இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் சேலத்தில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, கடந்த காங்கிரஸ் ஆட்சியில் மன்மோகன்சிங் பிரதமராக இருந்தபோது பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ.60-க்கு விற்பனை செய்யப்பட்டது.
தற்போது ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100-க்கு விற்பனை செய்யப்படுகிறது. எனவே பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்வதை மத்திய அரசு முடிவு செய்ய வேண்டும். எண்ணெய் நிறுவனங்கள் முடிவு செய்வது தவிர்க்கப்பட வேண்டும் என தெரிவித்தார்.