நிர்வாகம் அதிரடி தகவல்: டெல்லி கேப்பிட்டல்ஸ் கேப்டனாக ரிஷாப் பண்ட் தொடருவார்

14-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி கடந்த 4 மாதங்களுக்கு முன்பு இந்தியாவில் தொடங்கி நடந்து வந்த நிலையில் கொரோனா பாதிப்பால் போட்டிகள் திடீரென நிறுத்தப்பட்டது. மீதமுள்ள ஐ.பி.எல் போட்டிகளை ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய், அபுதாபி, சார்ஜா ஆகிய நகரங்களில் நாளை மறுதினம் தொடங்கி அக்டோபர் 15-ந்தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த போட்டியில் பங்கேற்கும் டெல்லி கேப்பிட்டல்ஸ் கேப்டனாக ஸ்ரேயாஸ் அய்யர் நியமிக்கப்பட்டிருந்தார். அவர் இந்தியாவில் ஐ.பி.எல். தொடங்குவதற்கு முன்பே தோள்பட்டை காயத்தில் சிக்கியதால் ஐ.பி.எல்.-ல் இருந்து விலகினார். அவருக்கு பதிலாக அதன் பிறகு காயத்துக்கு ஆபரேஷன் செய்து கொண்ட அவர் ஓய்வில் இருந்தார்.

அவருக்கு பதிலாக ஒருபுறம் சேவாக் மறுபுறம் கங்குலி இருவரின் அதிரடியை நினையூட்டும் வகையில் அதிரடி ஆட்டத்திற்கு சொந்தக்காரர் இளம் விக்கெட் வீரர் ரிஷாப் பண்ட் கேப்டன் பொறுப்பில் நியமிக்கப்பட்டார். அதன் விளைவு முதல் 8 ஆட்டங்களில் அந்த அணி 6-ல் வெற்றி, 2-ல் தோல்வி என்று 12 புள்ளிகளுடன் முதலிடத்தில் சென்றுள்ளது.

இதற்கிடையே, ஐ.பி.எல். தள்ளிவைக்கப்பட்டதால் கிடைத்த 4 மாத காலஅவகாசத்தில் ஸ்ரேயாஸ் அய்யரும் காயத்தில் இருந்து குணமடைந்து அணியுடன் இணைந்து விட்டார். அவர் தொடர்ந்து பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். இதனால் டெல்லி அணியின் கேப்டன் யார்? என்பதில் குழப்பம் நிலவி வந்த நிலையில் ஐ.பி.எல். 2-ம் கட்ட சீசனிலும் ரிஷாப் பண்டே கேப்டனாக தொடருவார் என்று டெல்லி அணி நிர்வாகம் நேற்று அதிகாரபூர்வமாக அறிவித்து வெளியிடப்படுள்ளது.

உலக கோப்பை டி20 இந்திய அணி அறிவிப்பு

ஐக்கிய அரபு அமீரகத்தில் உலக முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் உலக கோப்பை டி20 தொடர் வரும் அக்டோபர் 17ம் தேதி தொடங்கி நவம்பர் 14ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதனை தொடர்ந்து ஐசிசி உலக கோப்பை டி20 தொடருக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது.

இந்திய அணியில் விராத் கோஹ்லி (கேப்டன்), ரோகித் ஷர்மா(துணை கேப்டன்), கே.எல்.ராகுல், சூரியகுமார் யாதவ், ரிஷப் பன்ட் (விக்கெட் கீப்பர்), இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, ராகுல் சாஹர், ஆர்.அஷ்வின், அக்சர் படேல், வருண் சக்ரவர்த்தி, ஜஸ்பிரித் பும்ரா, புவனேஷ்வர் குமார், முகமது ஷமி மற்றும் மாற்று வீரர்கள்: ஷ்ரேயாஸ் அய்யர், ஷர்துல் தாகூர், தீபக் சாஹர் என 15 வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். மேலும் அணியின் ஆலோசகராக முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனியும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

4-வது டெஸ்ட் போட்டியில் இந்தியா அபார வெற்றி; எங்களால் 10 விக்கெட்டுகளையும் வீழ்த்த முடியும் என்று நாங்கள் நம்பினோம்

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் கடந்த 2-ஆம் தேதி முதல் நாள் லண்டன் ஓவலில் கடந்த 2-ந் தேதி தொடங்கிய போட்டியில் நேற்று ஆட்டத்தில் இந்திய அணி 157 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.  இந்த வெற்றிக்குப் பிறகு இந்திய கேப்டன் கோலி கூறியது, கேப்டனாக நான் பார்த்த டாப் 3 பந்து வீச்சுகளில் இதுவும் ஒன்றாகும்.

