அமைச்சர் அதிஷி மர்லினாவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்

டெல்லி மதுபான வழக்கில் ஆம் ஆத்மி அமைச்சர் அதிஷி மர்லினா அண்மையில் என்னையும், அமைச்சர் சவுரப் பரத்வாஜ், எம்.எல்.ஏ துர்கேஷ் பதக், எம்.பி. ராகவ் சதா ஆகியோரை கைது செய்ய திட்டமிட்டுள்ளனர். பாஜகவில் சேர வேண்டும், இல்லையெனில் ஒரு மாதத்தில் கைது செய்யப்படுவீர்கள்” என ஒன்றிய பாஜக அரசு மிரட்டல் விடுத்ததாக டெல்லி அமைச்சர் அதிஷி மர்லினா அண்மையில் ஒரு குற்றச்சாட்டை தெரிவித்து இருந்தார்.

அதிஷி மர்லினாவின் இந்த குற்றச்சாட்டு நாடெங்கும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்திய நிலையில், இதுகுறித்து மறுப்பு தெரிவித்த பாஜக, தேர்தல் ஆணையத்திலும புகார் அளித்தது. இந்நிலையில் அதிஷி மர்லினாக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. அதில், “நீங்கள் தேசிய தலைநகர் டெல்லி அரசின் அமைச்சராகவும், ஒரு அரசியல் கட்சியின் தலைவராகவும் இருக்கிறீர்கள்.

தேர்தல் நேரத்தில் வாக்காளர்கள் தங்கள் தலைவர்கள் என்ன சொன்னாலும் அதை நம்புகிறார்கள். தலைவர்கள் வௌியிடும் அறிக்கைகள் பிரசாரங்களை பாதிக்கிறது. உங்கள் கருத்துக்கு ஆதாரம் இருக்க வேண்டும். இதுபற்றி வரும் 8-ம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும்” என தேர்தல் ஆணையம் நோட்டீஸில் குறிப்பிடப்படுள்ளது.