கரூர் நகராட்சி பெரிய குளத்துப்பாளையம் 2வது வார்டில் வசிக்கும் பாப்பாயம்மாள் அவர்கள் முதியோர் உதவித்தொகை வேண்டி அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்களிடம் மனு அளித்தார். அம்மனு மீது உடனடியாக தீர்வு காணப்பட்டு ஆணை வழங்கினார்.
Author: rajaram
கழிவுநீர் மற்றும் குடிநீர் பராமரிப்பு பணிகளை ஹசன் மௌலானா துவக்கி வைத்தனர்
வேளச்சேரி உதயம்நகரில் சென்னை மெட்ரோ குடிநீர் சார்பில் கழிவுநீர் மற்றும் குடிநீர் பராமரிப்பு பணிகளை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கப்பாண்டியன், வேளச்சேரி சட்டமன்ற உறுப்பினர் ஹசன் மௌலானா ஆகியோர் துவக்கி வைத்தனர்.
இப்பகுதியில் நீண்டகால பிரச்சனைகளான பைப்லைன் மூலம் குடிநீர் வழங்குதல் கழிவுநீர் உந்தி நிலையம் அமைப்பது ஆகிவைகளை சரிசெய்து தர கோரிக்கை வைத்தனர்.
கரூர் நகராட்சி மக்கள் சபை நிகழ்ச்சி மூலம் பொது மக்களின் குறைகள் மனு பெறும் நிகழ்ச்சி
சென்னை வேளச்சேரியில் புதிதாக அமைக்கப்பட்ட மின்மாற்றி திறப்பு
மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை பணியாளர்களின் ஒருநாள் சம்பளம் கொரோனா நிவாரண நிதி
ஓ. பன்னீர்செல்வம் ட்விட்டர்: தனியார் மருத்துவமனைகளில் பயன்படுத்தாமல் உள்ள தடுப்பூசி மருந்துகளை தமிழ்நாடு அரசு பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்
மக்கள் நீதி மய்ய புதிய நிர்வாகிகள் நியமனம்…!
சட்டசபைத் தேர்தல் தோல்விக்குப் பிறகு, மக்கள் நீதி மய்யம் கடசியில் இருந்து மகேந்திரன், சந்தோஷ் பாபு, முருகானந்தம் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் விலகினர். இதையடுத்து, மக்கள் நீதி மய்யம் கட்சியை வலுப்படுத்தத் தேவையான மாற்றங்களைச் செய்வேன் என கமல்ஹாசன் கூறி இருந்தார்.
இந்நிலையில், இன்று நடந்த இணையவழிக் கலந்துரையாடலில் கமல்ஹாசன் உரையாற்றினார். அப்போது, கட்சி உறுப்பினர்களும், நிர்வாகிகளும் தங்களது உடல்நலனில் முழு கவனம் செலுத்த வேண்டும். தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்கள் உடனடியாகத் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டியது மிகவும் அவசியம்.
மண், மொழி, மக்கள் காக்க களம் கண்ட நமது கட்சியை வலுப்படுத்தவும், நமது கொள்கைகளை, செயல் திட்டங்களை மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்கவும் சில புதிய நியமனங்களைச் செய்திருக்கிறேன். அதன்படி, கட்சியின் தலைவர் எனும் பொறுப்புடன் கூடுதலாகக் கட்சியின் பொதுச் செயலாளர் எனும் பொறுப்பினையும் ஏற்றுப் பணியாற்ற இருக்கிறேன்.
புதிதாக இரு அரசியல் ஆலோசகர்கள், இரண்டு துணைத் தலைவர்கள், மூன்று மாநிலச் செயலாளர்கள், நிர்வாகக் குழுவில் மேலும் ஒரு உறுப்பினர், நற்பணி மன்ற ஒருங்கிணைப்பாளர் ஆகிய பதவிகளுக்கு நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், சில அறிவிப்புகள் இனிவரும் நாட்களில் வெளியாகும்.
புதிய நியமனங்கள்
1. பழ.கருப்பையா – அரசியல் ஆலோசகர்
2. பொன்ராஜ் வெள்ளைச்சாமி – அரசியல் ஆலோசகர்
3. ஏ.ஜி.மவுரியா – துணைத் தலைவர் – கட்டமைப்பு
4. தங்கவேலு – துணைத் தலைவர் – களப்பணி மற்றும் செயல்படுத்துதல்
5. செந்தில் ஆறுமுகம் – மாநிலச் செயலாளர் – தகவல் தொழில்நுட்பம் & செய்தித் தொடர்பு
6. சிவ.இளங்கோ – மாநிலச் செயலாளர் – கட்டமைப்பு
7. சரத்பாபு – மாநிலச் செயலாளர் – தலைமை நிலையம்
8. ஸ்ரீப்ரியா சேதுபதி – நிர்வாகக் குழு உறுப்பினர்
9. ஜி.நாகராஜன் – நற்பணி இயக்க ஒருங்கிணைப்பாளர்
மக்கள் சேவைக்காக வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொண்ட தலைமைப் பண்புமிக்க இவர்களை என்னோடு சேர்ந்து நீங்களும் வாழ்த்தி வரவேற்பு செய்யுங்கள். முழு ஒத்துழைப்பை நல்குங்கள். இவர்கள் உங்களோடு சேர்ந்து உழைத்துக் கட்சியினை வலுவாக்குவார்கள். உள்ளாட்சித் தேர்தல் விரைவில் நடைபெற இருக்கிறது. அதற்கு நாம் தயாராக வேண்டும்”.என கமல்ஹாசன் தெரிவித்தார்.