ரிவர்ஸ் ஸ்விங் வீசுவதில் பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டனர். எங்களால் 10 விக்கெட்டுகளையும் வீழ்த்த முடியும் என்று நாங்கள் நம்பினோம். ஷர்துல் தாகூர் அபாரமாக செயல்பட்டார். அவரது இரண்டு அரைசதங்களும் எதிரணியை நிலைகுலைய வைத்தது. இரண்டு இன்னிங்ஸ்களிலும் சிறப்பாக ஷர்துல் தாகூர் செயல்பட்டார். ரோகித் சர்மாவின் இன்னிங்சும் அற்புதமானது” என தெரிவித்தார்.

இந்திய கிரிக்கெட் அணி ஒவல் மைதானத்தில் 50 ஆண்டுகளுக்குப் பிறகு வெற்றி அபார வெற்றி!

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் கடந்த 2-ஆம் தேதி முதல் நாள் லண்டன் ஓவலில் கடந்த 2-ந் தேதி தொடங்கிய போட்டியில் நேற்று ஆட்டத்தில் இந்திய அணி 157 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. ஒரு தொடரில் இங்கிலாந்து மண்ணில் 1986-ம் ஆண்டில் கபில்தேவ் தலைமையிலான இந்திய அணி வெற்றி பெற்ற பின்னர் 2 டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்று இருப்பது 2-வது நிகழ்வாகும்.

மாற்றுத்திறனாளிகள்..! சரித்திரத்தை மாற்றும் திறனாளிகள்..! // மாற்றுத்திறனாளிகளின் எழுச்சி..! பாரத்தின் வளர்ச்சி…! //சாதித்துக் காட்டிய மாற்றுத்திறனாளிகள்…

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் கோலாகலமாக நடந்து முடிந்த 32-வது ஒலிம்பிக் போட்டியில் இந்தியா 1 தங்கம் ரெண்டு 2 வெள்ளி மற்றும் 4 வெண்கல என மொத்தம்  7 பதக்கங்களுடன் ஒட்டுமொத்த மக்களின் கனவும் நனவாகாமல் நாடு திரும்பியது. ஆனால் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் மாற்றுத்திறனாளிகளுக்கான 16-வது பாரா ஒலிம்பிக் போட்டியில்   இந்தியா 5 தங்கம் ரெண்டு 8 வெள்ளி மற்றும் 6 வெண்கல என மொத்தம்  19 பதக்கங்களை வென்று ஒலிம்பிக் வரலாற்றில் ஒரு சகாப்தம் எழுதி ஒட்டுமொத்த மக்களின் கனவும் நனவாக்க மாற்றுத்திறனாளிகான நாங்கள் இருக்கின்றோம் இந்திய ரசிகர்களுக்கு நினையூட்டியுள்ளார்.

இயற்கையின் படைப்பில் ஒவ்வொன்றும் வித்தியாசமானவை. ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதத்தில் அழகானவை. மனிதன் அதற்கு விதிவிலக்கில்லை. இன்று நம்மில் பலர் மனதில் ஊனத்தோடு வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் மத்தியில் ஊனம் என் உடம்பில் இல்லை என தைரியமாக வாழ்ந்துவரும் பல மாற்றுத்திறனாளி களும்,  எதையாவது சாதிக்க வேண்டும் எனும் தாகம் தன்னகத்தே கொண்டவர்களுக்கு உடலில் உள்ள குறைபாடு ஒரு பொருட்டே அல்ல… குறைகள் ஒவ்வொருவரிடமும்,  அவர்களுக்கு ஏற்றவாறு இருக்கத்தான் செய்கின்றன. அவர்கள் அந்த குறைகளை பெரிதாய் நினைத்து வருத்தப்படாமல், அதை அந்த குறைகளை உடைத்து எழுபவர் உலகையே திரும்பிப் பார்க்க வைக்கிறார்.

