‘டேட்டிங் கபே’ சிங்களா வந்தால் ஜோடி சேரலாம்..! ஜாலி டேட்டிங்…!

கோயம்புத்தூர் மாவட்டம், சரவணம்பட்டியில் ரிசார்ட் போல் அலங்கரிக்கப்பட்ட டீ, காபி, கேக், குளிர்பானங்கள் விற்கப்பட்டு வரும் பிரபலமான கபே செயல்பட்டு வருகிறது. இந்த கடையில் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு நீங்கள் ஜாலியாக டான்ஸ் ஆடி, டீ காபி குடிக்கலாம், உங்களுடன் இளம் பெண் டான்சர்கள் ஆடுவார்கள், சிங்களா வந்தால் ஜோடி சேரலாம், உங்களுக்கு பிடித்தவர்களை தேர்வு செய்யலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த அறிவிப்பு வைரலாக பரவியது. உள்ளூர், வெளியூர், வெளி மாநிலத்தை சேர்ந்தவர்களும் புக்கிங் செய்து டேட்டிங் போகலாம் என காத்திருந்தனர்.

சரவணம்பட்டி, கோவில்பாளையம், சின்னவேடம்பட்டி என பல்வேறு பகுதியில் இருந்து ஏராளமான ஐடி இளைஞர்கள், வாலிபர்கள் டேட்டிங் கபேக்கு நேரடியாக சென்று எப்படி புக்கிங் செய்வது, டான்ஸ் ஆடும் பெண்கள் யார், தனியாக வரும் பெண்கள் யார்? யார்?, போட்டோக்கள் இருக்கிறதா? என விசாரித்து வந்தனர். இந்த விவரங்களை அந்த பகுதி மக்கள் சரவணம்பட்டி காவல்துறைக்கு தெரிவித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இப்படியே போனால் இந்த ஏரியாவில் வசிக்க முடியாது எனக்கூறி காவல் ஆணையர் அலுவலகத்திற்கும் புகார் தந்தனர்.

சரவணம்பட்டி காவல்துறை டேட்டிங் கபே அறிவிப்பு தந்தவர்களிடம் சென்று விசாரணை நடத்தினார்கள். நியூ இயர் ஜாலிக்காக இப்படி புரோகிராம் செய்திருக்கிறோம், இதில் எந்த தவறும் நடக்காது, முன் கூட்டியே அனுமதி வாங்கியிருக்கிறோம் எனக்கூறியுள்ளனர். இளம்பெண்களை ஆட வைப்பதே தவறு, யார் அனுமதி தந்தார்கள் என காவல்துறை எச்சரித்தனர். மேலும் சமூக வலைதளங்களில் யார் அறிவிப்பு வெளியிட்டது என விசாரித்தனர். அப்போது பெங்களூரில் இருந்து ஒரு பெண் அறிவிப்பு வெளியிட்ட விவரங்கள் தெரியவந்தது. அவர் யார்? என தெரியாத நிலையில் காவல்துறை அவரை தேடி வருகின்றனர்.

இதுகுறித்து கபே நிறுவனத்தினர், நீண்ட காலமாக இங்கே கடை நடத்தி வருகிறோம். புத்தாண்டில் கேக் பார்ட்டி நடத்த திட்டமிட்டோம். ஜோடியாக வருபவர்கள் ஜாலியாக இருக்க டேட்டிங் என தெரிவித்தோம் எனக்கூறினர். காவல்துறை எச்சரிக்கைக்கு பின்னர் இந்த டேட்டிங் விழா ரத்து செய்யப்பட்டது.