உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் அறிகுறிகள்…!

சீனாவில் உருவாகிப் பரவி வரும் புதியவகை கொரோனா வைரஸ் பாதிப்புக்கு சீனாவில் இதுவரை 41 பேர் பலியாகியுள்ளனர். வுஹான் மாகாணத்திலிருந்து பரவி வரும் இந்த வைரஸினால் சீனாவின் 13 நகரங்களில் சுமார் 41 மில்லியன் மக்கள் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. வைரஸ் அச்சுறுத்தலினால் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டுள்ளாதால் வுஹானில் சுமார் 700 இந்திய மாணவர்கள் சிக்கியுள்ளனர்.

அறிகுறிகள்

கொரோனா வைரஸ்கள் விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்குத் தொற்றி பரவுவதாகும். இதன் நோய் அறிகுறிகளாக சாதாரண ஜலதோஷம் முதல் தீவிர மூச்சுக்குழல் சிக்கல்கள், உடனடி நுரையீரல் பாதிப்பினால் மூச்சுத் திணறல் ஆகியவை மனித உயிர்களுக்கு அச்சுறுத்தல் விளைவித்துள்ளது.

பரவும் முறை

மற்ற தொற்று வைரஸ்கள் பரவுவது போல்தான் கொரோனா வைரஸ் காற்றின் மூலம் பரவுகிறது, இந்த வைரஸ் பாதித்த மனிதர்களின் உமிழ்நீர், தும்மல் மூலமாகவும் இவர்களுடன் கைகொடுத்தல் போன்ற உடல் ரீதியான தொடர்புகளினாலும் மற்றவர்களுக்குப் பரவுகிறது. அல்லது இந்த வைரஸ் ஏதோ இடத்தில் இருக்க அந்த இடத்துடன் உடல் ரீதியாகத் தொடர்பு ஏற்பட்டு நாம் நம் வாய், கை, கண் போன்றவற்றில் கையை வைக்கும் போதும் பரவுகிறது.

தலைவலி, சளி, இருமல், தொண்டைக் கட்டு, காய்ச்சல், கடும் தும்மல், களைப்பு இதோடு கடும் ஆஸ்துமா, நிமோனியா, பிராங்கைட்டிஸ் எனப்படும் மூச்சுக்குழாய் அழற்சி ஆகியவற்றை நோய் அறிகுறிகளாக தெரிவித்துள்ளன.

கேரளாவில் 80 பேர் தீவிர கண்காணிப்பு

சீனாவில் கொரோனா என்ற மர்ம வைரஸ் காய்ச்சல் முதலில் வுகான் நகரில் உள்ள ஒரு கடல் உணவு மற்றும் வனவிலங்கு சந்தையில் பாதிக்கப்பட்ட விலங்குகளிடம் இருந்துதான் இந்த வைரஸ் தோன்றியதாக தகவல்கள் கூறுகின்றன. முதலில் வுகான் நகரில் கண்டறியப்பட்ட இந்த வைரஸ், நாட்டின் தலைநகர் பெய்ஜிங் மற்றும் ஷாங்காய் உள்ளிட்ட நகரங்களிலும் பரவி வருகிறது.


சீனாவில் புதிய வகை கொரோனா வைரஸ் பாதிப்பு 4 கோடி பேர் வசித்து வரும் வுகானில் பெரும் தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது. இதன்விளைவாக, சீன சுகாதார ஆணையம் இன்று காலை வெளியிட்டுள்ள செய்தியில், கொரோனா வைரஸ் 880 பேருக்கு பாதிப்பு ஏற்படுத்தி உள்ளது. சீனா முழுவதும் இதற்கு 26 பேர் பலியாகி உள்ளனர் என தகவல்கள் வெளிவந்ததுள்ளன.