பாரா ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கி 4 நாட்கள் முடிவடைந்து விட்டன இந்தியா பதக்க பட்டியலில் இடம்பெறவில்லையே என்று பி[பல கோடி இதயங்கள் துடிதுடித்து கொண்டிருக்கையில் 5 நாள் ஆட்டத்தில் வீல் சேரில் அமர்ந்தபடி இடது கையால் பந்தை விரட்டி தொடக்க லீக்கில் யாரிடம் தோற்றாரோ கடைசியில் இறுதி சுற்றிலும் அவரிடமே மீண்டும் தோற்று தங்க பதக்கத்தை இழந்தாலும் வெள்ளிப் பதக்கம் வென்று பாராஒம்பிக்கிக் போட்டிகள் தொடங்கி நான்கு நாட்கள் முடிந்தும் பதக்க பட்டியலில் இடம்பெறாத தவித்தது வந்த நம் நாட்டிற்கு முதல் பதக்கத்தை பவினா படேல் உச்சிமுகர  வைத்தார்.

குஜராத் மாநில மெக்சனா நகரைச் சேர்ந்த ஒரு  சாதாரண நடுத்தர குடும்பத்தில் 1986 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 6 ஆம் தேதி பிறந்த அதிஷ்ட பெண் பவினா படேல் முதல் பதக்கம் வென்ற ஒரு சில மணித்துளிகளில் உயரம் தாண்டுதலில் இந்திய வீரர் நிஷாத் குமார் வெள்ளி பதக்கம் வென்று அசத்தினார்.

முடியாதென்ற முடிவவை  முடமாக்கும் நம் வாழ்க்கையை; முடியுமென்ற தீர்வவை  திடமாக்கும் நம் சாதனையை. எதையும் எதிர்கொள்ளும் வலிமை படைத்த, மாற்றுத்திறன் படைத்த மாற்றுத்திறனாளிகள்

நம்மை சில நேரங்களில் வியக்க வைக்கிறார்கள். போட்டியின் 6-வது நாளில் வட்டு எறிதல் எப்52 பிரிவில் களம் கண்ட இந்திய வீரர் வினோத்குமார் வெண்கல பதக்கம் வென்றார். ஆனால் அவருடைய பதக்கத்தை எதோ காரணம் காட்டி திரும்பபெற்று கொண்டனர்.

நீங்கள் என்ன நிறுத்தி வைப்பது இதோ நாங்கள் இருக்கின்றோம் என்று போட்டியின் 7-வது நாள் இரண்டே மணிநேரத்தில் 1 தங்கம், 2 வெள்ளி, 1 வெண்கலம் என இந்திய அணி 4 பதக்கங்களை  குவித்து இந்திய வீரர்கள் சாதனை படைத்தனர். மேலும் 1 தங்கம், 4 வெள்ளி, 1 வெண்கலம் வென்று  இந்திய அணி பதக்க பட்டியலில் 46-வது இடத்திலிருந்து 34 வது இடத்திற்கு முன்னேறியது.

காலை, மகளிர் துப்பாக்கி சுடுதல் 10 மீட்டர் ஏர் ரைபிள் போட்டியில் களமிறங்கிய இந்திய வீராங்கனை அவனி லெகாரா அதிரடியாக விளையாடி தங்கம் வென்றார். ராஜஸ்தானின் ஜெய்ப்பூர் நகரை சேர்ந்த அவனி லெகாரா இந்தியாவுக்கு முதல் தங்க பதக்கம் பெற்று தந்து வரலாறு படைத்து உள்ளார். 9 வயது வரை மற்ற குழந்தைகளைப்போல இயல்பாக இருந்த  அவனி லெகாரா  2012-ம் ஆண்டு நடைபெற்ற ஒரு கார் விபத்து அவரது வாழ்க்கையையே ஒட்டுமொத்தமாகப் புரட்டிப் போட்டிருக்கிறது. அந்த விபத்து காரணமாக அவருடைய முதுகுத் தண்டுவடத்தில் பலத்த அடிபட, அதன் பின்னர் நடக்க இயலாமல் அவனி லெகாரா முடங்கினார்.

