Jairam Ramesh : எனது பெயரில் இரண்டு ராம் இருக்கிறது..! அவர்கள் ராமரை வைத்து வியாபாரம் செய்யும் வியாபாரிகள்..!

ராமர் கோயில் கட்டுவதை காங்கிரஸ் கட்சி எதிர்த்தது என்று சத்தீஸ்கரில் நடந்த பாஜக தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பேசும்போது பிரதமர் நரேந்திர மோடி குற்றம் சாட்டினார். இதற்குப் பதில் அளிக்கும் வகையில் ஜெய்ராம் ரமேஷ் பேட்டி அளித்துள்ளார். அதில் , “ஜனவரி 22-ம் தேதி நடைபெற்ற அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேக விழா என்பது அரசியல் நிகழ்வாக மாற்றப்பட்டது. ஒரு அரசியல் நபருக்காக அந்த விழா நடத்தப்பட்டது. அவர்கள் ராமரை வைத்து வியாபாரம் செய்யும் வியாபாரிகள். ஆனால், நாங்கள் ராமரை பூஜிக்கும் பூஜாரிகள்.

இன்று எனது பிறந்த நாள். எனது பெயரான ஜெய்ராம் ரமேஷ் ( Jairam Ramesh) இரண்டிலும் ராம் இருக்கிறது. ஒருவரும் எங்களை ராமருக்கு எதிரானவர்கள் என்று அழைப்பதில்லை. மதத்தை பாஜக அரசியலாக்குகிறது. அரசியலில் மதத்தை கலக்கிறது” என ஜெய்ராம் ரமேஷ் குற்றம் சாட்டினார்.