தன் சொந்த மகளையே கருமுட்டை விற்பனை செய்யும் தொழிலில் ஈடுபடுத்திய தாய் உட்பட மூவரை ஈரோடு சூரம்பட்டி காவல்துறை கைது செய்துள்ள நிலையில் மேலும் ஒருவரை ஈரோடு சூரம்பட்டி காவலர்கள் கைது செய்த நிகழ்ச்சி தமிழகத்தையே உலுக்கியுள்ளது.
ஈரோட்டை சேர்ந்த, 16 வயது சிறுமியை தாயின் இரண்டாவது கணவர் பாலியல் பலாத்காரம் செய்தமிழகத்தையே உலுக்கியுள்ளது.து மட்டுமின்றி ஈரோடு உள்ளிட்ட பல்வேறு ஊர்களிலுள்ள தனியார் மருத்துவமனைகளில் கருமுட்டை விற்பனை செய்யப்படுவதாக, மாவட்ட காவல்துறைக்கு கடந்த மே புகார் சென்றது. இதுதொடர்பாக, ஈரோடு தெற்கு காவல் ஆய்வாளர் விஜயா தலைமையில் விசாரணை நடைபெற்ற நிலையில் பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய், தாயின் இரண்டாவது கணவன் மற்றும் புரோக்கராக செயல்பட்ட ஒரு பெண் உள்பட மூவரை, போக்சோ சட்டத்தில் காவல்துறையினர் கைது செய்தனர்.
இதுகுறித்து காவல்துறை தரப்பில், பல ஆண்டுகளாக ஈரோடு, சேலம், பெருந்துறை, ஓசூரில் உள்ள தனியார் மருத்துவமனையில், கருமுட்டை கொடுத்து பணம் பெற்று வருவதை வாடிக்கையாக கொண்டிருந்தார். அதாவது ஈரோடு மாவட்டம் கைகாட்டி வலசு பகுதியைச் சேர்ந்தவர் சரவணன் இந்திராணி தம்பதியினருக்கு ஒரே மகள், சிறுமிக்கு நான்கு வயது இருக்கும்போதே தந்தைசரவணன் திடீர் விபத்து காரணமாக உயிரிழந்துள்ளார்.
ஆகையால், சிறுமியின் தாய் இந்திராணி ஈரோட்டில் பெயிண்டராக பணியாற்றி வருபவரான சையத் அலி என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்துள்ளார். இந்நிலையில் இந்திராணி மகள் 12 வயதில் பூப்படைந்து உள்ளார். சிறுமியை தாயின் இரண்டாவது கணவன் சையத் அலி பாலியல் துன்புறுத்தல் அளித்ததாக கூறப்படுகிறது.
மேலும், இந்திராணி அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் தனது கருமுட்டையை விற்பனை செய்து வந்ததாகவும் ஒரு முறை கருமுட்டை வழங்கினால் 20 ஆயிரம் ரூபாய் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
அதேபோல் தனது மகள் சிறுமி என்றும் பாராமல் கருமுட்டை விற்பனை செய்வதற்கு இந்திராணி மற்றும் அவரது இரண்டாவது கணவன்ர் சையத் அலி ஈடுபடுத்தி உள்ளனர். தொடர்ச்சியாக 8 முறை ஈரோட்டில் செயல்படும் பல தனியார் மருத்துவமனைகளில் அந்த சிறுமியின் கருமுட்டைகள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதில் 16 வயது சிறுமியை 22 வயது பானு மகாலிங்கம் என்ற பெயரில் திருமணமான பெண்மணியாக சான்றுகள் அளித்து கருமுட்டைகளை விற்பனை செய்து வந்துள்ளனர் என தெரிய வருகிறது. இவர்களுக்கு உதவியாக அதே பகுதியைச் சேர்ந்த மாலதி என்பவர் இடைத் தரகராக செயல்பட்டு வந்துள்ளார். கடந்த மே, 20ம் தேதி வீட்டை விட்டு வெளியேறிய சிறுமி, தன் சித்தி, சித்தப்பாவிடம் தனக்கு நடந்த கொடுமைகளை கூறியதையடுத்து, காவல்துறையின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
இதையடுத்து விசாரணை நடத்தி தாய், தாயின் இரண்டாவது கணவன் மற்றும் புரோக்கர் மாலதி என மூவர் மீதும், போக்சோ உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிந்து கைது செய்ததுள்ளனர். மேலும் விசாரணை நடத்திய நிலையில், சூரம்பட்டி பகுதியைச் சேர்ந்த அந்தோணிராஜ் மகன் 25 வயதான ஜான் என்பவர் Big shot app மூலமாக சிறுமியின் வயதை 16-ல் இருந்து 22 ஆதார் கார்டில் மாற்றி கொடுத்துள்ளார் ஆகையால் சூரம்பட்டி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் இந்த வழக்கு நாளுக்கு நாள் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.