அதற்குப் பிறகு சக்கர நாற்காலியே அவரது உலகமாகியிருக்கிறது. தன் மகள் இப்படியே முடங்கிப்போய்க் கிடப்பதை அவனியின் தந்தை வாழ்வை இழந்து சக்கர நாற்காலியில் சோர்ந்து கிடக்கும் பெண்ணல்ல நீ “உனக்கென ஒரு பாதையைத் தேர்ந்தெடுத்து அதில் பயணப்படு” என்று தொடர்ந்து ஊக்கப்படுத்த  தன்னைத் தானே செதுக்கிக் கொண்டு பாராலிம்பிக் போட்டியில் பாராலிம்பிக்கில் தங்கம் வென்ற முதல் இந்தியப் பெண் என்ற சாதனை செய்த  19 வயதேயான அவனி லெகாரா.

தொடர்ந்து நடந்த ஆண்களுக்கான எப்56 வட்டு எறிதலில் வீரர் டெல்லியை சேர்ந்த  இந்தியவின்  24 வயதான யோகேஷ் கதூனியா வெள்ளிப்பதக்கம் வென்று அசத்தினார். மேலும் ஆண்களுக்கான எப்46 ஈட்டி எறிதல் போட்டியில் இந்தியாவின் தேவேந்திரா 64.35 மீ, சுந்தர் சிங் குர்ஜார் 64.01 மீ தொலைவுக்கு ஈட்டி எறிந்து முறையே வெள்ளி மற்றும் வெண்கல பதக்கங்களை வென்றனர். ஈட்டி எறிதலில் வெள்ளி வென்ற தேவேந்திர ஜஜாரியா தனது 23 வயதில் ஏதென்ஸ் பாரா ஒலிம்பிக் போட்டியில் முதல் முறையாக தங்கப் பதக்கம் வென்றார்.  அதன் பிறகு 2016 ரியோ ஒலிம்பிக்கில் மீண்டும் தங்கப் பதக்கம் வென்று அசத்தினார்.

இந்திய வீரர்கள் பதக்கங்கள் வெல்ல வெல்ல மற்ற வீரர்களும் ரசிகர்கள் மிகுந்த உற்சாகம் அடைந்தனர். அதன்விளைவு 8 வது நாள் போட்டியில் டோக்கியோ பாரா ஒலிம்பிக்  ஈட்டி எறிதல் போட்டியில் இந்திய வீரர் சுமித் அண்டில் தங்கம் வென்று அசத்தியுள்ளார். பாரா ஒலிம்பிக்கில் தங்கம் வென்றதுடன் 68.55 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து உலக சாதனையும் சுமித் அண்டில்வர் படைத்தார். டோக்கியோ பாரா ஒலிம்பிக்கில் இந்தியா வெல்லும் 2-வது தங்கம் இதுவாகும்.

டோக்கியோ பாரா ஒலிம்பிக்கில் 8 வது நாளில் இந்திய ஷூட்டிங் குழுவினரின் அற்புதமான ஓட்டத்தை தொடங்கினர். இதில் துப்பாக்கி சுடும் வீரர்களான மணீஷ் நர்வால் மற்றும் சிங்கராஜ் அதானா ஆகியோர் அசாகா ஷூட்டிங் ரேஞ்சில் நடந்த ஆண்கள் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் SH1 இல் பதக்க சுற்றுக்கு தகுதி பெற்றனர். ஆனால் தகுதி சுற்றில் ஆறாவது இடத்தில் இருந்த இந்திய வீரர் சிங்ராஜ் அதானா 3வது இடம் பிடித்து வெண்கல பதக்கம் வென்றார்.

இந்நிலையில்  ஆடவர் உயரம் தாண்டுதலின் இந்திய வீரர்கள் கடந்த ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலு, ஷரத் குமார், வருண் பாட்டி ஆகியோர் கலந்துக்கொண்டனர். இதில், மாரியப்பன் தங்கவேலு வெள்ளிப்பதக்கம் மற்றும் ஷரத் குமார் வெண்கலப்பதக்கம் வென்றார்.  அரியானா மாநிலம் சோனிபட் பகுதியை சேர்ந்த 23 வயதான சுமித் அண்டில்வர் 2005  ஆம் ஆண்டு நேரிட்ட பைக் விபத்தில் இடது முழங்காலுக்கு கீழ் உள்ள பகுதியை இழந்தவர் சுமித் அண்டில்வர்.

