ஏழைப்பெண்களுக்கு திருமண நிதியுதவி அமைச்சர் மா. மதிவேந்தன் அவர்கள் வழங்கினார்

நாமக்கல் மாவட்டம் ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் சார்பாக நடைபெற்ற நிகழ்ச்சியில் ஏழைப்பெண்களுக்கு திருமண நிதியுதவியுடன் திருமங்கலியத்திற்கு தங்கத்தினை சுற்றுலாத்துறை அமைச்சர் மா. மதிவேந்தன் அவர்கள் நேற்று வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள் கு.பொன்னுசாமி. பெ .ராமலிங்கம் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா பி சிங் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கமல்ஹாசன்: மூன்று குரங்கு சின்னங்களாக சினிமா, ஊடகம், கல்வி இருக்காது

மத்திய அரசு. ஒளிப்பதிவு (திருத்த) சட்ட வரைவு 2021-ஐ பொதுமக்கள் கருத்திற்காக வெளியிட்டு உள்ளது. இது பொதுமக்களின் பார்வைக்காக ஜூலை 2 வரை இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், இந்த வரைவு மசோதாவிற்கு எதிராக மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் தனது அவரது டுவிட்டர் பதிவில்,

கண், வாய், காதுகளை மூடிக் கொண்டு இருக்கும் இந்தியாவின் மூன்று குரங்கு சின்னங்களாக ஒரு போதும் சினிமா, ஊடகம் மற்றும் கல்வி இருக்காது. அதன் சுதந்திரத்தை நசுக்கப் பார்த்தால் அது மிகப்பெரிய பாதிப்பையே உண்டாக்கும். இந்த சட்டத்திருத்தை எதிர்த்து அனைவரும் குரல் கொடுக்க வேண்டும்” என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் செந்தில்பாலாஜி: நத்தம் விஸ்வநாதன் புதிய மின் திட்டம் குறித்து Google கூட விடை சொல்ல தவிக்கிறது

மின்துறை அமைச்சராக நத்தம் விஸ்வநாதன் இருந்த போது, மக்கள் துவைத்த துணிகளை மின் கம்பியில் காயப்போடும் அளவுக்கு 18 மணிநேரம் வரை மின்வெட்டு இருந்தது.

இதைத் தீர்க்க விஸ்வநாதன் எதாவது புதிய மின் திட்டம் தொடங்கினாரா என தேடிப்பார்த்தால், Google கூட விடை சொல்ல தவிக்கிறது.

சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கறிஞர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணியை உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

சென்னை உயர்நீதி மன்றத்தில் தமிழக வழக்கறிஞர்கள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தும் பணியை திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.


இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் பி.கே.சேகர்பாபு, மா. சுப்பிரமணியன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

கமலஹாசன்: பி.வி.நரசிம்மராவ் ‘இந்தியப் பொருளாதார மறுமலர்ச்சியின் தந்தை’ என்று புகழாரம்


கமலஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் வடக்கிலேயே மையம் கொண்டிருந்த இந்தியத் தலைமை, 1991ல்தான் தெற்குக்கு வழிவிட்டது. பி.வி.நரசிம்மராவ் பிரதமரானார். ‘இந்தியப் பொருளாதார மறுமலர்ச்சியின் தந்தை’ என்று பெயர் பெற்றவரின் நூற்றாண்டு நிறைவில் அவரை நினைவுகூர்வோம் என தெரிவித்துள்ளார்.

கொரோனா தடுப்பூசி முகாமை அமைச்சர் கே.கே. எஸ். எஸ். ஆர். ராமசந்திரன் பார்வை

விருதுநகர் மாவட்டம், சாத்தூர் வட்டம், நத்தத்துப்பட்டி சமுதாயக் கூடத்தில் நடைபெற்ற கொரோனா தடுப்பூசி முகாமில் தடுப்பூசி செலுத்தும் பணியை நேற்று அமைச்சர் கே.கே. எஸ். எஸ். ஆர். ராமசந்திரன் பார்வையிடடார்.

அகத்தீஸ்வரர் திருக்கோயிலுக்கு சொந்தமான 2.02 ஏக்கர் நிலம் மீட்பு

தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி, சென்னை-குரோம்பேட்டை அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயிலுக்கு சொந்தமான 2.02 ஏக்கர் நிலத்தினை சில தனிநபர்கள் புல எண்களை மாற்றி விற்பனை செய்து, அந்த நபர்கள் மேற்படி நிலத்தினை ஆக்கிரமித்து வந்த நிலையில் ஆக்கிரமிப்பாளர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொண்டு ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு திருக்கோயில் வசம் இன்று கொண்டு வரப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் உட்பட அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

குறு, சிறு தொழில்களுக்கு கடன் கொடுத்து அவர்களை மீட்பதற்கு வங்கிகள் தயங்குகிறார்கள்

காங்கிரஸ் முன்னாள் நாடாளு மன்ற உறுப்பினர் பா. சிதம்பரம் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில்,குறு, சிறு தொழில்களுக்கு கடன் கொடுத்து அவர்களை மீட்பதற்கு வங்கிகள் தயங்குகிறார்கள் அரசின் பேச்சு அதிகம், செயல்பாடு குறைவு என்பதை இந்த ஆய்வு தெளிவாகப் புலப்படுத்துகிறது

ஆர்.கே நகர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் திறப்பு

 


ஆர்.கே நகர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை திறந்து வைத்து பொதுமக்கள், மாற்றுத்திறனாளிகள், ஒளி-ஒலி அமைப்பு தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி, நேரு நகர் பகுதி மக்களின் நீண்டநாள் கோரிக்கையான இரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணிகளை கழக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அவர்களுடன் ஆய்வு மேற்கொண்டார்.

இந்தநிகழ்ச்சியில் அமைச்சர்கள் பி.கே.சேகர்பாபு, மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

K. பிச்சம்பட்டி ஊராட்சி‌ மன்ற‌த் தலைவர் அபிராமி வேலுசாமி திமுகவில் இணைந்தார்


கரூர் மாவட்டம், தாந்தோணி கிழக்கு ஒன்றியம் K. பிச்சம்பட்டி ஊராட்சி‌ மன்ற‌த் தலைவர் அபிராமி வேலுசாமி மற்றும் அரவக்குறிச்சி கிழக்கு ஒன்றியம் புங்கம்பாடி ஊராட்சி மன்றத் தலைவர் P. மாரியப்பன் அதிமுகவிலிருந்து விலகி இன்று கரூர் கலைஞர் அறிவாலயத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி முன்னிலையில் திமுகவில் இணைத்துக் கொண்டனர்.