அதிமுக ஆட்சியில் பாடப்பட்ட “ஐ அம் சாரி ஐயப்பா..” பாடல் திமுக ஆட்சியில் பூதாகரமானது எப்படி..!?

அதிமுக ஆட்சியில் ஏறத்தாழ ஆறு ஆண்டுகளுக்கு முன்பு “ஐ அம் சாரி ஐயப்பா..” என்ற பாடல் இசைவாணியால் பல்வேறு மேடைகளில் பாடிய பாடல் கடந்த ஒரு வார காலமாக சமூக வலைத்தளங்களில் பரவி நாட்டிலேயே அமைதி பூங்காவாக திகழும் தமிழகத்தை கலவர பூமியாக மாற்ற முயற்சி செய்கின்றனர்களா என்ற கேள்வி எழுகின்றது.

நாட்டில் மாட்டுக்கறி விஷயம் பெரிதான போது நீலம் பண்பாட்டு மைய ஒருங்கிணைப்பில் கேஸ்ட்லெஸ்ட் கலெக்ஷன் என்கிற இசை குழுவில் ஏ அந்த கறி.. இந்த கறி.. எந்த கறிய துன்னா உனக்கென்னா… நீ யாரா வேணா இருடா எனக்கென்னா.? “பெரிய கறி” என்ற பாடலை பாடியதன் மூலம் வடசென்னையை பூர்வீகமாகக் கொண்ட கானா பாடகி இசைவாணி பெரிய அளவில் பிரபலமானார்.

ஜாதி ஏற்றத்தாழ்வுகள், இட ஒதுக்கீடுக்கு எதிரான மனநிலை, உணவு பழக்கத்தில் நிலவும் பாகுபாடு, பெண்கள் மீது செலுத்தப்படும் தீண்டாமை உள்ளிட்ட சமூகத்தில் படிநிலையில் நிலவும் பல்வேறு ஏற்ற தாழ்வுகளை கலைந்து சமூக உரிமைகளை கூறும் பொருட்டு நீலம் பண்பாட்டு மையம் கேஸ்ட்லெஸ்ட் கலெக்ஷன் என்கிற இசை குழு உருவாகி ஒரு பாடல் வரியோடு the casteless collective பல பாடல்களை இயற்றியது.

“2018-ஆம் ஆண்டு தமிழகத்தில் அதிமுக ஆட்சி நடைபெற்று கொண்டு இருந்த சமயம், கேரளாவில் உள்ள சபரிமலைக்குப் பெண்கள் செல்வது தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் பாலினப் பாகுபாட்டை முன்வைத்து பெண்களுக்கு உரிமை மறுக்கப்படக்கூடாது என்று தீர்ப்பளித்தது. அப்போது, ஐ அம் சாரி ஐயப்பா என்று ஒரு பாடலை பாடியிருக்கிறார். அந்த வீடியோக்கள் இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில், ஐ அம் சாரி ஐயப்பா.. நான் உள்ளே வந்தால் என்னப்பா…? நான் தாடிக்காரன் பேபி.. இப்ப காலம் மாறிப்போச்சு.. இனி தள்ளி வைத்தால் தீட்டா.. நான் முன்னேறுவேன் மாஷா.. என்ற வரிகள் அதில் இருக்கிறது.

பொதுவாக ஐயப்பன் கோவிலில் பத்து வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகள் மற்றும் 60 வயதை கடந்த பெண்கள் மட்டும் தான் செல்ல வேண்டும் என்ற நிலை உள்ள நிலையில் இவர் ஐயப்ப பக்தர்கள் உணர்வை சீண்டும் வகையில் பாடல் பாடி இருக்கிறார் என்று இவர் மீது பலர் புகார் கொடுத்து இருக்கிறார்கள்.

அதை ஆதாரமாகக் கொண்டு மிகப்பெரிய விவாதமும் நடைபெற்றது. அதை தொடர்ந்து நாட்டில் உள்ள முற்போக்கு இயக்கங்களும் பெண்களின் உரிமைக்கு ஆதரவாக நின்றன. இதே காலகட்டத்தில் தான் நீலம் பண்பாட்டு மைய ஒருங்கிணைப்பில் இந்த கேஸ்ட்லெஸ்ட் கலெக்ஷன் என்கிற இசை குழு உருவானது.

சமூகப் படிநிலையில் நிலவும் பல்வேறு ஏற்ற தாழ்வுகளை கலைந்து சமூக உரிமைகளை கூறும் ஒரு பாடல் வரியோடு the casteless collective பல பாடல்களை இயற்றியது. ஜாதி ஏற்றத்தாழ்வுகள், இட ஒதுக்கீடுக்கு எதிரான மனநிலை, உணவு பழக்கத்தில் நிலவும் பாகுபாடு, பெண்கள் மீது செலுத்தப்படும் தீண்டாமை உள்ளிட்டவைகள் இதில் அடங்கும்.

இந்நிலையில், கேஸ்ட்லெஸ்ட் கலெக்ஷன் என்கிற இசை குழு,  ஐ அம் சாரி ஐயப்பா என்கிற பாடல் ஆண்டாண்டு காலமாய் இங்கு பேசப்பட்டு வரும் கோயில் நுழைவு உரிமையை கூறுகிற வரிகளோடு துவங்கி பின் பெண்களின் சுதந்திரத்தை பறிக்கும் பொதுவான உரிமைகளை கூறும் பாடலாக பாடல் பாடப்பட்டுள்ளது.

ஏறத்தாழ ஆறு ஆண்டுகளுக்கு முன்பு இசைவாணியால் பல்வேறு மேடைகளில் பாடிய பாடல் கடந்த ஒரு வார காலமாக சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகிறது. அதாவது, அதிமுக ஆட்சியில் பாடப்பட்ட பாடல் இன்று திமுக ஆட்சியில் பூதாகரமாக பரப்பப்பட்டு நாட்டிலேயே அமைதி பூங்காவாக திகழும் தமிழகத்தை கலவர பூமியாக மற்ற முயற்சி செய்கின்றனர்களா என்ற கேள்வி எழுகின்றது.

நீ யாராக இருந்தாலும் என்ன..!? என் கேள்விக்கு பதில் என்ன..!?