துயரம் வேண்டாம் உடல் உறுப்பை இழத்தல் குறையன்று; உற்சாகத்தை இழப்பதே உண்மையில் குறை என்பதை உணர்ந்து செயற்கை கால் பொருத்தி நம்பிக்கை உள்ள பறவை ஒற்றைச் சிறகிலும் பறந்து செல்லுமாம் என்ற முதுமொழியை முன்னுதாரணமாக கொண்டு சுமித் அண்டில்வர் ஒரே போட்டியில் 3 முறை சாதனைகளை முறியடித்த இந்திய வீரர் சுமித் அண்டில்வர், தங்க பதக்கத்தை வென்றார்.

உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவைச் சேர்ந்த 18 வயது  பிரவீன்குமார் உயரம் தாண்டுதல் போட்டியில் வெள்ளி பதக்கத்தை வென்று இந்திய பதக்க பட்டியலில் மேலும் ஒரு பதக்கத்தை சேர்த்தார். மேலும் துப்பாக்கிச்சுடுதலில் ஏற்கனவே தங்கம் வென்ற அவனி லெகாரா 50 மீ. ரைபிள் பிரிவில்  வெண்கலம் பதக்கத்தை கைப்பற்றினார். இந்நிலையில் வில்வித்தை போட்டியில் இந்திய வீரர் ஹர்விந்தர் சிங் வெண்கலம் வென்று அசத்தினார்.

அடுத்த நாள் நடைபெற்ற 50 மீட்டர் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில்  ஒரே பிரிவில் இந்திய வீரர்கள் மணீஷ் நர்வால் தங்கம், சிங்ராஜ்  ஏற்கனவே வெண்கலம் வென்ற வெள்ளி பதக்கம் வென்றனர்.  டோக்கியோ பாராலிம்பிக் போட்டியில் தொடர்ந்து பதக்கங்களை குவித்து வரும்  இந்திய அணிக்கு  ஆடவர் பேட்மிண்டன் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் பிரமோத் பகத் தங்கப்பதக்கத்தை கைப்பற்ற  மற்றொரு இந்திய பேட்மிண்டன் வீரர் மனோஜ் சர்க்கார் வெண்கலப் பதக்கம் வென்றார்.

இந்தியாவின் பதக்க வேட்டை தொடர கடைசி நாள்  போட்டியில் பேட்மிண்டன் ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் சுகாஷ் யத்திராஜ் வெள்ளிப்பதக்கம் வெல்ல மற்றொரு போட்டியில் இந்திய வீரர் கிருஷ்ணா நாகர் தங்கம் வென்றார். இதன் மூலம் பாராலிம்பிக் போட்டியில் இந்தியா 5 தங்கம், 8 வெள்ளி, 6 வெண்கலம் என  19 பதக்கங்களை வென்றது. இந்தியா ஒலிம்பிக் வரலாற்றில் அதிக பதக்கங்களை குவித்த முதல் ஒலிம்பிக் இதுவே ஆகும்.

 

ஒரு கை போனால் என்ன மறு கை உண்டு, மறுகையும் போனால்  இன்னும் ஒரு கை உண்டு. அது உறுதியான கை, உற்சாகத்தின் கை, அது நாங்கள் நம்பும் கை. மாற்றுத்திறனாளிகளாகிய அவர்கள் நம்பிக்கை என்று நம்பிக்கையுடன் சாதித்துக் காட்டியிருக்கிறார்கள். “இல்லாததை எண்ணி ஏங்காமல் இருப்பதை வைத்து பல சாதனைகளைச் சாதிக்க  தொடங்கியுள்ளார்கள்.”

கபில்தேவ் சாதனையை முறியடித்த ஜஸ்பிரித் பும்ரா

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் 3 போட்டிகளில் 1-1 என்ற கணக்கில் சமனில் உள்ளது. இந்நிலையில், மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த 4-வது டெஸ்ட் போட்டி கடந்த 4-ஆம் தேதி முதல் நாள் லண்டன் ஓவல் மைதானத்தில் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.இந்திய அணி ஆட்டத்தின் முதல் நாளே 191 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதையடுத்து, முதல் இன்னிங்சை துவங்கிய இங்கிலாந்து அணி 84 ஓவர்களில் 10 விக்கெட் இழப்புக்கு 290 ரன்கள் எடுத்து. இங்கிலாந்து அணி இந்திய அணியை விட 99 ரன்கள் முன்னிலை பெற்றது. இதையடுத்து, 2 வது இன்னிங்சை துவங்கிய இந்திய அணி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இந்திய வீரர்களின் பொறுப்பான ஆட்டதால் இந்திய அணி 4-ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் அனைத்து விக்கெட் இழப்புக்கு 467 ரன்கள் சேர்த்தது. இந்திய அணி 367 ரன்கள் முன்னிலை பெற்றது.

