கர்நாடகம் மாநிலம் பெங்களூர் புறநகர் அருகே உள்ள நெலமங்களா பகுதியை சேர்ந்த மனோகர். மனோகருக்கும் அர்பிதா என்ற பெண்ணுக்கும் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பாக திருமணம் நடைபெற்று, மகிழ்ச்சியாக இல்வாழ்க்கை தொடங்க 2 குழந்தைகளை பெற்றெடுத்துள்ளனர். அபிர்தா சமூக வலைத்தளங்களில் வரும் வீடியோக்களை பார்த்து ரசிப்பது லைக் போடுவது என இருந்த, அபிர்தாவும் சமூக வலைத்தளங்களில் வீடியோ பதிவிட்டு வந்துள்ளார். அப்போது சமூகவலைதளங்கள் மூலமாக அபிர்தாவுக்கு தினகர் என்ற வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இருவரும் சேர்ந்து சமூக வலைத்தளங்களில் வீடியோவை அப்லோடு செய்து வந்துள்ளனர். தொடர்ந்து போன் நம்பரையும் பகிர்ந்து கொண்டு ஒருவருக்கொருவர் பேசி வந்துள்ளனர். நாளடைவில் இவர்களுக்கு நெருக்கம் ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் இவர்களுக்குள் காதல் மலர்ந்துள்ளது. எந்நேரமும் போனில் மூழ்கி கிடந்ததால், அர்பிதா மீது அவரது கணவர் மனோகருக்கு சந்தேகம் ஏற்பட்டது.
மனோகர் கண்காணித்ததில் அர்பிதாவும் அவரது சமூக வலைத்தள நண்பர் தினகரும் காதலித்தை கண்டுபிடித்தார். இதனால் கோபம் அடைந்த மனோகர் தனது மனைவி அர்பிதாவிடம் இது குறித்து கேட்டுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து கடந்த சில தினங்களுக்கு முன்பாக அர்பிதா குழந்தைகளை விட்டு விட்டு திடீரென மாயம் ஆனார்.
இதனால் பதறிப்போன கணவர் மனோகர் தனது மனைவியை அப்பகுதி முழுவதும் தேடி பார்த்தார். உறவினர் வீட்டிற்கு சென்று இருக்கலாம் எனக் கருதி அங்கும் தேடி பார்த்துள்ளார். ஆனால், எங்கும் கிடைக்கவில்லை. இதையடுத்து சோழதேவனஹள்ளி காவல் நிலையத்தில் மனோகர் தனது மனைவியை காணவில்லை என்று புகார் அளித்தார்.
அந்த புகாரில், ஏற்கனவே தனது மனைவி 4 முறை வெவ்வேறு நபர்களுடன் ஓடிவிட்டதாகவும் தற்போது 5 வது முறையாக ஓடிவிட்டதாகவும் கூறினார். இதைக் கேட்டு ஒரு நிமிடம் போலீசாருக்கே தலை சுற்றிவிட்டது. இதற்கு முன்பு நான்கு முறை ஓடிவிட்டாலும் அவரது கணவரே மீட்டு அர்பிதாவை தன்னுடன் குடும்பம் நடத்த அழைத்து வந்துள்ளார். அந்த புகாரை பார்த்து ஒரு நிமிடம் காவல்துறைக்கு தலை சுற்றி போயினர்.