யாருனு நெனச்ச தோனியின் ரீப்ளேஸ்மென்ட் .. 34 பந்துகளில் அரைசதம் அடித்த ரிஷப் பண்ட்..!

துலீப் டிராபி தொடரில் இந்தியா ஏ அணிக்கு எதிரான போட்டியின் 2-வது இன்னிங்ஸ் ரிஷப் பண்ட் 34 பந்துகளில் அரைசதம் அடித்து அசத்தியுள்ளார். இதனால் வங்கதேசம் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ரிஷப் பண்ட் நிச்சயம் கம்பேக் கொடுப்பார் என ரசிகர்கள் எதிர்பார்க்கப்படுகிறது.

2022-ஆம் ஆண்டு நெடுஞ்சாலை கார் விபத்தில் சிக்கிய இந்திய அணி வீரர் ரிஷப் பண்ட், சுமார் 18 மாதங்களுக்கு பின் ஐபிஎல் தொடரில் கம்பேக் கொடுத்தார். ஐபிஎல் தொடரில் மிடில் ஆர்டரில் களமிறங்கி சிறப்பாக ஆடிய ரிஷப் பண்ட், டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இடம்பிடித்தார். அதில் இந்திய அணியின் எதிர்பார்ப்பை ரிஷப் பண்ட் பூர்த்தி செய்தார்.

இருந்தாலும் ரிஷப் பண்ட்-டம் இருந்து எதிர்பார்த்த அளவிற்கான பெரிய இன்னிங்ஸ் வெளிப்படவில்லை. இலங்கை அணிக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் தொடரிலும் சொதப்பிய ரிஷப் பண்ட், டெல்லி பிரீமியர் லீக் தொடரிலும் சொதப்பினார். இந்நிலையில் இந்திய அணிக்கான ஹோம் சீசன் தொடர் செப்டம்பர் 19-ஆம் தேதி தொடங்கவுள்ளது.

இந்நிலையில் வங்கதேசம் அணிக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியை தேர்வு செய்வதற்கு முன்பாக, இந்திய அணியின் அனைத்து வீரர்களையும் துலீப் டிராபியில் விளையாட வைக்க பிசிசிஐ முடிவு செய்தது. அதன்படி ரோஹித் சர்மா, பும்ரா, விராட் கோலி, அஸ்வின் உள்ளிட்ட சில வீரர்களை தவிர அனைவரும் துலீப் டிராபிக்கு தேர்வு செய்யப்பட்டனர்.

அந்த வகையில் ரிஷப் பண்ட் இந்தியா பி அணியில் தேர்வு செய்யப்பட்டார். தற்போது இந்தியா ஏ – இந்தியா பி அணிகளுக்கு இடையிலான ஆட்டம் நடந்து வருகிறது. இந்த போட்டியின் முதல் இன்னிங்ஸில் ரிஷப் பண்ட் 7 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றினார். தொடர்ந்து 2-வது இன்னிங்ஸ் ஆட்டத்தில் ரிஷப் பண்ட் மரண மாஸ் கம்பேக்கை கொடுத்தார்.

தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடிய ரிஷப் பண்ட், எந்த பவுலராக இருந்தாலும் பவுண்டரியை விளாசி கொண்டே இருந்தார். அதேபோல் குல்தீப் யாதவ் வீசிய முதல் ஓவரிலேயே ஒரு சிக்ஸ், ஒரு பவுண்டரி விளாசி 34 பந்துகளில் அரைசதத்தை எட்டினார். முதல்தர கிரிக்கெட்டில் ரிஷப் பண்ட் அடிக்கும் 20-வது அரைசதம் இதுவாகும். சிறப்பாக ஆடிய ரிஷப் பண்ட் 47 பந்துகளில் 2 சிக்ஸ், 9 பவுண்டரி உட்பட 61 ரன்களை விளாசி ஆட்டமிழந்தார். இதனால் ரிஷப் பண்ட் வங்கதேசம் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் இடம்பிடிப்பார் என ரசிகர்கள் பார்க்கப்படுகிறது.

பிரிஜ் பூஷன்: வினேஷ் போகத் ஒலிம்பிக் தோல்விக்கு ‘கடவுள் உங்களை தண்டித்தார்..!’