இதையடுத்து, 2 வது இன்னிங்சை துவங்கிய இங்கிலாந்து அணி வீரர்கள் ரோரி ஜோசப் பர்ன்ஸ் மற்றும் ஹசீப் ஹமீது நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இங்கிலாந்து அணிகளின் பொறுப்பான ஆட்டதால் இங்கிலாந்து அணி 4-ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 77 ரன்கள் சேர்த்தது. இங்கிலாந்து அணி 291 ரன்கள் 90 ஓவர்களில் எடுக்கவேண்டிய நிலையில் 5-வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் இன்று துவங்கி நடைபெற்றது. இங்கிலாந்து துவக்க வீரர்கள் ஹசீப் ஹமீத் மற்றும் ரோரி பர்ன்ஸ் இன்றைய ஆட்டம் துவங்கியதில் இருந்தே சிறப்பாக விளையாடி அரைசதம் விளாசினர்.

ஆனால், 50 ரன்கள் எடுத்திருந்த ரோரி பர்ன்ஸ், ஷர்துல் பந்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த டேவிட் மலான் 5 ரன்கள் எடுத்திருந்தபோது ரன் அவுட் ஆகி வெளியேறினார். இதனை தொடர்ந்து இந்திய பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா ஒல்லி போப் 2 ரன்கள் எடுத்த நிலையில் வெளியேற்றினார். இதனால், டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேக 100 விக்கெட்டுகளை எடுத்த வீரர் என்ற பெருமையை ஜஸ்பிரித் பும்ரா பெற்றுள்ளார். இதற்கு முன் 25 டெஸ்டுகளில் விளையாடி இந்திய முன்னாள் கேப்டன் கபில் தேவ் இந்த சாதனையை படைத்திருந்த நிலையில், ஜஸ்பிரித் பும்ரா 24 டெஸ்டுகளில் இந்த மைல்கல்லை எட்டியுள்ளார்.

இந்திய – இங்கிலாந்து 4-வது ஓவல் டெஸ்ட்: இந்திய அணி 157 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் 3 போட்டிகளில் 1-1 என்ற கணக்கில் சமனில் உள்ளது. இந்நிலையில், மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த 4-வது டெஸ்ட் போட்டி கடந்த 2-ஆம் தேதி முதல் நாள் லண்டன் ஓவல் மைதானத்தில் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.

இந்திய அணி ஆட்டத்தின் முதல் நாளே 191 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதையடுத்து, முதல் இன்னிங்சை துவங்கிய இங்கிலாந்து அணி 84 ஓவர்களில் 10 விக்கெட் இழப்புக்கு 290 ரன்கள் எடுத்து. இங்கிலாந்து அணி இந்திய அணியை விட 99 ரன்கள் முன்னிலை பெற்றது. இதையடுத்து, 2 வது இன்னிங்சை துவங்கிய இந்திய அணி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இந்திய வீரர்களின் பொறுப்பான ஆட்டதால் இந்திய அணி 4-ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் அனைத்து விக்கெட் இழப்புக்கு 467 ரன்கள் சேர்த்தது. இந்திய அணி 367 ரன்கள் முன்னிலை பெற்றது.

இதையடுத்து, 2 வது இன்னிங்சை துவங்கிய இங்கிலாந்து அணி வீரர்கள் ரோரி ஜோசப் பர்ன்ஸ் மற்றும் ஹசீப் ஹமீது நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இங்கிலாந்து அணிகளின் பொறுப்பான ஆட்டதால் இங்கிலாந்து அணி 4-ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 77 ரன்கள் சேர்த்தது. இங்கிலாந்து அணி 291 ரன்கள் 90 ஓவர்களில் எடுக்கவேண்டிய நிலையில் 5-வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் இன்று துவங்கி நடைபெற்றது. இங்கிலாந்து துவக்க வீரர்கள் ஹசீப் ஹமீத் மற்றும் ரோரி பர்ன்ஸ் இன்றைய ஆட்டம் துவங்கியதில் இருந்தே சிறப்பாக விளையாடி அரைசதம் விளாசினர்.