இந்நிலையில் சீனாவில் இருந்து கடந்த சில நாட்களில் கேரளா திரும்பியிருந்த 80 பேர் சுகாதாரத்துறையின் தீவிர கண்காணிப்பில் உள்ளனர். இவர்களில் 7 பேருக்கு லேசான காய்ச்சல் இருந்ததால் தேவையான சிகிச்சைகள் அளிக்கப்பட்டது.

கொரோனாவால் 17 பேர் பலி எண்ணிக்கையாக உயர்ந்தது…!

சீனாவில் கொரோனா என்ற மர்ம வைரஸ் காய்ச்சல் முதலில் வுகான் நகரில் உள்ள ஒரு கடல் உணவு மற்றும் வனவிலங்கு சந்தையில் பாதிக்கப்பட்ட விலங்குகளிடம் இருந்துதான் இந்த வைரஸ் தோன்றியதாக தகவல்கள் கூறுகின்றன. முதலில் வுகான் நகரில் கண்டறியப்பட்ட இந்த வைரஸ், நாட்டின் தலைநகர் பெய்ஜிங் மற்றும் ஷாங்காய் உள்ளிட்ட நகரங்களிலும் பரவி வருகிறது.

சீனாவில் புதிய வகை கொரோனா வைரஸ் பாதிப்பு 1.1 கோடி பேர் வசித்து வரும் வுகானில் பெரும் தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது. இதன்விளைவாக, சீன சுகாதார ஆணையம் இன்று காலை வெளியிட்டுள்ள செய்தியில், கொரோனா வைரஸ் 571 பேருக்கு பாதிப்பு ஏற்படுத்தி உள்ளது.

சீனா முழுவதும் இதற்கு 17 பேர் பலியாகி உள்ளனர் என தகவல்கள் வெளிவந்ததுள்ளன. மேலும், ஜப்பான் மற்றும் தென்கொரியாவில் தலா ஒருவரும், தாய்லாந்து நாட்டில் 3 பேரும், அமெரிக்கா மற்றும் தைவான் நாடுகளில் தலா ஒருவரும் வைரஸ் பாதிப்பிற்கு ஆளாகி உள்ளனர் என்ற ஒரு தகவல்களும் வந்ததுள்ளன

பாம்புகள் மூலம் பரவிய கொரோனா வைரஸ்…!

சீனாவில் சுமார் 90 லட்சம் பேர் வசிக்கும் உவான் நகரில் இருந்துதான் கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியது. கொரோனா வைரஸ் தாக்குதலை தொடர்ந்து சீனாவின் உவான் நகருக்கு செல்லவும், வெளியேறவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. சீனாவை மிரட்டும் உயிர்கொல்லி வைரஸை கட்டுப்படுத்த சீன அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்நிலையில், சீனாவில் இருந்து உலகம் முழுவதும் பரவும் கொடிய வைரஸ் உவானில் திறந்தவெளி சந்தையில் விற்கப்படும் பாம்புகளிலிருந்து மனிதர்களுக்கு பரவி இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.

பல்வேறு ஒட்டுண்ணி விலங்குகளை பாதிக்கும் விகாரங்களின் மரபணுக்களை அவர்கள் ஆராய்ந்தபோது, கொரோனா வைரஸ் பாம்புகள் எளிதில் பாதிக்கப்படுவதை பீக்கிங் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர். பாம்புகள் பின்னர் மனிதர்களுக்கு தொற்றுநோயைத் பரப்பும் வைரஸ் புள்ளியாக செயல்பட்டன என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவில் கொரோனாவால் பலி எண்ணிக்கை 9 -தாக உயர்ந்தது

சீனாவில் கொரோனா என்ற மர்ம வைரஸ் காய்ச்சல் முதலில் வுகான் நகரில் உள்ள ஒரு கடல் உணவு மற்றும் வனவிலங்கு சந்தையில் பாதிக்கப்பட்ட விலங்குகளிடம் இருந்துதான் இந்த வைரஸ் தோன்றியதாக தகவல்கள் கூறுகின்றன. சீனாவில் புதிய வகை கொரோனா வைரஸ் கடந்த வாரத்தில் 140 பேரிடம் பாதிப்பு ஏற்படுத்தி இருந்தது.

