நீலகிரி மாவட்டம் குன்னூர் வட்டாரத்திற்கு உட்பட அனைத்து கர்ப்பிணி பெண்களும் இலவச ஸ்கேன் வசதி செய்து கொள்ளும் வகையில் குன்னூர் ஓட்டுப்பட்டரை அமைந்துள்ள அரசு நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் மெட் மீம்ஸ் இன்ஃபர்மேட்டிக்ஸ் நிறுவனம் சார்பாக மகேஷ் நைத்தானி வழங்கிய அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் இயந்திரத்தை நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா அவர்கள் துவங்கி வைத்தார்.
Author: rajaram
‘வலிமை’ படப்பிடிப்பிற்கு ரஷ்யா சென்ற அஜித் ரஷ்ய குடும்பத்துடன் சின்னதா ஒரு கிளிக்..!
பாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூர் தயாரிப்பில் இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்த, ‘நேர்கொண்ட பார்வை’ படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்ததால், இந்த படத்தை தொடர்ந்து போனி கபூர் தயாரிப்பில் மற்றும் எச்.வினோத் அஜித்துடன் இணைந்துள்ள இரண்டாவது படமான ‘வலிமை’ குறித்து, ரசிகர்கள் மத்தியில் ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள் நிலவி வருகிறது.
இந்த படத்தின் அஜித்துக்கு ஜோடியாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘காலா’ படத்தில், ரஜினிகாந்தின் முன்னாள் காதலியாக நடித்த பாலிவுட் நடிகை ஹூமா குரேஷி நடித்துள்ளார்.மேலும் இந்த படத்தில் யோகிபாபு நகைச்சுவை கதாபாத்திரத்திலும், தெலுங்கு நடிகர் கார்த்திகேயா வில்லனாகவும் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்திற்கு நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார்.
‘வலிமை’ படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பான கடைசி சண்டை காட்சி ஒன்றை மட்டும் படக்குழு, வெளிநாட்டில் படமாக்க முடிவு செய்த நிலையில், கொரோனா பிரச்சனை காரணமாக, அந்த குறிப்பிட்ட சண்டை கட்சியை எடுப்பது தாமதமாகிக்கொண்டே சென்றது. இந்நிலையில் படக்குழுவினர் கடந்த சில நாட்களுக்கு முன் ரஷ்யா சென்றனர். அங்கு ரஷ்யாவில் அஜித் ரசிகர்கள் குடும்பத்துடம் புகைப்படம் எடுத்துக்கொண்டனர் அஜித்தின் ரசிகர்கள் மத்தியில் ஏகப்பட்ட பரபரப்பு நிலவி வருகிறது.
ஆப்கானிஸ்தானில் வீழ்ந்து உருமாறிய தலிபான்கள் கைகளில் இன்று மீண்டும் ஆப்கானிஸ்தான்
இன்று உலகின் பார்வை முழுவதும் தாலிபான்கள் மற்றும் ஆப்கானிஸ்தான் பற்றியது. திரும்பும் திசையெல்லாம் தாலிபான்கள் மற்றும் ஆப்கானிஸ்தான் குறித்த பேச்சுதான். சர்வதேச நாடுகள், ஊடகங்கள் ஆகியவை ஆப்கானிஸ்தானில் நிகழும் அடுத்தடுத்த நிகழ்வை உற்று நோக்கி வருகின்றன. ஊடகங்களில் வெளிவரும் ஒரே செய்தி தாலிபான்களை பற்றியது. ஆப்கானிஸ்தானை விட்டு அமெரிக்கப் படைகள் வெளியேறத் தொடங்கியதும் ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் கைப்பற்ற சில வாரங்கள் ஆகும் என அமெரிக்க உளவுத் துறை கணித்திருந்த நிலையில், ஒரே வாரத்தில் உலகின் ஒட்டுமொத்த கவனத்தையும் தங்கள் பக்கம் திருப்பியுள்ள இந்த தாலிபான்கள் யார்?
