மூக்கடைப்பு, மூக்கில் இருந்து சளியுடன் ரத்தம் கலந்து வருதல், கண் வீக்கம், முக வீக்கம், கண் சிவப்பாக மாறுதல், தலைவலி, பல்வலி முதலியன கருப்பு பூஞ்சை நோய்யின் அறிகுறிகள் ஆகும்.
Author: rajaram
அரசு பள்ளியின் பூட்டை உடைத்து பாட புத்தகங்கள் திருட்டு
சென்னை பல்லாவரம் அடுத்த அனகாபுத்தூரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். அந்த பள்ளியின் ஒரு அறையில் மாணவர்களுக்கு இலவசமாக வினியோகம் செய்ய பாடப்புத்தகங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.
நேற்று பள்ளியை தலைமை ஆசிரியை திறந்து பார்த்த போது, அங்கு அடுக்கி வைக்கப்பட்டிருந்த மாணவர்களின் 6-ம் வகுப்பு பாட புத்தகங்கள் 140 திருடு போயிருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
வி.கே. சசிகலா: நம்பியவர்களே எனக்கு இப்படி ஒரு துரோகம் செய்வாங்கனு கனவுல கூட நினைக்கல. இப்படியெல்லாம் நடக்கும்னு நினைச்சுகூட பார்க்கவில்லை
ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியும் 35 ஆண்டுகளுக்கும் மேலான அதிமுகவின் நிழலுமான வி.கே. சசிகலா தினந்தோறும் தொண்டர்களிடம் உரையாடி வருகிறார். இந்நிலையில், தொண்டரிடம் பேசிய ஆடியோவை வி.கே. சசிகலா வெளியிட்டுள்ளார். அதில் வி.கே. சசிகலா அ.தி.மு.க.வில் கட்சியில தொண்டர்கள் தேர்வு செய்பவரே தலைமைக்கு வரமுடியும். அம்மா ஆட்சியை மீண்டும் கொண்டு வருவோம்.
நம்பியவர்களே எனக்கு இப்படி ஒரு துரோகம் செய்வாங்கனு கனவுல கூட நினைக்கல. இப்படியெல்லாம் நடக்கும்னு நினைச்சுகூட பார்க்கவில்லை. நம்ம கட்சி இப்படி சீரழியுறதை பாக்க முடியல. கண்டிப்பா வந்து கட்சியை நல்ல நிலைமைக்கு கொண்டு வருவேன். கட்சியை அம்மா போல நானும் வழிநடத்துவேன். இது ஒரு சத்திய சோதனை. தொண்டர்கள் துணையோட அதை வென்று காட்டுவேன் எனத் தெரிவித்துள்ளார்.
வி.கே. சசிகலா: தலைவர் மறைவுக்கு பிறகு பிரிஞ்ச 2 அணிகளை ஒரு கட்சியா இணைக்க நான் எவ்வளவோ பாடுபட்டிருக்கேன் _நான் நிச்சயம் வெற்றி அடைஞ்சு காட்டுவேன்
ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியும் 35 ஆண்டுகளுக்கும் மேலான அதிமுகவின் நிழலுமான வி.கே. சசிகலா தினந்தோறும் தொண்டர்களிடம் உரையாடி வருகிறார். இந்நிலையில், தொண்டரிடம் பேசிய ஆடியோவை வி.கே. சசிகலா வெளியிட்டுள்ளார்.
அதில் வி.கே. சசிகலா இந்த கட்சிக்கு இப்போ ஒற்றுமைதான் வேணும். தலைவர் மறைவுக்கு பிறகு பிரிஞ்ச 2 அணிகளை ஒரு கட்சியா இணைக்க நான் எவ்வளவோ பாடுபட்டிருக்கேன். அப்படி ஒரு நிலைமைதான் இப்போவும் ஏற்பட்டிருக்கு. இதுலயும் நான் நிச்சயம் வெற்றி அடைஞ்சு காட்டுவேன் எனத் தெரிவித்துள்ளார்.
கொரோனா தடுப்பூசிக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய அரசு பள்ளி மாணவர்கள்
திருச்சி மாவட்டம், மருங்காபுரி ஒன்றியப்பகுதி ஊனையூரில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியர் சற்குணன் தலைமையில் இருபால் ஆசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் பொதுமக்களிடையே தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொண்டனர்.
பெரிய அட்டையில் ஊசி போன்ற வடிவத்தை உருவாக்கி அதை ஊர்வலமாக எடுத்துச் சென்றனர். அப்போது மாணவி ஒருவர் மருத்துவர் போல வேடமணிந்து கலந்து கொண்டார்.
