வீட்டுமனையாக மாறும் விவசாய நிலங்கள் அழிவை நோக்கி ‘நீலகிரி’

ஈரோடு மாவட்டம் தாளவாடி மலைப்பகுதியில் அமைந்துள்ள தொட்டகாஜனூர் கிராமத்தில் பிறந்து வளர்ந்த கன்னட  சூப்பர் ஸ்டார் ராஜ்குமாரின் மகன் ‘அப்பு’ என ரசிகர்களால் செல்லமாக அழைக்கபட்ட புனித் ராஜ்குமார் மாரடைப்பால் பெங்களூருவில் காலமானார்.

“நிலவரை நீள்புகழ் ஆற்றின் புலவரைப்

            போற்றாது புத்தேள் உலகு” – என்ற வள்ளுவரின் வரிகளுக்கு ஏற்ப  வாழ்ந்த தந்தையை போல மகனும் அழியா புகழை பெற்று இறந்தார். புனித் ராஜ்குமாரின் மறைவை கேட்டு அதிர்ச்சி அடைந்த ஏராளமான ரசிகர்கள் தனியார் மருத்துவமனையை சூழ்ந்து கொண்டு அப்பு, அப்பு எழுந்திடுங்கள் எழுந்திடுங்கள், எங்களை பாருங்கள், என கதறி அழுத காட்சிகள் இன்னமும் கண்களை விட்டு மறையவில்லை. புனித் ராஜ்குமாரின் விருப்பப்படி அவரது கண்கள்ளும் தானம் செய்யப்பட்டு  அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.

ஆனால் இன்றைய சமுதாயம் பணம் என்னும் போதைக்கு அடிமையாகி மனிதன் எதையெல்லாம் செய்ய கூடாதோ அதையெல்லாம் செய்து பணத்தை எப்படியாவது  சம்பாதிக்க வேண்டும் என்ற குறிக்கோளோடு வாழ்ந்து வருகிறான். இதன் விளைவுகள் உலகெங்கும் லஞ்சமும், உழலும் தலைவிரித்தாட பல்லாயிரக்கணக்கானோர் பசியும் பட்டினியுமாக மாண்டு கொண்டிருக்கிறார்கள்.

கிராமத்திலிருக்கும் கடைநிலை ஊழியரில் தொடங்கி, கோட்டையிலுள்ள ஐ.ஏ.எஸ் செயலாளர்கள் வரைக்கும் பங்குப் பணம் பாய்ந்ததன் விளைவாக அவர்கள் இன்று மாடமாளிகைகளில் கொழிக்கின்றனர். பூவோடு சேர்ந்து நாரும் மணக்கும் என்பதுபோல… ஒரு காலத்தில் ஓட்டை குடிசைக்கே வழியில்லாமல் இருந்த சிலர்… இன்று இரண்டு மூன்று கார்கள், பல பங்களாக்கள் என்று சொத்துக்கள் குவித்து ஆடம்பர வாழ்க்கை வாழ்கிறார்கள்.

இவர்களெல்லாம் பள்ளிகள், நீர்நிலைகள் மற்றும் புறம்போக்கு நிலங்களை கண்டவர்களுக்கும் பட்டா போட்டுக் கொடுத்துக் கொடுத்து சொத்துக்களை வாங்கி குவித்துக் கொண்டவர்கள். மேலும் சிலர் .. நாட்டிலுள்ள ஒட்டுமொத்த கனிம வளங்களையும் ஊரறிய கொள்ளை அடித்து உலையில் போட்டவர்கள். இதனால் பல நீர்நிலைகள், அரசுக்குச் சொந்தமான நிலங்களான காடுகள் என அனைத்தும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு அழிக்கப்பட்டு வருகின்றன. கல்வி வள்ளல்கள் என்கிற பெயரில் நீர் நிலைகளை ஆக்கிரமித்து தன்னுடைய கல்விக்கூடத்தை ஏரிகளுக்குள்தானே கட்டி வைத்திருக்கிறார்க்குள்!

மேலும் எப்பொழுது தொழிற்புறமயமாக்கல் மற்றும் நகர்ப்புறமயமாக்கல் என்று உலகம் வளர ஆரம்பித்ததோ அப்போதிலிருந்தே பல பசையுள்ள நகரங்கள் மற்றும்  மாநகரங்கள் அதையொட்டியுள்ள பகுதிகள் செல்வம் கொழிக்கும் பூமிகளாக மாறிவிட்டன.

எந்த செய்தித்தாள் அல்லது தொலைக்காட்சியைப் பார்த்தாலும் வீடு கட்ட, மனை வாங்க 1 சென்ட் நிலம் 50 ஆயிரம் ரூபாய் என நடிகர், நடிகைகள் கூப்பாடு போட 30 வகையான பயிர்கள் விளையும் விவசாய பூமியை “உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே” என்ற பழமொழியை மறந்து பிளாட் போட்டு விற்க ஆரம்பித்தார்களே அப்பொழுதிலிருந்து விவசாயி நிலங்கள் தமிழகம் முழுவதும் பிளாடாக மாற்றப்பட்டு வருகிறது.

மலைகளின் அரசியான நீலகிரியானது கிழக்குத் தொடர்ச்சி மலையும், மேற்குத் தொடர்ச்சி மலையும் சங்கமிக்கும் இடத்தில் அமைந்துள்ளது. ஒத்தக்கல்மந்து என தோடா மொழியில் அழைக்கப்பட்ட உதகமண்டலம் நீலகிரி மாவட்டத்தில் அமைந்துள்ளது. உதகமண்டலத்தில்  இருந்து 19 கிலோமீட்டர் தொலைவில் குன்னூரும் 31 கிலோமீட்டர் தொலைவில் கோத்தகிரியும் அமைந்துள்ளது. மேலும் தாவரவியல் பூங்கா, படகு சவாரி,   பல வண்ண நிறங்களில் ஏராளமான பூக்கள் அணிவகுத்து இருக்கும் பூங்கா மற்றும் அருங்காட்சியகம் என சுற்றுலா தலமாக உதகமண்டலம் அமைந்துள்ளது.

ஆனால், இயற்கை வளங்கள் கொஞ்சும் நீலகிரி மாவட்டத்தையும் மாஃபியாக்கள் விட்டு வைக்கவில்லை. விவசாய நிலங்களை இன்று அவரவருக்கு சேரவேண்டிய அவரவர் பார்க்க விவசாய நிலத்தை பிளாட் போட்டு விற்று மாட மாளிகைகள், கூட கோபுரங்களாக மாறிக் கொண்டுள்ளது. அதை தடுத்து நிறுத்த வேண்டிய அதிகாரிகள் வேடிக்கை பார்த்துக் கொண்டுள்ளனர்.

                                                                                                                               தொடரும்….

சாதித்துக் காட்டிய விராட் கோலியால் ..! சாதிக்க முடியாமல் போனதோ…!

நம் நாட்டின் 138 கோடி  மக்களில் ஒட்டுமொத்த கனவையும் சுமந்து கொண்டு T20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் விளையாட ஓமன் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த ஜூன் மாதம் சென்ற இந்திய அணி இன்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறாமல் வெறும் கையை ஆட்டிக்கொண்டு நாடு திரும்பியுள்ளது. இது ஒவ்வொரு இந்திய  கிரிக்கெட் ரசிகர்களுக்கும் மிகுந்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

கிரிக்கெட் உலகில் ஆஃப் சைட்டில் எத்தனை பீல்டர்களை நிறுத்தி வைத்தாலும், துல்லியமாக பவுண்டரிகளை அடிக்கும் திறமைப் படைத்தவர், “ஆஃப் சைட் கிங்” என செல்லமாக அழைக்கப்பட்டவர் உலகின் தலைச் சிறந்த ஸ்பின்னர்களான முத்தையா முரளிதரனும், ஷேன் வார்னேவும் கூட பயப்படும் அளவிற்கு இறங்கி வந்து அடித்தால், பந்து மைதானாத்திற்கு வெளியே பறக்கும் அளவிற்கு சிக்ஸர் விளாசுவதில் கில்லாடி ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்த இந்திய அணியின் ஆக்ரோஷமான தலைவர்  “தாதா” சவுரவ் கங்குலி.

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் சொல்வதை போல 1980 -2000 கால கட்டத்தில் இந்திய அணி பல நாடுகள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல தொடர் தோல்விகளை சந்தித்து வந்த நிலையில் இந்த தொடர் தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தவர்  “தாதா” சவுரவ் கங்குலி தலைமயிலான இந்திய அணி. அதன்பின்னர் இந்திய அணி கொஞ்சம், கொஞ்சமாக செதுக்கப்பட்டு யார் யாரிடம் உதை வாங்கினோமோ அவர்களுக்கெல்லாம் அவர்களின் சொந்த மண்ணிலேயே அவர்களை மண்ணை கவ்வ வைத்து வெற்றிகள் பல பெற்று கிரிக்கெட் உலகில் ஜாம்பவானாக திகழ்பவர் இன்றைய ஆக்ரோஷமான தலைவர் விராட் கோலி.

1988-ம் ஆண்டு நவம்பர் 5-ம் தேதி தலைநகர் டெல்லியில் பஞ்சாபி குடும்பத்தை சேர்ந்த குற்றவியல் வழக்கறிஞர் பிரேம் கோலிக்கும், சரோஜ் கோலிக்கும் மூன்றாவது குழந்தையாக விராட் கோலி பிறந்தார். தனது  3 வயதில் கிரிக்கெட் மட்டையை தூக்கியவர் 15 வயதிற்கு உட்பட்டோருக்கான டெல்லி அணி சார்பாக முதல் தர போட்டியில்  களம் கண்ட விராட் கோலி ஆக்ரோஷம், அதிரடி என தனது திறமையை நாளுக்கு நாள் மேருகேற்றி   மலேசியாவில் 2008- ஆம் ஆண்டு நடைபெற்ற 19 வயதிற்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பை தொடரில் இந்திய அணிக்கு தலைமையேற்று, சாம்பியன் பட்டம் வென்று கொடுத்தார்.