ஆப்கானிஸ்தானில் 1978 – 1988 -ஆம் ஆண்டு வரை 10 ஆண்டுகளுக்கு இருந்த ரஷ்யா பல்லாயிரக்கணக்கான ராணுவத்தினரை பறிகொடுத்தது வேறு வழியின்றி 1988ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறியதன் காரணமாக இருந்த தலிபான்களுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக ரஷ்யா தெரிவிக்க காரணம் என்ன? அன்று ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சியின் போது பல புத்தர் சிலைகள் தகர்த்திய தாலிபானுக்கு புத்தரை தெய்வமாக வழிபாடும் சீனா நட்புறவை ஏற்படுத்திக்கொள்ள தயார் என தெரிவிக்க காரணம் ?
அமெரிக்காவுக்கும் பல்வேறு நாடுகளை உள்ளடக்கியதாக இருந்த சோவியத் யூனியனுக்கும் இடையே மறைமுக யுத்தம் உச்சத்தில் இருந்த காலம். ஆப்கானிஸ்தானில் இடது சாரிகள் கம்யூனிஸ்ட் 1978-இல் சோவியத் யூனியன் ஆதரவுடன் அரசை அமைத்தனர். ஒரே ஆண்டில் அந்த அரசு கவிழ்க்கப்பட்டு ஆப்கானிஸ்தானுக்குள் நுழைந்த சோவியத் படைகளுக்கு அப்போது சோவியத் யூனியனுக்கு எதிராக ‘தலிபான்’ என்ற மாணவர்கள் அமைப்பினரைப் போர் புரிய அமெரிக்க ஆதரவுடன் உருவாக்கி சோவியத் யூனியனுக்கு தலைவலியைக் கொடுக்க அமெரிக்கா உருவாக்கியது,
1994 ஆண்டு முல்லா முகமது ஓமர் மற்றும் அவரது மாணவர்களால் பாகிஸ்தான் ஆதரவுடன் உலகை குலைநடுங்க வைக்கும் அமைப்பு பிறந்தது கொரில்லா தாக்குதளுக்கு சொந்தக்காரர்களான தலிபான்கள் ஆப்கானிஸ்தானின் தென்பகுதியில் நிலை கொண்டிருந்த தலிபான்களை பாகிஸ்தான் ஆதரித்து, அரவணைத்தது. பாகிஸ்தானில் பயின்றவர்கள் தலிபான் இயக்கத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். தலிபான்கள் படிப்படியாக தங்களது எல்லையை விரிவுபடுத்தி 1988இல் தலைநகர் காபூலை கைப்பற்றினர்.
தலிபான் அமைப்பின் தலைவர் முல்லா முகமது ஓமார் 1996 முதல் 2001 வரை ஆப்கானித்தான் ஆட்சி செய்தார்கள். அப்போது தொலைக்காட்சி, திரைப்படம் என அனைத்துக்கும் தடை ஷரியத் சட்டங்கள் தீவிரமாக அமல்படுத்தியது. மேலும் ஆண்கள் கட்டாயம் தாடி வளர்க்க வேண்டும் அதேபோல பெண்கள் கட்டாயம் முகத்தை மூட வேண்டும், பெண்கள் கல்வி கற்கவோ, வேலைக்கு செல்லவோ கூடாது. கார் ஓட்டக்கூடாது, வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது, போன்ற கடுமையான சட்டங்கள் மட்டுமின்றி, பொதுவெளியில் குற்றவாளிகளுக்கு தண்டனை என தாலிபான்கள் ஆட்சி காலத்தில் நடைமுறையில் இருந்தது.
இதற்கும் ஒரு படி மேலே சென்று 2001ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தானின் இருந்த புத்தர் சிலைகளை தலிபான்கள் வெடிவைத்து தகர்த்தினர். அமெரிக்காவிடம் இருந்து பொருளுதவி பெற்று உருவான தலிபான்கள் 2001ம் ஆண்டு செப்டம்பர் 11ம் தேதி அமெரிக்காவில் உலக வர்த்தக மையம், பெண்டகன், வாஷிங்டன், பென்சில்வானியா ஆகிய இடங்களில் அல்கொய்தா வான்வழி தாக்குதலை நடத்தியத்தில் 2,700க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். அல்கொய்தா தலைவர் ஒசாமா பின்லேடன் இந்த தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டது மட்டுமின்றி தாலிபான்கள் கட்டுப்பாட்டில் இருந்த ஆப்கானிஸ்தானில் இருந்து அவர் இந்த தாக்குதல்களை ஒருங்கிணைத்தார் என அமெரிக்கா குற்றச்சாட்டு வைத்தது.
