கோயம்புத்தூர் மாணவர் பிரதமர் மோடியுடன் காணொலி மூலம் கலந்துரையாடல்

சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து செய்யப்படுவதாக கடந்த 1-ம் தேதி மத்திய அரசு அறிவித்தது. இதுகுறித்து மாணவர்கள் மற்றும் பெற்றோரிடம் கருத்துகளை கேட்டறிய மத்திய கல்வித்துறை மற்றும் சிபிஎஸ்இ வாரியம் இணைந்து காணொலி மூலம் கலந்துரையாடல் நிகழ்ச்சிக்கு நேற்று முன்தினம் ஏற்பாடு செய்திருந்தன.


இந்நிகழ்ச்சியில் பிரதமர் மோடி திடீரென பங்கேற்று மாணவர்களுடன் கலந்துரையாடி னார்.12-ம் வகுப்பு தேர்வு குறித்து அவர் எடுத்த முடிவு பற்றி மாணவர்கள் தங்களின் கருத்துகளை தெரிவித்தனர். நேரலையாக நடந்த இந்த நிகழ்ச்சியில் நாடு முழுவதும் இருந்து சுமார் 38 மாணவர்கள் பங்கேற்றனர். அதில் ஒருவராக கோயம்புத்தூர் பீளமேட்டில் உள்ள சிபிஎஸ்இ பள்ளி மாணவர் சித்ராகர் தேப்ரக் பங்கேற்று மோடியுடன் கலந்துரை யாடினார்.

தளர்வுகளுடன் ஒரு வாரத்திற்கு ஊரடங்கு நீட்டிப்பு : காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதி

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு விருகம்பாக்கத்தில் மரக்கன்றுகள் நடும் விழா


உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, விருகம்பாக்கம் சிவலிங்கபுரத்தில், விருகம்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகர் ராஜா வும், தமிழச்சி தங்கப்பாண்டியன் அவர்களும் மரக்கன்றுகள் நட்டனர். இவர்களுடன் பகுதிச் செயலாளர்கள் திரு.மு.ராசா, திரு.கே.கண்ணன் உடனிருந்தனர்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு தென் சென்னை மக்கள் சார்பில் நன்றி தெரிவிப்பு


கிண்டி, கிங் இன்ஸ்டிட்டியூட் மருத்துவனையை 250 கோடி செலவில் பன்நோக்கு உயர் சிறப்பு மருத்துவனையாக மாற்றம் செய்ய உத்தரவிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு, நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள் ஒருங்கே சென்று சந்தித்து தென் சென்னை மக்கள் சார்பில் நன்றி தெரிவித்தனர்.

கோயம்பேடு மார்க்கெட் கோவிட் -19 தடுப்பூசி மையத்தினை விருகம்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகர் ராஜா ஆய்வு

செவிலியர் ஜெயக்குமாரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு

சென்னை கஸ்தூரிபாய் மருத்துவமனை தீ விபத்தின் போது தீயணைப்பு வீரர்கள் வரும் முன்பே கண்ணாடிகளை உடைத்து 36 பச்சிளங்குழந்தைகள் மற்றும் தாய்மார்களின் உயிர்களைக் காத்த துணிச்சலான செவிலியர் ஜெயக்குமாரை நேரில் அழைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டினார்.

தமிழகத்தில் 11 மாவட்டங்களில் அத்தியாவசிய செயல்பாடுகளுக்கு மட்டும் அனுமதி

காயிதே மில்லத்தின் 126-ஆம் பிறந்த நாளை முன்னிட்டு முதலமைச்சர் மு.க . ஸ்டாலின் மரியாதை

கண்ணியத் தென்றல் காயிதே மில்லத்தின் 126-ஆம் பிறந்த நாளில் அவர் துயிலிடத்தில் மரியாதை செலுத்தினார். இந்தி ஆதிக்கத்தை எதிர்த்து நின்றவர்; முத்தமிழறிஞர் கலைஞருடன் நெருக்கமான நட்பு பாராட்டிய தமிழ் வீரர்! அவர் வழியில் மதநல்லிணக்கம் காத்து, தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு பாடுபடுவோம்! என தெரிவித்தார்.

 

 

அமெரிக்க வாழ் தமிழ் மக்கள் சார்பில் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.3 கோடி

வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை – அமெரிக்க வாழ் தமிழ் மக்கள் சார்பில் கோவிட் -19 தடுப்பு நடவடிக்கைக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு சுமார் ரூ.3 கோடி வழங்கப்பட்டது. முன்பே ரூ.20 கோடிக்கு பொருட்கள் வழங்கிய இவர்களுக்கு காணொலியில் முதலமைச்சர் மு.க . ஸ்டாலின் அவர்கள் நன்றி கூறினார்.