உலகக் கோப்பையை வென்றுகொடுத்த கையோடு இந்திய சீனியர் அணிக்காக 2008 ஆண்டு ஆகஸ்டு மாதம் நடைபெற்ற இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டியில் சச்சின் டெண்டுல்கர் மற்றும் வீரேந்தர் சேவாக் ஆகியோர் காயம் காரணமாக விளையாடாததால் விராட் கோலிக்கு துவக்க வீரராக களம் இறங்கும் வாய்ப்பு 19 -வது வயதில் கிடைத்தது.

2011-ம் ஆண்டில் இந்தியா, இலங்கை, வங்காளதேசம் ஆகிய ஆசிய நாடுகளில் நடைபெற்ற  10-வது உலக கோப்பை போட்டியில் வங்காளதேசத்திடம் முந்தைய உலக கோப்பையில் அடைந்த தோல்விக்கு வட்டியும் முதலுமாக பதிலடி கொடுக்கும் விதமாக ஷேவாக் 175 ரன்களும், விராட் கோலி 100 ரன்களும் விளாச இந்திய அணி 4 விக்கெட்டு  370 ரன்கள் குவித்தது.

மேலும் அதே  உலகக் கோப்பை போட்டியில் இறுதி ஆட்டத்தில் இந்தியா-இலங்கை அணிகள் மும்பை வான்கடே மைதானத்தில் பலப்பரீட்சையில் இறங்கின. ‘டாஸ்’ போடப்பட்ட போது இலங்கை கேப்டன் சங்கக்கரா என்ன கேட்டார் என்பது சரியாக காதில் விழவில்லை என்று போட்டி நடுவர் கூறியதால் குழப்பம் ஏற்பட்டு,  அதன்பிறகு 2-வது முறையாக ‘டாஸ்’ சுண்டிய வினோதம் அரங்கேற ‘டாஸ்’ வென்ற  இலங்கை அணி 6 விக்கெட் இழப்புக்கு 274 ரன்கள் எடுத்தது.

அடுத்து 275 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியில் ஷேவாக் (0), தெண்டுல்கர் (18) என ஆட்டமிழந்து வெளியேற விராட் கோலி, கவுதம் கம்பீருடன் இணைந்து விளையாட  இந்திய அணியை சரிவில் இருந்து மீட்டெடுத்ததன் விளைவு பல கோடி இந்தியர்களின் எதிர்பார்ப்பை 28 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய அணி  2-வது முறையாக உலகக் கோப்பையை உச்சிமுகர்ந்தது.

2012 -ம் ஆண்டு அதாவது தனது 20 வயதில் விராட் கோலி ஒரு நாள் பன்னாட்டு போட்டிகளுக்கு உதவித் தலைவரானார். 2013 -ம் ஆண்டு இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தரவரிசை பட்டியலில் முதலிடம் பிடித்து, அதன்பின்னர்  2014-ம் ஆண்டு விராட் கோலி இந்திய அணியின் தலைவர் ஆனார். விராட் கோலி தலைமையில் இந்திய அணி தொடர்ந்து 8 டெஸ்ட் தொடர்களை வென்று அசத்தி டெஸ்ட் தரவரிசை பட்டியலில் இந்திய அணியை முதல் இடத்திற்கு அழைத்து சென்றார்.

விராட் கோலி தலைமையில் விளையாடிய 65 டெஸ்ட் போட்டிகளில், இந்திய அணி 38 வெற்றிகள், 16 தோல்விகள் மற்றும் 11 போட்டிகள் டிராவிலும் முடிந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் உலகக் கோப்பை போட்டி என்றாலே சச்சின் டெண்டுல்கர் பாகிஸ்தானுக்கு எதிரான டாப் ஸ்கோரராக இருப்பார். ஆனால் அவருக்குப் பிறகு 2012, 2014, 2016, 2021 T -20 உலகக் கோப்பை போட்டிகள், 2015 உலகக் கோப்பை போட்டி என பாகிஸ்தானுக்கு எதிராக ஆடிய 6 போட்டிகளில் ஐந்தில் விராட் கோலி தான் இந்தியாவின் டாப் ஸ்கோரர்.

ஆண்டுதோறும் ICC அறிவிக்கும் ஆண்டின் சிறந்த அணியில் விராட் கோலி தொடர்ந்து ஒன்டே டீமில் 6 முறையும், டெஸ்ட் டீமில் 3 முறையும் இடம்பெற்று அசத்தியிருக்கிறார். சாம்பியன்ஸ் டிராபி, ஒருநாள் உலகக் கோப்பை, டெஸ்ட் சாம்பியன்ஷிப், டி-20 உலகக் கோப்பை அனைத்திலும் இந்திய அணியை வழிநடத்திய முதல் தலைவர் விராட் கோலி தான்.

தொடர்ந்து பேட்டிங்கில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய விராட் கோலி ஒருநாள் போட்டியில் அதிவேகமாக 38 சதங்கள், சர்வதேச ஒருநாள் போட்டிகளில் அதிவேகமாக 10 ஆயிரம் ரன்கள் இரு அணிகள் இடையிலான ஒருநாள் தொடர்களில், 6 முறை 300 ரன்களுக்கு மேல் குவித்த ஒரே வீரர், ஒருநாள் போட்டிகளில் தொடர்ச்சியாக 3 சதங்களை விளாசிய முதல் இந்தியர், அனைத்து வகை போட்டிகளிலும் சராசரியாக 55 ரன்களுக்கு மேல் எடுத்துள்ள ஒரே வீரர் என்று சர்வதேச கிரிக்கெட்டில் தனது சதங்களையும், சாதனைகளையும் விராட் கோலி அடுக்கினார்.

இதுமட்டுமின்றி ஒருநாள் போட்டிகளில் அதிவேகமாக 8000, 10000, 12000 ரன்களைக் கடந்த விராட் கோலி சர்வதேச கிரிக்கெட்டில் அதிவேகமாக 23000 ரன்களைக் கடந்ததும் விராட் கோலி தான். டிசம்பர் 18-ம் தேதி விராட் கோலியின் தந்தை இறந்த நாள் மற்றும் சர்வதேச அரங்கில் விராட் கோலி அறிமுகமான நாள் ஆகஸ்ட் 18, 2008 ஆண்டு ஆகையால் இதனை நினைவு கூறும் விதமாக ஜெர்ஸி எண் 18 என்ற எண்ணைத் தேர்வு செய்து இருக்கிறார்.

இந்தியாவின் மிகச் சிறந்த தலைவர்களான தாதா சவுரவ் கங்குலி, மகேந்திரசிங் தோனி இருவரும் இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் 183 ரன்கள் அடித்தது பெஸ்ட் ஸ்கோராக இருக்க, விராட் கோலி பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் 183 ரன்கள் அடித்து பெஸ்ட் ஸ்கோரை பதிவு செய்தார். இன்றும் பல கிரிக்கெட் வீரர்கள் விவியன் ரிச்சர்ட்ஸோடுவை ஜாம்பவானாக பார்க்கும் நிலையில் விவியன் ரிச்சர்ட்ஸோடோ நான் என்னைப் பார்க்கிறேன் என தெரிவிக்கும் அளவிற்கு விராட் கோலி சிறந்த வீரராக திகழ்கிறார் .

எத்தனையோ சாதனைகளுக்கு சொந்தக்காரரான விராட் கோலி தலைமயிலான இந்திய அணி 2017 சாம்பியன்ஸ் டிராபியின் இறுதிப் போட்டியில் பாகிஸ்தானிடம் தோல்வியடைந்தது. மேலும் 2019 உலகக் கோப்பை அரையிறுதியில் நியூசிலாந்திடம் தோல்வியடைந்தது. டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் மீண்டும் நியூசிலாந்திடம் தோல்வியடைந்தது மிகுந்த வேதனையை கொடுக்கும் செயலாகும்.

இந்நிலையில், 7-வது T 20 உலக கோப்பை போட்டியில் குரூப்-2 பிரிவில் கடந்த மாதம் 24-ஆம் தேதி இந்திய- பாகிஸ்தான் மோதிய ஆட்டத்தில்  டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி தலைவர் பாபர் அசாம் பந்துவீச்சை தேர்வு செய்ய  தொடக்க வீரர்களாக ரோகித் சர்மா மற்றும் லோகேஷ் ராகுல் களமிறங்க ஷாகின் ஷா அப்ரிடி வீசிய முதல் ஓவரின் 4-வது பந்தில் ரோகித் சர்மா ரன் ஏதுமின்றி ஆட்டமிழந்து வெளியேற மீண்டும் ஷாகின் ஷா அப்ரிடி வீசிய இரண்டாவது ஓவரில் முதல் பந்தில் லோகேஷ் ராகுல் 3 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேற இந்திய அணி 2.1 ஓவரில் 6 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

அடுத்து களமிறங்கிய சூர்யகுமார் யாதவ் 11 ரன்கள் எடுத்த நிலையில் ஹசன் அலியின் 5.4 ஓவரில் ஆட்டமிழந்து வெளியேற இந்திய அணி 31 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்த நிலையில் அடுத்து களமிறங்கிய ரிஷப் பன்ட், விராட் கோலியுடன் இணைந்து நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்தியாவை சரிவிலிருந்து மீட்டு இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்த 151 ரன்கள் எடுத்தது.