அதனால் ஒசாமா பின்லேடனை தங்களிடம் ஒப்படைக்கும் படி அமெரிக்கா தாலிபன்களுக்கு அழுத்தம் கொடுத்தது. ஆனால் அமெரிக்காவின் மிரட்டலுக்கு தாலிபன்கள் செவிசாய்க்கவில்லை. அமெரிக்காவின் அல்கொய்தா தாக்குதலுக்கு பின்னர் தீவிரவாத நடவடிக்கைகளை வேரோடு அழிக்க உறுதியேற்ற அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட நாடுகளுடன் தீவிரவாதிகளை அழிக்க நடவடிக்கையே கையில் எடுத்தது. அமெரிக்காவில் தாக்குதல் நடைபெற்ற ஒரு மாதத்திற்குள்ளாகவே அமெரிக்கா மற்றும் அதன் நேசப் படைகள் ஆப்கானிஸ்தான் மீது படை எடுத்தன.
அல்கொய்தாவுக்கு தாலிபான்கள் உதவி செய்வதை தடுத்து நிறுத்தவும் ஆப்கானிஸ்தானை தங்களின் புகழிடமாக அல்கொய்தா பயன்படுத்துவதை தடுக்கவுமே அந்நாட்டின் மீது படை எடுத்ததாக அமெரிக்கா தெரிவித்தது. ஆப்கானிஸ்தானில் ஜனநாயக அரசு அமைக்க ஆதரிப்பதாகவும் பயங்கரவாத அச்சுறுத்தலை ஒழிப்பதாகவும் அமெரிக்கா உறுதியளித்தது. 2001 டிசம்பரில் ஆப்கானிஸ்தானின் பெரும்பாலான தலைவர்கள் ஜெர்மனியின் “பொன்” நகரில் கூடி ஆராய்ந்து, “ஹமீது கர்சாய்” ஆப்கானிஸ்தான் இடைக்கால அரசின் இயக்குநராகத் தேர்வு செய்யப்பட்டார்.
2003 ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தான் புதிய அரசியல் அமைப்பு உருவாக்கப்பட்டு 2004-ல் நடைபெற்ற தேசிய அளவிலான தேர்தலில் ஹமீது கர்சாய் அதிபராகத் தேர்ந்தெடுக்கபட்டார். ஆப்கானிஸ்தானுக்கு பாதுகாப்பு வழங்கும் நடவடிக்கையை நேட்டோ கூட்டுப்படையினர், அமெரிக்கா தலைமையில் மேற்கொண்டனர். மறுபுறம் பல குழுக்களாக பிரிந்த தாலிபன் போராளிகள் மீண்டும் அணி சேர்ந்தனர். அதன் பிறகு மிகவும் கொடூரமான வகையில் தாலிபன்கள் ஆப்கானிஸ்தானில் தாக்குதல்களை நடத்தினர்.
ஆனால் அமெரிக்கா ஆப்கானிஸ்தானில் எதற்காக முகாமிட்டதோ ( அமெரிக்கா நடத்திய வான் தாக்குதலில் ஒசாமா பின்லேடன், முல்லா முகமது உமர் பலியானார்) அதை கச்சிதமாக முடித்து கொண்டது. இதையடுத்து, அமெரிக்காவுக்கும் தலிபான்களுக்கும் இடையே அமைதிப் பேச்சுவார்த்தையில் 2020ஆம் ஆண்டு பிப்ரவரி – 2021ஆம் ஆண்டு செப்டம்பர் 11க்குள் அனைத்து அமெரிக்க படைகளும் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறும் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவித்தார்.