“ஒலிம்பிக் மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் விளையாட்டில் கலந்து கொள்வதற்காக ஏமாற்றினார்; கடவுள் அவரை தண்டித்ததால், அவரால் போட்டியில் பதக்கம் வெல்ல முடியவில்லை” என்று இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் முன்னாள் தலைவர் பிரிஜ் பூஷன் விமர்சித்துள்ளார்.

பாஜக முன்னாள் எம்.பி.யும் இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவருமான பிரிஜ் பூஷன் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில், “ஒரு விளையாட்டு வீரர் ஒரே நாளில் இரண்டு எடைப் பிரிவுகளில் சோதனைகளை மேற்கொள்ள முடியுமா? என்று நான் வினேஷ் போகத்திடம் கேட்க விரும்புகிறேன். எடை கூடிய பிறகு ஐந்து மணிநேரம் சோதனையை நிறுத்தி வைக்க முடியுமா? நீங்கள் மல்யுத்தத்தில் வெற்றி பெறவில்லை. ஏமாற்றியே அங்கு நீங்கள் சென்றீர்கள். இன்னொரு வீராங்கனைக்குக் கிடைக்க வேண்டிய வாய்ப்பை தட்டிப்பறித்துச் சென்றீர்கள். அதற்காக கடவுள் உங்களை தண்டித்துள்ளார் என பிரிஜ் பூஷன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

ஐசிசி தலைவராக ஜெய் ஷா போட்டியின்றி தேர்விற்கு பிரகாஷ் ராஜ் விமர்சனம்..!

ஐசிசி-யின் தலைவராக தொடர்ச்சியாக இரு முறை பதவி வகித்து வந்த நியூஸிலாந்தைச் சேர்ந்த 62 வயதான கிரேக் பார்க்லேவின் பதவிக்காலம் வரும் நவம்பர் மாதத்துடன் நிறைவு பெறுகிறது. இந்நிலையில் 3-வது முறையாக தலைவர் பதவியில் தொடர தனக்கு விருப்பம் இல்லை எனவும், நவம்பர் மாதத்துடன் பதவியில் இருந்து விலகுவதாகவும் கிரேக் பார்க்லே தெரிவித்திருந்தார்.

இதனையடுத்து, ஐசிசி தலைவர் பதவிக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது. ஆகஸ்ட் 27-ஆம் தேதிக்குள் வேட்புமனுக்களை அளிக்கலாம் என்று ஐசிசி நிர்வாகம் அறிவித்தது. வேட்பு மனுக்கள் வழங்குவதற்கான கடைசி நாளான நேற்று பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷாவை தவிர வேறு யாரும் மனு வழங்கவில்லை. இதையடுத்து ஜெய் ஷா, போட்டியின்றி ஐசிசி-யின் தலைவராக தேர்வானார்.

இந்நிலையில், விராட் கோலி தனது எக்ஸ் பக்கத்தில் ஐசிசி தலைவராக ஜெய் ஷா தேர்வு செய்யப்பட்டுள்ளதற்கு வாழ்த்து தெரிவித்திருந்தார். அந்த பதிவில் பிரகாஷ் ராஜ், சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராக போட்டியின்றி ஜெய் ஷா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில், நடிகர் பிரகாஷ் ராஜ் தனது எக்ஸ் பக்கத்தில், “போட்டியின்றி ஐசிசி தலைவராக தேர்வாகி உள்ள இந்திய கிரிக்கெட் உருவாக்கிய ஆகச் சிறந்த பேட்ஸ்மேன், பந்து வீச்சாளர், விக்கெட் கீப்பர், ஃபீல்டர் மற்றும் அல்டிமேட் ஆல்ரவுண்டருக்கு அனைவரும் கைத்தட்டல் அளித்து வாழ்த்துவோம்” என நடிகர் பிரகாஷ் ராஜ் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.

நாடு டெல்லி திரும்பிய வினேஷ் போகத்திற்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு..!

