சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் ஸ்டான்லி மருத்துவமனையில் கரும்பூஞ்சை பிரத்தியேக வார்டு திறப்பு

மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களின் அறிவுத்தலின்படி, சென்னை ஸ்டான்லி அரசு பொது மருத்துவமனையில் கரும்பூஞ்சை பிரத்தியேக வார்டு திறப்பு, சற்று முன் தகவல் பலகை திறப்பு மற்றும் ஆக்சிஜன் செறிவூட்டிகள் துறைமுக பொறுப்பு க்கழகத்திடமிருந்து பெறுதல் போன்ற நிகழ்வுகள் சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் நடத்தி வைத்தார்.

இந்நிகழ்வில் அமைச்சர் மா.சுப்பிரமணியன், அமைச்சர் சேகர் பாபு மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

பொருளாதாரத்தில் நலிந்த கலைஞர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டத்தில் மாதம் ரூ.3000 ஆக உயர்த்தி தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கல்

தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் வாயிலாக பொருளாதாரத்தில் நலிந்த – மேலும் 1000 கலைஞர்களுக்கு மாதந்தோறும் உதவித்தொகை வழங்கும் திட்டத்தில் மாதம் ரூ.3000 ஆக உயர்த்தி தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்.

இத்திட்டத்தால் அகவை முதிர்ந்த செவ்வியல் – கிராமியக் கலைஞர்கள் 6600 பேர் பயன்பெறுவர்கள் என்று தமிழக வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு தெரிவிக்கின்றது.

ஓமந்தூரார் அரசு பொது மருத்துவமனையில் 70 மருத்துவர்களுக்கு சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் பணி ஆணைகள் வழங்கல்

 


தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் அறிவுறுத்தலின்படி, இன்று ஓமந்தூரார் அரசு பொது மருத்துவமனையில் சற்றுமுன் தகவல் பலகை திறப்பு, 70 மருத்துவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கல் மற்றும் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 60 படுக்கைகள் பயன்பாட்டிற்கு கொண்டு வரும் முதலிய பணிகள் சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் மேற்கொண்டார்.

இந்நிகழ்வில் அமைச்சர் மா.சுப்பிரமணியன், அமைச்சர் சேகர் பாபு மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் கரும்பூஞ்சை நோயினால் பாதிக்கப்பட்ட தலைமைக் காவலரை நேரில் சந்தித்து மருத்துவ சிகிச்சை பற்றி கேட்டறிந்தார்

தமிழக காவல்துறையில் பணிபுரியும் தலைமைக் காவலர் புஷ்பராஜ் என்பவர் கரும்பூஞ்சை நோயினால் பாதிக்கப்பட்டு சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் உதவியை நாடினார். உதயநிதி ஸ்டாலின் தலைமை காவலரை மருத்துவமனையில் அனுமதிக்க செய்ததோடு மட்டுமல்லாமல் இன்று நேரில் சென்றும் மருத்துவ சிகிச்சை பற்றி கேட்டறிந்தார்.


இந்நிகழ்வில் அமைச்சர் மா.சுப்பிரமணியன், அமைச்சர் சேகர் பாபு மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

திருப்பூர் ஸ்மார்ட் சிட்டி பணிகளை அமைச்சர் கே.என். நேரு நேரில் பார்வையிட்டு ஆய்வு

தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் அறிவுறுத்தலின்படி, இன்று திருப்பூர் பழைய பேருந்து நிலையத்தில் நடைபெற்று வரும் ஸ்மார்ட் சிட்டி பணிகளை நேரில் பார்வையிட்டு அமைச்சர் கே.என் . நேரு ஆய்வு செய்தார்.

மேலும், பணிகளை விரைவில் முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு அளிக்கவும் துறை சார்ந்த அதிகாரிகளுக்கு உத்தரவிட் டார். இந்நிகழ்வில் உணவுத்துறை அமைச்சர் அர.சக்ரபாணி, வனத்துறை அமைச்சர் க.ராமச்சந்திரன் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

அமைச்சர் மா.சுப்பிரமணியன் கிங் இன்ஸ்டிடியூட் வளாகத்தில் பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனைக்கான இடம் தேர்வு

கலைஞரின் 98-ஆவது பிறந்த நாளையொட்டி தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் ஐந்து அறிவிப்புகளைச் செயல்படுத்துவதற்காக வெளியிட்டு இருக்கிறது. அதில் ஒன்று சென்னைப் பெருநகரத்தில் உள்ள கிங் இன்ஸ்டிடியூட் வளாகத்தில் 250 கோடி ரூபாய் செலவில் 500 படுக்கை வசதிகளுடன் கூடிய பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை ஒன்று அமைக்கப்படும் என தெரிவித்திருந்தார்.


அதன் முதல் கட்ட பணியாக இன்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கிங் இன்ஸ்டிடியூட் வளாகத்தில் 250 கோடி ரூபாய் செலவில் 500 படுக்கை வசதிகளுடன் கூடிய பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனைக்கான இடத்தை தேர்வு செய்யும் பணியை மேற்கொள்ளப்பட்டது

ஊராட்சி மன்ற தலைவரை பதவி நீக்கக் கோரி 8-வார்டு உறுப்பினர்கள் போர்க்கொடி

சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே அம்மம்பாளையம் ஊராட்சி மன்ற தலைவராக இருப்பவர் குமரவடிவேல். இவருடைய பதவி காலத்தில் முறையாக ஊராட்சிக்கு தேவையான வசதிகள் செய்து தரவில்லை மட்டுமின்றி தற்போது அதிகரித்து வரும் கோவிட் -19 தடுப்பு பணிக்கான பிளீச்சிங் பவுடர் சரியாக தெளிக்க வில்லை ஆகையால் கோவிட் -19 பரவ வாய்ப்பு உள்ளது.

