மோடி முகத்தைப் பார்த்தால் ஓட்டு கிடைக்காது என்பதால் பாஜகவினர் ராமர் முகத்தைகாட்டுகின்றார்கள்…!

சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிந்தனைச் சிற்பி சிங்காரவேலரின் 78-வது நினைவு தினத்தை முன்னிட்டு அவரது சிலைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், இந்தியாவில் சாதி மதவெறி சக்திகள் தலைவிரித்து ஆடுகிறது. ஆட்சியில் அமர்ந்திருக்கின்ற மதவெறி சக்திகள் மீண்டும் ஆட்சிக்கு வருவோம் என்று கொக்கரிப்பது இந்திய மக்களுக்கு ஆபத்தாக மாறிவிடும்.

பாஜக வெற்றி பெற்றால் ஒட்டுமொத்த நாடும் மோசமாக மாறிவிடும். அண்ணாமலை பழைய இரும்பு சாமான் வியாபாரி போல கூவி கூவி விற்றாலும் அவருக்கு தமிழ்நாட்டில் முகவரி இருக்காது. மக்களை பிளவுபடுத்தும் அரசியலை பயன்படுத்தி நாட்டை காப்பாற்றலாம் என்று பாஜக பார்க்கிறது. மோடி முகத்தைப் பார்த்தால் ஓட்டு கிடைக்காது என்பதால் பாஜகவினர் ராமர் முகத்தை காட்டி ஓட்டுகேட்க பார்க்கிறார்கள் என பாலகிருஷ்ணன் பேசினார்.