பாரிஸ் ஒலிம்பிக் மல்யுத்தத்தில் மகளிருக்கான 50 கிலோ எடை பிரிவின் இறுதிப்போட்டியில் 100 கிராம் எடை அதிகரித்திருப்பதாக கூறி தகுதி நீக்கம் செய்யப்பட்ட காரணத்தால் வினேஷ் போகத்தின் பதக்க கனவு நொறுங்கியது. வினேஷ் போகத், இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றிருந்ததன் மூலம் குறைந்தபட்சம் வெள்ளிப் பதக்கம் கைப்பற்றுவதை உறுதி செய்திருந்தார். எனினும், தகுதி நீக்கம் காரணமாக அவரால் போட்டியில் தொடர்ந்து பங்கேற்க முடியாத நிலை உருவானது.

தகுதி நீக்கத்தை எதிர்த்து விளையாட்டுக்கான நடுவர் மன்றத்தில் வினேஷ் போகத் மேல்முறையீடு செய்தார். அதில், தனது தகுதி நீக்கத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும், வெள்ளிப் பதக்கத்தை தனக்கு வழங்க வேண்டும் என்றும் கூறியிருந்தார். மனுவை விசாரித்த நடுவர் மன்றம், கடந்த 14-ஆம் தேதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

இறுதிப் போட்டி வரை சென்ற வினேஷ் போகத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்பட பலரும் ஆறுதல் தெரிவித்திருந்தனர். விளையாட்டு வீரர்கள் பலரும் வினேஷ் போகத்துக்கு ஆதரவாக கருத்துக்களைத் தெரிவித்திருந்தனர். இந்நிலையில், இன்று டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் வினேஷ் போகத்துக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. காங்கிரஸ் எம்பி தீபேந்தர் ஹூடா, சக மல்யுத்த வீரர், வீராங்கனைகளான பஜ்ரங் புனியா, சாக்ஷி மாலிக் உள்ளிட்டோர் வினேஷ் போகத்தை விமான நிலையத்திற்கு வந்து வரவேற்றனர்.

பின்னர் அவர் வாகனத்தில் அமர வைக்கப்பட்டு ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டார். மிகவும் சோர்வாக காணப்பட்ட அவருக்கு நண்பர்கள் பலரும் ஆறுதல் வார்த்தைகளை தெரிவித்தபடி உடன் சென்றனர். வரவேற்க வந்த அதிக எண்ணிக்கையிலான ரசிகர்களைப் பார்த்து வினேஷ் போகத் கண் கலங்கினார். கைகளைக் கூப்பி அனைவருக்கும் வணக்கத்தையும் நன்றியையும் தெரிவித்தார். “நாட்டு மக்கள் அனைவருக்கும் நன்றி! துரதிருஷ்டவசமாக நான் வெற்றிபெற முடியவில்லை” என்று செய்தியாளர்களிடம் சுருக்கமாகப் பேசினார்.

என்ன கால கொடுமை சார் இது..! டோக்கியோவில் இந்தியா 48-வது இடம்..! பாரிஸில் இந்தியா 71-வது இடம்..!

உலகமே உற்றுநோக்கும் 33-ஆவது ஒலிம்பிக்ஸ் போட்டிகள் பிரான்ஸ் தலைநகர் பாரிசில் கோலாகலமாக கடந்த ஜூலை 26- ஆம் தேதி தொடங்கிய ஆகஸ்ட் 11- ஆம் தேதி நிறைவடைந்தது. 1900 மற்றும் 1924-ஆம் ஆண்டுகளில் இப்போட்டியை நடத்திய பிரான்ஸ், மூன்றாவது முறையாக, இந்த விளையாட்டு திருவிழாவை அரங்கேற்றுகிறது. இந்த ஒலிம்பிக்ஸ் போட்டி 18 நாட்களில் 32 விளையாட்டுகளில் 329 போட்டிகள் நடத்தப்பட உள்ளன. பாரிஸ் நகரம் மட்டுமல்லாது பிரான்சின் பிற 16 நகரங்களிலும் போட்டிகளை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 10,500 வீரர் வீராங்களைகள் பங்கேற்றனர். ஏறக்குறைய 100 ஆண்டுகளாக ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் பங்கேற்கும் இந்தியா இதுவரை 10 தங்கம், 9 வெள்ளி, 16 வெண்கலம் என மொத்தம் 35 பதக்கங்களை வென்றுள்ளது. இந்நிலையில், தமிழ்நாட்டைச் சேர்ந்த 13 பேர் உள்பட இந்தியா சார்பாக 70 வீரர்கள் மற்றும் 47 வீராங்கனைகள் என மொத்தம் 117 பேர் பங்கேற்றனர்.