152 ரன்கள் வெற்றி என்ற இலக்குடன் களமிங்கிய பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர்கள் பாபர் அசாம் மற்றும் முகமது  ரிஷ்வான் சிறப்பாக விளையாடினார்கள். மாயாஜால ஸ்பின்னர் என்று இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்ட வருண் சக்கரவர்த்தி ஒரு விக்கெட்டை கூட வீழ்த்தாத நிலையில், ஜஸ்பிரித் பும்ரா மற்றும் முகம்மது ஷாமி  ஆகியோரின் பந்துவீச்சை சிதறடித்த பாகிஸ்தான் விக்கெட் இழப்பின்றி இலக்கை எட்டி உலகக் கோப்பை வரலாற்றில் இந்திய அணியை முதன்முறையாக வெற்றி பெற்று வரலாற்று சாதனையை மாற்றி அமைத்தது.

அடுத்து நியூசிலாந்து அணியிடம் இந்திய அணி வீரர்கள் ஒட்டுமொத்தமாக சொதப்ப அரையிறுதி சுற்றுக்கு முன்னேறாமல் வெறும் கையை ஆட்டிக்கொண்டு இந்திய அணி நாடு திரும்பியது. 19 வயதிற்கு உட்பட்டோருக்கான அணியில் தலைவராக இருந்த யாருமே டீம் இந்திய அணியில் தலைவராக இருந்தது இல்லை என்ற சாதனையை  விராட் கோலி முறியடித்தார். ஆனால் 19 வயதிற்கு உட்பட்டோருக்கான உலகக்கோப்பையை வென்று சாதித்துக் காட்டிய விராட் கோலி தலைமையிலான இந்திய அணி, இன்று சாதிக்க முடியாமல் போனதோ..!

துணை – ஆய்வாளருடன் கட்டிப்புரண்ட வாலிபர்… வாணியம்பாடி பகுதியில் தொடரும் அவல நிலை..!

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் செட்டியப்பனூர் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த காவல் துணை – ஆய்வாளர் குணா என்பவரை, அதே பகுதியை சேர்ந்த ஒருவர் நடுரோட்டில் தாக்கி கட்டி புரண்ட நிலையில், ஜவ்வாது மலையில் உள்ள காவலூரை அடுத்த கிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்த மணிகண்டன் பெங்களூருவிலுள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார்.

மணிகண்டன் நேற்று காலை காவலூரிலிருந்து ஆலங்காயம் நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். கல்லரைபட்டி அருகே உள்ள பிருந்தாவன் பள்ளி பகுதியில், ஆலங்காயம் காவல் துணை – ஆய்வாளர் உமாபதி தலைமையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது துணை – ஆய்வாளர் உமாபதி மோட்டார் சைக்கிளில் வந்த மணிகண்டனை தடுத்து நிறுத்தினார். ஆனால் மோட்டார் சைக்கிளில் வந்த மணிகண்டன் துணை – ஆய்வாளர் கையிலிருந்த செல்போனை தட்டி விட்டு வேகமாக ஆலங்காயம் நோக்கி சென்றார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த துணை – ஆய்வாளர் மணிகண்டனை பின்தொடர்ந்து துரத்தி சென்று ஆலங்காயத்தில் உள்ள மார்க்கெட் பகுதியில் மடக்கிப் பிடித்தனர். பின்னர் மணிகண்டனை காவல் நிலையத்துக்கு அழைத்துச் செல்ல துணை – ஆய்வாளர் உமாபதிக்கும், மணிகண்டனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கி நடு ரோட்டில் கீழே விழுந்து கட்டிப் புரண்டனர்.

ஜெயலலிதாவிற்கு தன்னம்பிக்கையும், தைரியத்தையும் ஊட்டியவர் வி.கே. சசிகலா நடராஜன்

புரட்சித் தலைவர், பொன்மனச் செம்மல் டாக்டர் எம்.ஜி.ஆர் 1987-ம் ஆண்டு டிசம்பர் 24 -ம் நாள் இயற்கை எய்தபோது எம்.ஜி.ஆர் அவர்களின் இறுதி ஊர்வலத்தில் புரட்சி தலைவி ஜெயலலிதா அவர்களை ஒரு கூட்டம் கீழே தள்ளிவிட போது புரட்சி தலைவி ஜெயலலிதாவிற்கு தன்னம்பிக்கையுடன் தைரியத்தையும் ஆறுதலையும் கொடுத்து நடமாட வைத்த ஒரே ஒரு நபர் வி.கே. சசிகலா நடராஜன்.

அதன்பின்னர் 1989 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் 150 தொகுதிகளில் தி.மு.க வெற்றி பெற்று 13 ஆண்டு கால வனவாசத்தை முடித்து ஆட்சி பீடத்தை கைப்பற்றியது. அப்போது தேர்தல் ஜெ அணி 27 இடங்களையும் ஜி.கே.மூப்பனார் தலைமையில் காங்கிரஸ் கட்சி 26 இடங்களையும் அ.தி.மு.க (ஜா அணி) 2 இடங்களையும் கைப்பற்றியது நாடறிந்தது. 1989 ஆம் ஆண்டு ஜனவரி 27 ஆம் தேதி வள்ளுவர் கோட்டத்தில் கருணாநிதி 3- வது முறையாக முதலமைச்சராக பொறுப்பேற்றார்.

ஆனால் எதிர்க்கட்சித் தலைவராக பிப்ரவரி 9 ஆம் தேதி, ஜெயலலிதா பதவி ஏற்றதோடு சரி, அதன்பிறகு சட்டமன்றத்திற்கு வருவதையே ஜெயலலிதா தவிர்த்தார். இதற்கிடையே, ஜா-ஜெ அணிகளிடையே வி.கே. சசிகலா நடராஜன் பேச்சுவார்த்தை நடத்தி பிரிந்து கிடந்த அதிமுகவை இணைத்தார். அதன்பிறகு மார்ச் மாதம் நடந்த மருங்காபுரி, மதுரை கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடை தேர்தலில் ஆட்சி அதிகாரத்தில் இருந்த தி.மு.க வெற்றி பெறும் என்று சொல்லப்பட்டது.

”வினைவலியும் தன்வலியும் மாற்றான் வலியும்

துணைவலியும் தூக்கிச் செயல்” -என்ற வள்ளுவனின் வரிகளுக்கு இணங்க, தேர்தல் தோல்வியில் துவண்டு கிடந்த ஜெயலலிதா இந்த இரண்டு தொகுதிகளுக்கும் பிரசாரங்களுக்கு போகமலேயே ‘இரட்டைஇலை’ சின்னம் கிடைக்க வி.கே. சசிகலா நடராஜன் வெற்றிக்கு வியூகம் அமைத்துக் கொடுக்க கே.கே.எஸ்.எஸ்.ஆர். மற்றும் திருநாவுக்கரசர் ஆகியோரைத் தேர்தல் பொறுப்பாளர்களாக நியமித்து தேர்தல் ராஜா தந்திரங்களை கற்றுக் கொடுத்த தி.மு.க-வுக்கு அதிர்ச்சி கொடுத்தார்.

அ.தி.மு.கவின் வெற்றி குறித்து பேச போயஸ் கார்டனுக்கு கே.கே.எஸ்.எஸ்.ஆர்போன் போட்டா அப்போது மறுமுனையில் போனை எடுத்து பேசியது நடராஜன். “அண்ணாச்சி.. நீங்க சொன்ன பார்முலா நல்லா வேலை செய்துடுச்சி… நாம ஜெயிச்சுட்டோம்” என்று உற்சாகமாக பேசினார். இந்த உரையாடலை இவர்கள் இருவரையும் தாண்டி, “மூன்றாவது காது’ ஒன்று ஒட்டுக் கேட்டுக் கொண்டிருந்தது.

இந்நிலையில் 1989 -ம் ஆண்டு மார்ச் மாதம் 25 -ம் தேதி தி.மு.க அரசு பட்ஜெட் கூட்டத்தின் முதல் நாள். முதலமைச்சரும் நிதியமைச்சருமான கருணாநிதி, தமிழக பட்ஜெட்டை சட்ட மன்றத்தில் தாக்கல் செய்ய எழுந்த போது, ‘பட்ஜெட்டை தாக்கல் செய்யக்கூடாது’ என்று அ.தி.மு.க தரப்பில் இருந்து எதிர்ப்பு குரல் கடுமையாகக் கிளம்பியது.

தன்னுடைய போன் ஒட்டு கேட்கப்படுவதாகவும் ‘அதற்கு பதில் சொல்ல வேண்டும்’ என்று உரிமை மீறல் பிரச்னையை ஜெயலலிதா எழுப்பினார். அப்போது நடந்த யுத்தத்தில், பட்ஜெட் உரை கிழிக்கப்பட்டது; கருணாநிதி மூக்கு கண்ணாடி உடைந்தது; வீரபாண்டி ஆறுமுகத்தின் முகத்திலிருந்து இரத்தம் கொட்ட ஆரமித்தது; ஜெயலலிதா சேலை கிழிந்தது என சட்டமன்றமே அமளி.

இந்த மன உளைச்சலால் அரசியலை விட்டு ஜெயலலிதா ஒதுங்கி விடலாம் என்ற நோக்கத்தில் தன்னுடைய எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்கிறேன். அரசியலில் இருந்து ஓய்வு பெறுகிறேன் என்று ஜெயலலிதா பரபரப்பான இருந்த நேரத்தில் எழுதிய கடிதம் ஒன்று வி.கே. சசிகலா நடராஜன் கையில் கிடைக்க.அந்த கடிதம் உரியவர்கள் கைக்குச் செல்லாமல் தடுத்தார்.

