நாட்டின் பதினெட்டாவது மக்களவைத் தேர்தல் 2024 -ஆம் தேர்தல் ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி அதாவது 7 கட்டமாக நடைபெற்று ஜூன் 4 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதன் விளைவாக அரசியல் கட்சிகளின் பிரசாரம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. அதன்வரிசையில், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கேஜ்ரிவால் மனைவி சுனிதா கேஜ்ரிவால் “கேஜ்ரிவாலுக்கு வாழ்த்துகள்” என்ற வாட்ஸ் அப் பிரச்சாரத்தை இன்று அறிவித்துள்ளார்.
இதுகுறித்து சுனிதாகேஜ்ரிவால் வெளியிட்டுள்ள வீடியோ செய்தியில், “இன்றிலிருந்து ‘அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு வாழ்த்துகள்” என்ற ஒரு இயக்கத்தை நாங்கள் தொடங்குகிறோம். இந்த எண்ணின் மூலம் நீங்கள் உங்கள் ஆசீர்வாதங்கள் மற்றும் பிரார்த்தனைகளை சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் கேஜ்ரிவாலுக்கு அனுப்பலாம்” என சுனிதா கேஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.