இந்நிலையில், பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் கடந்த ஜூலை 26- ஆம் தேதி தொடங்கிய 33-வது கோடைக்கால ஒலிம்பிக் போட்டிகள், ஞாயிற்றுக்கிழமை அன்று (11-08-2024) நிறைவடைந்தது. பாரிஸ் ஒலிம்பிக்கில் பதக்கப் பட்டியலில் அமெரிக்கா 40 தங்கம், 44 வெள்ளி, 42 வெண்கலம் என 126 பதக்கங்களுடன் முதலிடமும் 40 தங்கம், 27 வெள்ளி மற்றும் 24 வெண்கலம் என சீனா 91 பதக்கங்களுடன்) இரண்டாவது இடமும் பிடித்தது. மேலும் இந்த ஒலிம்பிக்கில் பதக்கம் பெறாத சுமார் 114 நாடுகள் உள்ளன.

ஆனால் கடந்த 2020 டோக்கியோ ஒலிம்பிக்கில் அமெரிக்கா 39 தங்கப் பதக்கங்களுடன் முதலிடத்திலும், சீனா 38 தங்கப்பதக்கங்களுடன் இரண்டாவது இடத்திலும் இருந்தன. அப்போது, டோக்கியோ ஒலிம்பிக் 2020-இல், இந்தியா ஒன்று தங்கம் உட்பட ஏழு பதக்கங்களுடன் பதக்கப் பட்டியலில் 48வது இடத்தில் இருந்த நிலையில், இந்த பாரிஸ் ஒலிம்பிக் தொடரில் ஒரு வெள்ளி மற்றும் 5 வெண்கலம் உள்பட 6 பதக்கங்களை இந்தியா கைப்பற்றி 71வது இடத்தை பிடித்தது இந்திய ரசிகர்களிடையே மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது.

Graham Thorpe: “மன அழுத்தத்தால் தற்கொலை”- தோர்ப்பின் மரணம் குறித்து அதிர்ச்சி தகவல்..!

இங்கிலாந்து அணியின் முன்னாள் நட்சத்திர வீரரான கிரஹாம் தோர்ப் கடந்த 5-ம் தேதி காலமானார். இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரராகத் திகழ்ந்த கிரஹாம் தோர்ப். இங்கிலாந்திற்காக 100 டெஸ்ட் போட்டிகளிலும், 82 ஒருநாள் போட்டிகளிலும் விளையாடி இருக்கிறார். டெஸ்ட் கிரிக்கெட்டில் 6,744 ரன்களையும், ஒருநாள் போட்டிகளில் 2,380 ரன்களையும் குவித்திருக்கிறார். 1996 மற்றும் 1999 உலகக் கோப்பை தொடர்களில் விளையாடி இருக்கும் கிரஹாம் தோர்ப் இங்கிலாந்து அணியின் கேப்டனாகவும் செயல்பட்டிருக்கிறார்.

கடைசியாக 2005 -ல் இங்கிலாந்திற்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடினார். 55 வயதாகும் கிரஹாம் தோர்ப் உடல் நலக்குறைவால்தான் உயிரிழந்தார் என்று சமீபத்தில் தகவல்கள் வெளியானது. இந்நிலையில் அவர் மன உளைச்சலால் தற்கொலை செய்துகொண்டதாக அவரது மனைவி அமண்டா அதிர்ச்சிகரமான தகவலை வெளியிட்டிருக்கிறார்.