இந்த தகவல், உளவுத்துறை மூலம் முதலமைச்சர் கருணாநிதி காதுக்கு எட்டியதால் வி.கே. சசிகலாவின் கணவன் நடராஜன் கைது செய்யப்பட்டார் என்ற தகவலும் உள்ளது. ‘நமக்காக இவ்வளவு சோதனைகளை வி.கே. சசிகலாவின் கணவன் நடராஜன் சந்திக்கிறாரே’ என்ற காரணத்தால் ஜெயலலிதா வி.கே. சசிகலாவின் மீது அதிக அன்பாக மாறினார்.

அதன்பின்னர் 1989–ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலை அ.தி.மு.க-வுடன் சேர்ந்து சந்திக்க காங்கிரஸ் கூட்டணிக்கு வி.கே. சசிகலா நடராஜன் அச்சாரமிட்டார். காங்கிரஸ் கட்சியுடனான புதிய உறவு ஜெயலலிதாவிற்கு மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியது.

மேலும் இந்த நாடாளுமன்ற தேர்தலில் 38 இடங்களில் அதிமுக கூட்டணி கட்சி வெற்றி பெற்றதால் ஜெயலலிதா மிகுந்த உற்சாகம் அடைந்தாலும், மத்தியில் காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்தது. வி.கே. சசிகலா நடராஜன் அன்றே திமுகவிற்கு எதிரான அரசியல் சதுரங்க விளையாட்டிற்கு ஜெயலலிதாவிற்கு துணை நின்று ஒவ்வொரு நகர்வுகளாக நகர்த்தினார்.

மத்தியில் சந்திரசேகரின் ஆட்சி காலத்தில் தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சரியில்லை என்று காரணம் காட்டி எதிர்கட்சியான அதிமுக மற்றும் அதனுடன் கூட்டணியில் இருந்த காங்கிரஸ் கட்சியும் அன்றைய தமிழகத்தின் ஆளும் கட்சியான திமுக அரசைக் கலைக்க வேண்டுமென மத்திய அரசை வற்புறுத்தினர்.

மேலும் ஜூன் 1990 -ம் ஆண்டு சென்னையில் ஈ. பி. ஆர். எல். ஃப் தலைவர் பத்மநாபா அவர்கள் எல். டி. டி. ஈ அமைப்பினரால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தை மேற்கோள் காட்டி அன்றைய மத்திய சட்டத்துறை அமைச்சர் சுப்ரமணியசாமி தமிழகத்துக்கு குடியரசுத் தலைவர் ஆட்சியைப் பரிந்துரைத்தார்.

இதுமட்டிமின்றி இந்திய அரசின் ரகசியங்களை தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு திமுக அரசு தெரிவிப்பதாகக் கூறியதன் விளைவாக இந்திய சுதந்திரத்திற்கு பிறகு தமிழ்நாட்டில் முதல் முறையாக ஆளுநர் ஒப்புதல் இல்லாமல். அதர்வைஸ் 356 சட்டத்தை பயன்படுத்தி ஜனவரி 1991-ல் திமுக ஆட்சியை குடியரசு தலைவரே நேரடியாக கலைத்தார்.

அதன்பிறகு பத்தாம் நாடாளு மன்றத் தேர்தல் மற்றும் தமிழ்நாட்டின் பத்தாவது சட்டமன்றத் தேர்தல் 1991 ஆம் ஆண்டு ஜூன் மாதம் நடை பெற்றவிருந்த நிலையில் மே 21-ம் தேதி 1991 -ம் ஆண்டு தமிழகத்தில் நாடாளு மன்ற/சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரம் செய்ய வந்த ராஜீவ் காந்தி ஸ்ரீபெரும்புதூரில் படுகொலை செய்யப்பட்டார்.

இதனை சாதகமாக பயன்படுத்திய காங்கிரஸ் மற்றும் அதிமுக கூட்டணி மக்களிடையே பெரும் அனுதாப அலை பெற முயற்சி செய்தது. மேலும் திமுக ஆட்சி கலைக்கப்பட காரணமாக இருந்த ராஜீவ் காந்தியின் மேல் உள்ள கடும் கோபத்தால் அவரை கொள்வதற்கு கருணாநிதி அவர்களும் விடுதலைப் புலிகளின் தற்கொலை படைக்கு உதவினார் என்று வி.கே. சசிகலா நடராஜன், ஜெயலலிதாவிற்கு பிரசார யுக்தியை கைகளில் கொடுத்தார்.

அதே சமயம் அதிமுகவில் இருந்த திருநாவுக்கரசர், கே. கே. எஸ். எஸ். ஆர். கருப்புசாமி பாண்டியன், உகம்சந்த் ஆகியோர் திமுகவிலிருந்து பிரிந்த டி. ராஜேந்திரன் தொடங்கிய தாயக மறுமலர்ச்சி கழகத்தில் இணைய வைத்து தனித்து தேர்தலில் போட்டியிட வைத்தார்.

மற்றொரு புறம் வன்னிய ஜாதியனரை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க 1987 -ம் ஆண்டு வன்னியர் போராட்டங்களை நடத்திய ராமதாஸ் தலைமையிலான பாட்டாளி மக்கள் கட்சி என்ற புதிய அரசியல் கட்சியாக மாறி தேர்தலில் தனித்து போட்டியிட்டது. இதன்விளைவாக எம். ஜி. ஆர்க்கு பிறகு 224 தொகுதிகளில் அதிமுக கூட்டணி அமோக வெற்றி பெற்று அதிகார பூர்வமான தலைவராக ஜெயலலிதா முதல் முறையாக முதலமைச்சராகப் பதவியேறியதில் வி.கே. நடராஜனின் பங்கு சொல்லில் அடங்காது.

முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர் அவர்களின் இறுதி ஊர்வலத்தில் புரட்சி தலைவி ஜெயலலிதாவை எந்த கூட்டம் கீழே தள்ளியதோ அந்த கூட்டத்திற்கு நடுவே ஜெயலலிதாவை முதல்வராகி அழகு பார்த்தது. அதுமட்டுமின்றி அந்த சம்பவத்திற்கு காரணமானவர்களை அதிமுகவிலிருந்து ஒவ்வொருவராக கட்டம் கட்டியது இல்லாமல் எந்த சட்ட மன்றத்தில் ஜெயலலிதா சேலை கிழிந்ததோ அதே சட்ட மன்றத்தில் ஜெயலலிதாவை அமர வைத்ததில் வி.கே. சசிகலா நடராஜனின் பங்கு ஏராளம்.

இந்திய அணியை தொடர்ந்து தென் ஆப்பிரிக்க அணியினரும் இனவெறிக்கு எதிராக முழங்காலிட்டு ஆதரவு தெரிவித்தனர்

அமெரிக்காவில் மின்னபோலிஸ் பகுதியில் ஜார்ஜ் பிளாய்ட் என்ற கறுப்பின இளைஞர் கடந்த ஆண்டு மே 25ம் தேதி காவல்துறை கைது செய்து, காருக்கு வெளியே தள்ளி கழுத்தில் முழங்காலை மடக்கி அமர்ந்து நெரித்ததில் நடுரோட்டிலேயே பரிதாபமாக ஜார்ஜ் பிளாய்ட் பலியானார். இந்த சம்பவம் அமெரிக்காவில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.

ஜார்ஜ் பிளாய்ட் மரணம் காரணமாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தேர்தலில் தோல்வி அடையவும் அளவிற்கு அமெரிக்காவில் பெரிய அளவில் போராட்டங்கள் வெடித்தது அமெரிக்காவில் நிலவும் நிறவெறி உலகம் முழுக்க பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தச் சம்பவம் உலக அளவில் பெரும் கவனத்தை ஈர்த்து எதிர்ப்பலைகளை உருவாக்கியது, கண்டனத்தை எழுப்பியது.

கறுப்பினத்தவர்கள் மட்டுமின்றி யாருமே இனரீதியாக ஒதுக்கப்படக் கூடாது என்பதற்கு ஆதரவாக விளையாட்டு பிரபலங்கள் பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணியினர் முழங்காலிட்டு கறுப்பினத்தவர்கள் மட்டுமின்றி யாருமே இனரீதியாக ஒதுக்கப்படக் கூடாது என்பதற்கு ஆதரவாகவும் , இனவெறிக்கு எதிராகவும் ஆதரவு தெரிவித்தனர்.

இந்நிலையில் இனவெறிப் பிரச்சினையாலே கிரிக்கெட் வாழ்க்கையை இழந்த தென் ஆப்பிரிக்காவும் இனவெறிக்கு எதிராகக் களமிறங்கியுள்ளது. இனிவரும் போட்டிகள் அனைத்திலும் தென் ஆப்பிரிக்க வீரர்கள் போட்டி தொடங்கும் முன் முழங்காலிட்டு இனவெறிக்கு எதிராக ஆதரவு தெரிவிப்பார்கள் எனத் தெரிவித்துள்ளது.

ஐபிஎல்: ஸ்ரேயாஸ் அய்யரிடம் போராடி தோற்ற டெல்லி கேப்பிடல்ஸ் அணி – இறுதி சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தது.

