உத்தரகாண்ட் முதலமைச்சர் திரிவேந்திர சிங் ராவத் தலைமை மீது மாநில பாஜக தலைவா்கள் சிலா் அதிருப்தி அடைந்துள்ளனா். அடுத்த ஆண்டு அந்த மாநிலத்தில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தோ்தலை அவரது தலைமையின் கீழ் பாஜக எதிர்கொள்வது சிறப்பாக இருக்காது என அவர்கள் கூறி வந்தனர்.
இதனையடுத்து கடந்த மார்ச் மாதம் டெல்லியில் தேசியத் தலைவர் நட்டாவுடனான சந்திப்புக்குப் பின் திரிவேந்திர சிங் ராவத் தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். இந்நிலையில், உத்தரகாண்டின் அடுத்த முதலமைச்சராக 56 வயதான தீரத் சிங் ராவத் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
ஆனால் பதவியேற்று வெறும் 3 மாதங்களே முடிவடைந்த நிலையில் தீரத் சிங் ராவத் டேராடூனில் உள்ள ராஜ் பவனில் கவர்னர் பேபி ராணி மவுரியாவை இன்றிரவு நேரில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பில் அவர் தனது ராஜினாமா கடிதத்தினை வழங்கியுள்ளார். அவரது இந்த திடீர் ராஜினாமா கட்சியினரிடையே பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.