ஆனால், 50 ரன்கள் எடுத்திருந்த ரோரி பர்ன்ஸ், ஷர்துல் பந்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த டேவிட் மலான் 5 ரன்கள் எடுத்திருந்தபோது ரன் அவுட் ஆகி வெளியேறினார். சற்று நிலைத்து நின்ற ஹசீப் ஹமீத் 63 ரன்னில் ஆட்டமிழந்தார்.. அதனை தொடர்ந்து போப் 2 ரன்னிலும், பேர்ஸ்டோ மற்றும் மொயீன் அலி ரன் எதுவும் எடுக்காமலும் ஆட்டமிழந்தார். ஜோ ரூட் நிதானமாக ஆடி வந்த நிலையில் 36 ரங்களில் ஆட்டமிழந்தார். கடைசியில் 2 -வது இன்னிங்ஸ் இங்கிலாந்து அணி 210 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் பறிகொடுத்தது. இந்திய இங்கிலாந்து அணி 157 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தொடரில் 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.

இங்கிலாந்து வெற்றிபெற 291 ரன்களை கடைசி நாள் இலக்கு // ஓவல் டெஸ்ட் இங்கிலாந்து வெற்றியை இந்திய பந்து வீச்சாளர்கள் தடுப்பார்களா ?

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் 3 போட்டிகளில் 1-1 என்ற கணக்கில் சமனில் உள்ளது. இந்நிலையில், மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த 4-வது டெஸ்ட் போட்டி நேற்றைய முதல்நாள் லண்டன் ஓவல் மைதானத்தில் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.

இந்திய அணி ஆட்டத்தின் முதல் நாளே 191 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதையடுத்து, முதல் இன்னிங்சை துவங்கிய இங்கிலாந்து அணி 84 ஓவர்களில் 10 விக்கெட் இழப்புக்கு 290 ரன்கள் எடுத்து. இங்கிலாந்து அணி இந்திய அணியை விட 99 ரன்கள் முன்னிலை பெற்றது. இதையடுத்து, 2 வது இன்னிங்சை துவங்கிய இந்திய அணி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இந்திய வீரர்களின் பொறுப்பான ஆட்டதால் இந்திய அணி 3-ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 270 ரன்கள் சேர்த்தது. இந்திய அணி 171 ரன்கள் முன்னிலை பெற்றது.

இந்நிலையில், 4-ம் நாள் ஆட்டம் இன்று போட்டி தொடங்கிய சில நிமிடங்களில் கிறிஸ் வோக்ஸ் பந்து வீச்சில் ஜடேஜா 17 ரன்களளில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ரஹானேவும் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய ரிஷப் பண்ட் மற்றும் கேப்டன் விராட் கோலி பொறுப்புடன் ஆடிய நிலையில் 44 ரன்கள் எடுத்திருந்த நிலையில் கேப்டன் விராட் கோலி மொயீன் அலி பந்து வீச்சில் ஆட்டமிழந்தார்.

அடுத்து களமிறங்கிய ஷர்துல் தாக்குர் அதிரடியாக ஆட மறுமுனையில் ரிஷப் பண்ட் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஷர்துல் தாக்குர் 72 பந்துகளில் 60 ரன்கள் குவித்து ஜோ ரூட் பந்து வீச்சில் ஆட்டமிழக்க நிதானமாக ஆடிய ரிஷப் பண்ட் 50 ரன்கள் எடுத்து நிலையில் மொயீன் அலி பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். கடைசி கட்டத்தில் அதிரடியாக ஆடிய பும்ரா 24 ரன்களையும், உமேஷ் 25 ரன்களையும் குவித்தனர். இறுதியில் இந்திய அணி தனது இரண்டாவது இன்னிங்சில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 466 ரன்கள் குவித்தது.

இதனால், இந்தியா தனது இரண்டாவது இன்னிங்சில் இங்கிலாந்தை விட 367 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. இதையடுத்து, 2 வது இன்னிங்சை துவங்கிய இங்கிலாந்து அணி வீரர்கள் ரோரி ஜோசப் பர்ன்ஸ் மற்றும் ஹசீப் ஹமீது நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இங்கிலாந்து அணிகளின் பொறுப்பான ஆட்டதால் இங்கிலாந்து அணி 4-ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 77 ரன்கள் சேர்த்தது. இங்கிலாந்து அணி 291 ரன்கள் 90  ஓவர்களில் எடுக்கவேண்டிய நிலையில் உள்ளது.

