கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி தாலுக்கா வெங்கடம்பேட்டை ஊராட்சி பிள்ளைபாளையம் கிராமத்தைச் சேர்ந்த சீனு வாசன் குடும்பத்தில் கடந்த 5.8 .2021 அன்று அவருடைய பிள்ளைகள் 2-பேருக்கும் மனைவிக்கும் செவிலியர்கள் வீட்டிலேயே வந்து கோவிசில்டு கொரோனா தடுப்பூசி போட்டுள்ளார்கள். மீண்டும் இரண்டாவது தடுப்பூசி போடுவதற்கு 84- நாள் கழித்து வருகிறோம் என்று கூறியுள்ளார்கள்.
ஆனால் இன்று 84-வது நாட்கள் என்பதால் அவர் குடும்பத்திற்கு தடுப்பூசி போடாமலேயே கொரானா தடுப்பூசி மருங்கூர் UPHC யில் போட்ட மாதிரி பதிவு செய்து ஆன்லைனில் சர்டிபிகேட் அனுப்பி உள்ளனர் இதைப் பார்த்த அந்த குடும்பத்தினர் மிகவும் அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளனர். வேடிக்கை என்னவென்றால் இந்த குடும்பத்தில் உள்ள ஒரு மகள் கல்லூரி சென்றுள்ளார் கும்பகோணத்திற்கு இன்னும் இரண்டு பேர் வேலைக்கு சென்றுள்ளனர்
இச்சூழ்நிலையில் எப்படி அவர்களுக்கு தடுப்பூசி போட்டார்கள் என தெரியவில்லை இது வேடிக்கையாக உள்ளது. சீனிவாசன் குடும்பத்தார் இனிமேல் நாங்கள் இரண்டாவது தடுப்பு ஊசி மூன்று பேரும் எப்படி போடுவது மருங்கூர் UPHC யில் போட்ட மாதிரி எங்களுக்கு சர்டிபிகேட் வந்துவிட்டது என குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர். இது போன்ற செயல்கள் கடலூர் மாவட்டத்தில் தொடர்ந்து நடைபெற்று வருவதாக பொதுமக்கள் புகார் அளிக்கின்றனர்.
தமிழக அரசு இன்று கொரானா தடுப்பூசி போடுவதில் ஆர்வம் காட்டி சிறப்பான முறையில் பணி செய்பவர்களுக்கு ஊக்கத்தொகை அறிவித்துள்ளது இதைப் பெறுவதற்காக சுகாதாரத் துறை அலுவலர்கள் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுகிறார்களா என கேள்வியிம் எழுப்புகின்றனர். இச் சம்பவம் பொதுமக்களிடையே கொரோனோ தடுப்பூசி போட்டுகொள்வதற்கான நம்பக இல்லா தன்மையை ஏற்படுத்துவதாகவும் கூறுகின்றனர்.
மேலும் சீனிவாசன் குடும்பத்திற்கு மூன்று பேருக்கும் சுகாதாரத் துறை அலுவலர்கள் முன்வந்து இரண்டாவது தடுப்பூசி போடுவதற்க்கு வழிவகை செய்ய வேண்டும் எனவும் இது போன்ற செயல்கள் இனி வரும் காலங்களில் நடைபெறாமல் இருக்க மாவட்ட நிர்வாகமும் தமிழக அரசும் இதை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்களும் பாதிக்கப்பட்டவர்களும் கேட்டுக் கொள்கின்றனர்