நீ யாராக இருந்தாலும் என்ன..!? என் கேள்விக்கு பதில் என்ன..!?

சாதிக்க எதுமே தடையில்லை விடாமுயற்சியும், தன்னம்பிக்கை மட்டும் போதும் எண்ணத்தை உணர்த்திய 11 வயது மாணவி ரியா புல்லோஸ்..!

சாதிக்க எதுமே தடையில்லை விடாமுயற்சியும், தன்னம்பிக்கை மட்டும் போதும் எண்ணத்தை உணர்த்திய 11 வயது மாணவி ரியா புல்லோஸ் சாதனையை இன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. நாம் எந்த பணி செய்தாலும் அதில் விடாமுயற்சியும் அதனுடன் சேர்ந்து தன்னம்பிக்கையும் இருந்தால் வெற்றி தானே சேரும். இன்றைய மனிதர்களில் சிலர் தன் முயற்சியால் வெற்றி பெற்றவர்கள் உள்ளனர். மிக ஏழ்மையில் வாழ்ந்த ஒருவர் பெரிய தொழிலதிபர்கள் ஆன அனைவரும் பலர் தன் விடாமுயற்சியாலும் தன்னம்பிக்கையாலும்தான் வெற்றி புரிந்து சாதனை படைத்துள்ளார்கள்.

சாதிக்க எதுமே தடையில்லை என்பதை ஒரு 11 வயது மாணவி நமக்கு இன்று உணர்த்தியுள்ளார். இந்த 11 வயது மாணவி கால்கள் முழுக்க பேண்டேஜ்கள், ஷூ வாங்கும் அளவிற்கு வசதியில்லை. அந்த மாணவி ரியா புல்லோஸின் பெற்றோர் உறுதுணையாக இருக்க உள்ளூர் பள்ளிகளுக்கிடையேயான ஓட்டப் பந்தயத்தில் 400 மீட்டர், 800 மீட்டர் மற்றும் 1,500 மீட்டர் என அனைத்துப் போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்றார்.

பிலிப்பைன்ஸைச் சேர்ந்த 11 வயது தடகள வீராங்கனையான ரியா புல்லோஸ், உள்ளூர் பள்ளிகளுக்கு இடையேயான ஓட்டப் பந்தயத்தில் பங்கேற்று 400 மீட்டர், 800 மீட்டர் மற்றும் 1,500 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் தங்கப் பதக்கம் வென்று சாதித்து காட்டினார்.

அந்த மாணவி ஓடுவதற்கு ஷூ இல்லாமல் இருந்து இருக்கலாம், சாதிக்க ஷூ ஒரு தடையில்லை. ஆகையால், பேண்டேஜ்களை ஷூவாக பயன்படுத்தி 400 மீட்டர், 800 மீட்டர் மற்றும் 1,500 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் தங்கப் பதக்கம் வென்று அந்த 11 வயது மாணவி சாதித்து காட்டி இருக்கிறார். எனவே வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கு நமக்கு தேவை தன்னம்பிக்கையும் விடாமுயற்சியும்தான் என ஒவ்வொருவரும் உணர வேண்டும் என்பதனை நமக்கு ஒரு பாடம் எடுத்துள்ளார்.

தேசிய பத்திரிகை தினத்தில் எலான் மஸ்க் உருவாக்கும் ஏகாதிபத்தியத்திற்கு முடிவு கட்டுவோம்..!

இந்திய பிரஸ் கவுன்சில் 1966 ஜூலை 4-ல் தொடங்கி நவம்பர் 16-ல் செயல்பட துவங்கியது. இதை அங்கீகரிக்கும் விதமாக நவம்பர் 16-ல் தேசிய பத்திரிகை தினம் கடைபிடிக்கப்படுகிறது. ஜனநாயகத்தின் நான்காவது தூண் பத்திரிகை, ஊடகம். மக்கள் பிரச்னைகளை அரசின் கவனத்துக்கு கொண்டு சென்று தீர்ப்பதில் பங்காற்றுகிறது.

நமக்கு மேலிருக்கும் சட்டமன்றம், நிர்வாகி மற்றும் நீதித்துறை என்ற மூன்று தூண்களின் செயற்பாடுகளை கழுகுக் கண்கொண்டு பார்த்து அதை மக்களுக்கு அறிவிப்பது ஜனநாயகத்தின் நான்காவது தூணான பத்திரிகை மாற்றும் ஊடகத்தின் மேலான கடமையாகும். வாள் முனையை விட பேனாவின் முனை கூரானாது என்பதை உணர்ந்து ஊடகங்களால், ஆட்சியைக் கவிழ்க்கவும் முடியும், ஆட்சியை உருவாக்கவும் முடியும்.

உலகின் ஒரு ஏகாதிபத்திய சக்தி தனது பணபலத்தால், வல்லரசுகளில் ஒன்றான அமெரிக்காவிலேயே மறைமுக ஆட்சியை கைப்பற்றியுள்ளது. இது மேலும் வெளி நாடுகளின் மீது அதிகாரத்தை விரிவுபடுத்தும் என்பதில் என்பதில் எந்த ஒரு ஐயமுமில்லை. ஆட்சியாளர்கள் தவறான பாதையில், கண்மூடித்தனமாகப் பயணிக்கும் அரசாங்கத்தை நல்வழிப்படுத்துவது நமது ஜனநாயக கடமையாகும்.

தேசிய பத்திரிகை தினத்தில் வாள் முனையை விட பேனாவின் முனை கூர்மையானது என்பதை உணர்ந்து ஊடகங்களால், ஆட்சியைக் கவிழ்க்கவும் முடியும், ஆட்சியை உருவாக்கவும் முடியும் என்பதான உணர்ந்து ஜனநாயக ஜனநாயகக் கடமை ஆற்றுவோம்.

தாய் உடல் மயானம் போகும்போது குழந்தையும் பலி..!

அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட இளம் பெண்ணிற்கு மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் முறையாக சிகிச்சை அளிக்காததால், இளம் பெண் உயிரிழந்ததாகக் கூறி, அவரது உறவினர்கள் சாலைமறியலில் ஈடுப்பட்டனர். திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த எல்.மாங்குப்பம் பகுதியைச் சேர்ந்த விஜய் மனைவி துர்காதேவி. இருவரும் காதலித்து, கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு கலப்பு திருமணம் செய்து கொண்டனர்.

இந்நிலையில், நிறைமாத கர்ப்பிணியாக இருந்த துர்கா தேவி கடந்த ஞாயிற்றுக்கிழமை பிரசவத்திற்காக ஆம்பூர் அரசு மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அங்கு அறுவை சிகிச்சை பின் அவருக்கு அதிக அளவில் ரத்தப்போக்கு ஏற்பட்டுள்ளது. பணியில் இருந்த செவிலியர்கள், மற்றும் பணியில் இருந்த சியாமளா என்ற மருத்துவர் துர்கா தேவிக்கு முறையான சிகிச்சை அளிக்கவில்லை எனவும், துர்கா தேவிக்கு பெண் குழந்தை பிறந்த பின்னர் அதிக அளவு ரத்தப் போக்கு ஏற்பட்ட நிலையில், மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் அவருக்கு முறையாக அறுவை சிகிச்சை செய்யாததால், தொடர்ந்து ரத்தப் போக்கு அதிகமாகியுள்ளது என்றும் உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இதைத் தொடர்ந்து, துர்காதேவியை மருத்துவர்கள் திருப்பத்தூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு மருத்துவர்கள் சிகிச்சை அளிக்க முடியாமல், தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். ஆனால், அங்கும் சிகிச்சை அளிக்க முடியாமல், இறுதியாக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில், நேற்று முன்தினம் இரவு துர்கா தேவி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில், துர்கா தேவியின் உடல் நேற்று எல்.மாங்குப்பம் பகுதிக்கு கொண்டு வரப்பட்ட நிலையில், ஆம்பூர் அரசு மருத்துவமனையில் துர்காதேவிக்கு முறையான சிகிச்சை அளிக்காததால் தான் துர்காதேவி உயிரிந்ததாகக் கூறி ஆம்பூர் அரசு மருத்துவமனை மருத்துவர் சியாமளா மற்றும் செவிலியர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி துர்கா தேவியின் உறவினர்கள் ஆம்பூர் – பேர்ணாம்பட் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்

இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஆம்பூர் துணை காவல் கண்காணிப்பாளர் அறிவழகன் தலைமையிலான காவல்துறையினர், ஆம்பூர் வட்டாட்சியர் ரேவதி தலைமையிலான வருவாய்த் துறையினர், மற்றும் திருப்பத்தூர் மாவட்ட சுகாதார துறை இணை இயக்குநர் கண்ணகி ஆகியோர் மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுப்பட்டனர்.

இதுகுறித்து புகார் அளித்தால், துர்காதேவிக்கு மருத்துவம் பார்த்த மருத்துவர் மற்றும் செவிலியர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததின் பேரில் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். மருத்துவர் மற்றும் செவிலியர்களின் அலட்சியத்தால் பிரசவத்திற்குச் சென்ற பெண் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தாய் உடல் மயானம் போகும்போது குழந்தையும் பலி மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கண்மூடித்தனமாக தந்தை வழியில் செயல்பட்டு தந்தையை போலவே கம்பி எண்ணும் பெண்..!

மண்ணாசை, பெண்ணாசையினால் ஏற்படும் அழிவைக் காட்டிலும், பொன்னாலும், பொருளாலும் ஏற்படும் அழிவு ஒட்டு மொத்த சந்ததியையே சரித்து விடும் என்பதை மறந்து பொன்னையும் பொருளையும் மனிதன் தேடி அழைக்கின்றான். பணம் சம்மதிக்க எண்ணற்ற வழிகள் பல இருந்தும் நியாயம், நேர்மைகளை மறந்து பணம் மட்டுமே குறிக்கோளாக கொண்ட பலர் அதர்ம வழிகளில் பணம் சம்பாதிக்கின்றனர். அதனுடைய விளைவுகள் பற்றி அவன் ஒருபோதும் கவலைப்படுவதாகத் தெரியவில்லை.

தன்னுடைய முன்னோர் எப்படி கண்மூடித்தனமாக பொருள் ஒன்றே குறிக்கோளாக கொண்டு அலைந்து திரிந்து பொருள் ஈட்டினார்களோ அதோ வழியில் அவர்களுடைய சந்ததியினரும் தொடர்ந்து பொருள் ஈட்டுகின்றனர் என்பதே இன்றைய காலக் கொடுமையாக உள்ளது. அப்படி ஒரு சம்பவம் தான் இன்று தமிழகத்தில் அரங்கேறியுள்ளது. கண்மூடித்தனமாக தந்தை வழியில் செயல்பட்டு தந்தையை போலவே கம்பி எண்ணும் பெண்.

தமிழகத்தில் கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்களை குறி வைத்து நாளுக்கு நாள் போதை பழக்கம் அதிகரித்து காணப்படுகிறது. இதனால் காவல்துறை அதிரடி சோதனையில் போதைபொருள் கைப்பற்றப்பட்டு கைது நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். சென்னை பெருநகர காவல் எல்லையில் போதைப்பொருட்களை முற்றிலும் ஒழிக்கும் வகையில் காவல் ஆணையர் அருண் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

அதன்படி போதை பொருட்களை விற்பனை மற்றும் கடத்தும் நபர்களை கைது செய்யும் வகையில் உதவி காவல் ஆணையர் ஒருவர் தலைமையில் போதைப்பொருள் நுண்ணறிவு தடுப்பு பிரிவு ஒன்று புதிதாக பெருநகர காவல்துறையில் தொடங்கப்பட்டுள்ளது. இந்த பிரிவினர் போதை பொருட்களை விற்பனை மற்றும் கடத்தும் நபர்கள் மீது மட்டுமே கண்டுபிடித்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

அந்தவகையில், உயர் நீதிமன்றம் அருகே பிரகாசம் சாலையில், இருசக்கர வாகனத்தில் வந்த ஆறு பேரை சுற்றி வளைத்தனர். அப்போது 2 மோட்டார் சைக்கிளில் 6 பேரில், 2 பேர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். மற்ற நான்கு பேரும் காவல்துறையினரிடம் சிக்கினார். வாகனத்தில் சோதனை செய்தபோது 2 கிராம் மெத்தப்பட்டமைன் என்னும் போதை பொருள் வைத்திருந்தது தெரிந்தது. இது தொடர்பாக எஸ்பிளனேடு காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்தனர்.

