இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 4-வது மாநாடு வரும் ஜூலை முதல் வாரம் நடைபெறும் என தகவல்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அரியலூர் மாவட்ட 4-வது மாநாடு வரும் ஜூலை முதல் வாரத்தில் மாவட்ட தலைநகர் அரியலூரில் இரண்டு நாள் நடத்துவது என மாவட்ட குழு கூட்டத்தில் முடிவு செய்துள்ளது . அரியலூர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் அரியலூர்முன்னாள் மாவட்டத் துணைச் செயலாளர் T. தண்டபாணி தலைமையில் இன்று நடைபெற்ற மாவட்ட குழு கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அரியலூர் மாவட்ட 4-வது மாநாடு வரும் ஜூலை முதல் வாரத்தில் மாவட்ட ஜூலை முதல் வாரத்தில் இரண்டு நாள் நடத்துவது என மாவட்ட குழு முடிவு செய்துள்ளது .

இந்த கூட்டத்தில் மாநில நிர்வாக குழு உறுப்பினர் மு.அ. பாரதி கலந்து கொண்டு ஆலோசனைகளை வழங்கினார். மாவட்டச் செயலாளர் சொ. இராமநாதன் – முன்னாள் மாவட்ட செயலாளர் இரா. உலகநாதன்- மாவட்டத் துணைச் செயலாளர் ப. கலியபெருமாள்- மாவட்ட குழு உறுப்பினர் G. ஆறுமுகம்- அரியலூர் ஒன்றிய செயலாளர் து. பாண்டியன்- தா.பழுர் ஒன்றிய செயலாளர் இ. முருகேஸ்வரி- ஜெயங்கொண்டம் முன்னாள் ஒன்றிய செயலாளர் சு. மணிவண்ணன்- மற்றும் மாவட்டக் குழு உறுப்பினர்கள் தேவசகாயம் – S. ரெங்கசாமி – நா. கொளஞ்சியம்மாள் உள்ளிட்டோர்கள் கலந்து கொண்டனர்.

மாநாடு முதல் நாள் மாலையில் பிரமாண்டமான பேரணி, பொதுக்கூட்டம் நடத்துவது, இரண்டாவது நாள் பிரதிநிதிகள் மாநாடு,- புதிய மாவட்டக் குழு – மற்றும் மாவட்ட நிர்வாகிகள் தேர்வு – என நிகழ்ச்சிகளை சிறப்பாக செய்வது, மாவட்டம் முழுவதும் விளம்பரம் செய்வது, மாநாட்டிற்கு நிதி வசூல் விரிவாக செய்வது, மாநாட்டிற்கு மாநில செயலாளர் தோழர், இரா. முத்தரசன், மாநிலத் துணைச் செயலாளர் தோழர் நா. பெரியசாமி Ex MLA, மாநில செயற்குழு தோழர் வை. சிவபுண்ணியம் Ex MLA, மாநில நிர்வாகக் குழு தோழர் மு.அ. பாரதி ஆகியோர் பங்கேற்கிறார்கள் என தெரிய வருகிறது .