உத்திர பிரதேசத்தில் மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த போட்டாத்தில் லக்கிம்பூர் கேரி மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகளும் தீவிரமாக பங்கேறு வருகின்றனர். லக்கிம்பூர் கேரி மாவட்டத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற மத்திய உள்துறை இணை மந்திரி அஜய் மிஷ்ரா மற்றும் மாநில துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியா வருவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இதனால் அவருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக பக்கத்து கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள் திகுனியாவில் திரண்டனர். அப்போது அந்த வழியாக பாஜகவினரின் வாகன அணிவகுப்பு ஒன்று வந்தது. இதில் கார் ஒன்று விவசாயிகள் மீது பயங்கரமாக மோதியதில் 2 விவசாயிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்தனர்.
இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள் பாஜகவினர் வந்த வாகனங்களை அடித்து நொறுக்கினர். இதன்காரணமாக அங்கு வன்முறை வெடித்தது. இந்த வன்முறையில் 4 விவசாயிகள் உள்பட 9 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் லகிம்பூர் வன்முறையில் உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறுவதற்காக காங்கிரஸ் பொது செயலாளர் பிரியங்கா காந்தியை அந்த கிராமத்திற்குள் அனுமதிக்காமல் கிராம எல்லையிலேயே காவல்துறையினர் கைது செய்து தடுப்பு காவலில் வைத்தனர். இதேபோல் லகீம்பூர் கெரிக்கு சென்ற காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி, சத்தீஷ்கார் முதல்-மந்திரி பூபேஷ் பாகேல் மற்றும் பஞ்சாப் முதல்-மந்திரி சரண்ஜித் சிங் சன்னி போன்றவர்களும் தடுத்து நிறுத்தப்பட்டனர்.
இந்நிலையில் சிவசேனா கட்சியின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான சாம்னா தலையங்கத்தில் பிரியங்கா காந்தியின் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் என்பதால் அவர் மீது அரசியல் தாக்குதல் நடத்தப்படலாம். ஆனால் அவர் இந்திரா காந்தியின் பேத்தி. இந்திராகாந்தி நாட்டிற்காக பெரும் தியாகம் செய்தவர் மற்றும் பாகிஸ்தானில் இருந்து வங்காள தேசத்தை பிரித்தார். அவரை சட்டவிரோதமாக சிறையில் அடைத்தவர்கள் இந்த உண்மையை உணர்ந்திருக்க வேண்டும்.
பிரியங்கா காந்தி தான் செய்த குற்றம் என்ன? வாரண்ட் கொடுக்கப்பட்டதா அல்லது சிறை தண்டனைக்காக என்மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதா? என பல்வேறு கேள்விகளை எழுப்பினார். உத்தரபிரதேச நிர்வாகம் அவரை தடுத்தது மட்டுமல்லாமல், அவரை தாக்கியது. பிரியங்கா காந்தி ஒரு நெருப்பை போன்ற தலைவர் மற்றும் போராளி.
பிரியங்கா காந்தியின் கண்களிலும், குரலிலும் இந்திரா காந்தியின் அதே நெருப்பு உள்ளது. பிரியங்கா காந்தி அவமதிக்கப்படுகிறார். மகாராஷ்டிராவில் உள்ள ஒரு பா.ஜனதா பெண் உறுப்பினருக்கு இது நடந்திருந்தால் அக்கட்சி தனது பெண் தொண்டர்களை போராட்டத்திற்கு கட்டவிழ்த்து விட்டு இருக்கும். பெண்கள் பாதுகாப்பு குறித்து பா.ஜனதா ஒரு சொந்த வரையரை வைத்துள்ளது. இந்திரா காந்தியின் பேத்தி மீதான தாக்குதல் அந்த எல்லைக்குள் வராது என குறிப்பிடப்பட்டுள்ளது.