இந்திய அணியின் முன்னாள் தலைவர் மகேந்திரசிங் தோனி கிரிக்கெட் வரலாறு ஒருபுறம் சேவாக் மறுபுறம் கங்குலி இருவரின் விளையாட்டை நினையூட்டும் வகையில் அதிரடி ஆட்டத்திற்கு சொந்தக்காரர் இளம் வீரர் ரிஷப் பண்ட் இந்திய அணிக்கு வருகைக்கு பிறகு முடிவிற்கு வந்தது. அதனால் மகேந்திரசிங் தோனி ரசிகர்கள் ரிஷப் பந்த் ஆட்டத்தை வெறுத்து விமர்சனங்களை அடுக்கடுக்காக வைத்தனர். மகேந்திரசிங் தோனி இடத்திற்கு வந்த ரிஷப் பண்ட் சர்வதேச கிரிக்கெட்டுக்கு வந்த புதிதில் மகேந்திரசிங் தோனி ரசிகர்கள் கொடுத்த அழுத்தம் காரணமாக விக்கெட்டை பறிகொடுத்து வெளியேற பலரால் பொறுப்பில்லாமல் விக்கெட்டை பறி கொடுக்கிறார் என விமர்சிக்கப்பட்டார்.

மனம் போன போக்கில் விளையாடிய ரிஷப் பந்த்திற்கு இந்த விமர்சனங்கள் இன்னும் அதிக அழுத்தத்தை கொடுத்தது. இருந்தாலும் ரிஷப் பண்டுக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் தொடர்ந்து வாய்ப்புகள் கொடுத்தது. மேலும் ரிஷப் பண்டுக்கு இந்திய முன்னாள் வீரர்கள் பலர் அறிவுரை கூறினர். ஒரு கட்டத்தில் T20, ஒருநாள் அணிகளில் இனி ரிஷப் பண்டுக்கு இடமில்லை என்ற நிலைமை ஏற்பட்டது.

இந்நிலையில் இங்கிலாந்துக்கு எதிரான T20 தொடரில் டி வில்லியர்ஸ் போல ஒரு கையில் சிக்ஸர் மேலும் 360° பேட்டிங் என ரிஷப் பண்ட் தன்னுடைய முத்திரையை பதிய வைத்தார். இதுமட்டுமின்றி T20 போட்டிகளில் நன்றாக ஆடுபவர்கள் டெஸ்ட் கிரிக்கெட்டில் தாக்குப் பிடிக்க மாட்டார்கள் என்ற ஒரு பேச்சை தன்னுடைய அதிரடி பேட்டிங்கில் ரிஷப் பண்ட் உடைத்து எறிந்தார்.

இந்நிலையில், இங்கிலாந்து அணி இந்தியச் சுற்றுப்பயணம் செய்தபோது முதலாவது ஒருநாள் போட்டியில் ஸ்ரேயாஸ் அய்யர் ஃபீல்டிங் செய்தபோது அவரது இடது தோள்பட்டையில் காயம் ஏற்பட்டதால் தொடரில் இருந்து பாதியில் விலகினார். மேலும் 14-வது ஐபிஎல் போட்டிக்கான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு ரிஷப் பண்ட் தலைவரானார் . கடந்த ஏப்ரல் மாதம் இந்தியாவில் தொடங்கிய ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 8 ஆட்டங்களில் 6-ல் வெற்றி, 2-ல் தோல்வி என்ற நிலையில் 12 புள்ளிகளுடன் முதலிடம் பெற்றது.

இந்நிலையில் நிலையில் கொரோனா பாதிப்பால் போட்டிகள் திடீரென நிறுத்தப்பட்டது. மீதமுள்ள ஐ.பி.எல் போட்டிகளை ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய், அபுதாபி, சார்ஜா ஆகிய நகரங்களில் தொடர்ந்து நடத்த திட்டமிடப்பட்டது. இதற்கிடையே, ஐ.பி.எல். தள்ளிவைக்கப்பட்டதால் கிடைத்த 4 மாத கால அவகாசத்தில் ஸ்ரேயாஸ் அய்யரும் காயத்தில் இருந்து குணமடைந்து அணியுடன் இணைந்து தொடர்ந்து பயிற்சியில் ஈடுபட்டு வந்தார்.

இதனால் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டன் யார்? என்பதில் குழப்பம் நிலவி வந்த நிலையில் ஐ.பி.எல். 2-ம் கட்ட சீசனிலும் ரிஷப் பண்ட் தலைவராக தொடருவார் என்று டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி நிர்வாகம் அதிகாரபூர்வமாக அறிவித்து வெளியிட்டது. இதனால் ஸ்ரேயாஸ் அய்யர் அதிக மன உளைச்சல் அடைந்தாலும் அதை வெளிக் காட்டாமல் தொடர்ந்து விளையாடினர். டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் தொடர்ந்து வெற்றி பெற்று பதக்க பட்டியலில் 20 புள்ளிகளை பெற்று முதலிடம் பிடித்தது.

கடந்த 10 தேதி ப்ளே ஆஃப் சுற்றில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி முன்னதாக துபாய் சர்வதேச மைதானத்தில் நடந்த ப்ளே ஆஃப் சுற்றில் 3.2 ஓவரில் 36 ரன்கள் எடுத்த நிலையில் ஷிகர் தவான் விக்கெட்டை பறிகொடுத்து வெளியேறினார். அதனைத் தொடர்ந்து களமிறங்கிய ஸ்ரேயாஸ் அய்யர் டெஸ்ட் போட்டியில் விளையாடுவது போல விளையாடி 5.3 ஓவரில் 8 பந்துகள் சந்தித்து 1 ரன் எடுத்து நிலையில் பறிகொடுத்து வெளியேறினார். அடுத்து களமிறங்கிய ஷிம்ரான் ஹெட்மியர், ரிஷப் பண்டுடன் ஜோடி சேர்ந்து விளையாட 172 ரன்கள் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி எடுத்தும் கடைசி இரண்டு பந்துகளில் வெற்றி பெற முடியாமல் இறுதி போட்டிக்கு கலந்துகொள்ளும் வாய்ப்பை இழந்தது.

மறுபடியும் இரண்டாவது முறையாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடன் வெற்றி பெற்றால் இறுதி போட்டிக்கு கலந்துகொள்ள முடியும் என்ற நிலையில் ஸ்ரேயாஸ் அய்யர் ஒரு நாள் போட்டியில் விளையாடுவது போல விளையாடி 27 பந்துகள் சந்தித்து 30 ரன்கள் எடுத்தார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் கடைசி வரை வாய்ப்பே கிடைக்காமல் இருந்த ராபின் உத்தப்பா, ஸ்ரேயாஸ் அய்யர் இறங்கிய இடத்திலேயே இறங்கி 44 பந்துகள் சந்தித்து 63 ரன்கள் எடுக்கும் போது ஸ்ரேயாஸ் அய்யர் மட்டும் டெஸ்ட் போட்டி மற்றும் ஒரு நாள் போட்டி போல விளையாட காரணம் என்ன? சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 5 ரன்களுக்கு இருந்திருந்தால் டெல்லி கேப்பிடல்ஸ் அணி கண்டிப்பாக வெற்றி பெற்றிருக்கும் ஆனால் அது முடியாமல் போனதிற்கு காரணம் யார்? என டெல்லி கேப்பிடல்ஸ் அணி ரசிகர்கள் பல கேள்விகளை எழுப்புகின்றனர்.

டெல்லி கேப்பிடல்ஸ் அணி வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு சென்று கோப்பையை வென்றால் இனிவரும் காலங்களில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி தலைவர் பதவி கிடைக்காது. அதனால் சமயம் பார்த்து காய் நகர்த்திய ஸ்ரேயாஸ் அய்யர் காய் நகர்த்த டெல்லி கேப்பிடல்ஸ் அணி இறுதி சுற்றிற்கு செல்லாமல் திரும்பியது.

கொரோனாவின் கோர தாண்டவம்; கையேந்தும் மக்கள் ..! கண்டுகொள்ளாத மத்திய, மாநில அரசுகள்

“ஜனநாயக மக்கள் கொரிய குடியரசு ” என அழைக்கப்படும் வடகொரியா வடக்கில் சீனா, தெற்கே தென்கொரியா, வடகிழக்கே ரஷ்யாவால் சூழப்பட்டு, 2.5 கோடி மக்கள்தொகை கொண்டது. வெளியுறவுக் கொள்கை, பொருளாதாரம் என அனைத்திலும் முழுச் சுதந்திரத்தை நோக்கமாகக் கொண்ட குட்டி நாடு. தன்னை சுற்றிலும் பலம்வாய்ந்த ராணுவத்தைக் கொண்டுள்ள நாடுகளுக்கு மத்தியில், தனது நாட்டின் பாதுகாப்பிற்காக ஏவுகணைகள் தேவை என வடகொரியா எண்ணியது.

அதன்விளைவாக அணுசக்தியால் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பல்களுடன் அணுசக்தி தொழில்நுட்பத்தில் மேலும் பல ஆராய்ச்சிகளை மேற்கொண்டு சிறிய மற்றும் இலகு ரக அணு ஆயுதங்களை வட கொரியா அதிகம் உருவாக்கி தானும் ஒரு அணுசக்தி நாடு என உலக அரங்கில் பிரகடனபடுத்தி கொண்டது.

இதன்காரணமாக அமெரிக்கா மற்றும் வட கொரியா நாட்டு அதிபர்கள் மத்தியில் வெடித்த கருத்து வேறுபாடு, ஏவுகணை சோதனை, ஏவுகணை குறித்து டொனால்டு டிரம்ன் பேச்சு, வட கொரியாவின் ராணுவ அணிவகுப்பு ஆகியவை 3-ஆம் உலகப் போருக்கு வித்திட்டது போலவே இருந்தது.  கடந்த சில ஆண்டுகளுக்கு முன் அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் முதலில் பதவியேற்றபோது, கிம் ஜாங்கிற்கு எதிராக டொனால்டு டிரம்ப் பல கருத்துகளைக் கூறினார். அதற்கு கிம் ஜாங்கும் பதிலடி கொடுத்தார்.