1.1 கோடி பேர் வசித்து வரும் வுகானில் இந்த வைரஸ் பாதிப்பு பெரும் தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், இந்த வைரஸ் 440 பேரிடம் பாதிப்பு ஏற்படுத்தி உள்ளது என்றும் பலி எண்ணிக்கை 9 ஆக உயர்வடைந்து என சீன சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.

மருத்துவப் பரிசோதனை: உயிரைக் கொல்லும் மர்ம வைரஸ் 

2002-2003 இல் சார்ஸ் வைரஸ் சீனாவில் 349 பேரையும், ஹாங்காங்கில் 299 பேரையும் கொன்றது. இருமல், காய்ச்சல் மட்டுமின்றி கடுமையான சுவாச நோய் அறிகுறியுடனுடம் கண்டறியப்பட்டுள்ளன. “பரந்த சார்ஸ் குடும்பத்தைச் சேர்ந்த ஆனால் யாரும் இதுவரை கண்டிராத விகாரமான தோற்றம் கொண்ட வைரஸ் சளி, இருமல், காய்ச்சல் என்று தொடங்கி உயிரையே பறிக்கும் தீவிர நோய்த்தன்மையில் கொண்டுபோய்விடும் அபாய தன்மையைக் கொண்டது” என்று தெரிவித்துள்ளது.

சமீப நாட்களில் வுஹானில் உள்ள கடல் உணவு மற்றும் நேரடி விலங்கு சந்தையிலிருந்து பரவிய இந்த வைரஸினால் இதுவரை இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். இந்நோய் சீனாவிலிருந்து சென்ற தாய்லாந்து மற்றும் ஜப்பானைச் சேர்ந்த இருவரை கடுமையாகப் பாதித்துள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

ஆகையால், ‘சீனாவின் வுஹானில் இருந்து அமெரிக்கா செல்லும் பயணிகள் சான் பிரான்சிஸ்கோ, நியூயார்க்கின் ஜே.எஃப்.கே மற்றும் லாஸ் ஏஞ்சல்ஸ் ஆகிய மூன்று விமான நிலையங்களில் புதிய கொரோனா வைரஸுடன் தொடர்புடைய அறிகுறிகளுக்கான மருத்துவத்துறையின் ஸ்கேனிங் உடல் பரிசோதனைக்குப் பின்னரே வெளியே அனுமதிக்கப்படுகிறார்கள். இந்த மூன்று விமான நிலையங்களுக்குக் கூடுதலாக மருத்துவத் துறை சார்ந்த 100 ஊழியர்கள் நியமிக்கப்பட்ட உள்ளனர்.

இந்தியா ஃபஸ்ட் ஆசிரியர் ராஜாராம் சென்னை மெட்ரோ இரயில் ஜாலியாக ஒரு பயணம்

இந்தியா ஃபஸ்ட் ஆசிரியர் ராஜாராம் சென்னை மெட்ரோ இரயில் 2019 செப்டம்பர் 24அன்று ஜாலியாக ஒரு பயணம்

காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் இந்தியா ஃபஸ்ட் ஆசிரியர் ராஜாராம்

காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் அவர்களை 2014 ஆண்டு சத்தியமூர்த்தி பவனில் மரியாதையை நிமித்தமாக மற்றும் இந்தியா ஃபஸ்ட் ஆசிரியர் ராஜாராம் சந்தித்த போது

வாசன் அண்ட் கோ வசந்தகுமார் மற்றும் இந்தியா ஃபஸ்ட் ஆசிரியர் ராஜாராம்

வாசன் அண்ட் கோ வசந்தகுமார் மற்றும் இந்தியா ஃபஸ்ட் ஆசிரியர் ராஜாராம்