ஒடிசாவிலிருந்து ரயில் வந்த 80 டன் ஆக்சிஜன் அனைத்தும் டேங்கர் லாரிகளில் நிரப்பும் பணியை அமைச்சர் கே.என் . நேரு ஆய்வு

கோவிட் -19 நோயாளிகளின் சிகிக்சைக்காக ஒடிசா மாநிலம் பிலாயிலிருந்து 80 டன் ஆக்சிஜன், ரயில் மூலம் திருச்சி குட்ஷெட்டுக்கு வந்தடைந்தது. அந்த ஆக்சிஜ னைள் அனைத்தும் டேங்கர் லாரிகளில் நிரப்பப்பட்டு பல்வேறு அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கும் பணியை நேரில் ஆய்வு செய்தார்.

8 மாவட்டங்களில் ஏற்றுமதி நிறுவனங்கள், இடுபொருள் தயாரிப்பு நிறுவனங்களுக்கு மட்டும் கட்டுப்பாடுகளுடன் அனுமதி

பரபரப்புக்கு பஞ்சமில்லாத முத்தூஸ் மருத்துவமனை: கோவிட் -19 சிகிச்சைக்காக வந்த பெண்ணின் 10 சவரன் நகை திருட்டு

கோயம்புத்தூர் சரவணம்பட்டி முத்தூஸ் மருத்துவமனையின் பெயர் ஒரு சில தினங்களாகவே செய்திகள் செய்திதாள்களில் வந்த வண்ணம் உள்ளது.

அதன்வரிசையில் கோவிட் -19 சிகிச்சைக்காக வந்த பெண்ணின் 10 சவரன் நகை மருத்துவமனை லாக்கரில் வைக்கப்பட்ட நகை திருடப்பட்டது. இதுகுறித்து சிசிடிவி காட்சிகளை கொண்டு அங்கு பணிபுரியும் ஊழியர்களிடம் சரவணம்பட்டி காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர்.

வாடகை வாகனங்கள், டாக்சிகள், மற்றும் ஆட்டோக்கள் இ-பதிவுடன் செயல்பட அனுமதி

புகார்கள் அளிக்க: தமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம்


“தமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடங்கப்பட்டுள்ளது. (http://cmcell.tn.gov.in/register.php) என்ற முகவரியில் சென்று தங்களின் புகார்களை அளிக்கலாம். நீங்கள் அளித்துள்ள புகார் சம்பந்தமாக தாங்கள் செய்துள்ள புகார் மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை பற்றியும் நீங்கள் அறிந்து கொள்ளும் வசதியும் செய்யப்பட்டுள்ளது. (http://cmcell.tn.gov.in/login.php) தபால் மூலம் அனுப்பும் புகார்கள்…. Chief Minister’s Special Cell , Secretariat, Chennai – 600 009. Phone Number : 044 – 2567 1764 Fax Number : 044 – 2567 6929 E-Mail : cmcell@tn.gov.in

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, பொள்ளாச்சியில் மரக்கன்றுகளை நட்டனர்


உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, ஆனைமலை புலிகள் காப்பகத்தின் சார்பில் பொள்ளாச்சியில் மரக்கன்றுகள் நடப்பட்டது

தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு : காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதி

கோயம்புத்தூர் அரசு மருத்துவமனையில் நிமிடத்திற்கு 450 லிட்டர் ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் கருவி

கோயம்புத்தூர் அரசு மருத்துவமனையில், கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கென மொத்தம் 1,273 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதில், ஆக்சிஜன் படுக்கைகள், 678, தீவிர சிகிச்சை படுக்கைகள் 213 உள்ளன. பெரும்பாலும், நுரையீரல் பாதிப்புக்குள்ளானவர்கள் அனுமதிக்கப்படுவதால், செயற்கை சுவாச சிகிச்சை இன்றியமையாததாக உள்ளது.


மருத்துவமனையில் ஆக்சிஜன் படுக்கைகள் நிரம்பியுள்ளன. அதேசமயம், ஆக்சிஜனுக்கும் சில நேரங்களில் தட்டுப்பாடு நிலவி வந்தது. இதனை சமாளிக்க, மருத்துவமனையில், ‘அக்வாசப்’ நிறுவனத்தின் மூலம், நிமிடத்திற்கு 450 லிட்டர் ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் திறன் கொண்ட கருவி ஒன்று அமைக்கப்பட்டது. இக்கருவி, நேற்று மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது.