சுதந்திர தினம்: தேசிய தலைவர்களின் படங்களை வரைந்து அசத்தும் மாற்றுத்திறனாளி 10-ஆம் வகுப்பு மாணவன்..!

நாட்டின் 78-வது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடியும், சென்னை புனிதஜார்ஜ் கோட்டையில் முதல்வர் ஸ்டாலினும் தேசியக் கொடியை ஏற்றிவைத்து மரியாதை செலுத்துகின்றனர்.

இந்நிலையில், கடலூர் மாவட்டம், வடலூர் தென்குத்து புதுநகர் அருகே உள்ள ஆர் கே சிட்டி பகுதியில் வசித்து வரும் தம்பதிகளான அருள் பிரகாஷ் -செலின் பெரியநாயகிமேரி இவர்களின் மூத்த மகன் பிரித்விராஜ் வயது 15 மாற்றுத்திறனாளியான இவர் வடலூர் புதுநகரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு பயின்று வருகிறார்.

ஓவியம் வரைவதில் அதிக ஆர்வம் கொண்ட பிரித்விராஜ் தனது சிறு வயது முதலே பல ஓவியங்களை வரைந்து சாதனை படைத்துள்ளார். இந்நிலையில் சுதந்திர தினத்தை முன்னிட்டு சுதந்திர தினத்தை நினைவு கூறும் வகையில் தேசிய தலைவர்கள் மற்றும் சுதந்திர தினம் குறித்த விழிப்புணர்வு ஓவியங்களை வரைந்து அசத்தியுள்ளார் தேசிய தலைவர்களான மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு ,சுபாஷ் சந்திரபோஸ், பகத்சிங், பாபாசாகிப் அம்பேத்கர், திருவள்ளுவர் உள்ளிட்ட தேசிய தலைவர்களின் உருவ படங்களை தத்ரூபமாக வரைந்து அசதியுள்ளார். இதுமட்டுமின்றி, இந்தியா வரைபடம் பாரத மாதா உள்ளிட்ட படங்களும் இதில் இடம் பெற்றுள்ளன.

சுதந்திர தினத்தை முன்னிட்டு சுதந்திர தினத்தை நினைவு கூறும் வகையில் அரசு பள்ளியில் பயிலும் மாற்றுத் திறனாளி மாணவர் ஒருவர் தேசிய தலைவர்களின் படங்களை வரைந்த அசத்தி வருவது பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் சார்பில் பாராட்டுள் குவிந்து வருகின்றது. மேலும் மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரத்திற்கு பல வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்தி வரும் தமிழக அரசு இதுபோன்ற திறமையுள்ள மாற்றுத்திறனாளி மாணவனின் செயலை வெளிப்படுத்த உதவ முன்வர வேண்டும் என்று பொதுமக்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு தமிழ்நாடு கூட்டுறவு வங்கி மூலம் வடலூர் வள்ளலார் குருகுலம் மேல்நிலை பள்ளியில் நடைபெற்ற ஓவியப் போட்டியில் கலந்துகொண்டு கடலூர் மாவட்ட ஆட்சியர் மூலம் சிறந்த ஓவியருக்கான பரிசை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.