மேலும், அமெரிக்க அதிபர் தேர்தலில் வென்ற ஜோ பைடன்  அமெரிக்க அதிபராகப் பதவியேற்கவுள்ளார். ஜோ பைடனின் வெற்றி குறித்து வட கொரியா அதிபர் கிம் ஜாங் கூறுகையில், “நமது புரட்சிக்கு மிகப்பெரிய தடையாகவும், நமது மிகப்பெரிய எதிரியாகவும் இருக்கும் அமெரிக்காவை வீழ்த்துவதில் நாம் கவனம் செலுத்தி, செயல்பட வேண்டும். அந்நாட்டில் யார் அதிபராக வருகிறார்கள் என்பது முக்கியமல்ல. அந்நாட்டின் அடிப்படை கொள்கை வட கொரியாவுக்கு எதிராகவே உள்ளது.”அது மாறாது” என்று வட கொரியாவின் அடுத்த ஐந்தாண்டு திட்டத்தை அறிவிக்கும் மாநாட்டில் கிம் ஜாங் இதை தெரிவித்த சமயம்.

இந்தியாவில் 2019 -ஆம்  ஆண்டு டிசம்பர் மாதம் குடியுரிமைச் சட்டத் திருத்த மசோதாவிற்கு எதிராக அசாமில் தொடங்கி டெல்லி, மேகாலயா, கர்நாடகா, மேற்கு வங்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வந்தன. இதனிடையே, மேற்கு வங்க மாநிலத்துக்கு பிரதமர் வருகை தந்ததற்கு, குடியுரிமை திருத்த சட்டத்தைத் திரும்பப் பெற வலியுறுத்தி கொல்கத்தாவில் இந்திய மாணவர் சங்கத்தினர் கோ பேக் மோடி என எழுதப்பட்ட பதாகைகளை பிடித்தபடி, குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக அவர்கள் முழக்கங்களை எழுப்பினர்.

பின்னர், வடகிழக்கு இந்தியா முழுவதிலும், மெதுவாக அனைத்து முக்கிய நகரங்களிலும் எதிர்ப்புக்கள் வெடித்தன. டிசம்பர் 15 அன்று, போராட்டம் நடைபெற்ற ஜாமியா மில்லியா இஸ்லாமியா வளாகத்திற்குள் காவல்துறை பலவந்தமாக நுழைந்து மாணவர்கள் மீது தடியடி மற்றும் கண்ணீர்ப்புகை குண்டுகளை பயன்படுத்தினர். இந்த சம்பவத்தில் இருநூறுக்கும் மேற்பட்ட மாணவர்கள் காயமடைந்தனர் மேலும் சுமார் நூறுக்கும் மேற்பட்ட  மாணவர்கள் ஒரே இரவில் காவல் நிலையத்தில் வைக்கப்பட்டனர். இதன்விளைவாக நாடு முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் மற்றும் போராட்டங்கள் விளைவாக நடைபெற்று வந்த சமயம்

சீனாவில் 2019 டிசம்பர் இறுதியில் முதன்முறையாக 1.1 கோடி பேர் வசித்து வரும் வுகானில் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றி அறியப்பட்ட  நிலையில், 2020 ஜனவரி 22 ஆம் தேதி அந்நாட்டுத் தலைநகர் பெய்ஜிங்கில் முதல் உயிர் பலி பதிவாகியுள்ளது. இந்நிலையில், சீனாவில் இருந்து உலகம் முழுவதும் பரவும் கொடிய வைரஸ் வுவானில் திறந்தவெளி சந்தையில் விற்கப்படும் பாம்புகளிலிருந்து மனிதர்களுக்கு பரவி இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.

அதன் பின்னர் மெல்ல மெல்ல ஜனவரி 23 ஆம் தேதி ஜப்பான், தென்கொரியா, அமெரிக்கா மற்றும் தைவான் நாடுகளில் தலா ஒருவரும், தாய்லாந்து நாட்டில் 3 பேரும்,  என தனது ஆதிக்கத்தை விரிவுபடுத்தி ஜனவரி 25 ஆம் தேதி சீனாவில் இருந்து இந்தியாவில் கேரளா திரும்பியிருந்த 80 பேரை சுகாதாரத்துறையின் தீவிர கண்காணிப்பு படுத்தப்பட்டது.

வுகானில் இருந்து இந்தியா திரும்பிய 11 பேரில் 4 பேருக்கு பாதிப்பில்லை என மத்திய சுகாதாரத்துறை உறுதி செய்து கேரளாவில் 7 பேரை மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில், சீனாவில் மருத்துவம் படிக்கும் ராஜஸ்தானைச் சேர்ந்த ஒருவர் கொரோனா வைரஸ் அறிகுறியுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இப்படி உலக முழுவதும் ஊடுறுவிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் ஆயிரக்கணக்கானோரை பலி வாங்கியுள்ள கொரோனாவுக்கு  இந்தியாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 75 ஆக அதிகரித்த நிலையில்  2020 மார்ச் 20 ஆம் தேதி கர்நாடகா மாநிலம் கல்பர்கியைச் சேர்ந்த 76 வயது முதியவர் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியானார். அன்று தொடங்கிய ஊரடங்கு படிப்படியாக பல கட்டங்களாக அதிகரிக்கபட்டது.

ஏழை, பணக்கார நாடு என்று பாராமல்,  வளரும், வளர்ந்த நாடு என்று பாராமல்.., உலக நாடுகளின் பொருளாதாரம் ஒட்டு மொத்தமாக மிகப்பெரிய சரிவை சந்தித்தது. மேலும் இந்தியாவை ஆண்ட குறிப்பாக ஒட்டு மொத்த காங்கிரஸ் அரசும் ஏழை, எளிய மக்களின் வளர்ச்சியில் எந்த ஒரு பங்கெடுப்பும் இல்லை என்றும் அதை மாற்ற வந்த அவதார புருஷன் என்று மக்கள் மத்தியில் போலி பிரசாரத்தை முன்னிறுத்திய பாஜக அரசு.

இதுமட்டுமின்றி ஆங்கிலோயரின் பிரித்தாளும் தன்மையை தாரக மந்திரமாக கொண்டு நாடு முழுவதும் இருபதுக்கும் மேற்பட்ட கட்சிகளுடன் மேகா கூட்டணி அமைத்தது மட்டுமின்றி உலக முழுவதும் பதுக்கப்பட்டுள்ள கருப்பு பணத்தை மீட்டெடுத்து ஒவ்வொரு குடிமகன் வங்கி கணக்கிலும் 15 லட்சம்  டெப்பாசிட் செய்யப்படும் என்ற கவர்ச்சியான திட்டத்தை ஆழமாக மக்களின் மனதில் பதிய வைத்து ஆட்சியை கைப்பற்றிய பாஜக அரசு. அவருக்கு மறைமுக ஆதரவாக மோடியா? லேடியா..? என்ற பிரசாரத்தை கைகளில் எடுத்த ஜெயலலிதா தமிழகத்தில் ஓட்டுக்களை சிதைத்ததும் நாடறிந்தது.

அதன்பின்னர் கருப்பு பணத்தை மீட்டு எடுப்பேன் என்ற பாஜக அரசு திடீரென பண மதிப்பிழப்பு செய்து ஒட்டுமொத்த மக்களையும் ATM வாசலில் கால் கடுக்க நிற்க வைத்து கடைசியாக இறந்தவர்கள் தான் ஏராளம். அந்த  அதிர்ச்சி மறையும் முன்னே  பணக்காரர்கள் பணக்காரர்களாகவே ஏழை ஏழையாகவே இருக்கவும் முறைபடுத்தப்படாத GST யை கொண்டுவந்து சிறு மற்றும் நடுத்தர தொழிலாளிகள் ஒட்டுமொத்தமாக நடு தெருவில் நின்றது தான் மிச்சம்.

தமிழக விவசாயிகள் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது, வங்கிகடன் ரத்து, நதிகள் இணைப்பு, வறட்சிக்கான கூடுதல் நிவாரணம் எனப் பல கோரிக்கைகள் முன் வைத்து 2017 மார்ச் 13 முதல் தொடங்கிய போராட்டம் கேட்பாரற்றுக் கிடந்தது. ஆகமொத்தத்தில் பாஜக ஆட்சியில் நாடு முழுவதும் மக்கள் பட்ட  சொல்லில் அடங்காத துன்பங்கள் ஏராளம்.

இது ஒருபுறமிருக்க தமிழக சட்டமன்ற தேர்தலில் செய்வதைத்தான் சொல்வேன் சொல்லாத பலவற்றையும் செய்வேன் என்று ஜெயலலிதாவின் மாய பாஷையில் மயங்கியும் பிரித்தாளும் தந்திரத்தில் மாயக் கண்ணனையும் மிஞ்சும் அளவிற்கு ராஜதந்திரத்தை பயன்படுத்தி வெற்றியும் பெற்று திடீரென  ஜெயலலிதா காலனால் கவரப்பட்டார்.

அதனைத்தொடர்ந்து தமிழகத்தில் ஆட்சியாளர்கள் செய்த கூத்துகள் ஏராளம். மக்களின் வரிப்பணத்தை எப்படியெல்லாம் வீணாக்க கூடாதோ அப்படி எல்லாம் வீணாகியது. மத்தில் இப்படியொரு நல்லாட்சியை செய்துகொண்டுள்ள மத்திய அரசின் ஆட்சியை மக்கள் தொடர மனமில்லாமல் இருக்க நாட்டிலுள்ள மாநில எதிர் கட்சிகள் மத்தியில் ஆளும் பாஜக அரசிற்கு ஒரு சரியான எதிர் கட்சி தலைவரை முன்னிறுத்த தவறியது. அதன் விளைவாக மீண்டும் பாஜக ஆட்சி அதன்விளைவாக ஒவ்வொரு இந்தியனும் பட்டுக்கொண்டிருக்கும் சொல்லில் அடங்காத துன்பங்கள்.

