கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் உள்ள நடுவிலக்கரா என்ற இடத்தில் மஞ்சும்மோள் தாமஸ் என்பவர் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். ஆசிரியரான இவருடன் கணவனின் தாயார் லியம்மா வர்கீஸ் அதாவது மாமியாரும் வசித்து வருகிறார். இந்நிலையில், கடந்த புதன்கிழமை வீட்டின் ஒரு அறையில் தனது 2 குழந்தைகளுடன் சோபாவில் மஞ்சும்மோள் தாமஸ் அமர்ந்து உள்ளார்.
அப்போது மற்றொரு அறையில் இருந்து மாமியார் எலியம்மா வர்கீஸ் வந்தார். இதை பார்த்ததும் கோபம் அடைந்த மஞ்சும்மோள் தாமஸ், மாமியார் என்றும் பாராமல் ஆவேசமாக திட்டி தாக்குகிறார். இதற்கிடையே, மருமகள் தாக்கியதால் காயம் அடைந்த எலியம்மா வர்க்கீஸ் அருகில் உள்ள சுகாதார மையத்தில் சிகிச்சை சென்றார். பின்னர் தனக்கு நடைபெற்ற கொடுமை குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இச்சம்பவம் தொடர்பாக காவல்துறை வழக்குப்பதிவு செய்தனர். இதனை தொடர்ந்து காவல்துறையினர் மாமியாரை தாக்கிய மருமகள் மஞ்சும்மோள் தாமசை அதிரடியாக கைது செய்தனர். வயதான மாமியாரிடம் இப்படி கொடூரமாக மருமகள் நடந்து கொண்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது.