்பு பரவி உள்ளது.


கொரோனா வைரஸ் குறித்து கடந்த வாரம் உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், உலக நாடுகள் பதற்றம் கொள்ளத் தேவையில்லை, இது மிதமான நிலையிலேயே உள்ளது என அறிக்கை வெளியிட்டிருந்தது. ஆனால் சீனாவில் மட்டும் 82 பேர் பலியாகியுள்ளதுடன், ஆசிய நாடுகள் மற்றும் ஐரோப்பாவுக்கும் அமெரிக்காவுக்கும் கொரோனா வியாதி அச்சுறுத்தலை ஏற்படுத்த தொடங்கியதை அடுத்து, கணிக்கத் தவறியதாக கூறி உலக சுகாதார அமைப்பு முதன் முறையாக தங்கள் தவறை ஒப்புக்கொண்டுள்ளது.

சீனாவிற்கு வெளியே ஹாங்காங், தாய்லாந்தில் தலா 8 பேரும், அமெரிக்கா, ஆஸ்திரேலியா, மக்காவோ, சிங்கப்பூரில் தலா 5 பேரும், தென் கொரியா, மலேசியா, தைவான், ஜப்பானில் தலா 4 பேரும், பிரான்ஸில் 3 பேரும், இலங்கை, வியட்நாமில் தலா 2 பேரும், நேபாளம், ஜெர்மனி, கனடாவில் தலா 1 என மொத்தம் 16 நாடுகளில் தற்போது கொரோனா வியாதி பாதிப்புகள் குறித்து உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், சீனாவில் இருந்து சமீபத்தில் கேரளா திரும்பிய வாலிபருக்கு கொரோனா வைரஸ் தாக்கம் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை மத்திய சுகாதாரத்துறை உறுதி செய்துள்ளது. இதையடுத்து, கேரள மாநில அரசு அவசர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது. திருவனந்தபுரத்தில் சுகாதாரத்துறை அதிகாரிகளுடன், சுகாதாரத்துறை மந்திரி சைலஜா ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

மத்திய அரசு: கொரோனா வைரஸ் பாதிப்புக்கான உதவி எண்ணை அறிவித்தது

சீனாவில் கொரோனா என்ற மர்ம வைரஸ் காய்ச்சல் முதலில் வுகான் நகரில் உள்ள ஒரு கடல் உணவு மற்றும் வனவிலங்கு சந்தையில் பாதிக்கப்பட்ட விலங்குகளிடம் இருந்துதான் இந்த வைரஸ் தோன்றியதாக தகவல்கள் கூறுகின்றன.

முதலில் வுகான் நகரில் கண்டறியப்பட்ட இந்த வைரஸ், நாட்டின் தலைநகர் பெய்ஜிங் மற்றும் ஷாங்காய் உள்ளிட்ட நகரங்களிலும் பரவி வருகிறது. இதுவரை, கொரோனா வைரஸ் பாதிப்பால் சீனாவில் மட்டும் 106 பேர் பலியாகியுள்ளனர்.

சீனாவின் தேசிய சுகாதார ஆணையத்தின் தகவல் படி திங்கள்கிழமை முடிவில், சீனாவின் வுகானில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,515 ஆக இருந்தது. வுகான் நகருக்கு மக்கள் செல்லவும், அங்கிருந்து வெளியேறவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாது, நேபாளம் வரை இந்த வைரஸ் பரவியுள்ளது. வுகானில் இன்னும் 250 இந்திய மாணவர்கள் இருப்பதாக கூறப்படுகிறது.

வுகானில் இருந்து இந்தியா திரும்பிய 11 பேரில் 4 பேருக்கு பாதிப்பில்லை என மத்திய சுகாதாரத்துறை உறுதி செய்துள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பை தடுப்பது மற்றும் எதிர்கொள்வது குறித்து இந்திய கேபினட் செயலர் ராஜிவ் கவுபா தலைமையில் உயர்மட்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில், வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில், அனைத்து சர்வதேச விமான நிலையங்களிலும், குறிப்பாக சீனாவில் இருந்து வருபவர்களை கண்காணிக்கும் பணியை தீவிரப்படுத்துவது எனவும், நேபாள எல்லையில் செக் போஸ்ட்களை அமைப்பது எனவும் முடிவு செய்யப்பட்டது.

கொரோனா வைரஸ் குறித்த கேள்விகளுக்கு பதிலளிக்க சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் (MoHFW) 24X7 ஹெல்ப்லைனை அறிமுகப்படுத்தியுள்ளது. கொரோனா வைரஸ் உதவி எண்: + 91-11-23978046

இந்தியாவில் 2 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதால் தீவிர கண்காணிப்பு

சீனாவில் கொரோனா என்ற மர்ம வைரஸ் காய்ச்சல் முதலில் வுகான் நகரில் உள்ள ஒரு கடல் உணவு மற்றும் வனவிலங்கு சந்தையில் பாதிக்கப்பட்ட விலங்குகளிடம் இருந்துதான் இந்த வைரஸ் தோன்றியதாக தகவல்கள் கூறுகின்றன. முதலில் வுகான் நகரில் கண்டறியப்பட்ட இந்த வைரஸ், நாட்டின் தலைநகர் பெய்ஜிங் மற்றும் ஷாங்காய் உள்ளிட்ட நகரங்களிலும் பரவி வருகிறது.

கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 80 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் தாக்கத்தால் இதுவரை 2744 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், ஜப்பான், அமெரிக்கா, பிரான்ஸ், நேபாளம், தென்கொரியா உள்ளிட்ட நாடுகளிலும் கொரோனா வைரஸ் குறித்த கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

இந்தியாவின் அனைத்து விமான நிலையங்களிலும் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு, சீனாவில் இருந்து வரும் பயணிகள் தீவிர மருத்துவ பரிசோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர். வுகானில் இன்னும் 250 இந்தியர்கள் இருப்பதாக கூறப்படுகிறது. சீன புத்தாண்டு விடுமுறையை முன்னிட்டு இந்தியர்கள் பலர் வெளியேறி விட்ட நிலையில், மாணவர்கள் மற்றும் வேலைக்காக தனித்து வசிப்போர் மட்டுமே அங்கிருப்பதாக கூறப்படுகிறது.

வுகானில் இருந்து இந்தியா திரும்பிய 11 பேரில் 4 பேருக்கு பாதிப்பில்லை என மத்திய சுகாதாரத்துறை உறுதி செய்துள்ளது. கேரளாவில் 6 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், சீனாவில் மருத்துவம் படிக்கும் ராஜஸ்தானைச் சேர்ந்த ஒருவர் கொரோனா வைரஸ் அறிகுறியுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மருத்துவமனையின் தனி வார்டில் அவர் வைக்கப்பட்டு கண்காணிக்கப்படுவதாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ராகு சர்மா கூறியுள்ளார். இதுபோல் சீனாவிலிருந்து பீகார் திரும்பிய பெண் ஒருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதால். இதைத் தொடர்ந்து அவர் பாட்னா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டு உள்ளார் என்று தகவல்கள் வெளிவந்துள்ளது.