2023 நீட் நுழைவுத் தேர்வில் ஒரு மாணவன் தேர்ச்சி பெற்று பாரத ரத்னா அடல் பிஹாரி வாஜ்பாய் மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்துள்ளது. இதனைத் தொடர்ந்து அந்த மாணவனின் தந்தையிடம் டீன் ஆஷிஷ், ரூ.22.5 லட்சம் சேர்க்கை கட்டணத்துடன் கூடுதலாக ரூ.16 லட்சம் லஞ்சமாக கேட்டதாக தெரிகிறது. பின்னர், பேரம் பேசி ரூ.10 லட்சம் தரச் சொல்லி வற்புறுத்தியுள்ளார். லஞ்சம் கேட்ட டீனை வசமாக சிக்கவைக்க திட்டம் தீட்டினார் அதன்படி 10 லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கும் போது ஊழல் தடுப்புப் பிரிவினரிடம் கையும் களவுமாக ஆஷிஷ் ஸ்ரீநாத் பங்கின்வார் சிக்கினார்.
இந்த செய்தியை அறிந்த மகாராஷ்டிரா நவநிர்மான் சேனா தொண்டர்கள் புனேவில் உள்ள பாரத ரத்னா அடல் பிஹாரி மருத்துவக் கல்லூரியில் உள்ள டீன் அலுவலகத்தை அடித்து உடைத்து நாசம் செய்தனர். டீனின் கேபினில் இருந்த மரச்சாமான்கள் மற்றும் கணினிகளை சூறையாடினர் .மேலும் டீன் ஆஷிஷ் ஸ்ரீநாத் பங்கின்வார் மீது கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு நவநிர்மான் மாணவர் சேனா கோரிக்கை விடுத்துள்ளது.