இந்நிலையில் 2020 ஜனவரி நடுவில் இந்தியாவில் மெல்ல மெல்ல பரவத் தொடங்கி கொரோனா வைரஸ்  24 மார்ச் 2020 நள்ளிரவு முதல் 21 நாட்களுக்கு நாடு முழுவதும் ஊரடங்கு என்ற செய்தி அடித்தட்டு மக்களை வாட்டி எடுத்தது. அதன்பின்னர் ஊரடங்கு நீடிப்பு  செய்வறியாது  திகைத்த மக்கள். பலர் தனியார் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் கௌரவத்திற்கு பணி பத்தாயிரத்திற்கும் குறைவான மாத சம்பளம் தடைபட்டது.

தனியார் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் கௌரவத்திற்கு பணியில் இருந்த பலரும் அங்க கொஞ்சம், இங்க கொஞ்சமுனு கடன் வாங்க, ஒரு சிலர் அவசர தேவைக்குனு சேர்த்து வைத்திருந்த பணத்தை கரைக்க கடைசியில் மூன்றாவது முறையாக ஊரடங்கு ஒரு சில தளர்வுகளுடன் நீடிப்பு  என்ற வார்த்தையை கேட்ட உடனே கௌரவத்திற்கு பணியில் இருந்த பலரும் அத்தியாவசிய பொருட்களை கடனுக்கு வாங்கி கொண்டு ஊர் ஊராக தெரு தெருவாக சுற்றி அரை ஜான் வயிற்றுக்கு உணவு தேட ஆரம்பித்தார்கள்.

என்னதான் நடக்கும் நடக்கட்டுமே
இருட்டினில் நீதி மறையட்டுமே

தன்னாலே வெளிவரும் தயங்காதே
……………………………………………………….

நல்லதை நினைத்தே போராடு

-என்ற பாடல் வரிகளின் படி இன்று மக்களின் வாழ்க்கை நாட்கள் வாரங்களானது,   வாரங்கள் மாதங்களானது, மாதங்கள் இன்று ஓர் ஆண்டை கடந்து இரண்டாவது ஆண்டின் நிறைவை நோக்கி நகர்ந்து கொண்டுள்ளது. கொரோனாவால் வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் பல குடும்பங்களின் இன்றைய நிலை கேள்வி குறியே..? இவர்களின் வாழ்வாதாரத்தை செம்மை படுத்த வேண்டிய மத்திய, மாநில அரசுகள் தவறியதால் இந்தியாவில் பெரும் பொருளாதார மாற்றத்தை கொண்டு வந்தது மட்டுமின்றி 100 ஆண்டுகள் மக்கள் பின்னோக்கி சென்று விட்டனர் என்பதே அடித்தட்டு மக்களின் புலம்பல்.

டேய் மாப்பிள எங்க காணோம் .. நான் செத்துட்ட மாப்பிள…. அப்பிடிய.. அவன் எங்க இருக்கானு பாரு

உலகெங்கும் நவீன தொழில் புரட்சியின் விளைவாக புதிய, புதிய கண்டுபிடிப்புகளை கண்டுபிடித்து அதீத வளர்ச்சியை எவ்வளவு சந்தித்திது இருக்கிறதோ அதே அளவிற்கு சமூதாய சீர்கேடுகளையும் மக்கள் சந்தித்து கொண்டுதான் இருக்கிறோம். சினிமாவை பார்த்துதான் மக்களின் மனநிலை சிதைக்கப்பட்டது என ஒரு சிலரின் கருத்துக்களாக இருந்து வரும் நிலைமாறி தொலைக்காட்சி சீரியல்களை பார்த்து மனிதாபிமானதை தொலைப்பது மட்டுமின்றி இன்று பலர் மனோதத்துவ மருத்துவர்களாகவே மாறிவிட்டனர்.

கொடிது கொடிது …அதனினும் கொடிது என்ற ஔவையார் வார்த்தையை சொல்லளவில் தான் நாம் கேள்வி பட்டிருக்கிறோம். ஆனால் அந்த வார்த்தைகளை செயலளவில் பார்த்ததில்லை. நாம் இளைய தலைமுறையினர் அதை அனுபவித்து சீர்கெட்டு கொண்டு இருக்கின்றனர். மேலும் அதை சீர் செய்ய வேண்டிய நாம் கைகட்டி வேடிக்கை பார்ப்பது மட்டுமின்றி பழைய சித்தாந்தங்களை பேசிக் கொண்டிருக்கின்றோம்.

சினிமா, சீரியல் இதைவிட மிக அதிகமாக ஊடுருவியுள்ள சமூக வலைத்தளங்களில் நம்மை சீரழித்து கொண்டிருந்தாலும், இளைய தலைமுறையினர் அந்த சமூக வலைத்தளங்களில் சிக்கி ஒருபடி மேலேபோய் டேய் மாப்பிள எங்க காணோம் .. நான் செத்துட்ட மாப்பிள அப்பிடிய.. அவன் எங்க இருக்கானு பாரு நான் அவனை சுட்டுடுரேன் அத பாரு மேல மறைஞ்சிக்கிட்டு இருக்கிறான்… என்ன ஆச்சி மாப்பிள … என்னையும் சேர்த்து போட்டுடன் மாப்பிள…. என பித்து பிடித்தவர்களாக 5 வயதுலேயே உளறும் நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறார்கள்.

நாம் கடந்த காலங்களில் உறவுகளை சம்பாதிக்கவும், வெறுப்பை அறுவடை செய்யவும் நம் முன்னோர்கள் புறாவை தூது அனுப்பினர் அது பின்னாளில் உருமாறி மாட்டுவண்டியாக மாறியது. அதன்பின்னர் தபால்கள் மூலமாக உறவுகளை சம்பாதிக்க, தந்திகள் மூலம் துக்கத்தை பறிமாறினோம். ஆனால் எப்போது செல்போன் ஒவ்வொரு குடிமகன் கைகளில் வந்ததோ அப்போதே நாம் BP மாத்திரைகள் அதிகமாக எடுத்துக்கொள்ள ஆரம்பித்து விட்டோம்.

இந்த செல்போன் பயன்பாட்டால் முன்பின் தெரியாதவர்களின் மூலமாக நாம் BP ஏறி இன்று உயிரை மாய்த்து கொண்டுள்ளோம். செல்போன்களில் விழித்து செல்போனுடனே நாள் முழுவதும் சுற்றித்திரிந்து, உறங்கும் போதும் செல்போனுடனே உறங்குகின்ற கலாசாரம் நம்மில் பரவிக் கிடப்பது மிகுந்த வேதனை தருகிறது. இன்றைய காலகட்டத்தில் செல்போன்கள் பயன்படுத்தாத நபர்களே இல்லை என்ற அளவுக்கு உலகம் பரந்து விரிந்து இருக்கிறது.

மேலும் இன்று உலகையே கொரோனா ஆட்டிப்படைக்கும் காலகட்டத்தில் ஆன்லைன் வகுப்புகள் என்ற பெயரில் பள்ளி கல்லூரி மாணவ, மாணவிகளின் கைகளில் செல்போன்கள் சிக்கி சின்னா பின்னமாகி கொண்டுள்ளது. இதன் விளைவாக நமது சமுதாயம் சீர்கெட்டு போய் நாடெங்கும் திரும்பும் திசையெல்லாம் கொலை, கொள்ளை, பாலியல் கொடுமைகள் போன்ற கொடூர சம்பவங்கள் நாளொரு மேனி, பொழுதொரு வண்ணம் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. எங்கு பார்த்தாலும், கொலையானது கொசு அடிப்பதை போல, சாதாரண நிகழ்வாக மாறி போயிருக்கிறது.

சிறிது நாட்கள் வாழ்ந்தாலும், ராஜ வாழ்க்கை வாழ ஆசைப்படும் அவர்களின் மனதில் விஷ வித்தை உருவாக பல இடங்களில் பல விதமாக ஏமாற்றி கடன் வாங்கி கோடிக்கணக்கில் ஏமாற்றும் கும்பல், எந்த தொழிலையும் செய்யாமல், தங்களை தொழிலதிபர்களாக காட்டிக் கொள்ளும் கும்பல், மக்களுக்கு சேவை செய்வதாக கூறி உலகை ஏய்க்கும் மற்றொரு கும்பல் என திரும்பும் திசையெல்லாம் பல விதமான முகமூடிகளை அணிந்து கூட்டம் துாவி விட்டதன் விளைவுகளை சமுதாயம் இன்று அறுவடை செய்துக் கொண்டுள்ளது.

கொலை, கொள்ளை, கற்பழிப்பு போன்றவை சில தனி மனிதர்களின் இழிகுணங்களாக இருந்த நிலை மாறி அதுவே சமூகத்தின் மனோபாவமாக மாறி இன்று நாட்டையே செல்லரித்து கொண்டுள்ளது. கடந்த கால நிகழ்வுகளை பார்த்து கொண்டே வாழும் மக்கள் யார் ஆண்டாலும், நம் நிலை மாறாது என்று விரக்தி நிலையில் இன்று வாழ்கின்றான். நம் சமுதாயம் எங்கே சென்று கொண்டிருக்கிறது என்பதை ஒவ்வொரு குடிமகனும் தன்னை தானே சுய பரிசோதனை செய்துகொள்ள வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம்.

