சீமான் ஆவேசம்: பாஜகவிலுள்ள தொண்டர்கள் முதல் தலைவர்கள் வரை அனைவருமே பைத்தியக்காரர்களாக உள்ளனர்..!

திருவள்ளூர் நாடாளுமன்ற நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஜெகதீஷ் சுந்தர் ஆதரித்து சீமான் கும்மிடிப்பூண்டி பஜார் வீதியில் பிரசாரம் செய்தார். அப்போது, பிரதமராக மோடி தேர்வாகிய பின்னர் இரவோடு இரவாக ரூ.1000 செல்லாது என அறிவித்து மக்களை ஆங்காங்கே பிச்சை எடுக்கும் அளவுக்கு தள்ளிவிட்டது பாஜக அரசு. தன்னை பிரதமராக தேர்வு செய்ய பின்பு சுஸ் பேங்கில் உள்ள கருப்பு பணத்தை மீட்டு, ஒவ்வொரு ஏழை மக்களுக்கும் ரூ.15 லட்சம் வழங்கப்படும் என பொய்யான வாக்குறுதிகளையும் கொடுத்து நாட்டையே கெடுத்துவிட்டார்.

இந்தியாவில் ஜிஎஸ்டி கொண்டு வந்ததால் இந்தியாவின் பொருளாதாரம் பின்னோக்கி சென்றது. அதேபோல் சுப்பிரமணிய சுவாமி கூறுவது போல் மோடிக்கும் – நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கும் பொருளாதாரத்தைப் பற்றி ஒரு மண்ணும் தெரியாது. சில மாதங்களுக்கு முன்பு தமிழ்நாட்டில் மிக்ஜாம் புயல் காரணமாக பெருமளவு பாதிக்கப்பட்டது. ஆனால் பிரதமர் மோடி தமிழ்நாட்டிற்கு ஒரு ரூபாய் கூட நிதி வழங்காமல் இருந்தது நிர்மலா சீதாராமன் ரூ.500 கோடி, ஆயிரம் கோடி வழங்கியதாக பொய் சொல்கிறார்.

பாஜகவிலுள்ள தொண்டர்கள் முதல் தலைவர்கள் வரை அனைவருமே பைத்தியக்காரர்களாக உள்ளனர். பின்னர் நிருபர்களை சந்திப்பில், காங்கிரஸ் கட்சியின் வங்கிக் கணக்கு முடக்கியது குறித்த கேள்விக்கு இதிலிருந்து தெரிகிறது, பாஜக அரசு, ஒரு சர்வாதிகா அரசு என்பது. பாஜக இன்னொரு முறை ஜெயித்து வந்தால் தேர்தல் என்பதையே மறந்து விட வேண்டியதுதான். தேர்தல் இல்லாத சர்வாதிகார நாடாக இந்தியா மாறிவிடும் என சீமான் தெரிவித்தார்.