வடலூரில் மாணவர்களுக்கு அரசு சான்றிதழ்ழுடன் கூடிய இலவச பயிற்சி தொடக்கம்

கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி வட்டம், வடலூரில் வடலூர் ரோட்டரி சங்கம் மற்றும் MGM கனரக வாகனங்கள் தொழிற்பயிற்சி நிறுவனமும் இணைந்து 35 மாணவர்களுக்கு அரசு சான்றிதழுடன் கூடிய இலவச பயிற்சிப் படிப்பு துவக்கி வைக்கப்பட்டது. நிகழ்வில் வடலூர் ரோட்டரி சங்கத் தலைவர் P.மகாராஜன் தலைமையில் MGM தொழிற்பயிற்சிப் பள்ளி உரிமையாளர் M. அன்புக் குமார் முன்னிலையில் துவக்கி வைக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு சேர்க்கும் வகையில் ரோட்டரி சங்க மண்டலம் – 18 உதவி ஆளுனர் V.புருஷோத்தமன் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார். மேலும் பொருளாளர் M. உன்னிக் கிருஷ்ணன் மற்றும் சிற்றம்பலம், ஆசிரியரை வினோதினி ஆகியோர் கலந்து கொண்டனர்.