இதுதொடர்பாகப் பேசியிருக்கும் அவரது மனைவி, “மன உளைச்சல் பிரச்சனைக்காக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த சிகிச்சையில் ஆரம்பத்தில் நல்ல பலன் கிடைத்தது. ஆனால் மீண்டும் அவர் பழைய நிலைக்குச் சென்று விட்டார். ஒரு குடும்பமாக நாங்கள் அவருக்குத் துணையாக நின்றோம். ஆனால் எதுவுமே கைகொடுக்கவில்லை. கிரிக்கெட் விளையாடும் போது மனதளவில் பலமான வீரராக கிரஹாம் தோர்ப் இருந்தார். உடல் அளவில் அவருக்கு எந்த பிரச்னையும் இல்லை. மன உளைச்சல் ஏற்பட்டால் அது பல விளைவுகளை உருவாக்கும். அவரது வாழ்க்கையும் அப்படித்தான் பாதிக்கப்பட்டது. அதனால் மன அழுத்தத்தை யாரும் சாதாரணமாக எண்ணிவிட வேண்டாம். அது யாரை வேண்டுமானாலும் பாதிக்கும்” என கூறி இருக்கிறார்.

“கிரஹாம் தோர்ப் மன அழுத்தத்தால் தற்கொலை செய்து கொண்டார் என்று கூற நாங்கள் வெட்கப்படவில்லை. இது போல் இனி யாரும் உயிரிழக்கக் கூடாது என்பதற்காக மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த விரும்புகிறோம்” என்று கிரஹாம் தோர்ப்பின் மகள் கிட்டி தெரிவித்து இருக்கிறார்

140 கோடி மக்களின் கனவை நினைவாக்க… களமிறங்கும் இந்திய அணி…! …

2023 ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரின் இறுதி ஆட்டத்தில் இன்று பிற்பகல் 2 மணிக்கு அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி லீக் சுற்றில் வீழ்த்த முடியாத அணியாக அசுர பலத்துடன் திகழ்ந்தது. இந்திய எதிர்த்து விளையாடிய 9 அணிகளுக்கு எதிராகவும் வெற்றிகளை குவித்து லீக் சுற்றை முதலிடத்துடன் நிறைவு செய்திருந்தது. அதனைத் தொடர்ந்து அரை இறுதி சுற்றில் உலகக் கோப்பை தொடரின் அரை இறுதியில் நியூஸிலாந்து அணியிடன் தோல்வியை தழுவிய இந்திய அணி இந்த முறை 70 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி உலகக் கோப்பை வரலாற்றில் இந்திய அணி 4-வது முறையாக இறுதி சுற்றில் விளையாட உள்ளது.

இதேபோன்று 5 முறை சாம்பியனான ஆஸ்திரேலிய அணி இம்முறை பாட் கம்மின்ஸ் தலைமையில் அடுத்தடுத்து இரு தோல்விகளை சந்தித்து புள்ளிகள் பட்டியலில் 10-வது இடத்தில் இருந்தது. அதன் பின்னர் தொடர்ச்சியாக 7 வெற்றிகளை குவித்து அரை இறுதிக்கு முன்னேறியது. தொடர்ந்து அரை இறுதி சுற்றில் தென் ஆப்பிரிக்காவை 3 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்து 8-வது முறையாக இறுதி சுற்றிற்கு ஆஸ்திரேலிய அணி முன்னேறியுள்ளது.

இந்நிலையில் நடப்பு உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியை பொறுத்தவரை விராட் கோலி 711 ரன்கள், ரோஹித் சர்மா 50 ரன்கள், ஸ்ரேயஸ் ஐயர் 526 ரன்கள், கே.எல்.ராகுல் 386 ரன்கள் மற்றும் ஷுப்மன் கில் 350 ரன்கள் என பேட்டிங்கிளும், முகமது ஷமி 23 விக்கெட்கள், ஜஸ்பிரீத் பும்ரா 18 விக்கெட்கள், குல்தீப் யாதவ் 15 விக்கெட்கள்,முகமது சிராஜ் 13 விக்கெட்கள், மற்றும் ரவீந்திர ஜடேஜா 11 விக்கெட்கள் பந்து வீச்சிலும் மற்றும் பீல்டிங் என அனைத்து துறையிலும் சிறந்து விளங்குகிறது.

