முதல் டோஸ் தடுப்பூசி போட்டு காலக்கெடு முடிந்து 2-வது டோஸ் தடுப்பூசி போடவில்லை

தமிழகத்தில் முதலில் கொரோனா தடுப்பூசி மீது பொதுமக்களுக்கு தயக்கம் இருந்தாலும், தற்போது தினசரி 2 லட்சம் பேர் வரை தடுப்பூசி போட்டு கொள்கின்றனர். இந்நிலையில் முதல் டோஸ் தடுப்பூசி போட்டு கொண்டவர்களில், பெரும்பாலானோர் 2-வது டோஸ் தடுப்பூசி போட தயக்கம் காட்டி வருகின்றனர்.

முதல் டோஸ் தடுப்பூசி போட்டு காலக்கெடு முடிந்து 2-வது டோஸ் தடுப்பூசி போடாதவர்களுக்கு சென்னை மாநகராட்சியில் சிறப்பு முகாம் அமைக்கப்பட்டு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதேபோல் அனைத்து மாவட்டங்களிலும் விரிவுப்படுத்த மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை முடிவு செய்துள்ளது.

‘கோவிஷீல்டு’ தடுப்பூசி போட்டவர்களில் குறிப்பிட்ட கால இடைவெளி முடிந்தும் 5 லட்சத்து 69 ஆயிரத்து 572 பேரும், ‘கோவேக்சின்’ போட்டவர்களில் 2 லட்சத்து 60 ஆயிரத்து 600 பேரும் என 8 லட்சத்து 30 ஆயிரத்து 172 பேர் தடுப்பூசி போடவில்லை.