விசாரணையில் புழல் பகுதியை சேர்ந்த பிரவீன், உணவகத்தில் வேலை பார்த்து வந்த கொடுங்கையூர் பகுதியை சேர்ந்த தினேஷ், அலுவலகத்தில் உதவியாளரான பழைய வண்ணாரப்பேட்டை பகுதியை சேர்ந்த சிறுவன், 12-ம் வகுப்பு படித்து வரும் தண்டையார்பேட்டை பகுதியை சேர்ந்த சிறுவன் எனத் தெரிந்தது. அவர்களிடம் மெத்தம்பட்டமைன் எப்படி கிடைத்தது? எங்கு வாங்கினீர்கள்? என்று கேட்டபோது மணலி பகுதியைச் சேர்ந்த மௌஷியா என்ற பெண்ணிடம் வாங்கியதாக தெரிவித்தனர்.

இதையடுத்து காவல்துறை அந்த பெண்ணின் வீட்டை சோதனை செய்தபோது 5 கிராம் மெத்தப்பட்டமைன் சிக்கியது. அவர்களிடமிருந்து லட்சக்கணக்கில் மதிப்புள்ள மொத்தம் 7 கிராம் மெத்தப்பட்டமைன் பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில் கைது செய்யப்பட்ட பெண் மெத்தம்பெட்டமைன் போதை பொருளை மொத்தமாக வாங்கி இளைஞர்கள் சிறுவர்களை வைத்து கல்லூரி மாணவர்களுக்கும் மதுபான விடுதி, பப்புகளுக்கும் சப்ளை செய்து வந்தது தெரியவந்துள்ளது.

ஏற்கனவே மௌஷியாவின் தந்தை அக்பர் அலி போதைப் பொருள் கடத்தலில் சிக்கி 12 வருட சிறை தண்டனை பெற்று கடந்த மூன்று வருடங்களாக சிறை தண்டனை அனுபவித்து வரும் நிலையில், மௌஷியா தந்தையின் அதே நெட்வொர்க்கை பயன்படுத்தி பல போதை பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்த நிலையில் தற்போது காவல் துறை கைது செய்துள்ளது.

யார் இந்த லாரன்ஸ் பிஷ்னோய்…!?

மகாராஷ்டிராவில் அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பாபா சித்திக் பிரமுகர் பாபா சித்திக் கொலை செய்யப்பட்டதற்கு லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளது.

இது தொடர்பாக அக்கும்பலைச் சேர்ந்த ஒருவர் பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்த பதிவு வைரலாகியுள்ளது. அதில், “பாலிவுட் நடிகர் சல்மான் கான் மற்றும் நிழல் உலக தாதாக்கள் தாவூத் இப்ரஹிம், அனுஜ் தாப்பன் ஆகியோருடன் கொண்ட தொடர்பின் காரணமாகவே பாபா சித்திக் கொல்லப்பட்டார். எங்களுக்கும் சித்திக்குக்கும் இடையே தனிப்பட்ட விரோதம் ஏதும் இல்லை.

சல்மான் கான் அல்லது தாவூத் குழுவுக்கு யாரெல்லாம் உதவுகிறார்களோ அவர்கள் இத்தகைய தாக்குதலுக்கு உள்ளாக வேண்டியிருக்கும். தயார் ஆகிக் கொள்ளுங்கள். எங்களின் சகோதரர்கள் கொல்லப்பட்டால் நாங்கள் பதிலடி கொடுப்போம். நாங்கள் எப்போதுமே முதலில் தாக்குவதிலை” என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1976 முதல் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினராக இருந்த 66 வயதான பாபா சித்திக் மூன்று முறை எம்எல்ஏ-வாக தேர்வு செய்யப்பட்டு அமைச்சராக பணியாற்றி உள்ளார். கடந்த பிப்ரவரி மாதம் பாபா சித்திக் தேசியவாத காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்து கொண்டார். இந்நிலையில், நேற்று நிர்மல் நகரில் உள்ள அவரது மகனின் அலுவலகத்துக்கு வெளியில் இருந்த போது துப்பாக்கிச் சுட்டுக் கொல்லப்பட்டார்.

பஞ்சாபின் பெரோஸ்பூரை சேர்ந்த லாரன்ஸ் பிஷ்னோய் பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் சட்டம் படித்துள்ளார். கல்லூரி காலங்களில் மாணவர் பேரவை அரசியலில் தலையிட்டவருக்கு கோல்டி பிரார் எனும் சத்தீந்தர் சிங் நண்பராக மாறினார். 2010-ல் பட்டம் பெற்ற பின் சண்டிகரில் இருவரும் இணைந்து பல்வேறு குற்றங்களில் ஈடுபடத் துவங்கினர். இருவர் மீதும் கொலை முயற்சி, கொள்ளை, வழிப்பறி போன்ற 7 வழக்குகள் 2012 வரை பதிவாகி பிஷ்னோய் சிறையில் அடைக்கப்பட்டார்.

அங்கிருந்த சக கைதிகளின் நட்பை பெற்ற லாரன்ஸ் பிஷ்னோய் விடுதலையாகி ஆயுதக் கடத்தலில் இறங்கினார்.தன்னுடன் மோதிய முக்ஸ்தர் என்பவரை லாரன்ஸ் பிஷ்னோய் சுட்டுக் கொலை செய்யும் அளவிற்கு சிறை வாழ்க்கையில் லாரன்ஸ் பிஷ்னோய் தாதாவாக மாற்றியது.