கடின உழைப்புக்கும், திறமைக்கும் மறுபெயராக இருந்த லால்பகதூர் சாஸ்திரியின் 117-வது பிறந்தநாள்

லால்பகதூர் சாஸ்திரி உத்தரபிரதேசத்தில் வாரணாசி அருகேயுள்ள முகல்சராய் என்ற சிறிய ரயில்வே நகரத்தில் 1904, அக்டோபர் 2ம் தேதி பிறந்தார். பள்ளி ஆசிரியராக பணியாற்றிய லால்பகதூர் சாஸ்திரியின் தந்தை சரதா பிரசாத், லால்பகதூர் சாஸ்திரிக்கு ஒன்றரை வயது இருக்கும்போது காலமானார். இருபது வயதில் கணவனை இழந்து 3 குழந்தைகளுடன் நிற்கதியாக நின்ற லால்பகதூர் சாஸ்திரியின் தாய் ராம்துல்லாரி தேவி அவரது தந்தை வீட்டிற்குச் சென்றார்.

வறுமையின் காரணமாக லால்பகதூரின் பள்ளிக்கல்வி அவ்வளவு சிறப்பாக அமையவில்லை ஆனாலும் அவருடைய குழந்தை பருவம் மகிழ்ச்சியாகவே அமைந்தது. 10 வயது வரை தன் பாட்டனார் கசாரி லால் வீட்டிலேயே லால் பகதூர் வளர்ந்தார். மேல்நிலை பள்ளிப்படிப்புக்காக வாரணாசியில் உள்ள தாய்வழி மாமா வீட்டிற்கு அனுப்பி படிக்க வைக்கப்பட்டார். கோடை வெயிலில் பள்ளிக்கு செல்வதற்காக காலணி கூட இல்லாமல் பல மைல் தூரம் நடந்து சென்று படித்தார்.

லால்பகதூர் சாஸ்திரி வளர வளர நாட்டின் சுதந்திர போராட்டத்தில் அவர் நாட்டம் கொண்டார். அப்போது லால்பகதூர் சாஸ்திரியின் தனது 11 வயதில் சுதந்திர போராட்டத்திற்கான செயல் தேசிய அளவில் செயல்பட அவர் மனதிற்கு உந்து சக்தியை அளித்தது. லால்பகதூர் சாஸ்திரி 16 வயதில் ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கேற்ற காந்தியடிகள் அனைத்து குடிமக்களையும் அழைத்த போது காந்தியடிகளின் அழைப்பிற்கு இணங்க அவர் தனது படிப்பை நிறுத்திக் கொள்ள முடிவு செய்தார். அப்பொழுது அவர் தாயார் மற்றும் அவரது குடும்பத்தார் அதை ஏற்கவில்லை. இருப்பினும், லால்பகதூர் தனது முடிவில் உறுதியாக இருந்தார்.

ஆங்கிலேயர் ஆட்சிக்கு எதிராக அமைக்கப்பட்ட பல்வேறு நிறுவனங்களில் ஒன்றான வாரணாசியில் உள்ள காசி வித்யாபத்திரில் அவர் இணைந்தார். அப்போது நாட்டின் சிறந்த அறிவாளிகள் மற்றும் தேசியவாதிகளின் தாக்கத்தில் அவர் பயின்றார். சாஸ்திரி என்ற இளநிலை பட்டத்தை வித்யா பீடம் அவருக்கு அளித்தது. ஆனால் மக்கள் மனதில் அதுவே அவருடைய பெயராகப் பதிவாகியது. மிர்சாபூர் நகரத்தைச் சேர்ந்த லலிதா தேவி என்ற 1927-ல் அவர் திருமணம் செய்து கொண்டார்.

1930 ஆம் ஆண்டு மகாத்மா காந்தி தண்டியில் உள்ள கடற்கரை வரை யாத்திரை செய்து ஏகாதிபத்திய உப்பு சட்டத்தை தகர்த்தார். லால்பகதூர் சாஸ்திரி விடுதலை போராட்டத்திற்காக தன்னை முழுவதுமாக அர்பணித்துக் கொண்டார். அவர் ஆங்கிலேயர்களுக்கு எதிராக பல கருத்தொளி நிகழ்ச்சிகளை நடத்தி மொத்தமாக 7 ஆண்டு காலம் சிறையில் இருந்தார். இந்த போராட்ட சமயத்தில்தான் அவர் இன்னும் வலுவாகவும், பக்குவமாகவும் தன்னை மாற்றிக் கொண்டார்.

சுதந்திரத்திற்கு பிறகு காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தபோது லால்பகதூர் சாஸ்திரியின் சாதுவான தற்பெருமையற்ற குணத்தின் அருமையை தேசிய போராட்டத்தின் தலைவர் உணர்ந்திருந்தார். 1946-ல் காங்கிரஸ் ஆட்சி அமைத்தபோது நாட்டின் ஆட்சிமுறையில் ஆக்கப்பூர்வமான பங்கு வகிக்க லால் பஹதூர் சாஸ்திரி உத்தரபிரதேச மாநிலத்தின் நாடாளுமன்ற செயலாளராக நியமிக்கப்பட்ட அவர் மத்திய உள்துறை அமைச்சர் பதவிக்கு உயர்ந்தார்.

1951-ல் டெல்லிக்கு சென்ற அவர் மத்திய அமைச்சரவையில் பல்வேறு பதவிகளை வகித்தார். ரயில்வே அமைச்சராக, உள்துறை அமைச்சராக, நேருவின் உடல்நிலை சரியில்லாத சமயத்தில் இலாகா ஒதுக்கப்படாத அமைச்சராகவும் பணிபுரிந்தார். ஒரு ரயில் விபத்தில் பலர் உயிரிழந்ததற்காக தான் பொறுப்பேற்று அதற்கு பொறுப்பனவராக கருதி ரயில்வே அமைச்சர் பதவியிலிருந்து அவர் ராஜினாமா செய்தார். பொதுத்தேர்தல்கள் 1952, 1957 மற்றும் 1962-ல் காங்கிரஸ் அபார வெற்றிபெற்றதற்கு இவருடைய திறமையும், நிர்வாக செயல்பாடும் பெரிதும் உதவியது.

ஜவகர்லால் நேரு 1964 மே 27 ல் மறைந்ததை தொடர்ந்து அரசில் வெற்றிடதை நிறப்புவதற்காக லால்பகதூர் சாஸ்திரி காங்கிரஸ் தலைவர் காமராஜர் ஆதரவுடன் இந்தியாவின் இரண்டாவது பிரதமர் ஆனார். லால்பகதூர் சாஸ்திரி முப்பது ஆண்டுகள் தன்னை பொது சேவையில் அற்பணித்துக் கொண்டார். எளிமை, பொறுமை, சிறந்த உள் வலிமை, திடமான ஆற்றல் ஆகிய குணங்களை கொண்ட அவர் மக்களின் மொழியை அறிந்து நடந்தார். தொலைநோக்குப் பார்வை கொண்டிருந்த அவர், நாட்டை வளர்ச்சி பாதையில் கொண்டு சென்றார். இன்று லால்பகதூர் சாஸ்திரியின் 117-வது பிறந்தநாள் கொண்டாட படுகிறது.

‘வலிமை’ பட முதல் பார்வை வீடியோ வெளியீடு

பாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூர் தயாரிப்பில் இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்த, ‘நேர்கொண்ட பார்வை’ படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்ததால், இந்த படத்தை தொடர்ந்து போனி கபூர் தயாரிப்பில் மற்றும் எச்.வினோத் அஜித்துடன் இணைந்துள்ள இரண்டாவது படமான ‘வலிமை’ குறித்து, ரசிகர்கள் மத்தியில் ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள் நிலவி வருகிறது.

இந்த படத்தின் அஜித்துக்கு ஜோடியாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘காலா’ படத்தில், ரஜினிகாந்தின் முன்னாள் காதலியாக நடித்த பாலிவுட் நடிகை ஹூமா குரேஷி நடித்துள்ளார்.மேலும் இந்த படத்தில் யோகிபாபு நகைச்சுவை கதாபாத்திரத்திலும், தெலுங்கு நடிகர் கார்த்திகேயா வில்லனாகவும் நடித்துள்ளனர். இசையமைத்துள்ள இப்படத்திற்கு நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார்.

‘வலிமை’ படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பான கடைசி சண்டை காட்சி ஒன்றை மட்டும் படக்குழு, வெளிநாட்டில் படமாக்க முடிவு செய்த நிலையில், கொரோனா பிரச்சனை காரணமாக, அந்த குறிப்பிட்ட சண்டை கட்சியை எடுப்பது தாமதமாகிக்கொண்டே சென்றது. இந்த படத்தின் முதல் பார்வை போஸ்டர் மற்றும் வேற மாறி பாடல் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் ‘வலிமை’ படம் வருகிற 2022ம் ஆண்டு ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகையன்று தியேட்டர்களில் வெளியாகும் என தயாரிப்பாளர் போனிகபூர் டுவிட்டரில் பதிவிட்டு உள்ளார்.

இந்நிலையில், ‘வலிமை’ படத்தில் மொத்தம் 1.27 நிமிடங்கள் ஓட கூடிய இந்த வீடியோவின், முதல் காட்சியில் பைக் ஒன்று விண்ணில் பறப்பது போலவும், அதனை தொடர்ந்து நெருப்பு பற்றி எரிய அஜித் தோன்றுவது போன்ற காட்சிகளும் இடம் பெற்று முதல் பார்வை வீடியோ இன்று வெளியிடப்பட்டு உள்ளது. இதனால் அஜித் ரசிகர்கள் மிகவும் உற்சாகமடைந்து உள்ளனர்.