நேட்டோ சர்வதேச படைகள் ஆப்கானிஸ்தானின் பாதுகாப்பை அந்நாட்டு ராணுவத்திடம் ஒப்படைத்து விட்டு தங்களுடைய போர் பணியை முடித்துக் கொண்டன. நேட்டோ சர்வதேச படைகள் பல ஆண்டுகளாக ஆப்கானிஸ்தானின் ராணுவத்திற்கு எவ்வளவே நவீன ஆயுதங்களையும் பயிற்சியும் கொடுத்து ஆப்கானிஸ்தானிய ராணுவத்தை சீட்டு கட்டு போல அடுக்கி வைத்திருந்தது. ஆனால் தாலிபான்கள் ஒரே வாரத்தில் பயம் என்ற ஆயுதம் கொண்டு ஒட்டுமொத்த சீட்டு கட்டையும் சிதறடித்தது. அதன் விளைவு ஆப்கானிஸ்தான் இன்று தாலிபான் கைகளில்…
தலைநகர் டெல்லியில் இன்னும் எத்தனை நிர்பயாக்கள் கொடூரமாக மரணிக்கப் போகிறார்கள்..!?
பெண்களை தெய்வமாக மதிக்கும் நாடு என்று கூறிக் கொள்ளும் இந்தியாவில், பண்பாடு , ஆன்மீகம் , மனித உரிமை , பெண் உரிமை என என்னதான் பேசித்திருந்தாலும் , இந்தியாவில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நாளுக்கு அதிகரித்த வண்ணமே உள்ளது. மத்திய அரசு மற்றும் டெல்லி அரசு சார்பில் பாலியல் வன்கொடுமை, பாலியல் துன்புறுத்தலுக்கு எதிராக கடும் சட்டங்கள் இயற்றப்பட்டுள்ள போதிலும், குற்றங்கள் குறையாத நிலையே தொடர்ந்து கொண்டே செல்வது உலக அரங்கில் இந்தியாவிற்கு தலைகுனிவு ஏற்படுத்துகிறது.
தெற்கு டெல்லியின் பதர்பூர் பகுதியிலுள்ள பொது கழிவறை அருகே 6 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு பிறகு சிறுமியின் கழுத்தை நெறித்து கொலை செய்ய முயன்றது, டெல்லியில் 35 வயது பெண் ஒருவர் ஓடும் காரில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கபட்டுள்ள சம்பவம் என டெல்லியில் நடைபெற்ற சம்பவங்களை அடுக்கிக்கொண்டே போகலாம்.
நம் நாட்டின் தலைநகரம் டெல்லியில் கடந்த 2012ஆம் ஆண்டு, 23 வயதான பிசியோதெரபி மாணவி தனது ஆண் நண்பருடன் பேருந்தில் வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தபோது கூட்டு பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு அவருடைய நண்பரும் கொடூரமாக தாக்கப்பட்டார். பிறகு இருவரும் பேருந்தில் இருந்து சாலையோரத்தில் வீசி எறியப்பட்டனர். இந்த சம்பவத்தில் நிர்பயா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இப்போது கொடூரமாகக் கொல்லப்பட்டிருப்பது காவல்துறை அதிகாரி மார்பகங்கள் வெட்டப்பட்டு, அந்தரங்க உறுப்புகள் சிதைக்கப்பட்டு 50 இடங்களில் கத்தியால் குத்தப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டிருக்கிறார்.
கடந்த மாதம் டெல்லி கன்டோன்மென்ட் பகுதியிலுள்ள பழை நாங்கல் கிராமத்தைச் சேர்ந்த குடியிருப்புப் பகுதியில் 9 வயது சிறுமி தனது குடும்பத்தாருடன் வசித்து வந்தார். அந்த சிறுமி குடியிருப்புப் பகுதிக்கு அருகே உள்ள தர்காவுக்கு முன்பாக விளையாட செல்வதாக கூறினார். ஆனால், ஐந்து நிமிட நடை தூரத்திலு ள்ள இடுகாட்டு வளாகத்தில் நிறுவப்பட்டுள்ள குளிரூட்டும் குடிநீர் குழாயில் தண்ணீர் பிடித்து வருமாறு சிறுமியை பெற்றோர் கேட்டுக் கொண்டனர். பெற்றோர் பேச்சுக்கு மறுப்பேதும் கூறாமல் தண்ணீர் தொட்டிக்கு சென்று குடிநீர் எடுக்கச் சென்ற 9 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டது பெற்றோர் மற்றும் நாடே வீதியில் நின்று நீதி கேட்டு போராடி பிறகு குற்றவாளிகள் பிடிபட்டது நாடறிந்தது.