இந்நிலையில் ஆஸ்திரேலிய அணி 6-வது முறையாக பட்டம் வெல்லும் முனைப்பில் களமிறங்குகிறது. அந்த அணியின் பேட்டிங்கில் டேவிட் வார்னர் 528 ரன்கள் டிராவிஸ் ஹெ ட், மிட்செல் மார்ஷ் 426 ரன்கள், கிளென் மேக்ஸ்வெல் 398 ரன்கள் என பேட்டிங்கில் பலம் சேர்க்கக் கூடியவர்களாக திகழ்கின்றனர். ஆடம் ஸம்பா 22 விக்கெட்கள் ஜோஷ் ஹேசில்வுட், மிட்செல் ஸ்டார்க் பந்து வீச்சு மற்றும் பீல்டிங் என இந்தியாவை போலவே சிறந்து விளங்குகிறது. எது எப்படியோ ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி, ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றி 140 கோடி மக்களின் கனவை நினைவாக்கும்.

வங்கதேசம் எங்க வெற்றி பெற போகுது… நாம எங்க டேட்டிங் போக போறோம்…

உலகக்கோப்பை 2023 தொடரில் 17-வது லீக் ஆட்டத்தில் இந்தியா நாளை வங்கதேசத்தை எதிர்கொள்கிறது. இந்த போட்டி புனே மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் இன்று மதியம் 1:30 மணிக்கு தொடங்குகிறது. இந்த நிலையில் இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் சென்னை சிதம்பரம் மைதானத்தில் அக்டோபர் 8- ஆம் தேதி நடைபெற்ற முதல் போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி உலகக்கோப்பை 2023 தொடரில் முதல் வெற்றியை பெற்றது.

அதனை தொடர்ந்து அக்டோபர் 11- ஆம் தேதி இந்தியா – ஆப்கானிஸ்தான் அணிகள் டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் அக்டோபர் 11- ஆம் தேதி நடைபெற்ற இரண்டாவது போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி உலகக்கோப்பை 2023 தொடரில் தனது இரண்டாவது வெற்றியை பதிவு செய்து புள்ளி பட்டியலில் இந்தியா 3 -வது இடத்திற்கு சென்றது.

இந்நிலையில், உலகக் கோப்பை வரலாற்றில் இதுவரை இந்தியாவிடம் ஒரு போட்டியில் கூட வெற்றி பெறாத பாகிஸ்தான் அணியுடன் அக்டோபர் 14- ஆம் தேதி குஜராத் அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் மோதியது. இந்த போட்டியில் இந்தியா பாகிஸ்தானை 7 விக்கெட் வித்தியாசத்தில் மீண்டும் வீழ்த்தி தொடரில் தனது மூன்றாவது வெற்றியை பதிவு செய்து புள்ளி பட்டியலில் இந்தியா 1 இடத்திற்கு முன்னேறியது.

ஆனால் இந்தியா – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டிகள் முடித்தாலும் இந்த போட்டி மற்றும் பாகிஸ்தானியின் உலகக்கோப்பை தொடர் தோல்வி குறித்த சர்ச்சைகள் இன்னமும் முடியாமல் சமூக வலைத்தளங்களில் உலவிக் கொண்டுள்ளது. இந்நிலையில், பாகிஸ்தான் நடிகை செஹார் சின்வாரின் வெற்று விளம்பரத்திற்காக மூன்று போட்டிகளில் விளையாடி 2 தோல்வி, 1 வெற்றியுடன் புள்ளி பட்டியலில் 6-வது இடத்தில் உள்ள வங்கதேச அணியை கொம்பு சீவிவிடும் வேளையில் இறங்கியுள்ளார்.

