தாய் மகனை காதலனுடன் கொலை செய்து சூட்கேசில் அடைத்து தெருவில் வீசிய கொடூரம்

தாய் ஒருவர் பெற்ற மகனை தனது காதலுடன் சேர்ந்து கொன்று சூட்கேசில் அடைத்து தெருவில் வீசிய கொடூரம் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.. நாளுக்கு நாள் கள்ளக்காதல்கள் காரணமாக பச்சிளம் குழந்தைகளையும் பெற்ற தாய்கள் துடிதுடிக்க கொல்லும் சம்பவமும், கணவனுக்கு சாப்பாட்டில் விஷம் வைத்து சில மனைவிகள் கொல்லும் சம்பவமும் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என பேதமின்றி உயிர்கள் காவு வாங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் மேலும் ஒரு சம்பவம் நம்மையெல்லாம் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.

அசாம் மாநிலம் கவுகாத்தியில், 10 வயது சிறுவன் ஐந்தாம் வகுப்பு படித்து வந்தான். தனது குழந்தை டியூஷன் முடிந்து வீடு திரும்பவில்லை என்று தாய் கவுகாத்தி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்நிலையில், பாசிஷ்டா கோயிலுக்கு அருகிலுள்ள சாலையில் சூட்கேஸில் ஒரு சிறுவனின் உடல் கண்டெடுத்து உள்ளனர்.

இத்தனை தொடர்ந்து கவுகாத்தி காவல்துறை குழந்தை காணவில்லை புகார் அளித்த தாய் வரவழைத்து பாசிஷ்டா கோயில் அருகே சாலையில் சூட்கேஸில் இருந்த சிறுவனின் உடலை அவரிடம் காண்பித்தனர். சூட்கேஸில் இருந்த சிறுவன் தன் மகன்தான் என அவர் ஒப்புக்கொள்ள சிறுவனின் தாயின் வாக்குமூலங்களில் சந்தேகம் அடைந்த காவல்துறை, விசாரணையை தீவிரப்படுத்தினர்.

இந்த விசாரணையில் அவர் தனது கணவரிடம் இருந்து விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்திருப்பது தெரியவந்தது. மேலும் அப்பெண் தனது காதலுடன் சேர்நது மகனை கொலை செய்ததை விசாரணையில் ஒப்புக்கொண்டார். இதையடுத்து சிறுவனின் உடல் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பு வைத்த காவல்துறை குற்றவாளிகள் இருவரையும் கைது செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் மிகுந்த பரபரப்பு ஏற்பட்டது.