கடந்த மாதம் டெல்லியை உலுக்கிய சம்பவம் மக்களின் மனதில் மறையும் முன்னே டெல்லி சங்க விஹார் பகுதியைச் சேர்ந்த இளம் பெண்ணுக்கு காவல்துறையில் பணிபுரிய வேண்டும் என்ற நீண்ட நாட் கனவு சில மாதங்களுக்கு முன்புதான் நனவானது கிழக்கு டெல்லியின் உள்ள சிவில் டிபென்ஸ் காவல்துறை அலுவலகத்தில் வேலை செய்து வந்த நிலையில் கடந்த மாதம் 27ஆம் தேதி அவர் மாயமானார். வேலைக்குச் சென்று விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த அந்த காவல்துறை அதிகாரியை மர்ம நபர்கள் சிலர் கடத்தி சென்று கொலை செய்து விட்டு உடலை வீசி விட்டு சென்று விட்டனர்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த கிழக்கு டெல்லி காவல்துறை இளம்பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துவிட்டு, சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினார்கள். பெண் காவல்துறை அதிகாரியின் சடலத்தை மீட்ட கிழக்கு டெல்லி காவல்துறை இளம்பெண்ணின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவரின் பிரேதப் பரிசோதனை அறிக்கையில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டது தெரியவந்துள்ளது.
முதற்கட்ட விசாரணையில் கொல்லப்பட்ட பெண்ணுடன் வசித்துவந்ததாகக் கூறப்படும் நிஜாமுதீன் என்பவர்மீது காவல்துறைக்குச் சந்தேகம் எழவே, நிஜாமுதீனை விசாரணை வளையத்துக்குள் கொண்டுவந்தனர். ஆனால், காவல்துறை தன்னைத் தேடுவது தெரிந்து தலைமறைவான நிஜாமுதீன் பின்னர், இளம்பெண்ணைக் கொலை செய்த வழக்கில் குற்றத்தை ஒப்புக்கொண்டு காவல் நிலையத்தில் சரணடைந்தார்.
பெண் காவல்துறை போலீஸ் அதிகாரியின் பெற்றோர் தனது மகள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில், சிபிஐ விசாரணை தேவை என்று கோரிக்கை விடுத்துள்ளனர். வெளிச்சத்திற்கு வந்த நிர்பயா பாலியல் வழக்கு முதல் தற்போது நடந்த 21 வயது சபியா என்ற சிவில் டிபென்ஸ் காவல்துறை அதிகாரி கூட்டுபாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு, மார்பகங்கள் வெட்டப்பட்டு, அந்தரங்க உறுப்புகள் சிதைக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கிறார் என்கிற செய்தியைப் படிக்கவே பயங்கரமாக உள்ளது. கூட்டு பாலியல் மற்றும் கொலை வழக்கு வரை தலைநகர் டெல்லி நடந்துள்ள பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நாளுக்கு அதிகரித்த வண்ணமே உள்ளது. அதன் தலைநகரிலேயே பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பது வருத்தமளிக்கக் கூடிய ஒன்று.
