அரசு மருத்துவமனையில் குவித்து வைக்கப்பட்டும் மருத்துவ கழிவுகளால் பொதுமக்கள் பீதி

கிருஷ்ணகிரியில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை கோவிட் -19 சிறப்பு சிகிச்சை மையம் இயங்கி வருகிறது. இந்த சிறப்பு சிகிச்சை மையத்தில் 200-க்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சை பெற்று வருகிறார்கள். வழக்கமாக கோவிட் -19 வார்டில் பயன்படுத்தப்படும் மருத்துவ உபகரணங்கள், முக கவசங்கள், கையுறைகள் உடனுக்குடன் அகற்றப்படுவது வழக்கம்.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக மருத்துவ கழிவுகள் மூட்டைகளாக கட்டப்பட்டு கோவிட் -19 வார்டுக்கு வெளியே வைக்கப்பட்டுள்ளது. அந்த வழியாக பிற நோயாளிகளும் செல்கிறார்கள். இதனால் மருத்துவமனைக்கு வருபவர்களுக்கு தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே மருத்துவ கழிவுகளை உடனடியாக அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.