இரவு நேரங்களில் தனியாக செல்பவர்களை வழிப்பறிக்கும் திருநங்கைகள்… !

திருநங்கைகள், சென்னை அண்ணாநகர், திருமங்கலம் பகுதியில் டிப்-டாப்பாக பைக்கில் வரும் இளைஞர்களை குறி வைத்து அவர்களை வழிமடக்கி ஆசீர்வாதம் செய்வதாக கூறி பணம் பறித்து செல்வதாகவும், அதேபோல தனியாக செல்பவர்களை வழிப்பறி கொள்ளையர்கள் வழிமடக்கி பணம் மற்றும் செல்போன் பறித்து செல்வதாகவும் திருமங்கலம் காவல்துறைக்கு ஏராளமான புகார்கள் வந்தன.

இந்நிலையில், ஐடி ஊழியர் ஒருவரை மடக்கி திருநங்கைகள் பணம் பறித்த சம்பவம் அரங்கேறி உள்ளது. சென்னை, அயனாவரம் பகுதியை சேர்ந்த சுனில், அம்பத்தூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் ஐடி கம்பனியில் வேலை செய்து வருகிறார். சுனில் வேலை முடித்து விட்டு திருமங்கலம் வழியாக பைக்கில் சென்றுள்ளார். அப்போது அவ்வழியாக வந்த திருநங்கைகள் திடீரென வழிமடக்கி ஆசீர்வாதம் செய்துள்ளனர். உடனே, சுனில் அவரது மணிபர்சில் இருந்து 10 ரூபாய் எடுத்து கொடுத்த போது பர்சில் நிறைய பணம் இருப்பதை கண்ட திருநங்கைகள் அந்த பணத்தை பிடுங்கி, ‘நீங்க நல்லா இருப்பீங்க சார்..’ என்று மீண்டும் ஆசீர்வாதம் செய்து விட்டு அங்கிருந்து தப்பிவிட்டனர்.

இதனால், பணத்தை பறிகொடுத்த சுனில் என்ன செய்வது என்று தெரியாமல் திணறினார். இதுபற்றி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அப்போது காவல்துறையினர், ‘‘திருநங்கைகளிடம் பணத்தை பறிகொடுத்தால் திரும்ப வாங்குவதற்கு மிக கடினம். நீங்கள்தான் பாதுகாப்பாக இருக்க வேண்டும்’’ என்று அறிவுரை கூறி, வழக்கு பதிவு செய்து பத்திரமாக வீட்டிற்கு போங்க என்று வழி அனுப்பி வைத்துள்ளனர்.