தமிழகத்தின் புதிய கவர்னர் ஆர்.என்.ரவிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
தமிழக கவர்னராக புரோகித் பதவி வகித்து வந்த பன்வாரிலால் புரோகித் சமீபத்தில் பஞ்சாப் மாநில கவர்னர் பதவி கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டது. இந்நிலையில் பன்வாரிலால் புரோகித் பஞ்சாப் கவர்னராக நியமிக்கப்பட்டு, தமிழகத்திற்கு புதிய கவர்னராக ஆர்.என்.ரவியை நியமனம் செய்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நேற்று உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில், தமிழகத்தின் புதிய கவர்னராக நியமிக்கப்பட்ட ஆர்.என்.ரவிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவரது டுவிட்டர் பக்கத்தில், தமிழ்நாட்டின் கவர்னராக நியமிக்கப்பட்டிருக்கும் மாண்புமிகு ஆர்.என்.ரவி அவர்களுக்கு எனது வணக்கமும் வாழ்த்தும்! தங்களது வருகை தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும் வளத்துக்கும் ஊக்கமளிப்பதாக இருக்கட்டும்!. தங்களை தமிழ்நாடு வரவேற்கிறது!. என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்தெரிவித்துள்ளார்.
கோவிஷீல்ட் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு அரிதாக நரம்பு கோளாறு ஏற்பட வாய்ப்பு
உலகம் முழுவதும் கடந்த 2 ஆண்டு காலமாக தனது கைப்பிடிக்குள் வைத்து படாதபாடு படுத்தி வரும் கொரோனா வைரஸ். உலகில் வாழும் ஏழை எளிய நடுத்தர மக்களை உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் வாட்டி வதைத்து வருகின்றது. உலகில் நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் டெல்டா வகை கொரோனா பாதிப்பினால் தடுமாறி வரும் நிலையில், ஆல்பா, பீட்டா, கப்பா என பலவகையில் உருமாறி பரவி வருகின்றன.
உலகம் முழுவதும் கொரோனாவைக் கட்டுப்படுத்துவதில் தடுப்பு மருந்துகள் பெரும் பங்காற்றி வருகின்றன. கொரோனாவுக்கு எதிராக அவசரத் தேவைகளுக்குப் பயன்படுத்த சில தடுப்பூசிகளுக்கு உலக சுகாதார அமைப்பு அனுமதி அளித்துள்ளது. அஸ்ட்ராஜெனகா அதாவது கோவிஷீல்ட் உலக அளவில் பரவலாகப் பயன்படுத்தப்படும் தடுப்பூசி மற்றும் பைஸர், சிங்கிள் டோஸ் தடுப்பூசிகள் மட்டுமின்றி மாடர்னா, சினோபார்ம், ஸ்புட்னிக்-வி, கோவாக்சின், சினோவேக் தடுப்பூசிகள் அவசரத் தேவைகளுக்காகப் பயன்படுத்த படுகின்றன.
அஸ்ட்ராஜெனகா அதாவது கோவிஷீல்ட் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு ‘கில்லென்-பார்ஸ் சிண்ட்ரோம்’ என்று அழைக்கப்படும் அரிய வகை நோய் பாதிப்பானது நோய் எதிர்ப்பு சக்தியால் நரம்பு மண்டலம் பாதிக்கப்படுவதைக் குறிக்கிறது. மிகவும் அரிதாக நரம்பு கோளாறு ஏற்பட வாய்ப்பிருப்பதாக ஐரோப்பிய மருந்து கட்டுப்பாட்டு கழகம் தெரிவித்துள்ளது.
உலக கோப்பை டி20 இந்திய அணி அறிவிப்பு
ஐக்கிய அரபு அமீரகத்தில் உலக முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் உலக கோப்பை டி20 தொடர் வரும் அக்டோபர் 17ம் தேதி தொடங்கி நவம்பர் 14ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதனை தொடர்ந்து ஐசிசி உலக கோப்பை டி20 தொடருக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது.
