இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை இயல்பை விட சற்று அதிகமாக பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது இருந்த நிலையில். வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்தே தமிழகத்துக்கு இயல்பை விட தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக வங்க கடலில் சமீபத்தில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது.
அதன் தொடர்ச்சியாக திருச்சி மாவட்டம், குடமுருட்டி கரையோரம் உள்ள கணபதி நகர் பகுதியில் வீடுகளுக்குள் வெள்ளநீர் புகுந்ததுடன் தெருக்களிலும் ஆக்கிரமித்து தேங்கி நின்றன. குடமுருட்டி வெள்ள நீர் காவிரி ஆற்றில் கலக்கும் வேளையில் அங்கிருந்து மீன்கள் புதுவெள்ளத்தை நோக்கி எதிர்த்து வருகின்றன. இந்நிலையில் கணபதி நகர் பகுதியில் தெருக்களில் தேங்கிய வெள்ளத்தில் அப்பகுதி இளம்பெண்கள் தங்களது துப்பட்டாவை பிடித்து மீன்பிடித்து மகிழ்ந்தனர்.