சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே அம்மம்பாளையம் ஊராட்சி மன்ற தலைவராக இருப்பவர் குமரவடிவேல். இவருடைய பதவி காலத்தில் முறையாக ஊராட்சிக்கு தேவையான வசதிகள் செய்து தரவில்லை மட்டுமின்றி தற்போது அதிகரித்து வரும் கோவிட் -19 தடுப்பு பணிக்கான பிளீச்சிங் பவுடர் சரியாக தெளிக்க வில்லை ஆகையால் கோவிட் -19 பரவ வாய்ப்பு உள்ளது.
மேலும் துண்டு பிரசுரம் முதலான பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த படவில்லை என்று பல்வேறு குற்றச்சாட்டுகள் இவர் மீது எழுந்துள்ளது. இவர் மீது புதிய கட்டிடம் கட்டுவதற்கு முறையான அனுமதி கொடுக்காமல் முறைகேடு, 13 சேகோ பேக்கரிகள் இயங்கி வருகிறது இவற்றிற்கு முறையாக கட்டிட வரி தொழில் மற்றும் வரி வசூலிக்காமல் இருந்து வருகிறார்.
சேகோ பேக்கரிகள் மூலம் ஆண்டிற்கு ரூ.25 லட்சம் வரி வசூல் செய்ய வேண்டும் ஆனால் சேகோ பேக்கரி உரிமையாளர்கள் பலர் இவருடைய உறவினர் என்பதால் வரிவசூலில் மெத்தனம் காட்டி வருகிறார். அதேபோல இந்த பகுதியில் பருத்தி விதை நிறுவனங்கள் கட்டிட வரி தொழில் வரி முறையாக வசூலித்தால் 10 லட்சம் ரூபாய் வசூலிக்க வேண்டும். ஆனால் இவருடைய சுயலாபத்திற்காக அம்மம்பாளையம் ஊராட்சிக்கு வரி இழப்பு ஏற்படுத்தியுள்ளார்.
அம்மம்பாளையம் ஊராட்சியில் 13 குடி நீர் டேங் உள்ளது. மாதம் ஒருமுறை சுத்தம் செய்யாமல் மூன்று மாதத்திற்கு ஒரு முறை சுத்தம் செய்வதால் நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. புதிய பைப்புகள் போடாமல் பழைய பைப் போட்டு ஓட்டை அடைத்து போலி ஆவணங்கள் தயார் செய்து வருகிறார். இதனால் அம்மம்பாளையம் ஊராட்சிக்கு பலகோடி இழப்பு நேரிடுகிறது . இந்த முறைகேடுகளை வைத்து அவர் மீது நடவடிக்கை எடுத்து தலைவர் பதவி நீக்க வேண்டி மாவட்ட ஆட்சியரிடம் மற்றும் ஆத்தூர் பிடிஒ விடம் புகார் அளித்துள்ளனர் . வார்டு உறுப்பினர்கள் 8 பேர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளார்.