இந்திய பதக்கப்பட்டியலில் 24 இடத்திற்கு முன்னேறியது // பேட்மிண்டனில் இந்திய வீரர் கிருஷ்ணா நாகர் அசத்தல்!

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் மாற்றுத்திறனாளிகளுக்கான 16-வது பாரா ஒலிம்பிக் போட்டி கடந்த ஆகஸ்ட் 24-ம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த பாரா ஒலிம்பிக்கில் இந்தியாவை சேர்ந்தவர்கள் மொத்தம் 59 வீரர், வீராங்கனைகள் கலந்துக் கொண்டுள்ளனர். இவர்கள் 9 வகையான போட்டிகளில் பங்கேற்றுள்ளனர். ஜப்பான் பாரா ஒலிம்பிக் கடைசி நாளான இன்று கர்நாடகவை சேர்ந்த சுஹேஷ் யேத்திராஜ் வெள்ளிப்பதக்கம் வென்றார்.

மேலும் இன்று நடைபெற்ற ஆடவர் தனிநபர் பேட்மிண்டனில் ஆடவர் எஸ்.எச். 6 பிரிவுக்கான இறுதிப் போட்டியில் 1999ஆம் ஆண்டு ராஜஸ்தானில் பிறந்த இந்திய வீரர் கிருஷ்ணா நாகர், ஹாங்காங்கின் மன் காய் சூ-வுடன் மோதினர். இதில் 21- 17, 16- 21, 21-17 என்ற செட் கணக்கில் கிருஷ்ணா நாகர் வெற்றிப்பெற்று தங்க பதக்கத்தை கைப்பற்றினார். ஆக மொத்தத்தில் டோக்கியோ பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்தியா 5 தங்கம், 8 வெள்ளி, 6 வெண்கலம் 19 பதக்கங்களுடன் பதக்கப்பட்டியலில் 24 இடத்தில் உள்ளது.

டோக்கியோ பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்திய ஐஏஎஸ் அதிகாரி வெள்ளிப்பதக்கத்தை வென்றார் என்ற சாதனையை சுகாஷ் யத்திராஜ் படைத்தார்

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் மாற்றுத்திறனாளிகளுக்கான 16-வது பாரா ஒலிம்பிக் போட்டி கடந்த ஆகஸ்ட் 24ம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த பாரா ஒலிம்பிக்கில் இந்தியாவை சேர்ந்தவர்கள் மொத்தம் 59 வீரர், வீராங்கனைகள் கலந்துக்கொண்டுள்ளனர். இவர்கள் 9 வகையான போட்டிகளில் பங்கேற்றுள்ளனர். ஜப்பான் பாரா ஒலிம்பிக் கடைசி நாளான இன்று கர்நாடகவை சேர்ந்த சுஹேஷ் யேத்திராஜ் உலக தரவரிசையில் நம்பர் ஒன் வீரரான பிரான்சு நாட்டின் லூகாஸை எதிர்த்து விளையாடினார். தொடக்கத்தில் சற்று தடுமாறிய சுகாஷ் யத்திராஜ், பின்னர் சுதாரித்து கொண்டு சிறப்பாக விளையாட தொடங்கினார்.

20 நிமிடங்கள் நடைபெற்ற முதல் சுற்றை 21-15 என்ற கணக்கில் வென்று 1-0 என முன்னிலை பெற்றார். இதைத் தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது சுற்றில் பிரான்சு வீரர் லூகாஸ் 17-21 என்ற கணக்கில் வென்று 1-1 என சமம் செய்தார். இதனால் போட்டியின் வெற்றியாளரை தீர்மானிக்க மூன்றாவது சுற்று நடத்தப்பட்டது. அதில் பிரான்சு வீரர் லூகாஸ் 15-21 என்ற கணக்கில் வென்று தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார். இதன்படி இந்திய வீரர் சுஹேஷ் யேத்திராஜ் வெள்ளிப்பதக்கம் வென்றார். ஆக மொத்தத்தில் டோக்கியோ பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்தியா 4 தங்கம், 8 வெள்ளி, 6 வெண்கலம் 17 பதக்கங்களுடன் பதக்கப்பட்டியலில் 26 வது இடத்தில் உள்ளது.