பிறகு மது கடத்தலிலும் இறங்கியவர் தன் தலைமையில் ஒரு கும்பலை உருவாக்கினார். 2014-ல் ராஜஸ்தான் காவல்துறையிஇனருடனான என்கவுன்ட்டரில் மீண்டும் கைதான லாரன்ஸ் பிஷ்னோய் மீது சிறையினுள் முக்கிய சாட்சியை கொலை செய்த வழக்கும் பதிவானது. சிறையில் சம்பத் நெஹரா எனும் குற்றவாளியுடன் நட்பு கொண்டு தனது கும்பலின் நடவடிக்கைகளை ராஜஸ்தானிலும் பரப்பினார்.

பிஷ்னோய் சமூகத்தினர் மான் உள்ளிட்ட விலங்குகளை புனிதமாகக் கருதுபவர்கள். கடந்த 1998-ஆம் ஆண்டு, ஜோத்பூரில், அரியவகை மான் ஒன்றை வேட்டையாடிய வழக்கில் சல்மான் கானுக்கு 5 ஆண்டு சிறைத் தண்டனை வழங்கப்பட்டது. சல்மான் கான் இப்போது ஜாமீனில் இருக்கிறார்.

அந்த மான், தங்கள் சமூகத்தின் புனித விலங்கு என்பதால் அதற்குப் பழிவாங்கும் வகையில் சல்மான் கானை கொல்வோம் என்று பஞ்சாப்பை சேர்ந்த பிரபல தாதா லாரன்ஸ் பிஷ்னோய் கொலை மிரட்டல் விடுத்திருந்தார். லாரன்ஸ் பிஷ்னோய் குழுவில் ஒருவரான கோல்டி ப்ரார், கடந்த வருடம் பகிரங்கமாகவே மிரட்டல் விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிறந்தநாள் கேக்கில் கலர் கொஞ்சம் தூக்கலா இருக்க..! பணம் கொடுத்தது நோயை வாங்க வேண்டாம்..!

கர்நாடக மாநிலத்தில் இயங்கி வரும் பேக்கரிகளில் தயார் செய்யப்படும் கேக்குகளில் உடல் ஆரோக்கியத்துக்கு தீங்கிழைக்கும் செயற்கை நிறமூட்டிகள் சேர்க்கப்பட்டிருப்பதை உணவு பாதுகாப்புத் துறை ஆய்வு மூலம் உறுதி செய்துள்ளது.

மேலும் ஆஸ்துமா, அலர்ஜி மற்றும் புற்றுநோய் போன்ற பாதிப்புகள் இதன் மூலம் ஏற்பட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விதிகளை மீறி இந்த செயற்கை நிறமூட்டிகளை சேர்த்த பேக்கரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இன்றைய பிறந்தநாள் கொண்டாட்டம் என்றால் அதில் நிச்சயம் கேக் வெட்டுவது வழக்கம். ஒயிட் ஃபாரஸ்ட், சாக்லேட், பட்டர்ஸ்காட்ச், வெனிலா மற்றும் பிளேக் என கேக்குகளின் பட்டியல் மிக நீண்டுகொண்டே போகும். கர்நாடக மாநிலத்தில் செயல்பட்டு வரும் பேக்கரிகளில் விற்பனை செய்யப்படும் கேக்குகள் அடர்த்தியான நிறங்கள் கொண்ட வகையாக இருக்கும். இதனால் கர்நாடக மாநிலத்தில் செயல்பட்டு வரும் பேக்கரிகளில் மேல் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளின் பார்வை விழுந்தது.

இதுகுறித்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரி ஒருவர் பேசுகையில், “ஒவ்வொரு மாதமும் வெவ்வேறு வகையான உணவுகளை நாங்கள் சோதனை செய்வது வழக்கம். இந்த முறை வழக்கத்துக்கு மாறாக கேக்குகளில் இடம்பெற்றிருந்த நிறங்களை எங்களது அதிகாரிகள் கவனித்தனர். அதன்படி பல்வேறு பேக்கரிகளில் கேக்குகளின் மாதிரிகளை சேகரித்தோம். அதை ஆய்வுக்கு உட்படுத்தியதில் சிலவற்றில் அல்லுரா ரெட், சன்செட் எல்லோ எப்.சி.எப் மற்றும் கார்மோசைன் உள்ளிட்ட அபாயகரமான டைகள் பயன்படுத்தப்பட்டு இருந்தது உறுதியானது.

சம்பந்தப்பட்ட பேக்கரிகளின் உரிமையாளர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். ஏனெனில், உணவு பாதுகாப்பு மற்றும் தரநிலைகள் சட்டத்தின்படி இது குற்றமாகும். இதனை பேக்கரி உரிமையாளர்கள் கவனத்தில் கொண்டு விழிப்புடன் செயல்பட வேண்டும்” என கர்நாடக உணவு பாதுகாப்பு துறை ஆணையர் ஸ்ரீனிவாஸ் தெரிவித்துள்ளார்.

உணவு பாதுகாப்பு துறையினர் சேகரித்த 235 கேக் மாதிரிகளில் சுமார் 12 மாதிரிகளில் இந்த தீங்கிழைக்கும் செயற்கை நிறமூட்டிகள் பயன்படுத்தப்பட்டு இருப்பது உறுதியானது. இருப்பினும் இது பெரிய அளவில் இல்லாத காரணத்தால் மக்கள் பேக்கரிகளில் கேக் வாங்குவது குறித்து அச்சப்பட வேண்டியது இல்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

விமர்சனங்களை விரட்டிய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்..!

