பிரியங்கா காந்தி அகிலேஷ் யாதவ் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார்

பிரியங்கா காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் திரு. அகிலேஷ் யாதவ் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். கடவுள் உங்களை ஆரோக்கியமாக வைத்து நீண்ட ஆயுளைக் கொடுப்பார் என தெரிவித்துள்ளார்.

ப. சிதம்பரம் ட்விட்டர்: 2020-2021 ஆம் ஆண்டில் மோடி அரசு மற்றும் எல்பிஜி விலைகள்

சென்னை கிண்டி கிங் இன்ஸ்டியூட்டில் மருத்துவர் தின பாராட்டு விழா

தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்அவர்கள் தேசிய மருத்துவர் தினத்தை முன்னிட்டு கொரோனா பெருந்தொற்று பேரிடர் காலத்தில் மகத்தான பணிபுரிந்த மருத்துவர்களின் சேவைதனை சிறப்பிக்கும் விதமாக, பாராட்டு விழா சென்னை கிண்டி கிங் இன்ஸ்டியூட்டில் நடைபெற்றது,

காவல்துறையினரின் மனிதாபிமானம் – பொதுமக்கள் பாராட்டு

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்த கணவரின் இறுதிச்சடங்கை செய்ய முடியாமல் தவித்த மூதாட்டிக்கு காவல்துறை இறுதி மரியாதையுடன் நல்லடக்கம் செய்தது அப்பகுதியில் நெகழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமைச்சர் மா. மதிவேந்தன் தனது ட்விட்டர் பக்கத்தில் மருத்துவர்கள் தின நல்வாழ்த்துகள்

அமைச்சர் மா. மதிவேந்தன் தனது ட்விட்டர் பக்கத்தில் மருத்துவம் இல்லாமல் மானுடம் இல்லை! மக்களின் உயிர்காக்க, நாட்டின் நலம் காக்க உழைக்கும், உழைத்துகொண்டிருக்கும் மருத்துவர்கள், செவிலியர்கள், ஏன் துப்புரவு/ தூய்மைப்பணியாளர்கள், தன்னார்வலர்கள் அனைவருக்கும் “இந்திய மருத்துவர்கள் நாள் வாழ்த்துக்கள்” என தெரிவித்துள்ளார்.

இலங்கை அகதிகள் முகாமில் அடிப்படைத் தேவைகள் குறித்து மனு

திண்டுக்கல் மாவட்டம் – திண்டுக்கல் ஊராட்சி ஒன்றியம் தோட்டனூத்து இலங்கை அகதிகள் முகாமில் மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ .பெரியசாமி அவர்களுடன் முகாம்களில் வசிப்பவர்களிடம் அடிப்படைத் தேவைகளை குறித்து கேட்டறிந்து மனுக்களை பெற்றோம். இந்தநிகழ்ச்சியில் I.P. செந்தில், M.P. வேலுசாமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

டி.டி.வி தினகரன் மருத்துவர்கள் தின நல்வாழ்த்துகள்

டி.டி.வி தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில் மக்களின் உயிர்காக்கும் மருத்துவர்கள் அனைவருக்கும் இனிய மருத்துவர்கள் தின நல்வாழ்த்துகள்.

கொரோனா போன்ற பேரிடர் நேரங்களில் தன்னலம் பாராது களத்தில் நின்று பணியாற்றும் மருத்துவர்கள் என்றைக்கும் போற்றத்தக்கவர்கள். “மருத்துவம் தொழில் அல்ல; சேவை” என்பதை உணர்ந்து செயல்படும் மருத்துவர்கள் அனைவரையும் வணங்கி, வாழ்த்தி மகிழ்ந்திடுவோம்! என தெரிவித்துள்ளார்.

பி.சாய்நாத் அவர்களுக்கு ஜப்பானின் ஃபுகுவோகா கிராண்ட் என்ற உயரிய விருது

கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் இந்திய கிராமங்களின் மறுமலர்ச்சிக்கு அயராது செயல்பட்டு வந்த பி.சாய்நாத் அவர்களுக்கு ஜப்பானின் உயரிய விருதான ஃபுகுவோகா கிராண்ட் அளிக்கப்பட்டுள்ளது பெருமைக்குரியது. அவருக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் என தெரிவித்துள்ளார்.

‘ ஒற்றை தலைமை வழிநடத்த, ஒன்றரை கோடி தொண்டர்களின் தூயர் தீர்க்க.. என்ற வாசகத்துடன் மதுரையில் போஸ்டர்கள்

ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியும் 35 ஆண்டுகளுக்கும் மேலான அதிமுகவின் நிழலுமான வி.கே. சசிகலா தினந்தோறும் தொண்டர்களிடம் உரையாடி வருகிறார். இந்நிலையில், இன்று அ.தி.மு.க புறநகர் கிழக்கு மாவட்ட மகளிர் அணி துணைச் செயலாளர் சுஜாதா (எ) ஹர்ஷினி சார்பில் ‘ ஒற்றை தலைமை வழிநடத்த, ஒன்றரை கோடி தொண்டர்களின் தூயர் தீர்க்க, கட்சியை துரோகிகளிடம் இருந்து காப்பாற்ற வரும் அம்மாவின் மறு உருவமே சின்னம்மா’ என்ற வாசகத்துடன் மதுரை மாவட்டம் முழுவதிலும் போஸ்டர்கள் ஒட்டியுள்ளார்.

மதுரையில் முதன்முறையாக சசிகலாவிற்கு ஆதரவாக மாவட்ட கவுன்சிலர் ஒருவர் போஸ்டர் ஒட்டியதைத் தொடர்ந்து இன்று மீண்டும் அ.தி.மு.க நிர்வாகிகளிடையே மிகுந்த பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மருத்துவர் பரபரப்பு வாக்குமூலம்: கட்டாயப்படுத்தியதால் நடிகைக்கு கருக்கலைப்பு செய்ததாக தகவல்

முன்னாள் அ.தி.மு.க. அமைச்சர் மணிகண்டன் மீது நடிகை சாந்தினியை திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றி பாலியல் பலாத்காரம் செய்ததாக அளித்த புகாரில் அடையாறு அனைத்து மகளிர் காவலதுறை 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இந்நிலையில், தலைமறைவாக இருந்த மணிகண்டன் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது.

இதையடுத்து, பெங்களூரூ பண்ணை வீட்டில் பதுங்கி இருந்த போது கடந்த 20-ந் தேதி தனிப்படை காவலதுறை அவரை கைது செய்து சென்னை அழைத்து வந்தனர். அவரிடம் இருந்து செல்போனை ஆய்வு செய்தபோது, நடிகையுடன் அந்தரங்கமாக இருந்தற்கான ஏராளமான ஆதாரங்கள் இருந்ததாக கூறப்படுகிறது.

பின்னர் அவரை சைதாப்பேட்டை கோர்ட்டில் ஆஜர்படுத்திய நிலையில், வருகிற ஜூலை 2-ந் தேதி வரை நீதிமன்ற காவலில் சைதாப்பேட்டை கிளைச்சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் கட்டாயப்படுத்தியதால் தான் நடிகைக்கு கருக்கலைப்பு செய்ததாக கோபாலபுரம் தனியார் மருத்துவமனை மருத்துவர் அருண் காவலதுறையில் வாக்குமூலம் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.