இந்த போட்டியில் இந்தியாவை வங்கதேசம் அணி வீழ்த்தினால், பாகிஸ்தான் நடிகை செஹார் சின்வாரின் நேரடியாக டாக்காவுக்கு சென்று அங்கு இருக்கும் ஏதேனும் வங்கதேச பையனுடன் டேட்டிங் செல்வேன் என்று தெரிவித்துள்ளார். ஆனால் அதற்கு உங்களுடைய அணி இந்தியாவை வீழ்த்த வேண்டும் என்று கூறி இருக்கிறார். செஹார் சென்வாரியின் இந்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்தியாவிற்கு இணையான அணிகள் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகளுடன் கூறியிருக்கலாம். இல்லை என்றால் புள்ளிபட்டியலில் முதலிடத்தில் உள்ள நியூசிலாந்து அணி அல்லது மூன்றாவது இடத்திலுள்ள சவுத் ஆப்பிரிக்கா அணியுடன் இப்படி இந்தியாவை வீழ்த்தினால், பாகிஸ்தான் நடிகை செஹார் சின்வாரின் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து மற்றும் சவுத் ஆப்பிரிக்கா சென்று அங்கு இருக்கும் ஏதேனும் அவர்கள் நாட்டு பையனுடன் டேட்டிங் செல்வேன் என்று கூறியிருந்தால் கண்டிப்பாக செஹார் சின்வாரின் டேட்டிங் செல்லவேண்டியது கட்டாயமாக இருக்கும். ஆகையால் வங்கதேசம் எங்க வெற்றி பெற போகுது அதனால் அடித்து விடுவோம் என்று அடித்து விட்டுள்ளார்.

world cup cricket 2023: தென் ஆப்பிரிக்காவை பந்தாடிய நெதர்லாந்து..! 38 ரன்கள் வித்தியாசத்தில் வரலாற்று வெற்றி பெற்ற நெதர்லாந்து…

உலகக்கோப்பை 2023 தொடரில் இன்று நடைபெற்று வரும் லீக் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா – நெதர்லாந்து அணிகள் தர்மசாலாவில் ஆடி வருகின்றன. மழை காரணமாக தாமதமாக தொடங்க ஆட்டம் 43 ஓவர்களாக குறைக்கப்பட்டது. இந்நிலையில் இந்த ஆட்டத்துக்கான டாசில் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.

இதையடுத்து நெதர்லாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கிய விக்ரம்ஜித் சிங் 2 ரன், மேக்ஸ் ஓடவுட் 18 ரன் எடுத்து ஆட்டம் இழந்தனர். இதையடுத்து களம் இறங்கிய அக்கெர்மென் 12 ரன், பாஸ் டீ லீட் 2 ரன், ஏங்கல்பிரெக்ட் 19 ரன், நிதாமனுரு 20 ரன், வான் பீக் 10 ரன் எடுத்து அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர்.

இதையடுத்து ஸ்காட் எட்வர்ட்ஸ் மற்றும் வான் டர் மெர்வ் இணைந்து அணியை சரிவில் இருந்து மீட்டனர். இதில் வான் டர் மெர்வ் 29 ரன் எடுத்த நிலையில் அவுட் ஆனார்.மறுமுனையில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய எட்வர்ட்ஸ் அரைசதம் அடித்து அசத்தினார்.

கடைசி 9.1 ஓவர்கள் 105 ரன்கள் அதிரடியாக அடிக்க நெதர்லாந்து அணி இறுதியில் நிர்ணயிக்கப்பட்ட 43 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 245 ரன்கள் எடுத்தது. நெதர்லாந்து தரப்பில் அணி தலைவர் எட்வர்ஸ் 78 ரன்கள் எடுத்தார். இதையடுத்து 246 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்பிரிக்கா அணி ஆடி வருகிறது.

தென் ஆப்பிரிக்கா அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கிய பவுமா 16 ரன், டிகாக் 20 ரன், அடுத்து களமிறங்கிய வென் டர் டெசன் 4 ரன், மார்க்ரம் 1 ரன் எடுத்து அடுத்தடுத்து அவுட் ஆகினர். இதையடுத்து 44 ரன்னுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தென் ஆப்பிரிக்கா தடுமாறியது.

இதையடுத்து டேவிட் மில்லர் மற்றும் க்ளாசென் இணைந்து அணியை சரிவில் இருந்து மீட்டனர். அணியின் ஸ்கோர் 89 ஆக உயர்ந்த போது இந்த இணை பிரிந்தது. நிதானமாக க்ளாசென் 28 ரன்னில் அவுட் ஆனார். இதையடுத்து களமிறங்கிய மார்கோ ஜான்சன் 9 ரன்கள் என ஆட்டமிழக்க மறுமுனையில் நிலைத்து நின்ற டேவிட் மில்லர் 43 ரன்களுக்கு ஆட்டம் இழந்து வெளியேறினார்.

