மாற்றுத் திறனாளிகள் பயன்படுத்தும் வகையில் நகரும் கழிப்பறை மதுரையைச் சேர்ந்த எலக்ட்ரீஷியன் எம். அப்துல் ரசாக் கண்டுபிடிப்பு

மருத்துவமனைகள், விமான நிலையங்கள், ரயில், பேருந்து, திருமண மண்டபங்கள் போன்ற பொது இடங்களில் மக்கள் பயன்பாட்டுக்கென இந்திய வகைக் கழிப்பறைகளும், முதியோருக்கு மேற்கத்திய வகைக் கழிப்பறைகளும் ஏற்படுத்தப் படுகின்றன. ஆனால் இந்தக் கழிப்பறைகளை பயன்படுத்தும் மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியவர்கள், நோயாளிகள், மூட்டுவலி இருப்போர் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகின்றனர்.

மதுரை பீபீ குளம் பகுதியை சேர்ந்த எலக்ட்ரீஷியன் எம். அப்துல் ரசாக் என்பவர் ராணுவ வீரர்களுக்காகப் பனி தாங்கும் கோட், கடல் நீரில் ஆயிலைப் பிரித்தெடுக்கும் கருவி, தண்டவாள விரிசல் கண்டறிதல், ரைஸ் குக்கர், உள்ளிட்ட பல்வேறு கருவிகளைக் கண்டுபிடித்தவர். தற்போது நகர்த்தும் வகையிலான நவீன கழிப்பறைக் கோப்பையை வடிவமைத்து சாதனை புரிந்துள்ளார்

மாற்றுத்திறனாளிகள் கழிப்பறை, குளியல் அறைக்குத் தனித்தனியே செல்ல வேண்டும். அதிலுள்ள சிரமங்களைக் கருத்தில் கொண்டு கழிப்பிடக் கோப்பையில் இருந்தபடி, கையால் தண்ணீரைத் திறந்து, ஷவர் மூலம் குளிக்கும் வசதியை அதே அறையில் ஏற்படுத்தி குளித்தபின், அங்கேயே ஆடை மாற்றிக் கொள்ளும் அளவிற்கு சுமார் 8 அடி உயர இரும்புக் கம்பியில் 2 அங்குல அளவில் கழிப்பிடக் கோப்பையைப் பொருத்தி தேவையான உயரத்திற்கு நகர்த்தலாம். கழிப்பிடக் கோப்பை பொருத்திய இரும்புக் கம்பியை சுவரில் இணைத்த பின்னர் கோப்பைக்குள் இருந்து சிறு துவாரங்கள் மூலம் தண்ணீர் வெளியேறும் வகையில் வடிவமைத்துள்ளார்.