இந்திய அணியில் விராத் கோஹ்லி (கேப்டன்), ரோகித் ஷர்மா(துணை கேப்டன்), கே.எல்.ராகுல், சூரியகுமார் யாதவ், ரிஷப் பன்ட் (விக்கெட் கீப்பர்), இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, ராகுல் சாஹர், ஆர்.அஷ்வின், அக்சர் படேல், வருண் சக்ரவர்த்தி, ஜஸ்பிரித் பும்ரா, புவனேஷ்வர் குமார், முகமது ஷமி மற்றும் மாற்று வீரர்கள்: ஷ்ரேயாஸ் அய்யர், ஷர்துல் தாகூர், தீபக் சாஹர் என 15 வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். மேலும் அணியின் ஆலோசகராக முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனியும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மின்வாரிய அலுவலகம் முன்பு தர்ணா நடத்திய வியாபாரி
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி கெஜலட்சுமி நகரைச் சேர்ந்த வேலாயுதம் என்பவர் தனது வீட்டின் முன் பக்கத்தில் இருந்த கடையை காலி செய்துவிட்டு, கடை மின் இணைப்பை வீட்டு இணைப்பாக மாற்றித் தரக்கோரி கட்டணமாக ரூ.118 கட்டி கடந்த 4.1.2021 அன்று மின்வாரிய அலுவலகத்தில் மனு கொடுத்துள்ளார்.
ஆனால் இதுவரை கடைமின் இணைப்பு வீட்டு இணைப்பாக மாற்றி தரப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதுகுறித்து 3 முறை மின்வாரிய அலுவலகத்தில் மனு செய்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் நேற்று புதிய மனுவுடன் மின்வாரிய அலுவலகத்திற்கு வந்து தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
மாட்டு வண்டிகள் மூலம் மணல் அள்ள குவாரி அமைக்க கோரிக்கை
வேலூர் மாவட்டம் குடியாத்தம் பேரறிஞர் அண்ணா நகரம் மற்றும் ஒன்றிய அளவிலான மாட்டு வண்டி தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் சார்பில் குடியாத்தம் உதவி ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர்.. அந்த மனுவில் குடியாத்தம் நகரம் மற்றும் ஒன்றியத்தில் சுமார் 400-க்கும் மேற்பட்ட மாட்டுவண்டிகள் உள்ளன. தற்போது மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக மாட்டு வண்டிகளில் மணல் அள்ள மணல் குவாரிகள் இல்லை. இதனால் இதனை நம்பி உள்ள 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்களும், 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாடுகளும் பசி, பட்டினியுடன் இருக்கிறோம்.
கட்டுமான தொழிலை நம்பியுள்ள தொழிலாளர்களின் வாழ்க்கை கேள்விக்குறியாக உள்ளது. மாடுகள் பட்டினியால் சாகும் நிலை உள்ளது. இதே நிலை தொடர்ந்தால் தொழிலாளர்களான நாங்களும் சாகும் நிலைக்குத் தள்ளப்படுவோம். எங்கள் குடும்பத்தில் பிள்ளைகள் கல்வி, பொருளாதாரம் மிகவும் பாதிக்கப்படுகிறது. ஆகையால் எங்கள் வாழ்வாதாரத்திற்கு அரசு மாட்டு வண்டிகளில் மணல் அள்ள குடியாத்தம் அடுத்த ஒலக்காசி பஞ்சாயத்தில் பாலாற்றில் மணல் குவாரிக்கு அனுமதி வழங்க வேண்டும் என கூறி உள்ளனர்.
தனியார் உரம் விற்பனை நிலையங்களின் உரிமம் ரத்து
சேலம் மாவட்டத்தில் பருவமழை பரவலாக பெய்து வருவதால் அனைத்து விவசாயிகளும் தங்களது தோட்டங்களில் பயிர் சாகுபடி செய்ய முழுவீச்சில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் விவசாயிகளுக்கு தேவையான இடுபொருட்கள் போதிய அளவு இருப்பு உள்ளதா? என்பதை உறுதி செய்ய வேளாண்மை அதிகாரிகள் அவ்வப்போது ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் தனியார் உரக்கடைகளில் உரங்கள் அரசு நிர்ணயித்த விலையை விட கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதை கண்காணித்து தடுக்க ஆத்தூர் மற்றும் தலைவாசல் பகுதிகளில் உள்ள உரம் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்து விற்பனை நிலையங்களில் வேளாண்மை இணை இயக்குனர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்பொழுது உரக்கட்டுப்பாடு விதி மீறல்களில் ஈடுபட்டதாக 2 தனியார் விற்பனை நிலையங்களின் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.