தொடர்ந்து களமிறங்கிய ஜெரால்ட் கோட்ஸி 22 ரன்கள், ககிசோ ரபாடா 9 ரன்கள் எடுக்க போராடிய கேசவ் மகாராஜ் 40 ரன்கள் எடுக்க 42.5 ஓவர்கள் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 207 ரன்கள் எடுத்தது. இறுதியில் நெதர்லாந்து அணி  38 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா அணியை வீழ்த்தி வரலாற்று சாதனை படைத்தது.

உலகக் கோப்பை 2023: நவீன் உல் ஹக்கை கட்டியணைத்து வீராட் கோலி..!

புலவர்களுக்கு சண்டையும் சச்சரவும் சகஜம் என்பதுபோல கிரிக்கெட் விளையாட்டில் எதிரணி வீரர்களை கேலியும் கிண்டலும் செய்வது கடந்த காலங்களில் இயற்கையான விஷயமாக இருந்தது. அதிலும் குறிப்பாக ஆஸ்திரேலியா அணி எதிரணியை கேலியும் கிண்டலும் செய்வதை வழக்கமாக கொண்டிருந்தனர். ஆஸ்திரேலியா அணி கேலி மற்றும் கிண்டலுக்கு பதிலடி கொடுத்தவர் இந்திய அணியின் முன்னாள் தலைவர் சௌரவ் கங்குலி. அவரை தொடர்ந்து ஆஸ்திரேலியா போன்று ஸ்லெட்ஜிங் செய்யும் அணிகளை அவ்வளவு எளிதில் முன்னாள் இந்திய அணியின் தலைவர் வீராட் கோலி விட மாட்டார்.

அவரும் பதிலுக்கு அதிரடியாக பேட்டியில் மட்டுமின்றி வாயிலிலும் ஸ்லெட்ஜிங் செய்வதில் வல்லவர். மேலும் மைதானத்திற்கு வெளியே வீராட் கோலி கலாய்த்தல் வீராட் கோலியும் அவரின் ரசிர்கர்களும் எதிரணி வீரர்களை அவர்களின் பணியிலேயே வெறுப்பேற்றுவார்.., ஆக்ரோஷமாக பேசுவார்.. அதேபோல் மைதானத்திலேயே டான்ஸ் ஆடுவது, ஜாலியாக காமெடி செய்வது, இங்கும் அங்கும் ஆட்டம் போடுவது என்று குஷியாகி இருந்து ரசிகர்களை சந்தோசப் படுத்துவார்.

இப்படிப்பட்ட வீராட் கோலிக்கு இன்னொரு முகமும் இருக்கிறது. அது மிகவும் சாந்தமான அன்பான முகம். கிரிக்கெட் மைதானத்திலேயே குறும்பு செய்யும் முகம். சமயங்களில் எதிரணி வீரர்களுடன் மிக அன்பாக இருக்கும் முகம். இந்திய அணியும், இந்திய ரசிகர்களும் பாகிஸ்தான் வீரர்களுடன் மோதினால் கூட வீராட் கோலி மட்டும் சதாப் கான் உள்ளிட்ட வீரர்களுடன் மிக அன்பாக நட்பாக பழகுவார். இந்நிலையில் உலகக் கோப்பை 2023 அவர் நடந்து கொண்ட விதமும் பெரிய அளவில் கவனம் பெற்றுள்ளது.

கடந்த ஐபிஎல் சீசனில் ஆப்கானிஸ்தான் வீரர் நவீன் உல் ஹக் மற்றும் வீராட் கோலி கடுமையாக சண்டை போட்டனர். அதன்பின் சமூக வலைத்தளங்களில் கூட நவீன் உல் ஹக் கோலியை கிண்டல் செய்யும் விதமாக போஸ்ட் போட்டார். ஆனால் அதை எல்லாம் கண்டுகொள்ளாமல் உலகக் கோப்பை 2023 இந்திய – ஆப்கானிஸ்தான் ஆட்டத்தில் ஆட வந்த நவீன் உல் ஹக்கை கட்டியணைத்து வீராட் கோலி இந்த பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்தார். வீராட் கோலியின் இந்த சம்பவம் வீராட் கோலி யார் என்பதை உலக கிரிக்கெட் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.