நடிகர் விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான லியோ திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் மன்சூர் அலிகான் நடித்திருந்தார். மன்சூர் அலிகானும் தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை கச்சிதமாக செய்து முடித்தார். இந்நிலையில், சில வாரங்களுக்கு முன்பு செய்தியாளர்களிடம் பேசியிருந்த மன்சூர் அலிகான், “த்ரிஷாவுடன் பெட்ரூம் சீன் இருக்கும் என்று எதிர்பார்த்தேன்.
குஷ்பூ, ரோஜாவை கட்டிலில் தூக்கிப்போட்டது போல் த்ரிஷாவையும் போடலாம் என்று நினைத்தேன். மிஸ் ஆகிவிட்டது” என்று குறிப்பிட்டிருந்தார். இந்த மன்சூர் அலிகான் பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதனால் திரையுலகில் நடிகைகள், நடிகர்கள் பெரும்பாலானோர் தங்களது கடும் கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர்.
இந்நிலையில் நடிகை ரேகா நாயர் பிரபல ஊடகம் ஒன்றில் பேசுகையில், இன்றைக்கு சமூக வலைத்தளங்களில் எதை சொன்னால் வைரலாகும் என்பதை தெரிந்து கொண்டு அதை வைரலாக்கி வருகிறார்கள். மன்சூர் அலிகான் மீது இத்தனை குற்றச்சாட்டுகளை சொல்லும் சமூகவலைத்தளங்கள் யாராவது மன்சூர் அலிகான் பேசிய முழு வீடியோவை பார்த்தாங்களா..? சினிமாவில் இன்று முதல் முதலாக மன்சூர் அலிகான் தான் இப்படி பேசி இருக்கிறாரா..?, சினிமா ஆரம்ப காலத்தில் இருந்தே இந்த பிரச்சனை இருக்கிறது.
ஆனால், இப்போது சமூகவலைத்தளங்கள் வளர்ந்து உள்ளதால் சின்ன சின்ன விஷயத்தைக் கூட பெரிதாக்கி விடுகிறார்கள். மன்சூர் அலிகான் பேசியதால் காயப்பட்ட திரிஷா, இனி மேல் அவருடன் சேர்ந்து நடிக்க மாட்டேன் என்று ஒரு ட்வீட் போட்டுள்ளார். அவ்வளவு தான் இந்த பிரச்சனை முடிந்துவிட்டது. ஆனால், இதை பெரிதாக்கியது யார். அதே போல லியோ படத்தின் இயக்குநர் மன்சூர் அலிகானுக்கு போன் பண்ணி என்ன அண்ணா இப்படி பேசிட்டீங்க, திரிஷா மேடம்கிட்ட பேசுங்கனு சொன்னா பிரச்சனை முடிந்து இருக்கும் அதை அவர் செய்யாமல் பொது வெளியில் கண்டனம் தெரிவிக்கிறார்.
ஆண் பிரச்சனையோ, பெண் பிரச்சனையோ இதில் பாதிக்கப்படுவது பெண் தான், அவள் உடல் ரீதியாக பாதிக்கப்படுவாள், பெண்களுக்கு கற்புனு ஒன்று இல்லவே இல்ல, பாலியல் ரீதியாக துன்புறுத்தல் என்பதுதான் அதற்கு சரியான பொருள், பாலியல் ரீதியாக உண்மையாக துன்புறுத்தப்படுபவர்களுக்கு தூக்கு தண்டனை கொடுக்க வேண்டும் என்பது என் கருத்து. இங்கு வதந்தியாக பேசப்படுபவை உண்மை இல்லை என்பதை பொதுமக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என ரேகா நாயர் தெரிவித்தார்.