கடந்த 40 மாதங்களாக அதிகாரம் படைத்த சிலருக்கு மட்டும் சூரியன் உதிக்கிறது. மற்றவா்களுக்கு சூரிய கிரகணம் மட்டுமே தெரிகிறது என அண்ணாமலை லண்டனில் இருந்து அறைகூவல், பட்டியலின மக்கள், இஸ்லாமியர்கள், கிறிஸ்துவர்கள் ஆகியோரின் ஓட்டுகளை கூட்டணி மூலம் வாங்கி கொண்டு “கருணாநிதி, மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின், இன்பநிதி என்று அடுத்தடுத்து வாரிசுகள் வருவது தான் சனாதனம் மூச்சு முட்ட சீமான் கதற, தந்தை, மகன் என்பதைத்தவிர, வேறு எந்த தகுதியும் இல்லாமல் என முருகன் உளற, திமுகவில் எத்தனையோ மூத்த முன்னோடிகள் உள்ளனர் . அவர்களுக்கு ஏன் துணை முதல்வர் பதவி வழங்க முன்வரக்கூடாது என அவர் பங்குற்கு எடப்பாடி பழனிச்சாமி கருத்து தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் முதன்முதலில் கடந்த 2009-ஆம் ஆண்டு திமுக ஆட்சியின் போது, மு.க. ஸ்டாலின் துணை முதலமைச்சர் பதவி வழங்கப்பட்ட போது எழுந்த விமர்சனங்களை விட பல மடங்கு விமர்சனங்கள். விமர்சனங்களே இல்லாமல் 2017-ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் ஓ. பன்னீர்செல்வம் துணை முதலமைச்சர் பதவி, ஆனால் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதலமைச்சர் பதவி கொடுக்கும்போது மட்டும் ஏன் விமர்சனங்கள் விண்ணை முட்டுகின்றது.

உதயநிதி ஸ்டாலின் கலைஞரின் பேரன் என்பதில் எழுந்த விமர்சனங்கள் அல்ல மு.க. ஸ்டாலின் மகன் என்பதில் எழுந்த விமர்சனங்கள் அல்ல அதையும் தாண்டி பெரியார் கருத்துக்களை சுமந்து அண்ணாவின் வழியில் கலைஞரின் பாணியில் பகுத்தறிவு பகல்வனாக திராவிட கொள்கைகளை தன் நாவில் உச்சரித்து, வீறுகொண்டு வீரநடை போடுவதால் எழுந்த விமர்சனங்கள்.

விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் F4 கார் பந்தயம் நடத்தியதில் என்ன தவறு அதற்கு எழாத விமர்சனங்களா..!? மக்கள் நடமாட்டம், வாகன நெரிசல் மிகுந்த பகுதியில் நடப்பதால் கண்டிப்பாக டிராபிக் ஜாம் ஆகும். அதனை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பரப்பி இந்த போட்டியை எப்படியாவது நிறுத்திவிடவேண்டும் என்று நிறைய பேர் பிளான் செய்தனர். சின்ன விபத்து நடந்தால் கூட அதை ஊதி பெரிதாக்க நிறைய பேர் காத்திருந்தனர். ரேஸ் தடத்தில் ஒரு நாய்குட்டி ஓடி வந்ததை கூட விமர்சனம் செய்தனர். ஆனால் அதையெல்லாம் தவிடுபொடியாக்கி தெற்கு ஆசியாவில் முதல்முறையாக நடத்தப்படும் இரவு நேர ஃபார்முலா 4 சாலை பந்தயம் சென்னையில் நடத்தி கட்டியவர் தான் உதயநிதி ஸ்டாலின். அப்புறம் என்ன இருக்காதா வயித்தெரிச்சல்.

தொடரும்….

கொங்கு சிங்கம் 471 நாட்களுக்கு பின்..! கூண்டை விட்டு வெளியே..!

ஜெயலலிதா மறைவிற்கு பிறகு கொங்கு மண்டல வாக்கு வங்கியை குறிவைத்து தமிழக பாஜக எல். முருகன் மாநில தலைவராக நியமனம். அவரை தொடர்ந்து அண்ணாமலை நியமனம் என கொங்கு மண்டல அரசியல் களம் சூடிப்பிக்க தொடங்கியபோது 2018 திசம்பர் 14 -ஆம் தேதி மீண்டும் செந்தில் பாலாஜி திமுகவில் இணைந்தார். மத்தியில் மோடி தலைமயிலான பாஜக ஆட்சி, மாநிலத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமயிலான அதிமுக ஆட்சி சேலத்து சிங்கம் வீரபாண்டி ஆறுமுகம் நில அபகரிப்பு வழக்கில் 2011-ஆம் ஆண்டு சிறை மற்றும் 2012-ஆம் ஆண்டு நவம்பர் 23-ந் தேதி மறைவுக்கு பிறகு திமுகவில் ஏற்பட மிகப்பெரிய வெற்றிடத்தை செந்தில் பாலாஜி நிரப்பினார்.

2019-ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் கொங்கு மண்டலம் முழுவதும் செந்தில் பாலாஜி சுற்று பயணம் மேற்கொண்டு பாஜக, அதிமுகவின் தேர்தல் பிரசாரத்தை ஒட்டுமொத்தமாக சிதறடித்து கொங்கு மண்டல ஒட்டுமொத்த நாடாளுமன்ற உறுப்பினர்களை வெற்றிபெற செய்தது மட்டுமின்றி கரூர் இடைத்தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்டு தனக்குள்ள செல்வாக்கு மூலம் செந்தில் பாலாஜி வெற்றி பெற்றார்.

ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் சிறை செல்ல நேர்ந்தபோது தமிழகத்தின் அடுத்த முதலமைச்சர் யார் என்ற பெயர் பட்டியலில் செந்தில் பாலாஜியின் பேரும் இருந்தது என்றால் அவர்கள் எவ்வளவு மக்கள் மற்றும் அரசியல் செல்வாக்கு மிக்க தலைவர் என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபித்து காட்டினார்.

கரூர் மாவட்டத்தில் பிறந்தது, வளர்ந்தாலும் மிக இளம் வயதில் குறுகிய காலத்தில் ஒட்டுமொத்த கொங்கு மண்டலத்தின் மக்களுக்காக மூலைமுடுக்கெல்லாம் ஓடோடி உழைத்து மக்கள் செல்வாக்கை பெற்றவர். முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் கருது வேறுபாடு ஏற்பட்டு எடப்பாடி பழனிசாமி உனக்கு முன்னாள் நான் அதிமுகவில் எம்எல்ஏ ஆனவன் என பேசியபோது, நீ என்னக்கு முன்னாள் அதிமுகவில் எம்எல்ஏவாக இருந்தாலும் நீயும் நானும் ஒரே நேரத்தில் தான் அமைச்சர்கள் ஆனேன் என்று முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை கேள்வி கேட்டவர் செந்தில் பாலாஜி.

கரூர் மாவட்டம் ராமேஸ்வரப்பட்டியில் பிறந்தவர் செந்தில்குமார் என்னும் செந்தில் பாலாஜி. கரூர் விவேகானந்தா மேல்நிலைப் பள்ளியில் 12-ஆம் வகுப்புத் தேறிய அவர், கரூர் அரசுக் கலைக் கல்லூரியில் பி.காம் படிப்பில் சேர்ந்தார். கல்லூரி காலத்தில் மதிமுக கட்சியில் சேர்ந்த செந்தில் பாலாஜியை அரசியல் ஆர்வம் தொற்ற கல்லூரி படிப்பை 16.4.1995 ம் நாள் இடைநிறுத்தம் செய்துவிட்டு முழுநேர அரசியல் பணிகளில் ஈடுபட தொடங்கினார்.

சில காலமே மதிமுகவில் இருந்த செந்தில் பாலாஜி பின்னர் அக்கட்சியில் இருந்து விலகி திமுகவில் இணைந்தார். திமுகவில் சிறப்பாக செயல்பட்ட செந்தில் பாலாஜிக்கு 1996-ல் நடந்த உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பை திமுக வழங்கியது. அதன்மூலம் முதன்முறையாக கவுன்சிலராக ஆனார் செந்தில் பாலாஜி.

இப்படியாக மதிமுக மூலமாக அரசியல் வாழ்க்கையில் அடியெடுத்து வைத்த செந்தில் பாலாஜி பின்னர் திமுகவில் சிலருடன் ஏற்பட்ட கருத்து முரண்பாடுகளால் அதிமுகவில் இணைந்தார். 2000 மார்ச் 13- ஆம் தேதி போயஸ் தோட்டத்தில் உள்ள ஜெயலலிதா வீட்டில் செந்தில் பாலாஜி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்தார்.

2000 செப்டம்பரில் அதிமுகவின் கரூர் மாவட்ட மாணவர் அணி இணைச் செயலாளராக நியமிக்கப்பட்டு, 2004-ஆம் ஆண்டு கரூர் மாவட்ட மாணவர் அணிச் செயலாளர் ஆனார். 2006-ம் ஆண்டில் நடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வென்ற செந்தில் பாலாஜி கரூரில் தொடர்ந்து தனது ஆளுமையை நிலை நாட்டி தனக்கான ஆதரவாளர்களை அதிகப்படுத்தினார். திமுக ஆட்சிக்கு எதிராக மணல் கொள்ளை விவகாரங்களில் அவர் துணிச்சலுடன் செயல்பட்டது ஜெயலலிதாவை ஈர்த்தது மட்டுமின்றி வி.கே. சசிகலாவின் முழு நம்பிக்கைக்கு பாத்திரமானார்.

அதன்விளைவாக 2007 மார்ச் 11- ஆம் நாள் கரூர் மாவட்ட ஜெயலலிதா பேரவைச் செயலாளர் மற்றும் 2007 மார்ச் 21-ஆம் நாள் கரூர் மாவட்ட அதிமுக மாவட்டச் செயலாளர் ஆனார். அடுத்து நடைபெற்ற 2011-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் மீண்டும் கரூரில் வெற்றி பெற்ற செந்தில் பாலாஜிக்கு தமிழ்நாடு போக்குவரத்துத்துறை அமைச்சராக பொறுப்பு கொடுக்கப்பட்டது.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அமைச்சரவையில் முக்கிய அமைச்சராக வலம் வந்த செந்தில் பாலாஜி கடந்த 2014-ஆம் ஆண்டு, போக்குவரத்துத் துறையில் ஓட்டுநர், நடத்துநர் பணி நியமனத்தில் முறைகேடு செய்ததாக எழுந்த புகாரில் சிக்கினார். 2015-ஆம் ஆண்டு தேவசகாயம் என்பவர் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதுகுறித்து உடனே நடவடிக்கை எடுத்த ஜெயலலிதா 2015-ம் ஆண்டில் செந்தில் பாலாஜியின் அமைச்சர் பதவி, கரூர் மாவட்ட செயலாளர் பதவி என அனைத்து பதவியிலிருந்தும் அவரை நீக்கினார்.

பண மோசடி தொடர்பாக செந்தில் பாலாஜி மீது கடந்த 2016-ஆம் ஆண்டு அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்தது. மத்திய குற்றப்பிரிவு காவல்துறை வழக்குப்பதிவு செய்தது. மேலும் வி.கே. சசிகலாவின் ஆதரவு செந்தில் பாலாஜிக்கு இருந்தால் செந்தில் பாலாஜி 2016 தேர்தலில் அரவக்குறிச்சி தொகுதியில் அதிமுக சார்பில் நின்று வெற்றி பெற்றார். ஆனால் செந்தில் பாலாஜிக்கு அமைச்சர் பதவி வழங்கப்படவில்லை.

ஆனால் இதில் செந்தில் பாலாஜி பெயர் இடம்பெறவில்லை. பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து அதன் அடிப்படையில் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக்குமார் மற்றும் போக்குவரத்து அதிகாரிகள் உள்பட 40 பேர் மீது 2016-ல் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில், 2016 -ஆம் ஆண்டு செப்டம்பர் 22 அன்று ஜெயலலிதா உடல்நலக் குறைவின் காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 75 நாட்கள் தொடர் சிகிக்சைக்கு பிறகு டிசம்பர் 5 – ஆம் தேதி ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் செந்தில் பாலாஜியின் அரசியல் வாழ்க்கையும் நடுக்கம் கண்டது.

அதிமுக இரு அணிகளாக பிரிந்த நிலையில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட அதிமுக எம்எல்ஏக்களில் செந்தில் பாலாஜியும் ஒருவர். தகுதி நீக்கத்திற்கு பிறகு அதிமுகவின் இரண்டு அணிகளிலும் சேராமல் புதிதாக டிடிவி தினகரன் தொடங்கிய அமமுக கட்சியில் இணைந்தார் செந்தில் பாலாஜி. அமமுக மாநில அமைப்பு செயலாளராக பொறுப்பேற்ற அவர் பின்னர் கட்சி பூசல்களால் அமமுகவிலிருந்து வெளியேறி மீண்டும் திமுகவிலேயே இணைந்தார்.

