எஸ்டிபிஐ கட்சி ஆட்டோவை கயிறால் கட்டி இழுத்து ஆர்ப்பாட்டம்

கோயம்புத்தூரில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் ஆட்டோவை கயிறால் கட்டி இழுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பெட்ரோல், டீசல் விலை நாளுக்கு நாள் உயர்ந்துகொண்டே செல்கிறது. கிட்டத்தட்ட லிட்டர் ஒன்றுக்கு ரூ.100ஐ எட்டும் தூரத்தில் உள்ளன.

இதனால் நடுத்தர மக்கள் மிகவும் சிரமத்துக்கு ஆளாகின்றனர். அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயர்ந்து கொண்டே செல்கிறது. இந்நிலையில், இன்று நாடு முழுவதும் பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து எஸ்டிபிஐ கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.

திருநங்கையர்களுக்கு தலா ரூ 2000 வழங்கும் நிகழ்ச்சி அமைச்சர் செந்தில் பாலாஜி துவக்கி வைத்தார்


தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் அறிவுறுத்தலின்படி, மூன்றாம் பாலினர்களுக்கு கொரோனா பேரிடர் காலத்தில் உதவும் வகையில்,‌ சேலம் மாவட்டத்தில் உள்ள 603 திருநங்கையர்களுக்கு தலா ரூ 2000 வழங்கும் நிகழ்ச்சி இன்று அமைச்சர் செந்தில் பாலாஜி துவக்கி வைத்தார்.‌‌

திமுக சார்பில் ஒருங்கிணைந்த அவசர செயற்குழு கூட்டம்

மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்களின் தலைமையில் சேலம் மேற்கு மாவட்ட பொறுப்பாளர் டி.எம்.செல்வகணபதி அவர்களின் முன்னிலையில் சேலம் ஒருங்கிணைந்த மாவட்ட அவசர செயற்குழு கூட்டம் கலைஞர் மாளிகையில் உள்ள வீரபாண்டியார் அரங்கில் நடைபெற்றது.

சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.SR.பார்த்திபன், தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினர் DNV.செந்தில்குமார், மாநில தேர்தல் பணிக்குழு செயலாளர் வீரபாண்டி ஆ.ராஜா, மாநில தகவல் தொழில்நுட்ப அணி துணைச்செயலாளர் தருண் மற்றும் ஒன்றிய, பேரூர், நகர, மாநகர, பகுதி‌கழக செயலாளர்கள், தலைமை செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள், சார்பு அணி நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மக்கள் நல்வாழ்வு துறையின் கீழ் இயங்கும் அமைப்புகளில் செயல்பாடுகள் குறித்து அமைச்சர் ஆய்வு


தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகம், தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கம் உள்ளிட்ட மக்கள் நல்வாழ்வு துறையின் கீழ் இயங்கும் அமைப்புகளில் செயல்பாடுகள் குறித்து அமைச்சர் மா. சுப்பிரமணியன் ஆய்வுகள் மேற்கொண்டார்.

ஆதிவாசி குழந்தைகளின் கல்வியில் அக்கறைகாட்டுங்கள் தலைமை ஆசிரியர்களுக்கு அமைச்சர் உத்தரவு


கோயம்புத்தூர் மாவட்டம் வால்பாறையில் அரசு பள்ளிகளில் நேற்று தமிழக பள்ளிகல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் ஆய்வு செய்தார் அப்பொழுது அடிப்படை வசதிகள் குறித்தும் தேவைகள் குறித்தும் ஒரு அறிக்கை தருமாறு கேட்டுக்கொண்டார்.


பின்னர் ஆதிவாசி, மற்றும் பழங்குடியினர் குழந்தைகளின் கல்வியில் கூடுதல் அக்கறை செலுத்த ஆசிரியர்களுக்கு உத்தரவிட்டார்.

மாவட்ட ஆட்சியரை நேரில் சென்று பாராட்டிய வனத்துறை அமைச்சர்

கோயம்புத்தூர் மாவட்டத்தில் யானைகள் வழிதட பாதுகாப்பிற்க்காகவும், கோயம்புத்தூர் மாவட்டத்தில் 1049 ஹெக்டர் நிலங்களை காப்பு நிலங்களாக அறிவித்ததற்க்காகவும் வனத்துறை அமைச்சர் கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அவர்களை பாராட்டி பரிசு புத்தகம் அளித்தார்.

இதே போல் சிறப்பாக செயல்பட்ட கோயம்புத்தூர் மாவட்ட வனத்துறை அலுவலர் வெங்கடேஷ்யையும் பாராட்டினார். இதில் திமுக மாவட்ட பொறுப்பாளர்கள், சேனாதிபதி, கார்த்தி மற்றும் பலர் கலந்துகொண்டனர் .

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி எடமலைப்பட்டிபுதூர் செல்வகாளியம்மன் குளம் தூர்வாரும் பணி தீவிரம்

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி எடமலைப்பட்டிபுதூர் செல்வகாளியம்மன் குளத்தினை தூர்வாரும் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

விவசாயம் மற்றும் குடிநீர் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில், மழைக் காலத்திற்கு முன்னதாகவே இதன் பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

1049 ஹெக்டேர் நிலத்தை மீட்டு யானை வழித்தடமாக கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் மொத்தம் 69,000 ஹெக்டேர் கொண்டதாக வனப்பகுதி கோயம்புத்தூர் வனக்கோட்டம் அமைந்துள்ளது.

இந்நிலையில் கூடுதலாக 1049 ஹெக்டேர் நிலம் சேர்க்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.. மேட்டுப்பாளையம், ஆனைமலை, பொள்ளாச்சியில் 1049 ஹெக்டேர் நிலம் மீட்கப்பட்டுள்ளது. இதன்மூலம் கோயம்புத்தூர் வனக்கோட்டம் 70,049-ஆக அதிகரித்துள்ளது.

ஓலையூரில் நேரடி கொள்முதல் நிலையம் அமைச்சர் கே. என். நேரு தொடங்கி வைத்தார்

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மணிகண்டம் ஒன்றியத்தில் உள்ள ஓலையூரில் விவசாயிகள் பயன்பெரும் வகையில் நேரடி கொள்முதல் நிலையத்தை அமைச்சர் கே. என். நேரு தொடங்கி வைத்தார்.

இதன் மூலம் விவசாயிகள் நிலங்களில் விளைந்த விளை பொருட்களை இடைத்தரகர்கள் இன்றி அரசே நேரடியாக கொள்முதல் செய்யும் என்பதை தெரிவித்தார்.

சேலம் இரும்பாலையில் “இரண்டாவது கொரோனா சிகிச்சை மையம்” அமைச்சர் செந்தில் பாலாஜி திறப்பு


தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் அறிவுறுத்தலின்படி, சேலம் இரும்பாலை வளாகத்தில் கூடுதலாக 500 ஆக்சிஜன் படுக்கை வசதி கொண்ட “இரண்டாவது கொரோனா சிகிச்சை மையம்” இன்று அமைச்சர் செந்தில் பாலாஜி திறந்து வைத்தார்.‌‌ மொத்தம் 1000 ஆக்ஸிஜன் படுக்கைகள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.