மேலும் துண்டு பிரசுரம் முதலான பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த படவில்லை என்று பல்வேறு குற்றச்சாட்டுகள் இவர் மீது எழுந்துள்ளது. இவர் மீது புதிய கட்டிடம் கட்டுவதற்கு முறையான அனுமதி கொடுக்காமல் முறைகேடு, 13 சேகோ பேக்கரிகள் இயங்கி வருகிறது இவற்றிற்கு முறையாக கட்டிட வரி தொழில் மற்றும் வரி வசூலிக்காமல் இருந்து வருகிறார்.

சேகோ பேக்கரிகள் மூலம் ஆண்டிற்கு ரூ.25 லட்சம் வரி வசூல் செய்ய வேண்டும் ஆனால் சேகோ பேக்கரி உரிமையாளர்கள் பலர் இவருடைய உறவினர் என்பதால் வரிவசூலில் மெத்தனம் காட்டி வருகிறார். அதேபோல இந்த பகுதியில் பருத்தி விதை நிறுவனங்கள் கட்டிட வரி தொழில் வரி முறையாக வசூலித்தால் 10 லட்சம் ரூபாய் வசூலிக்க வேண்டும். ஆனால் இவருடைய சுயலாபத்திற்காக அம்மம்பாளையம் ஊராட்சிக்கு வரி இழப்பு ஏற்படுத்தியுள்ளார்.

அம்மம்பாளையம் ஊராட்சியில் 13 குடி நீர் டேங் உள்ளது. மாதம் ஒருமுறை சுத்தம் செய்யாமல் மூன்று மாதத்திற்கு ஒரு முறை சுத்தம் செய்வதால் நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. புதிய பைப்புகள் போடாமல் பழைய பைப் போட்டு ஓட்டை அடைத்து போலி ஆவணங்கள் தயார் செய்து வருகிறார். இதனால் அம்மம்பாளையம் ஊராட்சிக்கு பலகோடி இழப்பு நேரிடுகிறது . இந்த முறைகேடுகளை வைத்து அவர் மீது நடவடிக்கை எடுத்து தலைவர் பதவி நீக்க வேண்டி மாவட்ட ஆட்சியரிடம் மற்றும் ஆத்தூர் பிடிஒ விடம் புகார் அளித்துள்ளனர் . வார்டு உறுப்பினர்கள் 8 பேர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளார்.

தி.மு.க. சார்பில் முன்கள பணியாளர்கள், ஏழை, எளியோருக்கு காய்கறிகள், முட்டை அடங்கிய தொகுப்பு வழங்கில்


கரூர் மேற்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் பொறுப்பாளர் சேகர் என்கிற குணசேகரன் கலந்து கொண்டு, முன்கள பணியாளர்கள், ஏழை, எளியோர்கள் உள்பட 3,500 பேருக்கு காய்கறிகள், முட்டை அடங்கிய தொகுப்புகளை வழங்கினார். இதில் மாவட்ட ஒன்றிய, பேரூர், கிளை கழக பொறுப்பாளர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

அரசு மருத்துவமனையில் குவித்து வைக்கப்பட்டும் மருத்துவ கழிவுகளால் பொதுமக்கள் பீதி

கிருஷ்ணகிரியில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை கோவிட் -19 சிறப்பு சிகிச்சை மையம் இயங்கி வருகிறது. இந்த சிறப்பு சிகிச்சை மையத்தில் 200-க்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சை பெற்று வருகிறார்கள். வழக்கமாக கோவிட் -19 வார்டில் பயன்படுத்தப்படும் மருத்துவ உபகரணங்கள், முக கவசங்கள், கையுறைகள் உடனுக்குடன் அகற்றப்படுவது வழக்கம்.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக மருத்துவ கழிவுகள் மூட்டைகளாக கட்டப்பட்டு கோவிட் -19 வார்டுக்கு வெளியே வைக்கப்பட்டுள்ளது. அந்த வழியாக பிற நோயாளிகளும் செல்கிறார்கள். இதனால் மருத்துவமனைக்கு வருபவர்களுக்கு தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே மருத்துவ கழிவுகளை உடனடியாக அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக சரோஜ்குமார் தாக்கூர் பொறுப்பேற்பு

நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பணியாற்றி வந்தவர் சக்தி கணேசன். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இடமாற்றம் செய்யப்பட்டார்.


இந்நிலையில் நாமக்கல் மாவட்ட புதிய காவல் கண்காணிப்பாளராக சென்னை சைபர் கிரைம் பிரிவில் பணியாற்றி வந்த காவல் கண்காணிப்பாளர் சரோஜ்குமார் தாக்கூர் நியமிக்கப்பட்டார். இவர் நேற்று நாமக்கல் வந்து பொறுப்பு ஏற்றுக்கொண்டார்.