புதுச்சத்திரம் காரைக்குறிச்சிபுதூர் கல்லூரி மாணவி கிணற்றில் விழுந்து சாவு

நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரம் அருகே உள்ள காரைக்குறிச்சிபுதூரை சேர்ந்த முத்துகிருஷ்ணன். இவரது மகள் கார்த்திகா கோயம்புத்தூரில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் இறுதியாண்டு படித்து வந்தார்.


இந்நிலையில் கார்த்திகா நேற்று அவர்களுக்கு சொந்தமான விவசாய கிணற்றில் தவறி விழுந்து இறந்து விட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் புதுச்சத்திரம் காவல்துறை மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. கல்லூரி மாணவி கிணற்றில் தவறி விழுந்து பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

24 மணி நேரமும் குடிநீர் வழங்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அமைச்சர் கே.என். நேரு ஆலோசனை

கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் 24 மணி நேரமும் குடிநீர் வழங்குவதற்கான திட்டப்பணிகளை நேற்று அமைச்சர் கே. என். நேரு ஆய்வு செய்தார். அப்போது தட்டுப்பாடின்றி பொதுமக்களுக்கு குடிநீர் கிடைப்பது தொடர்பாகவும் துறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.


மேலும், இந்நிகழ்வில் உணவுத்துறை அமைச்சர் அர.சக்ரபாணி, வனத்துறை அமைச்சர் க.ராமச்சந்திரன் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

ராகுல்காந்தி: பெட்ரோல் விற்பனை நிலையத்தில் பெட்ரோல் நிரப்பும்போது மோடி அரசால் பணவீக்கம் உயர்வதையும் நீங்கள் பார்க்கப்போகிறீர்கள்

நாட்டில், பெட்ரோல் விலை பல்வேறு நகரங்களில் லிட்டருக்கு 100 ரூபாயை தாண்டி உள்ளது. இதற்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் தனது ‘டுவிட்டர்’ பதிவில், பல மாநிலங்களில் ஊரடங்கு தளர்வு தொடங்கிவிட்டது.


பெட்ரோல் விற்பனை நிலையத்தில் பெட்ரோல் நிரப்பும்போது மோடி அரசால் பணவீக்கம் உயர்வதையும் நீங்கள் பார்க்கப்போகிறீர்கள். வரி வசூல் தொற்று அலைகளும் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன என தெரிவித்துள்ளார்.

சித்தாபுதூர் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் தடுப்பூசி போடும் பணியை அமைச்சர் கே.என். நேரு பார்வை

கோயம்புத்தூர் மாவட்டம் சித்தாபுதூர் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் சுகாதாரத்துறையின் மூலம் நடைபெற்று வரும் தடுப்பூசி போடும் பணியை நேற்று அமைச்சர் கே. என். நேரு பார்வையிட்டார். தடுப்பூசி போட்டுக்கொள்ள பொதுமக்கள் காட்டும் ஆர்வம் மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது.


மேலும், இந்நிகழ்வில் உணவுத்துறை அமைச்சர் அர.சக்ரபாணி, வனத்துறை அமைச்சர் மாண்புமிகு க.ராமச்சந்திரன் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இஸ்ரேலில் 81 சதவீத பேருக்கு இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டதால் இனி பொது மக்கள் முக கவசம் அணிய தேவையில்லை

இஸ்ரேலில் 16 வயதிற்கு மேற்பட்ட 81 சதவீத பேருக்கு இரண்டு தவணை தடுப்பூசி கடந்த ஏப்ரல் மாதம் செலுத்தப்பட்டது. இதையடுத்து, அங்கு மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டன.


இந்நிலையில், கோவிட் -19 பரவல் குறைந்து வரும் நிலையில் பொது இடங்களில் உள்ள உள்அரங்கங்களில் இனி பொது மக்கள் முக கவசம் அணிய தேவையில்லை என அந்த நாட்டு சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கோயம்புத்தூர் மாநகராட்சி கலை அரங்கத்தில் இயங்கி வரும் கட்டுப்பாட்டு அறையை அமைச்சர் கே.என். நேரு ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆர்.எஸ்.புரம் பகுதியில் வாகன நெரிசலை குறைக்கும் விதமாக தானியங்கி முறையில், இயங்கக் கூடிய அடுக்குமாடி வாகன நிறுத்தம் பணிகளை நேற்று பார்வையிட்டு அமைச்சர் கே.என் . நேரு ஆய்வு செய்தார்.


