‘பஞ்சாப் நேஷனல் வங்கி’ ஊழியர் போலி பணி நியமன ஆணை வழங்கி மோசடி

சென்னை பழைய வண்ணாரப்பேட்டை, சிமெண்ட் சாலை, மாடர்ன் லைன் பகுதியில் வசித்து வரும் ஜெயசீலன் என்பவர் தன் மகளுக்கு வேலை தேடி வந்தார். கடந்தாண்டு பிப்ரவரி மாதம் பெரம்பூர் பேப்பர் மில் சாலையிலுள்ள ‘பஞ்சாப் நேஷனல் வங்கி’யில் அலுவலக உதவியாளர் வேலைக்கு ஆட்கள் தேவை என்ற விளம்பரத்தை கண்டு அந்த வேலையை தன் மகளுக்கு பெற்றுத்தர முயன்றார். தனக்கு அறிமுகமான திரு.வி.க., நகரைச பஞ்சாப் நேஷனல் வங்கி கிளை ஊழியர் ராஜேஷ் என்பவரை அணுகினார்.

அதற்கு ராஜேஷ், தன் மேலதிகாரி மூலம் அங்குள்ள அதிகாரிகளின் உதவியை பெற்று, வேலை வாங்கி விடலாம் ஆனால், அதற்கு பணம் செலவாகும் எனக் கூறியிருக்கிறார். ராஜேஷின் பேச்சை நம்பிய ஜெயசீலன், கடந்தாண்டு பிப்ரவரி மாதம் 13-ம் தேதி, 2.70 லட்சம் ரூபாய் பணத்தை, ராஜேஷிடம் கொடுத்தார். இதையடுத்து, அவர், போலி பணி நியமன ஆணையை ஜெயசீலனிடம் வழங்கியிருக்கிறார்.

அதை வங்கிக்கு எடுத்து சென்ற பின் தான், அது போலி என்பது தெரிய வந்தது.இதையடுத்து, ஜெயசீலன் தன் பணத்தை திரும்ப கேட்டு, பலமுறை ராஜேஷிடம் அலைந்திருக்கிறார். அவர் பணத்தை கொடுக்காமல் :ஏமாற்றினார். இந்நிலையில், நேற்று முன்தினம், ஜெயசீலன், திரு.வி.க. நகர் காவல் நிலையத்தில் புகார் கொண்டுள்ளார். இது குறித்து விசாரித்த போலீசார், பணமோசடியில் ஈடுபட்ட ராஜேஷை கைது செய்து சிறையில் அடைத்தனர்.