பெரம்பலூர் மாவட்டத்தில் சிறுபான்மையினர் கடனுதவி பெற விண்ணப்பிக்கலாம்
பெரம்பலூர் மாவட்டத்தில் தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் தனிநபர் கடன், சுய உதவிக்குழுக்களுக்கான சிறுதொழில் கடன், கைவினை கலைஞர்களுக்கு கடன், மாணவ- மாணவிகளுக்கான கல்விக்கடன் திட்டம் ஆகிய கடன் திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளது. திட்டம் 1-ன் கீழ் பயன்பெற குடும்ப ஆண்டு வருமானம் நகர்ப்புறமாயின் ரூ.1 லட்சத்து 20 ஆயிரத்துக்கு மிகாமலும், கிராமப்புறமாயின் ரூ.98 ஆயிரத்துக்கு மிகாமலும் இருக்க வேண்டும். திட்டம் 2-ன் கீழ் பயன்பெற குடும்ப ஆண்டு வருமானம் ரூ.8 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
திட்டம் 1-ன் கீழ் தனிநபர் கடன் ஆண்டிற்கு 6 சதவீத வட்டி விகிதத்திலும் அதிகபட்ச கடனாக ரூ.20 லட்சமும், திட்டம் 2-ன் கீழ் ஆண்களுக்கு 8 சதவீதம், பெண்களுக்கு 6 சதவீதம் வட்டி விகிதத்திலும் அதிகபட்ச கடனாக ரூ.30 லட்சமும் வழங்கப்படுகிறது. கைவினை கலைஞர்களுக்கு ஆண்களுக்கு 5 சதவீதம், பெண்களுக்கு 4 சதவீத வட்டி விகிதத்தில் அதிகபட்ச கடனாக ரூ.1 லட்சம் கடன் வழங்கப்படுகிறது. சுய உதவிக்குழுக் கடன் நபர் ஒருவருக்கு ரூ.1 லட்சம் ஆண்டிற்கு 7 சதவீத வட்டி விகிதத்தில் வழங்கப்படுகிறது.
திட்டம் 2-ன் கீழ் ஆண்களுக்கு 8 சதவீதம், பெண்களுக்கு 6 சதவீத வட்டி விகிதத்தில் நபர் ஒருவருக்கு ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் கடன் வழங்கப்படுகிறது. எனவே, பெரம்பலூர் மாவட்டத்தில் வசிக்கும் கிறிஸ்தவ, இஸ்லாமிய, சீக்கிய, புத்த, பார்சி மற்றும் ஜெயின் ஆகிய சிறுபான்மையினர் கடன் விண்ணப்பங்களை பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம் மற்றும் கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் அலுவலகம், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி, நகர கூட்டுறவு வங்கிகள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் பெற்று, அதனை பூர்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம் என தெரிவித்துள்ளார்.
சீசன் முடிந்தும் தண்ணீர் கொட்டும் ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி
நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை வளப்பூர் நாடு ஊராட்சியில் பிரசித்தி பெற்ற அரப்பளீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. அரப்பளீஸ்வரர் கோவில் அருகே சுமார் 300 அடி உயரத்தில் இருந்து வெள்ளியை உருக்கி விட்டது போல தண்ணீர் கொட்டும் ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது.
இந்த நீர்வீழ்ச்சியில் கடந்த மாதம் பெய்த தொடர் மழையால் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. இதையடுத்து தற்போது மழை ஓய்ந்து சீசன் முடிந்தபோதும், மலையில் உள்ள நீர்ப்பிடிப்பு பகுதியால் ஆகாயகங்கை நீர்வீழ்ச்சியில் தண்ணீர் கொட்டுகிறது.
மயிலாடுதுறை மாவட்டத்தில் சுற்றித்திரியும் மனநலம் பாதித்தவர்களை காப்பகத்தில் ஒப்படைப்பு
திருச்சி மத்திய மண்டல ஐ.ஜி. பாலகிருஷ்ணன் உத்தரவின்பேரில் மயிலாடுதுறை மாவட்டத்தில் சுற்றித்திரியும் மனநலம் பாதித்தவர்களை காப்பகத்தில் ஒப்படைப்பு பணி நடந்தது.
தன்னார்வலர்கள் உதவியுடன் மயிலாடுதுறை, சீர்காழி ஆகிய நகரங்களிலும், திருக்கடையூர், வைத்தீஸ்வரன் கோவில் ஆகிய கோவில் பகுதிகளிலும் சுற்றித்திரிந்த மனநலம் பாதித்த 8 பேரும் சீர்காழியில் உள்ள காப்பகம் ஒன்றில் சேர்க்கப்பட்டனர்.
தபால் நிலையங்களில் குவியும் மாணவர்கள்
என்ஜினீயரிங், கலைக்கல்லூரி மற்றும் டிப்ளமோ படிக்கும் மாணவர்களுக்கு கொரோனா பரவல் காரணமாக ஆன்லைன் மூலம் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு ஆன்லைன் தேர்வு எழுதும் மாணவர்கள் தங்களது விடைத்தாள்களை அன்றைய நாட்களில் இணையதளம் மூலம் அனுப்புவதோடு, விரைவுத் தபால் மூலமும் மாணவர்கள் பயிலும் கல்லூரிகளுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தற்போது ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்டு, தபால் நிலையங்கள் திறக்கப்பட்டதை தொடர்ந்து கடந்த சில நாட்களாக மாணவர்கள் தங்களது விடைத்தாள்களை மாவட்ட கல்லூரிகள் மட்டுமின்றி சென்னை உள்ளிட்ட பல்வேறு வெளி மாவட்ட கல்லூரிகளுக்கும் அனுப்பி வைத்து வருகிறார்கள். இதனால் இங்கு மாணவர்களின் கூட்டம் அதிகமாக இருக்கிறது.
சசிகலா தற்போது எடுத்துவரும் அரசியல் நிலைபாட்டை வரவேற்கும் விதமாக சுவரொட்டிகள்
ஈரோடு மாவட்டம் பெருந்துறை ஒன்றிய அ.தி.மு.க. மாணவர் அணியின் முன்னாள் பொருளாளர் பாலகிருஷ்ணன் தற்போது அ.தி.மு.க.வில் இருந்து வருகிறார். சசிகலா தற்போது எடுத்துவரும் அரசியல் நிலைபாட்டை வரவேற்கும் விதமாக அவருக்கு ஆதரவு தெரிவித்து பாலகிருஷ்ணன் பெருந்துறை நகர் முழுவதும் சுவரொட்டி ஒட்டியுள்ளார்.