2019-ல் நாடாளுமன்ற தேர்தலோடு நடத்தப்பட்ட இடைத்தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்டு கரூரில் சுற்று வட்டாரத்தில் தனக்குள்ள செல்வாக்கை தனது வெற்றியின் மூலம் செந்தில் பாலாஜி நிரூபித்தார். இதன்பின்னர் செந்தில் பாலாஜிக்கு க்ரீன் சிக்னல் கொடுக்க அரசியல் பயணம் அசுர வளர்ச்சி அடைந்தது. ஒட்டு மொத்த கொங்கு மண்டலத்தையே தான் கட்டுக்குள் கொண்டு வந்தார்.

இதனிடையே தமிழக பாஜக தலைவரான அண்ணாமலை நியமிக்கப்பட்டார். ஜெயலலிதா மறைவிற்கு பின்னர் கொங்கு மண்டல வாக்குவங்கி கணக்கு பாஜகவிற்கு பெரிய இடையூறாக இருந்ததாக அரசியல் விமர்சகர்கள் தெரிவித்தனர். இதுமட்டுமின்றி பாஜக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளின் விமர்சனங்களை செந்தில் பாலாஜி ஒருவரே தக்க பதிலடி கொடுத்தார். தமிழக பாஜக தலைவரான அண்ணாமலைக்கும், செந்தில் பாலாஜிக்கும் மோதல் போக்கு தொடர்ந்தது. மேலும் பாஜகவின் கூட்டணி கட்சியான அதிமுகவிற்கு செந்தில் பாலாஜியின் அரசியல் வளர்ச்சி பெரும் தடையாக இருந்தது.

இதன்காரணமாக செந்தில் பாலாஜி குறித்த பழைய வழக்குகளுக்கு அழுத்தம் கொடுக்கப்படுவதாக செந்தில் பாலாஜி ஆதரவாளர்கள் அரக்கப்பரக்க பேசி வருகின்றனர். இதனால் 2021 சட்டமன்ற தேர்தலில் கரூர் தொகுதியில் போட்டியிட்டு வெல்லும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. மேலும் மதுவிலக்கு ஆயத்தீர்வை மற்றும் மின்சாரத்துறைகள் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில்தான் கடந்த 2015-ல் அதிமுக ஆட்சியில் அவர் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தபோது நடந்த முறைகேடுகள் தொடர்பான விசாரணைகள் திடீரென அழுத்தம் பெற்று விசாரணைக்கு வந்தன. இதுதொடர்பான அமலாக்கத்துறை 2021ல் குற்றம் சாட்டப்பட்ட நபர்களுடன் வேலைக்கு லஞ்சமாக பணம் வாங்கியது தொடர்பான சர்ச்சையை சமரசமாக தீர்த்துவிட்டதாகக் கூறி அவர்கள் ஒரு கூட்டு மனுவை தாக்கல் செய்தனர்.

இந்த சூழ்நிலையில், உச்சநீதிமன்றத்தில் அமலாக்கத்துறை அதிகாரி கார்த்திக் தசாரி மேல் முறையீடு செய்தார். தன் மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டும் எனக் கூறி செந்தில் பாலாஜி கடந்த 2022-ல் உச்ச நீதிமன்றத்தை அணுகினார். கடந்த 2023-ஆம் ஆண்டு மே மாதம் 16-ஆம் தேதி இந்த வழக்குகளை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் கிருஷ்ணா முராரி, ராமசுப்பிரமணியன் ஆகியோர் அடங்கிய அமர்வு செந்தில் பாலாஜி தொடர்பான வழக்கை இரண்டு மாதத்திற்குள் முடிக்கும்படி குற்றப்பிரிவு காவல்துறைக்கு உத்தரவிட்டது.

சட்டவிரோத பணப் பரிமாற்றம் தொடர்பாக கடந்த 2023 ஆண்டு ஜூன் மாதம் 13-ஆம் தேதி, சென்னை பசுமை வழிசாலையில் உள்ள அவரது அரசு இல்லத்தில் அமலாக்கத் துறையினர் நாள் முழுவதும் செந்தில் பாலாஜியிடம் விசாரணை நடத்தினர். அவர் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். வீட்டிலிருந்த செந்தில் பாலாஜி எங்கும் வெளியே செல்ல அனுமதிக்கப்படவில்லை. இதையடுத்து, 14-ஆம் தேதி அதிகாலை செந்தில் பாலாஜியை கைது செய்தனர்.

நீண்டகாலமாக சிறையில் உள்ள செந்தில் பாலாஜி ஜாமீன் கோரி உச்ச நீதிமன்றத்தில் 2024 மார்ச் 18ல் மேல் முறையீடு செய்தார். இந்த மனு மீதான விசாரணையில் செந்தில் பாலாஜி தரப்பு, அமலாக்கத் துறை தரப்பு என இருதரப்பினருக்கும் இடையே காரசார விவாதம் நடைபெற்றது. 2024 ஆகஸ்ட் 12-ம் தேதி நடந்த விசாரணையின் போது, ‘மனுதாரர் 13 மாதங்களாக சிறையில் இருக்கிறார்.

தற்போது வரை இந்த வழக்கில் விசாரணை தொடங்கவில்லை. விசாரணை எப்போது தொடங்கும்’ என்பதும் தெரியவில்லை என செந்தில் பாலாஜி தரப்பு வாதிடப்பட்டது. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட உச்ச நீதிமன்றம் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்திருந்தது. மேலும், சுமார் 58 முறை அவருக்கு காவல் நீட்டிப்பு வழங்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் நேற்று காலை 10.30 மணிக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் அபய் எஸ் ஓகா, அகஸ்டின் ஜார்ஜ் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கி உள்ளது. முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. இதன் மூலம் கொங்கு சிங்கம் 471 நாட்களாக சிறையில் இருந்து வெளியே வந்த செந்தில் பாலாஜி நான் உள்ளே செல்லும்போது 39, நான் வெளியே வரும்போது 40 என புரிய வேண்டியவர்களுக்கு புரியும் பாஷையில் மீண்டும் கர்ஜிக்க தொடங்கினார்.