சோதனைச்சாவடியில் காவல்துறையினரை தாக்கும் இளைஞர்கள்…
மதுரை மாவட்டம். உசிலம்பட்டி அருகே நல்ல தேவன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள் முத்துமாணிக்கம், ரஞ்சித், காளிதாஸ் உள்ளிட்ட ஆறு பேரும் உசிலம்பட்டி அருகே உள்ள விருவீடு காவல் நிலைஅய சோதனைச்சாவடி அருகே இருசக்கர வாகனத்தில் வந்தனர். அப்போது அவர்களின் இருசக்கர வாகனம் காவல்துறை அமைத்திருந்த சோதனைச்சாவடி பேரிகார்டு மீது மோதியது.
இந்நிலையில், அங்கிருந்த காவல்துறையினர் அந்த இளைஞர்களை தடுத்து நிறுத்தி விசாரணை மேற்கொண்டனர். அப்போது எதிர்பாராதவிதமாக காவல்துறையினருக்கும் அந்த இளைஞர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு இருவரும் மோதிக் கொள்ளும் சூழ்நிலை உருவானது.
உடனடியாக, அங்கிருந்த காவலர் ஒருவர் அருகில் இருந்த வீட்டில் இருந்து உருட்டுக்கட்டை எடுத்து வந்தார். அதேநேரத்தில் இளைஞர் ஒருவர் அருகில் இருந்த தென்னம் மட்டை, மற்றும் கற்களை எடுத்து காவல்துறையினரை தாக்கத் தொடங்கினார்.
இதனையடுத்து, காவல்துறையினரும் அந்த இளைஞர்களை தடுத்துள்ளனர். இருதரப்பினரும் மாறி மாறி தாக்கிக் கொண்டனர். இந்நிலையில் காவல்துறையினரை மீது தாக்குதல் நடத்தி இளைஞர்கள் முத்துமாணிக்கம், ரஞ்சித், காளிதாஸ் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்த காவல்துறை அவர்களை கைது செய்தனர்.
முதலமைச்சர் மு.கஸ்டாலின் அறிவிப்பு: ஒலிம்பிக்கில் தங்கம் வெல்லும் தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர்களுக்கு ரூ.3 கோடி
நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் விளையாட்டு வீரர்களுக்கான கொரோனா தடுப்பூசி முகாமை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார், 18,000 வீரர்களில் 10 ஆயிரம் பேர் தடுப்புசி போட்டுக்கொண்ட நிலையில் மீதி உள்ளவர்களுக்கு தடுப்பூசி போடப்படுகிறது.
ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் 6 விளையாட்டு வீரர்களுக்கு தலா ரூ. 6 லட்சம் ஊக்கத்தொகையும் முதலமைச்சர் வழங்கியுள்ளார். தொடர்ந்து முதலமைச்சர் மு.கஸ்டாலின் பேசும் போது, விளையாட்டு வீரர்களை ஊக்குவிப்பதில் தமிழக அரசு உறுதியாக உள்ளது. அரசியலை விளையாட்டாக எடுத்து கொள்பவர்கள் இந்த நாட்டில் உள்ளனர். தற்போதைய சூழ்நிலையில் விளையாட்டை கூட விளையாட்டாக எடுத்துக் கொள்ளக்கூடாது.
விளையாட்டு போட்டிகளில் அணி ஒற்றுமை மிகவும் முக்கியமானது வீரர்களுக்கு தனி திறமை இருந்தாலும் களத்தில் ஓரணியாக செயல்பட்டால் வெற்றி சாத்தியம். வீரர்களுக்கு உடல் திறனும், மன திடமும் இருக்க வேண்டும். ஒலிம்பிக்கில் தங்கம் வெல்லும் தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர்களுக்கு ரூ.3 கோடி, வெள்ளி வெல்பவர்களுக்கு ரூ.2 கோடி, வெண்கலம் வென்றால் ரூ.1 கோடி பரிசுத் தொகை வழங்கப்படும் என கூறினார்.
சைதை ஏ.சந்தோஷ் திமுகவில் இணைந்தார்
சைதாப்பேட்டை பகுதி அஇஅதிமுக, பகுதி செயலாளரும், முன்னாள் மாமன்ற உறுப்பினருமான சைதை ஏ.சந்தோஷ் அவர்கள் நேற்று மாலை அண்ணா அறிவாலயத்தில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்களின் முன்னிலையில், தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் திமுகவில் இணைந்தார்.
இந்த நிகழ்ச்சியில் சைதை மேற்கு பகுதிக்கழக செயலாளர் எம்.கிருஷ்ணமூர்த்தி உடனிருந்தார்.