இந்நிகழ்வில் உணவுத்துறை அமைச்சர் அர.சக்ரபாணி, வனத்துறை அமைச்சர் மாண்புமிகு க.ராமச்சந்திரன் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

அமைச்சர் கே.என் . நேரு அடுக்குமாடி வாகன நிறுத்த பணிகளை பார்வையிட்டு ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆர்.எஸ்.புரம் பகுதியில் வாகன நெரிசலை குறைக்கும் விதமாக தானியங்கி முறையில், இயங்கக் கூடிய அடுக்குமாடி வாகன நிறுத்தம் பணிகளை நேற்று பார்வையிட்டு அமைச்சர் கே.என் . நேரு ஆய்வு செய்தார்.


இந்நிகழ்வில் உணவுத்துறை அமைச்சர் அர.சக்ரபாணி, வனத்துறை அமைச்சர் மாண்புமிகு க.ராமச்சந்திரன் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

வேளச்சேரி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அசன் மெளலானா மாநகராட்சி உதவி ஆணையரிடம் கடிதம்


சென்னை, வேளச்சேரி 179 வார்டில் மாநகராட்சி சார்பில் நடைபெற வேண்டிய பணிகள் குறித்த கடிதங்களை உதவி ஆணையர், மண்டலம் 13, அவர்களிடம் வேளச்சேரி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அசன் மெளலானா அவர்கள் வழங்கினார். மேலும், இதன் பணிகளை விரைந்து முடிக்க கோரிக்கை வைத்தார்.

கோவிட் -19 : வறுமை, கடன் தொல்லை – வேலை தேடி கைக்குழந்தையுடன் கால்கடுக்க நடந்தே சென்னை புறப்பட்ட தம்பதி

கோயம்புத்தூர் மதுக்கரை பகுதியை சேர்ந்த ரம்யா நவீன் தம்பதியினர் 1 வயதில் பெண் குழந்தையுடன் சென்னையில் செங்கல் தயாரிக்கும் வேலைக்கு செல்ல நவீன் முடிவு செய்தார். பஸ் போக்குவரத்து வசதி இல்லாததால் அவர் தனது மனைவி மற்றும் குழந்தையுடன் கோயம்புத்தூரில் இருந்து புறப்பட்டு கடந்த 5 நாட்களாக நடந்து வேலூர் வந்துள்ளார்.

இவர்கள் வேலூர் வழியாக நடந்து செல்வதை வேலூர் அரசு கால்நடை அரசு மருத்துவமனை மருத்துவர் ரவிசங்கர் பார்த்து, அந்த தம்பதியிடம் விசாரித்தார். அப்போது நவீன் கூறுகையில், ‘‘எனது பெற்றோர் வயதானவர்கள். தாய்க்கு உடல் நிலை சரியில்லாததால் ரூ.30 ஆயிரம் கடன் வாங்கி மருத்துவம் பார்த்தோம். நாங்கள் வாடகை வீட்டில் வசித்து வருகிறோம். கோவிட் -19 னால் வேலை இல்லாததால் 2 மாத வாடகை கட்ட முடியவில்லை. \

உணவுக்கும் வழியில்லை. கடன் தொல்லை வேறு. இந்த சுழலில் தான் சென்னையில் வேலையுடன் தங்க இடம் கொடுப்பதாக சொன்னார்கள். அதனால் தான் துணிந்து நடந்தே சென்னைக்கு புறப்பட்டோம் என்றார். அவர்களின் நிலை குறித்து அறிந்த டாக்டர், அந்த தம்பதிக்கு செலவுக்கு பணம் கொடுத்து தனது காரில் சொந்த செலவில் அவர்களை சென்னைக்கு அனுப்பி வைத்தார்.

பெரியகுளம் ஸ்மார்ட் சிட்டி பணிகளை பார்வையிட்டு அமைச்சர் கே.என். நேரு ஆய்வு

கோயம்புத்தூர் மாவட்டம் உக்கடம் பெரியகுளத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் ஸ்மார்ட் சிட்டி பணிகளை நேரில் பார்வையிட்டு அமைச்சர் கே.என் . நேரு ஆய்வு செய்தார். மேலும், இதன் பணிகளை விரைந்து முடிப்பது தொடர்பாகவும் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.

இந்நிகழ்வில் உணவுத்துறை அமைச்சர் அர.சக்ரபாணி, வனத்துறை அமைச்சர் மாண்புமிகு க.ராமச்சந்திரன் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.