கடந்த சட்டசபை கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆவடி நகராட்சி மாநகராட்சியாகவும், அதை அடுத்து தாம்பரம் நகராட்சி மாநகராட்சியாகவும் மாற்றி அறிவிக்கப்பட்டது. அதன் ஒரு பகுதியாக காவல் ஆணையர் மூன்றாக பிரிக்கப்பட்டு ஆவடி, தாம்பரம் புதிய காவல் ஆணையர் அலுவலகம் உருவாக்கப்படும், என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் நேற்று தாம்பரம் ஆணையர் அலுவலகம் புதிதாக உருவாக்கபட்டு அதற்கான தனி அதிகாரியாக கூடுதல் டி.ஜி.பி. எம். ரவி நியமிக்கப்பட்டார். அதே போல புதிதாக உருவாக்கபட்டு ஆவடி ஆணையர் அலுவலகத்திற்கு தனி அதிகாரியாக கூடுதல் டி.ஜி.பி. சந்தீப்ராய் ரத்தோர் பதவி ஏற்பார் என்று நேற்று தமிழக அரசின் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளிவந்துள்ளது